ஹதீஸின் தரம்: விபரம் கீழே
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தன் அன்பளிப்புப் பொருளைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன், தன் வாந்தியைத் தானே திரும்ப உண்பவனைப் போன்றவன் ஆவான். (இது போன்ற) இழிகுணம் நமக்கு முறையல்ல.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 11419)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَابَانَ الْجُنْدِيسَابُورِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ مِهْرَانَ الْحَمَّالُ، ثنا حَكَّامُ بْنُ سَلْمٍ، عَنِ الْمُثَنَّى بْنِ الصَّبَّاحِ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَيْسَ لَنَا مَثَلُ السَّوْءِ، الْعَائِدُ فِي هِبَتِهِ كَالْعَائِدِ فِي قَيْئِهِ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-11419.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-11263.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-39172-முஹம்மது பின் ஜாபான் அறியப்படாதவர்; ராவீ-35084-முஸன்னா பின் ஸப்பாஹ் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/920)
மேலும் பார்க்க: புகாரி-2589 .
சமீப விமர்சனங்கள்