Author: Farook

Muslim-2734

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2734. சப்ரா பின் மஅபத் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நாளில் “அல்முத்ஆ” (தவணை முறைத்) திருமணம் செய்யலாகாதெனத் தடை விதித்தார்கள்.

Book : 16


«أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى يَوْمَ الْفَتْحِ عَنْ مُتْعَةِ النِّسَاءِ»


Muslim-2733

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2733. சப்ரா பின் மஅபத் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அல்முத்ஆ” (தவணை முறைத்) திருமணம் செய்யலாகாதெனத் தடை விதித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 16


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ نِكَاحِ الْمُتْعَةِ»


Muslim-2732

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2732. சப்ரா பின் மஅபத் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கா வெற்றி ஆண்டில் நபி (ஸல்) அவர்கள் “அல்முத்ஆ” (தவணை முறைத்) திருமணம் செய்துகொள்ளுமாறு தம் தோழர்களுக்கு உத்தரவிட்டார்கள். ஆகவே, நானும் பனூ சுலைம் குலத்தைச் சேர்ந்த என் நண்பர் ஒருவரும் புறப்பட்டுச் சென்று பனூ ஆமிர் குலத்தைச் சேர்ந்த ஓர் இளம்பெண்ணைச் சந்தித்தோம். அவள் நீண்ட கழுத்துடைய இளம் ஒட்டகத்தைப் போன்று (அழகாக) இருந்தாள். எங்கள் இருவரிடம் இருந்த இரு போர்வைகளைக் காட்டி அவளை நாங்கள் பெண் கேட்டோம். அவள் (எங்களைக்) கூர்ந்து பார்த்தபோது, என் நண்பரைவிட நான் அழகனாக இருப்பதைக் கண்டாள். எனது போர்வையைவிட என் நண்பரின் போர்வை அழகானதாக இருந்ததையும் அவள் கண்டாள். சிறிது நேரம் அவள் மனத்திற்குள் யோசித்துவிட்டு, என் நண்பரை விடுத்து என்னை (கணவராக)த் தேர்ந்தெடுத்தாள்.

அவ்வாறு மணமுடிக்கப்பட்ட பெண்கள் எங்களுடன் மூன்று நாட்கள் இருந்தனர். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்களைவிட்டுப் பிரிந்துவிடுமாறு கட்டளையிட்டார்கள்.

Book : 16


«أَنَّ نَبِيَّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ فَتْحِ مَكَّةَ أَمَرَ أَصْحَابَهُ بِالتَّمَتُّعِ مِنَ النِّسَاءِ»، قَالَ: «فَخَرَجْتُ أَنَا وَصَاحِبٌ لِي مِنْ بَنِي سُلَيْمٍ، حَتَّى وَجَدْنَا جَارِيَةً مِنْ بَنِي عَامِرٍ كَأَنَّهَا بَكْرَةٌ عَيْطَاءُ، فَخَطَبْنَاهَا إِلَى نَفْسِهَا وَعَرَضْنَا عَلَيْهَا بُرْدَيْنَا، فَجَعَلَتْ تَنْظُرُ فَتَرَانِي أَجْمَلَ مِنْ صَاحِبِي، وَتَرَى بُرْدَ صَاحِبِي أَحْسَنَ مِنْ بُرْدِي، فَآمَرَتْ نَفْسَهَا سَاعَةً ثُمَّ اخْتَارَتْنِي عَلَى صَاحِبِي، فَكُنَّ مَعَنَا ثَلَاثًا، ثُمَّ أَمَرَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِفِرَاقِهِنَّ»


Muslim-2731

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2731. ஸப்ரா பின் மஅபத் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் மக்கா வெற்றி ஆண்டில் மக்காவிற்குள் நுழைந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அல்முத்ஆ” (தவணை முறைத்) திருமணம் செய்துகொள்ள உத்தரவிட்டார்கள். பின்னர் மக்காவிலிருந்து புறப்படுவதற்குள் அதிலிருந்து எங்களைத் தடுத்துவிட்டார்கள்.

