அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் எங்களுக்கு ஒரு கோட்டை வரைந்தார்கள். அதன் வலது புறம் ஒரு கோட்டையும் இடது புறம் ஒரு கோட்டையும் வரைந்தார்கள். பிறகு “இதுதான் அல்லாஹ்வின் வழியாகும்” என்று கூறினார்கள். பின்னர் இன்னும் பல கோடுகளை வரைந்து “இவை (வழிகேடான) பலவழிகளாகும். இந்த வழிகள் அனைத்திலும் ஷைத்தான் இருந்து கொண்டு அவற்றை நோக்கி அழைத்துக் கொண்டிருக்கின்றான்.
பிறகு “இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவை, அவனது (ஒரே) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்” (அல்குர்ஆன் 6:153) என்ற இறைவசனத்தை ஓதினார்கள்.
பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:
இந்தச் செய்தியின் கருத்து இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் வழியாக வேறு வகை அறிவிப்பாளர்தொடரில் இதைப் போன்றே அல்லது இதற்கு நெருக்கமான கருத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
(bazzar-1865: 1865)حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: نا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: نا سُفْيَانُ، عَنْ أَبِيهِ، عَنْ مُنْذِرٍ الثَّوْرِيِّ، عَنِ الرَّبِيعِ بْنِ خُثَيْمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ
خَطَّ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا خَطًّا، وَخَطَّ عَنْ يَمِينِهِ خَطًّا، وَخَطَّ عَنْ يَسَارِهِ خَطًّا، ثُمَّ قَالَ: «هَذَا سَبِيلُ اللَّهِ» ، ثُمَّ خَطَّ خُطُوطًا فَقَالَ: «هَذِهِ سُبُلٌ، عَلَى كُلِّ سَبِيلٍ مِنْهَا شَيْطَانٌ يَدْعُو إِلَيْهِ» ، وَقَرَأَ {أَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ} [الأنعام: 153] فَتَفَرَّقَ بِكُمْ
وَهَذَا الْكَلَامُ قَدْ رُوِيَ، عَنْ عَبْدِ اللَّهِ مِنْ غَيْرِ وَجْهٍ نَحْوَهُ أَوْ قَرِيبًا مِنْهُ
Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-1865.
Bazzar-Shamila-1865.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-1669.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . பஸ்ஸார் இமாம்-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அம்ர்
2 . அம்ர் பின் அலீ-அல்ஃபல்லாஸ்
3 . யஹ்யா பின் ஸயீத்-அல்கத்தான்
4 . ஸுஃப்யான் ஸவ்ரீ-ஸுஃப்யான் பின் ஸயீத்
5 . ஸயீத் பின் மஸ்ரூக்-அஸ்ஸவ்ரீ
6 . முன்திர் பின் யஃலா
7 . ரபீஃ பின் குஸைம்
8 . அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)-இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி)
1 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- முன்திர் பின் யஃலா —> ரபீஃ பின் குஸைம் —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி)
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-1865,
- ஆஸிம் பின் பஹ்தலா —> அபூவாஇல், ஸிர்ரு பின் ஹுபைஷ் —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி)
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, அஹ்மத்-4142, 4437, தாரிமீ-, முஸ்னத் பஸ்ஸார்-, குப்ரா நஸாயீ-, இப்னு ஹிப்பான்-, ஹாகிம்-,
2 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-11.
3 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: புகாரி-6417,
சமீப விமர்சனங்கள்