பாடம்: 65
ஜனாஸா தொழுகையில் ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயம் ஓதுதல்.
“குழந்தைக்கு ஜனாஸா தொழுகை தொழும்போது, ‘ஃபாத்திஹா’ அத்தியாயம் ஓதுவதுடன், “அல்லாஹும்மஜ்அல்ஹு லனா ஃபரத்தவ் வ ஸலஃபவ் வ அஜ்ரா” (இறைவா, இக்குழந்தையை (நன்மைக்கான) சேமிப்பாகவும் முன் வைப்பாகவும் நற்பலனாகவும் ஆக்குவாயாக!) என்றும் கூற வேண்டும்” என ஹசன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
தல்ஹா பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குப் பின்னால் நின்று ஜனாஸா தொழுகை தொழுதேன். அப்போது அவர்கள் ‘ஃபாத்திஹா’ அத்தியாயத்தை (சப்தமாக) ஓதினார்கள். பிறகு “நீங்கள் இது ஒரு நபிவழி என்பதை அறிந்து கொள்வதற்காகவே (சப்தமிட்டு ஓதினேன்)” என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம்: 23
(புகாரி: 1335)بَابُ قِرَاءَةِ فَاتِحَةِ الكِتَابِ عَلَى الجَنَازَةِ
وَقَالَ الحَسَنُ: ” يَقْرَأُ عَلَى الطِّفْلِ بِفَاتِحَةِ الكِتَابِ وَيَقُولُ: اللَّهُمَّ اجْعَلْهُ لَنَا فَرَطًا وَسَلَفًا وَأَجْرًا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدٍ، عَنْ طَلْحَةَ، قَالَ: صَلَّيْتُ خَلْفَ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، ح حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَوْفٍ، قَالَ:
صَلَّيْتُ خَلْفَ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَلَى جَنَازَةٍ فَقَرَأَ بِفَاتِحَةِ الكِتَابِ قَالَ: «لِيَعْلَمُوا أَنَّهَا سُنَّةٌ»
Bukhari-Tamil-1335.
Bukhari-TamilMisc-1335.
Bukhari-Shamila-1335.
Bukhari-Alamiah-1249.
Bukhari-JawamiulKalim-1255.
(ஜனாஸாத் தொழுகையில் துணை ஸூரா ஓதுவது பற்றி வரும் செய்திகள் ஷாத் ஆகும். இதைப் பற்றிய விவரம்: பார்க்க: நஸாயீ-1987)
1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஸஃத் பின் இப்ராஹீம் —> தல்ஹா பின் அப்துல்லாஹ் —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: தயாலிஸீ-2864 , முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-6427 , புகாரி-1335 , அபூதாவூத்-3198 , திர்மிதீ-1027 , குப்ரா நஸாயீ-, நஸாயீ-1987 , 1988 , முஸ்னத் அபீ யஃலா-2661 , இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-, தாரகுத்னீ-, ஹாகிம்-, குப்ரா பைஹகீ-,
- ஹகம் —> மிக்ஸம் —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: இப்னு மாஜா-1495 , திர்மிதீ-1026 , அல்முஃஜமுல் கபீர்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-,
- ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
—> ஸைத் பின் தல்ஹா —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீஷைபா-11402 , ஷரஹ் மஆனில் ஆஸார்-,
- இப்னு அஜ்லான் —> ஸயீத் அல்மக்புரீ —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: முஸ்னத் ஷாஃபிஈ-, அல்உம்மு-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அல்முஃஜமுல் கபீர்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, ஹாகிம்-, குப்ரா பைஹகீ-,
- ஸுஹ்ரீ —> உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: குப்ரா பைஹகீ-,
2 . உம்மு ஷரீக் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-1496 .
3 . ஜாபிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
4 . பெயர் குறிப்பிடப்படாத ஒரு நபித்தோழர் வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
சமீப விமர்சனங்கள்