அத்தியாயம்: 16


«أَمَرَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمُتْعَةِ عَامَ الْفَتْحِ، حِينَ دَخَلْنَا مَكَّةَ، ثُمَّ لَمْ نَخْرُجْ مِنْهَا حَتَّى نَهَانَا عَنْهَا»


Muslim-2730

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2730. ஸப்ரா பின் மஅபத் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (மக்கா வெற்றியின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்கள், “மக்களே! நான் “முத்ஆ” (தவணை முறைத்) திருமணம் செய்துகொள்ள உங்களுக்கு அனுமதியளித்திருந்தேன். (இப்போது) அல்லாஹ் அத்திருமணத்திற்கு மறுமை நாள்வரைத் தடை விதித்துவிட்டான். எனவே, “முத்ஆ” திருமணம் செய்த பெண்ணைத் தம்மிடம் வைத்திருப்பவர், அவளை அவளது வழியில் விட்டுவிடட்டும். அவளுக்கு நீங்கள் (மணக்கொடையாகக்) கொடுத்திருந்த எதையும் (திரும்ப) எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்றார்கள்.


– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வதுக்கும் கஅபாவின் தலைவாயிலுக்கும் நடுவில் நின்று கொண்டிருப்பதை நான் கண்டேன்” என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.


அத்தியாயம்: 16


أَنَّهُ كَانَ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «يَا أَيُّهَا النَّاسُ، إِنِّي قَدْ كُنْتُ أَذِنْتُ لَكُمْ فِي الِاسْتِمْتَاعِ مِنَ النِّسَاءِ، وَإِنَّ اللهَ قَدْ حَرَّمَ ذَلِكَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ، فَمَنْ كَانَ عِنْدَهُ مِنْهُنَّ شَيْءٌ فَلْيُخَلِّ سَبِيلَهُ، وَلَا تَأْخُذُوا مِمَّا آتَيْتُمُوهُنَّ شَيْئًا»

– وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ عُمَرَ، بِهَذَا الْإِسْنَادِ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمًا بَيْنَ الرُّكْنِ وَالْبَابِ، وَهُوَ يَقُولُ: بِمِثْلِ حَدِيثِ ابْنِ نُمَيْرٍ


Muslim-2729

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2729. ரபீஉ பின் சப்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை (சப்ரா பின் மஅபத் -ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் மக்கா வெற்றிப்போரில் கலந்து கொண்டார்கள். அவர்கள் கூறினார்கள்: நாங்கள் மக்காவில் பதினைந்து நாட்கள் (முப்பது இரவு – பகல்கள்) தங்கியிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அல்முத்ஆ” (தவணைமுறைத் திருமணம்) செய்துகொள்ள எங்களுக்கு அனுமதியளித்தார்கள். ஆகவே, நானும் எனது குடும்பத்தைச் சேர்ந்த (என் தந்தையின் சகோரர் புதல்வர்) ஒருவரும் (பெண் தேடிப்) புறப்பட்டோம். நான் அவரைவிட அழகில் சிறந்தவனாக இருந்தேன். அவர் சுமாரான அழகுடையவராகவே இருந்தார்.

எங்களில் ஒவ்வொருவருடனும் ஒரு போர்வை இருந்தது. எனது போர்வை மிகப் பழையதாயிருந்தது. என் தந்தையின் சகோதரர் புதல்வரது போர்வை புதியதாகவும் மிருதுவாகவும் இருந்தது. நாங்கள் மக்காவிற்குக் “கீழ் புறத்தில்” அல்லது “மேற்புறத்தில்” இருந்தபோது, கழுத்து நீண்ட இளம் ஒட்டகத்தைப் போன்ற (அழகான) கன்னிப்பெண் ஒருத்தி எங்களைச் சந்தித்தாள். அவளிடம் நாங்கள், “எங்களில் ஒருவரை “அல்முத்ஆ” (தவணை

