பாடம்:
பெண்கள் (அதிகமாக) மண்ணறைகளை சந்திக்கச் செல்வது வெறுப்புக்குரிய செயல் என்பது குறித்து வந்துள்ளவை.
அதிகமாக மண்ணறைகளை சந்திக்கச் செல்லும் பெண்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப்பொருள் தொடர்பான செய்திகள் இப்னு அப்பாஸ் (ரலி), ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.
இந்த ஹதீஸ் “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.
மண்ணறைகளை சந்திப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கியதற்கு முன் இந்தத் தடை இருந்ததாக அறிஞர்களில் சிலர் கருதுகின்றனர். நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கியப் பின்பு ஆண்கள், பெண்கள் அனைவரும் இந்த அனுமதியில் சேர்ந்தவர்களாகிவிட்டனர் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
அறிஞர்களில் சிலர், “பெண்கள் பொறுமை குறைந்தவர்களாகவும், அதிகம் பயம், திடுக்கம் உள்ளவர்களாகவும் இருப்பதனால் தான் அவர்கள் மண்ணறைகளைச் சந்திப்பது வெறுப்புக்குரியது என்று கூறப்பட்டது” என கூறுகின்றனர்.
(திர்மிதி: 1056)بَابُ مَا جَاءَ فِي كَرَاهِيَةِ زِيَارَةِ القُبُورِ لِلنِّسَاءِ
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ،
«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَعَنَ زَوَّارَاتِ القُبُورِ
وَفِي البَاب عَنْ ابْنِ عَبَّاسٍ، وَحَسَّانَ بْنِ ثَابِتٍ.: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» وَقَدْ رَأَى بَعْضُ أَهْلِ العِلْمِ أَنَّ هَذَا كَانَ قَبْلَ أَنْ يُرَخِّصَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي زِيَارَةِ القُبُورِ، فَلَمَّا رَخَّصَ دَخَلَ فِي رُخْصَتِهِ الرِّجَالُ وَالنِّسَاءُ، وقَالَ بَعْضُهُمْ: إِنَّمَا كُرِهَ زِيَارَةُ القُبُورِ لِلنِّسَاءِ لِقِلَّةِ صَبْرِهِنَّ وَكَثْرَةِ جَزَعِهِنَّ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-976.
Tirmidhi-Shamila-1056.
Tirmidhi-Alamiah-976.
Tirmidhi-JawamiulKalim-974.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . திர்மிதீ இமாம்
2 . குதைபா பின் ஸயீத்
3 . அபூஅவானா
4 . உமர் பின் அபூஸலமா
5 . அபூஸலமா
6 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-31168-உமர் பின் அபூஸலமா அவர்கள் பற்றி ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ, யஹ்யா பின் ஸயீத்,பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர். இப்னு ஸஃத்,பிறப்பு ஹிஜ்ரி 168
இறப்பு ஹிஜ்ரி 230
வயது: 62
இப்னுல் மதீனீ,பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இப்னு குஸைமா பிறப்பு ஹிஜ்ரி 223
இறப்பு ஹிஜ்ரி 311
வயது: 88
போன்றோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
- இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள், இவரை பலவீனமானவர் என்று கூறியதாக இப்னு கைஸமா கூறியுள்ளார். (ஆனால் ஹுஷைம் இவரிடமிருந்து அறிவிப்பது பலவீனம் என்ற இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.கூறியுள்ளார்)
- இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள், இவரை சுமாரானவர் என்ற தரத்திலும் கூறியதாக அப்பாஸ் அத்தூரீ அவர்களும், இப்னு அபூகைஸமா அவர்களும் அறிவித்துள்ளனர். - ஸுஹைர் பின் ஹர்ப் அவர்கள், இவரை ஸாலிஹ் என்று கூறியுள்ளார்.
- அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள், இவரை ஸாலிஹ் என்றும் பலமானவர் என்றும் கூறியுள்ளார். - புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள், இவர் ஸதூக்-நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்றும் சில ஹதீஸ்களில் மற்றவர்களுக்கு மாற்றமாக அறிவித்துள்ளார் என்றும் கூறியுள்ளார். - இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
போன்றோர் இவரை நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்று கூறியுள்ளனர். - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவர் ஸதூக்-நடுத்தரமானவர்,நடுத்தரமானவர் - حسن الحديث சில செய்திகளில் தவறிழைத்துள்ளார் என்று கூறியுள்ளார்.
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அபூஅவானா —> உமர் பின் அபூஸலமா —> அபூஸலமா அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ- 2478, அஹ்மத்-8449, 8452, 8670, இப்னு மாஜா-1576, திர்மிதீ-1056, முஸ்னத் அபீ யஃலா- 5908, இப்னு ஹிப்பான்-3178, …
2 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-320.
3 . ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-1574.
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: ஹாகிம்-1392,
சமீப விமர்சனங்கள்