தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-3123

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

3123. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் வசதி இருந்தும் குர்பானி கொடுக்கவில்லையோ அவர் நம்முடைய (ஈதுல் அள்ஹா) தொழும் இடத்தை நெருங்க வேண்டாம்.

அறிவிப்பவர்: (ரலி)

அபூஹுரைரா (ரலி)

أبو هريرة

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர்

தந்தை பெயர்: ஸக்ர்

வம்சம்: தவ்ஸீ

புனைப்பெயர்: அபூ ஹுரைரா

ஊர் பெயர்: யமன்

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா, யமன், பஹ்ரைன்

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 12, யமன்

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அபூ ஹுரைரா ரலி அவர்கள் ஹிஜ்ரிக்கு முன் 12 ஆம் ஆண்டு யமன் நாட்டில் பிறந்தார்கள். இவர்களின் இயற்பெயர் அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர் ஆகும். ஒரு சிறிய பூனையுடன் விளையாடியதால் அபூ ஹுரைரா என்ற புனைப்பெயரால் அழைக்கப்பட்டார்கள்.

நபித்தோழர்களில் அதிக ஹதீஸ்களை அறிவித்தவர்களில் இவர்களும் ஒருவர். நபி (ஸல்) அவர்களின் துஆவின் காரணமாக இவர்களுக்கு அபார ஞாபக சக்தி இருந்தது. ஹிஜ்ரி 59 ஆம் ஆண்டு மதீனாவில் காலமானார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), அபூபக்ர் அஸ்ஸித்தீக், உமர் பின் கத்தாப் (ரலி), ஃபழ்ல் பின் அல்அப்பாஸ், உபை பின் கஅப், உஸாமா பின் ஸைத், ஆயிஷா பின்த் அபூபக்ர், கஅப் அல்அஹ்பார்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): முஹர்ரர் பின் அபூ ஹுரைரா, இப்னு அப்பாஸ், இப்னு உமர், அனஸ் பின் மாலிக், வாஸிலா பின் அல்அஸ்கஃ, ஜாபிர் பின் அப்துல்லாஹ், மர்வான் பின் அல்கம், குபைஸா பின் துவைப், ஸயீத் பின் அல்முஸய்யிப், ஸல்மான் அல்அஃகர், கைஸ் பின் அபூ ஹாஸிம், மாலிக் பின் அபூ ஆமிர்

வேறு பெயர்கள்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர், அப்துல்லாஹ் பின் ஸக்ர்


ஆதாரம்: muslimscholars.info (13) · Should verify


حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَيَّاشٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَنْ كَانَ لَهُ سَعَةٌ، وَلَمْ يُضَحِّ، فَلَا يَقْرَبَنَّ مُصَلَّانَا»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-3114.
Ibn-Majah-Shamila-3123.
Ibn-Majah-Alamiah-3114.
Ibn-Majah-JawamiulKalim-3122.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . இப்னு மாஜா இமாம்-முஹம்மத் பின் யஸீத் பின் மாஜா (3. பலமானவர்).

2 . இப்னு அபூஷைபா இமாம்-அபூபக்ர்-அப்துல்லாஹ் பின் முஹம்மத் (3. பலமானவர்).

3 . ஸைத் பின் ஹுபாப் (5. சிறிது நடுத்தரமானவர்).

4 . அப்துல்லாஹ் பின் அய்யாஷ்-அல்கித்பானீ (5. சிறிது நடுத்தரமானவர்).

5 . அப்துர்ரஹ்மான் பின் ஹுர்முஸ்-அல்அஃரஜ் (2. மிகப் பலமானவர்).

6 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)-அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர்
(1. நபித்தோழர்)
.