أَنَّ أَبَاهُ، «غَزَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتْحَ مَكَّةَ»، قَالَ: ” فَأَقَمْنَا بِهَا خَمْسَ عَشْرَةَ – ثَلَاثِينَ بَيْنَ لَيْلَةٍ وَيَوْمٍ – فَأَذِنَ لَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مُتْعَةِ النِّسَاءِ، فَخَرَجْتُ أَنَا وَرَجُلٌ مِنْ قَوْمِي، وَلِي عَلَيْهِ فَضْلٌ فِي الْجَمَالِ، وَهُوَ قَرِيبٌ مِنَ الدَّمَامَةِ، مَعَ كُلِّ وَاحِدٍ مِنَّا بُرْدٌ، فَبُرْدِي خَلَقٌ، وَأَمَّا بُرْدُ ابْنِ عَمِّي فَبُرْدٌ جَدِيدٌ، غَضٌّ، حَتَّى إِذَا كُنَّا بِأَسْفَلِ مَكَّةَ – أَوْ بِأَعْلَاهَا – فَتَلَقَّتْنَا فَتَاةٌ مِثْلُ الْبَكْرَةِ الْعَنَطْنَطَةِ، فَقُلْنَا: هَلْ لَكِ أَنْ يَسْتَمْتِعَ مِنْكِ أَحَدُنَا؟ قَالَتْ: وَمَاذَا تَبْذُلَانِ؟ فَنَشَرَ كُلُّ وَاحِدٍ مِنَّا بُرْدَهُ، فَجَعَلَتْ تَنْظُرُ إِلَى الرَّجُلَيْنِ، وَيَرَاهَا صَاحِبِي تَنْظُرُ إِلَى عِطْفِهَا، فَقَالَ: إِنَّ بُرْدَ هَذَا خَلَقٌ، وَبُرْدِي جَدِيدٌ غَضٌّ، فَتَقُولُ: بُرْدُ هَذَا لَا بَأْسَ بِهِ ثَلَاثَ مِرَارٍ – أَوْ مَرَّتَيْنِ – ثُمَّ اسْتَمْتَعْتُ مِنْهَا، فَلَمْ أَخْرُجْ حَتَّى حَرَّمَهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

– وحَدَّثَنِي أَحْمَدُ بْنُ سَعِيدِ بْنِ صَخْرٍ الدَّارِمِيُّ، حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا عُمَارَةُ بْنُ غَزِيَّةَ، حَدَّثَنِي الرَّبِيعُ بْنُ سَبْرَةَ الْجُهَنِيُّ، عَنْ أَبِيهِ، قَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الْفَتْحِ إِلَى مَكَّةَ، فَذَكَرَ بِمِثْلِ حَدِيثِ بِشْرٍ، وَزَادَ قَالَتْ: وَهَلْ يَصْلُحُ ذَاكَ؟ وَفِيهِ: قَالَ: إِنَّ بُرْدَ هَذَا خَلَقٌ مَحٌّ


Muslim-2728

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2728. சப்ரா பின் மஅபத் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றியின்போது) எங்களுக்கு “அல்முத்ஆ” (தவணை முறைத் திருமணம்) செய்துகொள்ள அனுமதியளித்தார்கள். நானும் மற்றொரு மனிதரும் “பனூ ஆமிர்” குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் சென்றோம். அவள் கழுத்து நீண்ட இளம் ஒட்டகத்தைப் போன்று (அழகாக) இருந்தாள். எங்களில் ஒருவரைத் திருமணம் செய்துகொள்ளுமாறு அவளிடம் நாங்கள் கோரினோம். அவள், “(மணக்கொடையாக) நீங்கள் என்ன கொடுப்பீர்கள்?” என்று கேட்டாள். நான், “எனது மேலாடையை” என்றேன். என்னுடன் வந்திருந்தவர் “எனது மேலாடையை” என்று கூறினார். என்னுடன் வந்திருந்தவரின் மேலாடை எனது மேலாடையைவிடத் தரமானதாக இருந்தது. ஆனால், நான் அவரைவிட (வயது குறைந்த) இளைஞனாயிருந்தேன். அவள் என்னுடன் வந்திருந்தவரின் மேலாடையைக் கூர்ந்து பார்த்தபோது, அது அவளுக்குப் பிடித்தது. அதே சமயத்தில், அவள் என்னைப் பார்த்த போது, நானும் அவளுக்குப் பிடித்திருந்தேன். பிறகு அவள், (என்னைப் பார்த்து) “நீரும் உமது மேலாடையுமே எனக்குப் போதும்” என்றாள். நான் (அவளை மணமுடித்து) அவளுடன் மூன்று நாட்கள் தங்கியிருந்தேன்.

