பாதி அல்லது பாதிக்குமேல் காது இல்லாத; (உட்பகுதியில்) கொம்பு உடைந்த ஆட்டை குர்பானி கொடுப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைச் செய்தார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
ஜுரய்யு என்பவர் பஸரா நகரைச் சேர்ந்தவர்; ஸதூஸ் கூட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரிடமிருந்து கதாதாவைத் தவிர வேறு யாரும் (ஹதீஸ்களை) அறிவிக்கவில்லை.
(அபூதாவூத்: 2805)
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ أَبِي عَبْدِ اللَّهِ الدَّسْتُوَائِيُّ، وَيُقَالُ لَهُ هِشَامُ بْنُ سَنْبَرٍ – عَنْ قَتَادَةَ، عَنْ جُرَيِّ بْنِ كُلَيْبٍ، عَنْ عَلِيٍّ،
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى أَنْ يُضَحَّى بِعَضْبَاءِ الْأُذُنِ وَالْقَرْنِ»
قَالَ أَبُو دَاوُدَ: ” جُرَيٌّ: سَدُوسِيٌّ بَصْرِيٌّ لَمْ يُحَدِّثْ عَنْهُ إِلَّا قَتَادَةُ
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-2423.
Abu-Dawood-Shamila-2805.
Abu-Dawood-Alamiah-2423.
Abu-Dawood-JawamiulKalim-2426.
(குறிப்பு: அள்பா என்பதற்கு அரபு அகராதியில் உட்பகுதியில் கொம்பு உடைந்த ஆடு என்பதற்கு கூறப்படும். சிலர் இந்த செய்திக்கு இந்த பொருளையே கூறுகின்றனர்.)
تحفة الأحوذي (5/ 75)
قُلْتُ قَالَ فِي الْفَائِقِ الْعَضْبُ فِي الْقَرْنِ دَاخِلُ الِانْكِسَارِ وَيُقَالُ للانكسار في الخارج القصم وكذلك في خارج القصم الْقَامُوسِ كَمَا عَرَفْتَ وَقَالَ فِيهِ الْقَصْمَاءُ الْمَعْزُ الْمَكْسُورَةُ الْقَرْنِ الْخَارِجِ انْتَهَى
فَالظَّاهِرُ عِنْدِي أَنَّ الْمَكْسُورَةَ الْقَرْنِ الْخَارِجِ تَجُوزُ التَّضْحِيَةُ بِهَا وَأَمَّا الْمَكْسُورَةُ الْقَرْنِ الدَّاخِلِ فَكَمَا قَالَ الشَّوْكَانِيُّ مِنْ أَنَّهَا لَا تَجُوزُ التَّضْحِيَةُ بِهَا إِلَّا أَنْ يَكُونَ الذَّاهِبُ مِنَ الْقَرْنِ الدَّاخِلِ مِقْدَارًا يَسِيرًا إِلَخْ
وَاللَّهُ تَعَالَى أَعْلَمُ
துஹ்ஃபதுல் அஹ்வதீ நூலாசிரியர் கூறுகிறார்:
‘அல்-ஃபாயிக்’ எனும் நூலில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: கொம்பின் ‘உட்பகுதியில்’ ஏற்படும் உடைப்பிற்கு ‘அள்பு’ (العضب) என்று சொல்லப்படும். கொம்பின் ‘வெளிப்பகுதியில்’ ஏற்படும் உடைப்பிற்கு ‘கஸ்மு’ (القصم) என்று சொல்லப்படும். நீங்கள் அறிந்ததைப் போன்றே ‘அல்-காமுஸ்’ அகராதியிலும் இவ்வாறே கூறப்பட்டுள்ளது. மேலும் அதில், “‘அல்-கஸ்மாஉ’ (القصماء) என்பது வெளிப்பக்கக் கொம்பு உடைந்த ஆட்டைக் குறிக்கும்” என்றும் கூறப்பட்டுள்ளது.
எனவே, எனது பார்வையில் தெளிவான கருத்து என்னவெனில்: கொம்பின் வெளிப்பகுதி உடைந்த விலங்கைக் குர்பானி கொடுப்பது கூடும். ஆனால், கொம்பின் உட்பகுதி உடைந்த விலங்கைப் பொறுத்தவரை, இமாம் ஷவ்கானீ அவர்கள் கூறியதைப் போல், “அதைக் குர்பானி கொடுப்பது கூடாது; உடைந்த உட்பகுதியின் அளவு மிகக் குறைவாக இருந்தால் பரவாயில்லை.
