தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-3597

A- A+


ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

விவரம் அறியாமல் ஏதேனும் ஒரு வழக்கில் உதவி செய்தல்.

யஹ்யா பின் ராஷித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுக்காக (அவர்களின் வருகையை எதிர்பார்த்து) அமர்ந்திருந்தோம். அப்போது அவர்கள் எங்களிடம் வந்து அமர்ந்தார்கள். பிறகு பின்வருமாறு கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன்:

யாரின் பரிந்துரை, அல்லாஹ்வின் சட்டங்களில் ஒரு சட்டத்தை நிறைவேற்ற விடாமல் தடுத்து விடுகிறதோ, அவர் நிச்சயமாக அல்லாஹ்வை எதிர்த்து விட்டார்.

யார் ஒரு அநீதியான வழக்கில், அது அநீதி என்று தெரிந்தே (அதற்காக) வாதிடுகிறாரோ, அவர் அதிலிருந்து விலகும் வரை அல்லாஹ்வின் கோபத்திலேயே இருக்கிறார்.

யார் ஒரு இறைநம்பிக்கையாளர் மீது அவரிடம் இல்லாத ஒரு குறையைக் கூறி அவதூறு சுமத்துகிறாரோ, அவர் கூறிய வார்த்தையிலிருந்து (தண்டனை பெற்று தூய்மையாகி) வெளியேறும் வரை அவரை ‘ரத்ஃகதுல் கபால்’ (எனும் நரகவாசிகளின் உடலில் இருந்து வழியும் சீழ் மற்றும் அழுக்குகள் நிறைந்த) இடத்தில் அல்லாஹ் தங்க வைப்பான்.

(அபூதாவூத்: 3597)

بَابٌ فِيمَنْ يُعِينُ عَلَى خُصُومَةٍ مِنْ غَيْرِ أَنْ يَعْلَمَ أَمْرَهَا

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ يَحْيَى بْنِ رَاشِدٍ، قَالَ:

جَلَسْنَا لِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ فَخَرَجَ إِلَيْنَا فَجَلَسَ، فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ حَالَتْ شَفَاعَتُهُ دُونَ حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ، فَقَدْ ضَادَّ اللَّهَ، وَمَنْ خَاصَمَ فِي بَاطِلٍ وَهُوَ يَعْلَمُهُ، لَمْ يَزَلْ فِي سَخَطِ اللَّهِ حَتَّى يَنْزِعَ عَنْهُ، وَمَنْ قَالَ فِي مُؤْمِنٍ مَا لَيْسَ فِيهِ أَسْكَنَهُ اللَّهُ رَدْغَةَ الْخَبَالِ حَتَّى يَخْرُجَ مِمَّا قَالَ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-3123.
Abu-Dawood-Shamila-3597.
Abu-Dawood-Alamiah-3123.
Abu-Dawood-JawamiulKalim-3125.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 

 

 


1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-5385, 5544, அபூதாவூத்-3597, …


அல்முஃஜமுல் கபீர்-13435,


2 . அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)… வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஹாகிம்-2222.


 

3 comments on Abu-Dawood-3597

  1. அவர் கூறுவதை திரும்ப வராத வரை அங்கே தங்குவார்

    இந்த வாசகம் விடுபட்டுள்ளது

    1. அவர் கூறியதை திரும்ப பெறாதவரை அவர் நரகில் தங்குவார்

      இந்த வாசகம் விடுபட்டுள்ளது சரி செய்யவும்

      1. அஸ்ஸலாமு அலைக்கும்.
        ஜஸாகல்லாஹு கைரா. வாசகத்தில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.