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25292-அப்துல்லாஹ் பின் அய்யாஷ் பின் அப்பாஸ் அல்கித்பானீ பற்றி இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    இப்னு கல்ஃபூன் பிறப்பு ஹிஜ்ரி 555
    இறப்பு ஹிஜ்ரி 636
    வயது: 81
    போன்றோர் பலமானவர்களின் பட்டியலில் கூறியிருந்தாலும் இமாம் அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    போன்றோர் இவர் பலவீனமானவர் என்று  கூறியுள்ளனர். (ஆனால் இதற்கு காரணத்தைக் கூறவில்லை)
  • முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    இமாம் இவரின் ஒரு செய்தியை துணை சான்றாக கூறியுள்ளார். (பார்க்க: முஸ்லிம்-3377)
  • அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள் இவர் நம்பகமானவர் என்றாலும் அந்தளவிற்கு பலமானவர் அல்ல; இவரின் செய்திகளை எழுதிக்கொள்ளலாம்; இவர் சிறிது இப்னு லஹீஆவைப் போன்று என்று கூறியுள்ளார்.
  • இப்னு யூனுஸ் அவர்கள் இவரை முன்கருல் ஹதீஸ் (பலமானவர்களுக்கு மாற்றமாக அறிவிப்பவர்) என்று கூறியுள்ளார்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-5/126, தாரீகு இப்னு யூனுஸ்-1/279, தஹ்தீபுல் கமால்-15/410, தஹ்தீபுத் தஹ்தீப்-2/400)


ஆய்வின் சுருக்கம்:

இந்த செய்தி நபி (ஸல்) அவர்களின் சொல்லாகவும், அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) அவர்களின் சொல்லாகவும் வந்துள்ளது. அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) அவர்களின் சொல்லாக அறிவிப்பவர்களே மிக பலமானவர்கள் என்பதால் இது நபித்தோழரின் சொல் என இமாம் தஹாவீ,பிறப்பு ஹிஜ்ரி 238
இறப்பு ஹிஜ்ரி 321
வயது: 83
தாரகுத்னீ,பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
பைஹகீ,பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
இப்னு அப்தில்பர், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
போன்ற பல ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர்.

சில செய்திகள் நபித்தோழரின் சொல்லாக இருந்தாலும் அதை அவர் சுயமாகக் கூறியிருக்கமாட்டார் என்றும் புரிந்துக் கொள்ளலாம். சில செய்திகள் அவ்வாறு இருக்காது. இந்தக் கருத்தை முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் மதீனாவின் அமீராக அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) அவர்கள் இருந்தபோது கூறியிருப்பார்கள்.


விரிவான விளக்கம்:

இந்த செய்தியை அப்துர்ரஹ்மான் அல்அஃரஜ் அவர்களிடமிருந்து மூவர் அறிவித்துள்ளனர்.

1 . அப்துல்லாஹ் பின் அய்யாஷ்.

இவரிடமிருந்து அறிவிப்பவர்களில் அப்துல்லாஹ் பின் வஹ்ப் மட்டும் நபித்தோழரின் கூற்றாக அறிவித்துள்ளார். அப்துல்லாஹ் பின் யஸீத், ஹைவா பின் ஷுரைஹ், ஸைத் பின் ஹுபாப், யஹ்யா பின் ஸயீத்,பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
யஹ்யா பின் யஃலா போன்றோர் நபி (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளனர். இவர்களில் சிலர் பலவீனமானவர்கள் என்றாலும் சிலர் பலமானவர்கள் என்பதால் அப்துல்லாஹ் பின் அய்யாஷ் வழியாக வரும் செய்திகளில் நபி (ஸல்) அவர்களின் கூற்றாக வந்துள்ள செய்திகளே மஹ்ஃபூல் ஆகும். அப்துல்லாஹ் பின் வஹ்ப் அவர்களின் அறிவிப்பு ஷாத்  ஆகும்.

2 . உபைதுல்லாஹ் பின் அபூஜஃபர்.

இவரிடமிருந்து அறிவிப்பவர்களில் யஹ்யா பின் அய்யூப், லைஸ் பின் ஸஃத், பக்ர்.. போன்றோர் நபித்தோழரின் கூற்றாக அறிவித்துள்ளனர். இப்னு உலாஸா என்பவர் நபி (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளார். இது மிக பலவீனமானது என்பதால் உபைதுல்லாஹ் பின் அபூஜஃபர் வழியாக வரும் செய்திகளில் நபித்தோழரின் கூற்றாக வந்துள்ள செய்திகளே மஃரூஃப் ஆகும்.

3 . ஜஃபர் பின் ரபீஆ.

