தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-123

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நான் பெருநாளன்று வாஸிலா இப்னு அஸ்கஃ (ரலி) அவர்களைச் சந்தித்து “தகப்பலல்லாஹு மின்னா வமின்க” (அல்லாஹ் உங்களிடமிருந்தும் என்னிடமிருந்தும் ஏற்றுக் கொள்வானாக) என்று கூறினேன். அதற்கவர்கள் ஆம் ! தகப்பலல்லாஹு மின்னா வமின்க (அல்லாஹ் உங்களிடமிருந்தும் என்னிடமிருந்தும் ஏற்றுக் கொள்வானாக) என்று கூறினார்கள் என்று என் தந்தை எனக்கு அறிவித்தார்.

அறிவிப்பவர்: ஹபீப் பின் உமர் அல்அன்ஸாரீ

 

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 123)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَزْدَادَ التَّوْزِيُّ، ثنا أَبُو هَمَّامٍ الْوَلِيدُ بْنُ شُجَاعٍ، ثنا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنِي حَبِيبُ بْنُ عُمَرَ الْأَنْصَارِيُّ، أَخْبَرَنِي أَبِي قَالَ:

لَقِيتُ وَاثِلَةَ يَوْمَ عِيدٍ فَقُلْتُ: تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكَ فَقَالَ: نَعَمْ، تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكَ


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-123.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-17619.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-43523-முஹம்மது பின் யஸ்தாத், ராவீ-11208-ஹபீப் பின் உமர், அவரின் தந்தை போன்றோர் யாரென அறியப்படாதவர்கள் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
  • ராவீ-11208-ஹபீப் பின் உமர் பற்றி இமாம் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பலவீனமானவர் என்றும், அபூஹாத்திம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    போன்றோர் இவர் பலவீனமானவர், அறியப்படாதவர் என்றும் கூறியுள்ளனர். (நூல்: லிஸானுல் மீஸான் 2/552)
  • மேலும் இதில் வரும் ராவீ-9319-பக்கிய்யது பின் வலீத் பலவீனமானவர்களை மறைத்து அறிவிப்பவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். (நூல்: தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1/174)

மேலும் பார்க்க: குப்ரா பைஹகீ-6294 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.