முழுமையான அறிவை உடையவன் அல்லாஹ் ஒருவனே ஆவான்.
(நூல்: துஹ்ஃபதுல் அஹ்வதீ-5/75)
குர்பானி பிராணிகளின் கொம்பு பகுதி பற்றி:
எலும்பு வளர்ச்சி: கொம்பின் உட்புறம் வெற்றுப் பகுதி அல்ல. மண்டையோட்டின் எலும்புப் பகுதியானது கொம்பின் உட்புறம் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை நீண்டுள்ளது. இதை ‘கொம்பு மையப்பகுதி’ (Horn Core) என்று அழைப்பார்கள்.
எவ்வளவு தூரம் இருக்கும்?: ஆடு, மாடு இனத்தைப் பொறுத்து இது மாறுபடும். பொதுவாக, கொம்பின் மொத்த நீளத்தில் பாதி அல்லது அதற்கு சற்று அதிகமான தூரம் வரை இந்த எலும்பு மையப்பகுதி நீட்டிக்கொண்டிருக்கும்.
இரத்த ஓட்டம் மற்றும் நரம்புகள்: இந்த எலும்பு மையப்பகுதிக்குள் ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகள் அதிக அளவில் காணப்படும். இதனால் தான் கொம்பின் அடிப் பகுதியில் காயம் ஏற்பட்டாலோ அல்லது கொம்பு உடைந்தாலோ அதிக ரத்தப்போக்கு மற்றும் கடுமையான வலி ஏற்படுகிறது.
நுனிப் பகுதி: கொம்பின் நுனிப் பகுதிக்குச் செல்லச் செல்ல எலும்புப் பகுதி முடிந்துவிடும். அங்கு வெறும் கெரட்டின் உறை (Outer sheath) மட்டுமே இருக்கும். எனவே, நுனிப் பகுதியில் வெட்டினால் வலி இருக்காது, ஆனால் அடிப் பகுதியில் (எலும்பு இருக்கும் பகுதியில்) வெட்டினால் வலி மற்றும் ரத்தம் வரும்.
தவிர்க்க வேண்டியவை: கொம்பின் வேர்ப்பகுதி வரை உடைந்து, உள்ளே இருக்கும் எலும்பு வெளிப்பட்டு, அதனால் பிராணி மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருந்தால், அதைத் தவிர்ப்பதே சிறந்தது.
அனுமதிக்கப்பட்டவை: கொம்பின் நுனிப்பகுதி மட்டும் உடைந்திருந்தால், அல்லது எலும்புப் பகுதிக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றால், அது குர்பானிக்குத் தகுதியானதே.
திர்மிதீ இமாம், ஹாகிம்,பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
போன்றோர் இந்த செய்தியை சரியானது என்று கூறியிருப்பதாலும், ஜுரய்யு பின் குலைப் அவர்களின் தரநிலையாலும் ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
போன்றோர் இந்த செய்தியை (ஆதாரத்திற்கேற்ற) ஹஸன் தரம் என்று கூறியுள்ளனர். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் ஜுரய்யு பின் குலைப் பஸரீ, கூஃபீ ஆகிய இருவரையும் மக்பூல் தரத்தில் கூறியிருப்பதால் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
போன்ற சிலர் இந்த செய்தியை பலவீனமானது என்று கூறியுள்ளனர்.
இந்தச் செய்தியை ஆதாரமாகக் கொண்டே சில அறிஞர்கள் பாதி, பாதிக்குமேல் கொம்பு உடைந்த, காது இல்லாத ஆட்டைக் குர்பானி கொடுக்கக் கூடாது என்று கூறுகின்றனர். சிலர் வெளிப்பகுதியில் கொம்பு உடைவதால் அதன் கறிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதால் அதைக் குர்பானி கொடுக்கலாம் என்றும், உட்பகுதியில் கொம்பு உடைந்து இரத்தம் வந்தால் அதைக் குர்பானி கொடுக்கக் கூடாது என்றும் கூறுகின்றனர்.
மேலும் பார்க்க: அஹ்மத்-734.
jazakallah