பாடம்: 23
அல்லாஹ் கூறுகிறான்:
அநாதைகளின் சொத்துக்களை யார் அநியாயமாக உண்கிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தான் நிரப்பிக் கொள்கிறார்கள். மேலும், விரைவில் அவர்கள் கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பில் வீசியெறியப்படுவார்கள். (அல்குர்ஆன்: 4:10)
“அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அவை எவை?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள்,
1 . “அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும்,
2 . சூனியம் செய்வதும்,
3 . நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும்,
4 . வட்டி உண்பதும்,
5 . அனாதைகளின் செல்வத்தை உண்பதும்,
6 . போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும்,
7 . அப்பாவிகளான இறைநம்பிக்கை கொண்ட கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)” என்று (பதில்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
அத்தியாயம்: 55
(புகாரி: 2766)بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {إِنَّ الَّذِينَ يَأْكُلُونَ أَمْوَالَ اليَتَامَى ظُلْمًا، إِنَّمَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ نَارًا وَسَيَصْلَوْنَ سَعِيرًا} [النساء: 10]
حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ المَدَنِيِّ، عَنْ أَبِي الغَيْثِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«اجْتَنِبُوا السَّبْعَ المُوبِقَاتِ»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ وَمَا هُنَّ؟ قَالَ: «الشِّرْكُ بِاللَّهِ، وَالسِّحْرُ، وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالحَقِّ، وَأَكْلُ الرِّبَا، وَأَكْلُ مَالِ اليَتِيمِ، وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ، وَقَذْفُ المُحْصَنَاتِ المُؤْمِنَاتِ الغَافِلاَتِ»
Bukhari-Tamil-2766.
Bukhari-TamilMisc-2766.
Bukhari-Shamila-2766.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்
2 . அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ்
3 . ஸுலைமான் பின் பிலால்
4 . ஸவ்ர் பின் ஸைத்
5 . ஸாலிம் அல்அதவீ-அபுல் ஃகைஸ்
6 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
இந்தச் செய்தி பலவகையான அறிவிப்பாளர்தொடர்களிலும், பல நபித்தோழர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கருத்தில் வரும் செய்திகளை சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர்.
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: புகாரி-2766 , 5764 , 6857 , முஸ்லிம்-145 , அபூதாவூத்-2874 , குப்ரா நஸாயீ-, நஸாயீ-3671 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, இப்னு ஹிப்பான்-, குப்ரா பைஹகீ-,
…
2 . உமைர் பின் கதாதா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-2875 .
3 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்அதபுல் முஃப்ரத்-8 .
4 . அனஸ்
5 . அபூபக்ரா
6 . அப்துல்லாஹ் பின் அம்ர்
7 . அப்துல்லாஹ் பின் உனைஸ்
8 . ஸஃப்வான் பின் அஸ்ஸால்
9 . அம்ர் பின் ஹஸ்ம்
10 . புரைதா பின் ஹுஸைப்
11 . அலீ
12 . ஸஹ்ல் பின் அப்துல்லாஹ்
13 . இப்னு அப்பாஸ்
14 . அபூஅய்யூப்
15 . இப்னு மஸ்ஊத்
16 . அபுத்தர்தா
17 . அபூஉமாமா
18 . அபூஸயீத்
19 . ஸவ்பான்
20 . இம்ரான் பின் ஹுஸைன்
சமீப விமர்சனங்கள்