தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3554

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நான் தஸ்பீஹ் செய்வதற்காக வைத்துள்ள நன்காயிரம் பேரீச்சம் கொட்டைகள் என் முன்னால் இருக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது, “இதைக் கொண்டு தான் நீ தஸ்பீஹ் செய்வாயா?” என்று கேட்டு விட்டு, “இதைக் கொண்டு நீ செய்யும் தஹ்பீஹை விட கூடுதலான ஒன்றை நான் உனக்குக் கற்றுக் கொடுக்கட்டுமா?” என்று கேட்டார்கள். நான் சரி என்றேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “ஸுப்ஹானல்லாஹி அதத கல்கிஹி என்று நீ சொல்” என கூறினார்கள்…

அறிவிப்பவர்: ஸஃபிய்யா (ரலி)

(திர்மிதி: 3554)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الوَارِثِ قَالَ: حَدَّثَنَا هَاشِمٌ وَهُوَ ابْنُ سَعِيدٍ الكُوفِيُّ قَالَ: حَدَّثَنِي كِنَانَةُ، مَوْلَى صَفِيَّةَ قَالَ: سَمِعْتُ صَفِيَّةَ، تَقُولُ:

دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبَيْنَ يَدَيَّ أَرْبَعَةُ آلَافِ نَوَاةٍ أُسَبِّحُ بِهَا، قَالَ: «لَقَدْ سَبَّحْتِ بِهَذِهِ، أَلَا أُعَلِّمُكِ بِأَكْثَرَ مِمَّا سَبَّحْتِ؟» فَقُلْتُ: بَلَى عَلِّمْنِي. فَقَالَ: ” قُولِي: سُبْحَانَ اللَّهِ عَدَدَ خَلْقِهِ

هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ صَفِيَّةَ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ مِنْ حَدِيثِ هَاشِمِ بْنِ سَعِيدٍ الكُوفِيِّ، وَلَيْسَ إِسْنَادُهُ بِمَعْرُوفٍ وَفِي البَابِ عَنْ ابْنِ عَبَّاسٍ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-3477.
Tirmidhi-Shamila-3554.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-3506.




[حكم الألباني] : منكر

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-46964-ஹாஷிம் பின் ஸயீத் என்பவர் பற்றி இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள், இவர் ஒரு பொருட்டே அல்ல என்றும்,
  • அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள், இவர் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர்.

(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/260, தக்ரீபுத் தஹ்தீப்-1/1016)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


சிலர் இந்த செய்தியை தஸ்பீஹ் மணிக்கு ஆதாரமாகக் கூறுகிறார்கள். இது பலவீனமானது என்பதால் இதை ஆதாரமாகக் கொண்டு சட்டம் எடுக்க முடியாது.

1 . இந்தக் கருத்தில் ஸஃபிய்யா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-3554 , முஸ்னத் அபீ யஃலா-7118 , அல்முஃஜமுல் கபீர்-195 , அல்முஃஜமுல் அவ்ஸத்-5472 , 8504 , ஹாகிம்-2008 ,

2 . ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-1500 .

  • இந்தக் கருத்துடன் தொடர்புடைய சரியான செய்தி:

பார்க்க: முஸ்லிம்-5272 .

  • கைகளால் தான் தஸ்பீஹ் செய்ய வேண்டும்.

பார்க்க: திர்மிதீ-3410 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.