பாடம்:
கொம்புடைந்த, காது பிளக்கப்பட்ட பிராணியை குர்பானி கொடுப்பது.
ஒரு மாட்டை ஏழுபேர் சேர்ந்து குர்பானி கொடுக்கலாம் என்று அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது நான், அது கன்றை ஈன்றால் என்ன செய்வது? என்றுக் கேட்டேன். அதற்கவர்கள், அதையும் அதனுடன் அறுத்துக்கொள்! என்று கூறினார்கள். அது நொண்டியாக இருந்தால்? (அதைக் குர்பானி கொடுக்கலாமா?) என்று கேட்டேன். அதற்கவர்கள், அதனால் அறுக்கும் இடத்திற்கு செல்லமுடியும் என்றால் அதை குர்பானி கொடுக்கலாம் என்று கூறினார்கள். கொம்புடைந்ததாக இருந்தால்? என்று கேட்டேன். அதற்கவர்கள், அது பரவாயில்லை; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குர்பானி பிராணியின் கண்களையும், காதுகளையும் உன்னிப்பாக கவனித்து வாங்குமாறு எங்களுக்கு கட்டளையிட்டார்கள் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஹுஜய்யா பின் அதீ (ரஹ்)
(திர்மிதி: 1503)بَابٌ فِي الضَّحِيَّةِ بِعَضْبَاءِ القَرْنِ وَالأُذُنِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: أَخْبَرَنَا شَرِيكٌ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ حُجَيَّةَ بْنِ عَدِيٍّ، عَنْ عَلِيٍّ قَالَ:
البَقَرَةُ عَنْ سَبْعَةٍ، قُلْتُ: فَإِنْ وَلَدَتْ؟ قَالَ: اذْبَحْ وَلَدَهَا مَعَهَا، قُلْتُ: فَالعَرْجَاءُ، قَالَ: إِذَا بَلَغَتِ المَنْسِكَ، قُلْتُ: فَمَكْسُورَةُ القَرْنِ، قَالَ: لَا بَأْسَ «أُمِرْنَا، أَوْ أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَسْتَشْرِفَ العَيْنَيْنِ وَالأُذُنَيْنِ»
هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ: وَقَدْ رَوَاهُ سُفْيَانُ الثَّورِيُّ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-1503.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-1419.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-11354-ஹுஜய்யா பின் அதீ அறியப்படாதவர் என்று அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
கூறியுள்ளார். இவர் நம்பகமானவர் என்றாலும் தவறிழைப்பவர் என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் கூறியுள்ளார்…
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/366, தக்ரீபுத் தஹ்தீப்-1/226)
…
1 . இந்தக் கருத்தில் அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஸலமா பின் குஹைல் —> ஹுஜய்யா பின் அதீ —> அலீ (ரலி)
பார்க்க: அஹ்மத்-732 , 734 , 826 , 1021 , 1022 , 1309 , 1312 , தாரிமீ-1994 , இப்னு மாஜா-3143 , திர்மிதீ-1503 , நஸாயீ-4376 ,
- அபூஇஸ்ஹாக் —> ஷுரைஹ் பின் நுஃமான் —> அலீ (ரலி)
பார்க்க: அஹ்மத்-609 , 851 , 1061 , 1275 , தாரிமீ-1995 , இப்னு மாஜா-3142 , அபூதாவூத்-2804 , திர்மிதீ-1498 , நஸாயீ-4372 , 4373 , 4374 , 4375 , …
- அபூஇஸ்ஹாக் —> ஷுரைஹ் பின் நுஃமான் —> இப்னு அஷ்வஃ —> அலீ (ரலி)
பார்க்க: ஹாகிம்-7532 ,
- அபூஇஸ்ஹாக் —> ஹுபைரா —> அலீ (ரலி)
பார்க்க: அஹ்மத்-1106 , அல்முஃஜமுல் அவ்ஸத்-7973 ,
2 . ஹுதைஃபா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-2932 .
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-2805 .
சமீப விமர்சனங்கள்