அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஸலாம் கூறுவதிலும், தொழுகையிலும் குறைவு வைக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான முஆவியா பின் ஹிஷாம் அவர்கள், இந்தச் செய்தியை ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்கள் நபியின் சொல்லாக அறிவித்தார்கள் என்று கருதுகிறேன் என்று கூறினார்.
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
இந்தச் செய்தியை (ஹதீஸ் எண்-928 ல், அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ அவர்கள் அறிவித்த வார்த்தை அமைப்பில்) அபூமாலிக் அவர்களிடமிருந்து முஹம்மத் பின் ஃபுளைல் அவர்கள் (நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளார்;) நபியின் சொல்லாக அறிவிக்கவில்லை.
(அபூதாவூத்: 929)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، أَخْبَرَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي مَالِكٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: أُرَاهُ رَفَعَهُ، قَالَ:
«لَا غِرَارَ فِي تَسْلِيمٍ، وَلَا صَلَاةٍ»
قَالَ أَبُو دَاوُدَ: وَرَوَاهُ ابْنُ فُضَيْلٍ عَلَى لَفْظِ ابْنِ مَهْدِيٍّ، وَلَمْ يَرْفَعْهُ
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-929.
Abu-Dawood-Alamiah-794.
Abu-Dawood-JawamiulKalim-795.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்
2 . முஹம்மத் பின் அலா
3 . முஆவியா பின் ஹிஷாம்
4 . ஸுஃப்யான் ஸவ்ரீ
5 . அபூமாலிக்-ஸஃத் பின் தாரிக்
6 . அபூஹாஸிம்-ஸல்மான்
7 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
இந்த அறிவிப்பாளர்தொடர் ஷாத் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும். இதற்கான காரணம்:
1 . இந்தச் செய்தியை ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ அவர்கள் சந்தேகமில்லாமல் நபியின் சொல்லாக அறிவித்துள்ளார்.
2 . ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஆவியா பின் ஹிஷாம் அவர்கள் சந்தேகத்துடன் நபியின் சொல்லாக அறிவித்துள்ளார் என்பதுடன் கருத்தையும் மாற்றி அறிவித்துள்ளார்.
1 . அபூமாலிக் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்கள் நபியின் சொல்லாக அறிவித்துள்ளார்.
2 . அபூமாலிக் அவர்களிடமிருந்து அறிவிக்கும், முஹம்மத் பின் ஃபுளைல் அவர்கள் நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளார்.
- இவர்களில் அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 65
அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அவர்கள் ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்களின் ஹதீஸ்களை நன்கு அறிந்தவர் என்பதாலும், முஆவியா பின் ஹிஷாம் அவர்களை விட மிகப்பலமானவர் என்பதாலும் நபியின் சொல் என்பதே மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெற்ற செய்தியாகும்.
(ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்களின் மாணவர்களில் மிகவும் முன்னுரிமை பெற்ற முதல் வகை பலமானவர்கள் 5 பேர். அவர்கள்:
1 . யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அல்கத்தான்
2 . வகீஃ பின் ஜர்ராஹ்
3 . இப்னுல் முபாரக்
4 . அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ
5 . அபூநுஐம்-ஃபள்ல் பின் துகைன்
என இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் கூறியதாக இப்னு அபூகைஸமா அறிவித்துள்ளார்.
பார்க்க: அல்கமால்-8/149, தஹ்தீபுல் கமால்-23/209, ஷரஹு இலலுத் திர்மிதீ-2/722)
- இவ்வாறே அபூமாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஹம்மத் பின் ஃபுளைல் அவர்களை விட ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்களே மிகப்பலமானவர் என்பதால் நபியின் சொல் என்பதே மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெற்ற செய்தியாகும். - நபியின் சொல்லாக அறிவிப்பது கூடுதல் தகவல் ஆகும்; பலமானவரின் கூடுதல் தகவல் ஏற்கப்படும் என்ற விதியை இந்த இடத்தில் ஏற்றுக்கொள்வதற்கு தகுந்த காரணம் உள்ளது.
மேலும் பார்க்க: அபூதாவூத்-928 .
சமீப விமர்சனங்கள்