Author: Farook

Muslim-2714

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2714. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் சிலர் நபியவர்களின் துணைவியரிடம் (சென்று), நபியவர்கள் தனிமையில் செய்யும் வழிபாடுகள் குறித்து வினவினர். (அவர்கள் கூறிய மறுமொழியைக் கேட்ட பின் நபியவர்கள் செய்யும் வழிபாடுகளைக் குறைவாக எண்ணிக்கொண்டு) அவர்களில் ஒருவர், “நான் பெண்களை மணமுடிக்கமாட்டேன்” என்று சொன்னார். மற்றொருவர் “நான் புலால் உண்ண மாட்டேன்” என்றார். இன்னொருவர், “நான் படுக்கையில் உறங்கமாட்டேன்” என்றார். (இதை அறிந்த) நபி (ஸல்) அவர்கள் இறைவனை வாழ்த்திப் போற்றிவிட்டு, “சிலருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் இப்படியெல்லாம் கூறுகின்றனர். ஆனால், நான் (இரவில்) தொழுகிறேன்; உறங்கவும் செய்கிறேன். நோன்பும் நோற்கிறேன்; நோன்பை விட்டு விடவும் செய்கிறேன். பெண்களை மணந்தும் கொள்கிறேன். என் வழிமுறையை எவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்றார்கள்.

Book : 16


أَنَّ نَفَرًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَأَلُوا أَزْوَاجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ عَمَلِهِ فِي السِّرِّ؟ فَقَالَ بَعْضُهُمْ: لَا أَتَزَوَّجُ النِّسَاءَ، وَقَالَ بَعْضُهُمْ: لَا آكُلُ اللَّحْمَ، وَقَالَ بَعْضُهُمْ: لَا أَنَامُ عَلَى فِرَاشٍ، فَحَمِدَ اللهَ وَأَثْنَى عَلَيْهِ. فَقَالَ: «مَا بَالُ أَقْوَامٍ قَالُوا كَذَا وَكَذَا؟ لَكِنِّي أُصَلِّي وَأَنَامُ، وَأَصُومُ وَأُفْطِرُ، وَأَتَزَوَّجُ النِّسَاءَ، فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مِنِّي»


Muslim-2713

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2713. அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நானும் என் தந்தையின் சகோதரர் அல்கமா (ரஹ்) அவர்களும் அஸ்வத் (ரஹ்) அவர்களும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றோம். அன்று நான் இளைஞனாக இருந்தேன்.அப்போது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என மேற்கண்ட ஹதீஸை அறிவித்தார்கள். அதை எனக்காகவே அவர்கள் அறிவித்தார்கள் என்றே நான் கருதினேன். நான் தாமதியாமல் (உடனடியாக) மணமுடித்துக் கொண்டேன்.

– மேற்கண்ட ஹதீஸ் அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், “நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றோம். நானே (அங்கு சென்ற) மக்களில் இளவயதினனாக இருந்தேன்” என ஹதீஸ் ஆரம்பிக்கிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட அறிவிப்புகளில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆனால், “நான் தாமதியாமல் (உடனடியாக) மணமுடித்துக்கொண்டேன்” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

Book : 16


دَخَلْتُ أَنَا وَعَمِّي عَلْقَمَةُ، وَالْأَسْوَدُ عَلَى عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ قَالَ: وَأَنَا شَابٌّ يَوْمَئِذٍ، فَذَكَرَ حَدِيثًا رُئِيتُ أَنَّهُ حَدَّثَ بِهِ مِنْ أَجْلِي، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِ حَدِيثِ أَبِي مُعَاوِيَةَ، وَزَادَ قَالَ: فَلَمْ أَلْبَثْ حَتَّى تَزَوَّجْتُ

– حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ سَعِيدٍ الْأَشَجُّ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللهِ، قَالَ: دَخَلْنَا عَلَيْهِ وَأَنَا أَحْدَثُ الْقَوْمِ. بِمِثْلِ حَدِيثِهِمْ. وَلَمْ يَذْكُرْ: فَلَمْ أَلْبَثْ حَتَّى تَزَوَّجْتُ


Muslim-2712

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2712. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், “இளைஞர் சமுதாயமே! உங்களில் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்துகொள்ளட்டும். அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும்.அதற்கு இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில் நோன்பு, (ஆசையைக்) கட்டுப்படுத்தக்கூடியதாகும்” என்று கூறினார்கள். – இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 16