أَذِنَ لَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمُتْعَةِ، فَانْطَلَقْتُ أَنَا وَرَجُلٌ إِلَى امْرَأَةٍ مِنْ بَنِي عَامِرٍ، كَأَنَّهَا بَكْرَةٌ عَيْطَاءُ، فَعَرَضْنَا عَلَيْهَا أَنْفُسَنَا، فَقَالَتْ: مَا تُعْطِي؟ فَقُلْتُ: رِدَائِي، وَقَالَ صَاحِبِي: رِدَائِي، وَكَانَ رِدَاءُ صَاحِبِي أَجْوَدَ مِنْ رِدَائِي، وَكُنْتُ أَشَبَّ مِنْهُ، فَإِذَا نَظَرَتْ إِلَى رِدَاءِ صَاحِبِي أَعْجَبَهَا، وَإِذَا نَظَرَتْ إِلَيَّ أَعْجَبْتُهَا، ثُمَّ قَالَتْ: أَنْتَ وَرِدَاؤُكَ يَكْفِينِي، فَمَكَثْتُ مَعَهَا ثَلَاثًا، ثُمَّ إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ كَانَ عِنْدَهُ شَيْءٌ مِنْ هَذِهِ النِّسَاءِ الَّتِي يَتَمَتَّعُ، فَلْيُخَلِّ سَبِيلَهَا»


Muslim-2727

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2727. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவ்தாஸ்” போர் ஆண்டில் மூன்று நாட்களுக்கு “அல்முத்ஆ” (தவணை முறைத் திருமணம்) செய்துகொள்ள அனுமதியளித்தார்கள். பின்னர் அதற்குத் தடைவிதித்தார்கள்.

Book : 16


«رَخَّصَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ أَوْطَاسٍ، فِي الْمُتْعَةِ ثَلَاثًا، ثُمَّ نَهَى عَنْهَا»


Muslim-2726

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2726. அபூநள்ரா முன்திர் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் இருந்தேன். அப்போது அவர்களிடம் ஒருவர் வந்து, “இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் இப்னுஸ் ஸுபைர் (ரலி) அவர்களும் (“தமத்துஉ” வகை ஹஜ் மற்றும் தவணைமுறைத் திருமணம் ஆகிய) இரு “முத்ஆ”க்கள் விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டனர்” என்று கூறினார். அப்போது ஜாபிர் (ரலி) அவர்கள், “நாங்கள் அவ்விரண்டையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (இருக்கும் காலத்தில்) செய்தோம். பின்னர் உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) அவ்விரண்டையும் செய்யலாகாதென எங்களுக்குத் தடைவிதித்தார்கள். எனவே, நாங்கள் அவ் விரண்டையும் திரும்பச் செய்வதில்லை” என்று விடையளித்தார்கள்.

Book : 16


كُنْتُ عِنْدَ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، فَأَتَاهُ آتٍ، فَقَالَ: ابْنُ عَبَّاسٍ وَابْنُ الزُّبَيْرِ اخْتَلَفَا فِي الْمُتْعَتَيْنِ، فَقَالَ جَابِرٌ: «فَعَلْنَاهُمَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ نَهَانَا عَنْهُمَا عُمَرُ، فَلَمْ نَعُدْ لَهُمَا»


Muslim-2725

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2725. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ர் (ரலி) அவர்களது காலத்திலும் ஒரு கையளவுப் பேரீச்சம் பழம் மற்றும் மாவு ஆகியவற்றைக் கொடுத்து, சில நாட்களுக்காக நாங்கள் “அல்முத்ஆ” (தவணைமுறைத் திருமணம்) செய்துவந்தோம். உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) அம்ர் பின் ஹுரைஸ் (ரலி) அவர்கள் தொடர்பான விஷயத்தில் அத்திருமணத்திற்குத் தடை விதித்துவிட்டார்கள்.

Book : 16


«كُنَّا نَسْتَمْتِعُ بِالْقَبْضَةِ مِنَ التَّمْرِ وَالدَّقِيقِ، الْأَيَّامَ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبِي بَكْرٍ، حَتَّى نَهَى عَنْهُ عُمَرُ، فِي شَأْنِ عَمْرِو بْنِ حُرَيْثٍ»


Next Page » « Previous Page