இவர் அப்துர்ரஹ்மான் அல்அஃரஜ் அவர்களிடமிருந்து நபித்தோழரின் கூற்றாக அறிவித்துள்ளார்.

இந்த மூவர் வழியாக வரும் செய்திகளில் அப்துல்லாஹ் பின் அய்யாஷ் வழியாக வரும் செய்திகள் மட்டுமே நபி (ஸல்) அவர்களின் கூற்றாக வந்துள்ளது. இவர் விமர்சிக்கப்பட்டவர் என்பதாலும், மற்ற இருவர் பலமானவர்கள் என்பதால் அவர்கள் வழியாக நபித்தோழரின் கூற்றாக வந்திருக்கும் செய்திக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (10/ 304)
2023- وسئل عن حديث الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: مَنْ كَانَ لَهُ مَالٌ فَلَمْ يُضَحِّ فَلَا يَقْرَبْ مُصَلَّانَا.
فَقَالَ: يَرْوِيهِ عَبْدُ اللَّهِ بْنُ عَيَّاشٍ الْقِتْبَانِيُّ، وَاخْتُلِفَ عَنْهُ؛
فَرَوَاهُ زَيْدُ بْنُ الْحُبَابِ، وَيَحْيَى بْنُ سَعِيدٍ الْعَطَّارُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَيَّاشٍ الْقِتْبَانِيِّ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
وَرَوَاهُ عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي جَعْفَرٍ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ مَرْفُوعًا أَيْضًا، وَهُوَ الصواب.

علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية ط-أخرى (5/ 205)
ورَواه عُبيد الله بن أَبي جَعفر، عَن الأَعرَج، عَن أَبي هُريرة، مَوقوفًا أَيضًا، وهو الصَّواب.

  • இந்த செய்தியின் இருவழிகளை குறிப்பிட்ட தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள், உபைதுல்லாஹ் பின் அபூஜஃபர், நபித்தோழரின் கூற்றாக அறிவிப்பதே மிகச்சரியானது என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-2023)

(சில பிரதிகளில் மவ்கூஃபே மிகச் சரியானது என்பதற்கு பதிலாக மர்ஃபூவே மிகச் சரியானது என்று தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் கூறியதாக உள்ளது. இது தவறாகும். காரணம் உபைதுல்லாஹ் பின் அபூஜஃபர் மவ்கூஃபாக அதாவது நபித்தோழரின் கூற்றாகத்தான் அறிவித்துள்ளார்)

  • அல்பானி பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் இந்த செய்தியை ஹஸன் என்றும், சரியானது என்றும் கூறியுள்ளார். ஆனால் ஹதீஸ்கலை விதிப்படி இவ்வாறு கூறமுடியாத வகையில் குறைகள் இருப்பதால் இது ஆதாரமாக ஏற்றுக்கொள்ளமுடியாத செய்தியாகும் என ஹைஸம் அல்ஹம்ரீ என்ற அறிஞர் கூறியுள்ளார்.

من كان له سعة.


1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அப்துல்லாஹ் பின் அய்யாஷ் —> அல்அஃரஜ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) —> நபி (ஸல்)

பார்க்க: அஹ்மத்-8273, இப்னு மாஜா-3123, தாரகுத்னீ-4762, ஹாகிம்-3468, 7565, 7566, குப்ரா பைஹகீ-19012, ஸகீர் பைஹகீ-1809, ஷுஅபுல் ஈமான்-6952,


  • அப்துல்லாஹ் பின் அய்யாஷ் —> ஈஸா பின் அப்துர்ரஹ்மான் —> ஸுஹ்ரீ —> ஸயீத் பின் முஸய்யிப் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: தாரகுத்னீ-4743, குப்ரா பைஹகீ-19013,


  • உபைதுல்லாஹ் பின் அபூஜஅஃபர் —> அல்அஃரஜ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: தாரகுத்னீ-4762,


அஹ்காமுல் குர்ஆன்-அபூபக்ர் அல்ஜஸ்ஸாஸ், தம்ஹீத், தஹ்கீக்-இப்னுல் ஜவ்ஸீ,பிறப்பு ஹிஜ்ரி 508/510
இறப்பு ஹிஜ்ரி 597
தர்கீப், தாரீகு பக்தாத்..