قَالَ لَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا مَعْشَرَ الشَّبَابِ، مَنِ اسْتَطَاعَ مِنْكُمُ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ، وَأَحْصَنُ لِلْفَرْجِ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ، فَإِنَّهُ لَهُ وِجَاءٌ»


Muslim-2711

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2711. அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் “மினா”வில் நடந்துகொண்டிருந்தேன். அப்போது அவர்களை உஸ்மான் (ரலி) அவர்கள் சந்தித்து, “அபூஅப்திர் ரஹ்மானே! இங்கே வாருங்கள்” என்று கூறி, தனியான இடத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றார்கள். (திருமணத்தைப் பற்றிப் பேசுவதைத் தவிர வேறு) தேவை உஸ்மான் (ரலி) அவர்களுக்குக் கிடையாது என்பதை உணர்ந்த அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “அல்கமா இங்கே வா” என என்னை அழைத்தார்கள். நான் சென்றேன். அப்போது அவர்களிடம் உஸ்மான் (ரலி) அவர்கள், “அபூஅப்திர் ரஹ்மான்! தங்களுக்கு நான் ஒரு கன்னிப்பெண்ணை மணமுடித்து வைக்கட்டுமா? நீங்கள் அனுபவித்த இளமைக் காலத்தை அது உங்களுக்கு மீட்டுத் தரக்கூடும்” என்று கூறினார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “நீங்கள் இப்படிச் சொல்லிவிட்டீர்கள்…” என்று மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று குறிப்பிட்டார்கள்.

Book : 16


إِنِّي لَأَمْشِي مَعَ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ بِمِنًى، إِذْ لَقِيَهُ عُثْمَانُ بْنُ عَفَّانَ، فَقَالَ: هَلُمَّ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: فَاسْتَخْلَاهُ، فَلَمَّا رَأَى عَبْدُ اللهِ أَنْ لَيْسَتْ لَهُ حَاجَةٌ، قَالَ: قَالَ لِي: تَعَالَ يَا عَلْقَمَةُ، قَالَ: فَجِئْتُ، فَقَالَ لَهُ عُثْمَانُ: أَلَا نُزَوِّجُكَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ جَارِيَةً بِكْرًا، لَعَلَّهُ يَرْجِعُ إِلَيْكَ مِنْ نَفْسِكَ مَا كُنْتَ تَعْهَدُ؟ فَقَالَ عَبْدُ اللهِ: لَئِنْ قُلْتَ ذَاكَ، فَذَكَرَ بِمِثْلِ حَدِيثِ أَبِي مُعَاوِيَةَ


Muslim-2710

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

Muslim-2709

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2709. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், “ஒவ்வொரு சனிக்கிழமையும்” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

Book : 15


وحَدَّثَنِيهِ عَبْدُ اللهِ بْنُ هَاشِمٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنِ ابْنِ دِينَارٍ، بِهَذَا الْإِسْنَادِ، وَلَمْ يَذْكُرْ كُلَّ سَبْتٍ


Muslim-2708

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2708. அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் “குபா”விற்குச் செல்வார்கள். அங்கு வாகனத்திலும் நடந்தும் செல்வார்கள்” என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

இவ்வாறே அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களும் செய்துவந்தார்கள்.

Book : 15


«أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْتِي قُبَاءً – يَعْنِي – كُلَّ سَبْتٍ،، كَانَ يَأْتِيهِ رَاكِبًا وَمَاشِيًا»، قَالَ ابْنُ دِينَارٍ: «وَكَانَ ابْنُ عُمَرَ يَفْعَلُهُ»


Muslim-2707

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2707. அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் “குபா”விற்குச் செல்வார்கள். “நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் அங்கு செல்வதை நான் பார்த்தேன்” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள்.

Book : 15


أَنَّ ابْنَ عُمَرَ كَانَ يَأْتِي قُبَاءً كُلَّ سَبْتٍ، وَكَانَ يَقُولُ: «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْتِيهِ كُلَّ سَبْتٍ»


Muslim-2706

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2705. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்திலும் நடந்தும் “குபா”விற்குச் செல்வார்கள்.

Book : 15


«كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْتِي قُبَاءً رَاكِبًا وَمَاشِيًا»


Muslim-2705

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2705. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்திலும் நடந்தும் “குபா”விற்குச் செல்வார்கள்.

Book : 15


«أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْتِي قُبَاءً رَاكِبًا وَمَاشِيًا»


Next Page » « Previous Page