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: நஸாயீ-4224,

இப்னு மாஜா இமாம்-முஹம்மத் பின் யஸீத் பின் மாஜா

இப்னு மாஜா இமாம்.

தரம்: பலமானவர்.


இமாம் இப்னுமாஜா

முழுப்பெயர்: முஹம்மது இப்னு யஸீது  அர்ரபீஃ அல்கஸ்வீனி (சுனன் இப்னுமாஜா ஹதீஸ் நூலைத் தொகுதத்தவர்)

புனைப்பெயர்: அபு அப்துல்லாஹ் இப்னுமாஜா அல்ஹாஃபிழ்

இயற்பெயர்: முஹம்மது

தந்தை பெயர்: யஸீது

பிறந்த ஊர்: கஸ்வீன் என்ற ஊரில் பிறந்தார்.

பிறப்பு: ஹிஜ்ரி 209ம் ஆண்டு.

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: இராக்கில் உள்ள கூஃபா, பக்தாத் போன்ற ஊர்களுக்கும் இன்னும் மக்கா, ஷாம், எகிப்து, ஹிஜாஸ், ரயீ, பஸரா போன்ற உலகின் பல பாகங்களுக்குப் பயணம் செய்துள்ளார்.

சுனன் இப்னுமாஜா

தஃப்ஸீருல் குர்ஆன் (குர்ஆன் விரிவுரை)

தாரீகுல் கஸ்வீன்

போன்ற பல நூல்களை தொகுத்துள்ளார்.

இப்னு அபீஷைபா, இப்னு தக்வானில் காரியீ, அஹ்மத் இப்னு ஸாபிதில் ஜஹ்தரீ, அலீ இப்னு முஹம்மதித் தனாஃபுஸீ, முஸ்அப் இப்னு அப்தில்லாஹ் ஸபீரீ, இப்ராஹீம் இப்னு முன்திரில் ஹஸாமீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.

ஜஃபர் இப்னு இத்ரீஸ், முஹம்மது இப்னு ஈஸஸ் ஸஃபாரீ, இஸ்ஹாக் இப்னு முஹம்மதுல் கஸ்வீனீ, சுலைமான் இப்னு யஸீது, அபூஅம்ர் அஹ்மத் இப்னு  முஹம்மது இப்னு குஹைமில் மதீனீ, இப்ராஹீம் இப்னு தீனாரில் கவ்ஷபீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: ஹிஜ்ரி 273ம் ஆண்டு ரமலான் மாதத்தில் திங்கட்கிழமை அன்று மரணித்து புதன்கிழமை அடக்கம் செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 64. (தகவல்: பயான் சைட்)

இப்னு அபூஷைபா இமாம்-அபூபக்ர்-அப்துல்லாஹ் பின் முஹம்மத்

عبد الله بن أبي شيبة

இறப்பு: ஹிஜ்ரி 235


விபரங்கள்

இயற்பெயர்: அப்துல்லாஹ் பின் அபூஷைபா

தந்தை பெயர்: அபூஷைபா

இறப்பு: ஹிஜ்ரி 235


வாழ்க்கைக் குறிப்பு

அப்துல்லாஹ் பின் அபூஷைபா ரஹ் அவர்கள் ஒரு அல்-ஹாஃபிழ் ஆவார். இவர் தஃப்ஸீர், ஹதீஸ் மற்றும் ஃபிக்ஹ் துறைகளில் ஆர்வம் கொண்டவர். இவர் ஹிஜ்ரி 235 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

வேறு பெயர்கள்: அப்துல்லாஹ் பின் அபூஷைபா


ஆதாரம்: muslimscholars.info (30010) · Should verify

ஸைத் பின் ஹுபாப்

زيد بن الحباب التميمي

இறப்பு: ஹி-203.

தரம்: நடுத்தரமானவர். என்றாலும் இவர் ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்களின் செய்திகளை சரியாக மனனமிடவில்லை என்பதால் அதில் தவறிழைத்துள்ளார்.


புனைப்பெயர், பட்டப்பெயர்: அபுல்ஹுஸைன்.

ஊர் பெயர்: கூஃபா.

பயணம் செய்த ஊர்கள்: ஈராக், எகிப்து, ஹிஜாஸ், குராஸான், மக்கா, அந்தலுஸ்.

இறப்பு: ஹிஜ்ரி-203.

கால கட்டம்: 8.


[تقريب التهذيب ص222:]

2124- زيد ابن الحباب بضم المهملة وموحدتين أبو الحسين العكلي بضم المهملة وسكون الكاف أصله من خراسان وكان بالكوفة ورحل في الحديث فأكثر منه وهو صدوق يخطىء في حديث الثوري من التاسعة مات سنة ثلاثين [ثلاث] ومائتين ر م 4


[تحرير تقريب التهذيب 1/ 432:]

2124 - زيدُ بن الحُبَاب، بضم المهملة وموحدتين، أبو الحُسين العُكْلي، بضم المهملة وسكون الكاف، أصله من خراسان، وكان بالكوفة، ورَحَلَ في الحديث فأكثر منه: وهو صدوقٌ يُخطِئُ في حديث الثوري، من التاسعة، مات سنة ثلاثين ومئتين. ر م 4.


[تقريب تقريب التهذيب 1/ 517:]

* [2124] زيد بن الحباب بضم المهملة وموحدتين أبو الحسين العكلي بضم المهملة وسكون الكاف أصله من خراسان وكان بالكوفة ورحل في الحديث فأكثر منه وهو صدوق يخطئ في حديث الثوري من التاسعة مات سنة ثلاثين ومائتين ر م 4

قلت: قال الذهبي "صدوق جوال" وأيضاً "له أحاديث تستغرب عن سفيان الثوري من جهة إسنادها" (ميزان الاعتدال رقم 2997).

அப்துல்லாஹ் பின் அய்யாஷ்-அல்கித்பானீ

عبد الله بن عياش القتباني

இறப்பு: ஹி-170.


கால கட்டம்: 7.


அப்துல்லாஹ் பின் அய்யாஷ் பின் அப்பாஸ் அல்கித்பானீ என்பவர் பற்றி இப்னு ஹிப்பான், இப்னு கல்ஃபூன் போன்றோர் பலமானவர்களின் பட்டியலில் கூறியிருந்தாலும் இமாம் அபூதாவூத், நஸாயீ போன்றோர் இவர் பலவீனமானவர் என்று  கூறியுள்ளனர். (ஆனால் இதற்கு காரணத்தைக் கூறவில்லை)

முஸ்லிம் இமாம் இவரின் ஒரு செய்தியை துணை சான்றாக கூறியுள்ளார். (பார்க்க: முஸ்லிம்-3377)

அபூஹாதிம் அவர்கள் இவர் நம்பகமானவர் என்றாலும் அந்தளவிற்கு பலமானவர் அல்ல; இவரின் செய்திகளை எழுதிக்கொள்ளலாம்; இவர் சிறிது இப்னு லஹீஆவைப் போன்று என்று கூறியுள்ளார்...

இப்னு யூனுஸ் அவர்கள் இவரை முன்கருல் ஹதீஸ் (பலமானவர்களுக்கு மாற்றமாக அறிவிப்பவர்) என்று கூறியுள்ளார்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-5/126, தாரீகு இப்னு யூனுஸ்-1/279, தஹ்தீபுல் கமால்-15/410, தஹ்தீபுத் தஹ்தீப்-2/400)

அப்துர்ரஹ்மான் பின் ஹுர்முஸ்-அல்அஃரஜ்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அபூஹுரைரா (ரலி)-அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர்

நபித்தோழர்.

2 comments on Ibn-Majah-3123

  1. அஸ்ஸலாமு அலைக்கும்
    பாங்கில் [தொழுகை அழைப்பின் போது] அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று சொல்லும் போது கட்ட விரலில் முத்தமிட்டு கண்களில் தடவுவது பற்றிய ஹதீஸின் தெளிவு வேண்டும்

    1. வ அலைக்கும் ஸலாம். இந்த செய்தியை முஸ்னத் ஃபிர்தவ்ஸ் என்ற நூலில் தைலமீ பதிவு செய்துள்ளார். இது பலவீனமான செய்தி…

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.