Author: Farook

Muslim-2694

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2694. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் தொழுவதானது, மற்றப் பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளைவிடச் சிறந்ததாகும்; (மக்காவிலுள்ள) “மஸ்ஜிதுல் ஹராம்” பள்ளிவாசலைத் தவிர! ஏனெனில்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைத்தூதர்களில் இறுதியானவர் ஆவார்கள். அவர்கள் எழுப்பிய பள்ளிவாசல், (இறைத் தூதர் எழுப்பிய) பள்ளிவாசல்களில் இறுதியானதாகும்.

(இதை அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும்) அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) மற்றும் அபூஅப்தில்லாஹ் அல்அஃகர்ரு (ரஹ்) ஆகியோர் கூறினர்:

(பொதுவாக) அபூஹுரைரா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்தே (ஹதீஸ்களை) அறிவிப்பார்கள் என்பதில் நாங்கள் ஐயம் கொள்ளவில்லை. அதுவே இந்த ஹதீஸை அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து உறுதிப்படுத்திக்கொள்ள நாங்கள் தவறியதற்குக் காரணமாகும். அபூஹுரைரா (ரலி) அவர்கள் இறந்த பிறகு நாங்கள் இந்த ஹதீஸ் குறித்து விவாதித்தோம். அதைப் பற்றி நாம் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் பேசாமலிருந்தது

صَلَاةٌ فِي مَسْجِدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْضَلُ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ مِنَ الْمَسَاجِدِ، إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ، فَإِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ آخِرُ الْأَنْبِيَاءِ، وَإِنَّ مَسْجِدَهُ آخِرُ الْمَسَاجِدِ، قَالَ أَبُو سَلَمَةَ، وَأَبُو عَبْدِ اللهِ: لَمْ نَشُكَّ أَنَّ أَبَا هُرَيْرَةَ كَانَ يَقُولُ عَنْ حَدِيثِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمَنَعَنَا ذَلِكَ أَنْ نَسْتَثْبِتَ أَبَا هُرَيْرَةَ عَنْ ذَلِكَ الْحَدِيثِ، حَتَّى إِذَا تُوُفِّيَ أَبُو هُرَيْرَةَ، تَذَاكَرْنَا ذَلِكَ، وَتَلَاوَمْنَا أَنْ لَا نَكُونَ كَلَّمْنَا أَبَا هُرَيْرَةَ فِي ذَلِكَ حَتَّى يُسْنِدَهُ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِنْ كَانَ سَمِعَهُ مِنْهُ، فَبَيْنَا نَحْنُ عَلَى ذَلِكَ، جَالَسَنَا عَبْدُ اللهِ بْنُ إِبْرَاهِيمَ بْنِ قَارِظٍ، فَذَكَرْنَا ذَلِكَ الْحَدِيثَ، وَالَّذِي فَرَّطْنَا فِيهِ مِنْ نَصِّ أَبِي هُرَيْرَةَ عَنْهُ، فَقَالَ لَنَا عَبْدُ اللهِ بْنُ إِبْرَاهِيمَ: أَشْهَدُ أَنِّي سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَإِنِّي آخِرُ الْأَنْبِيَاءِ، وَإِنَّ مَسْجِدِي آخِرُ الْمَسَاجِدِ»


Muslim-2693

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2693. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் தொழுவதானது, மற்றப் பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்; (மக்காவிலுள்ள) “மஸ்ஜிதுல் ஹராம்” பள்ளிவாசலைத் தவிர!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 15


«صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا خَيْرٌ مِنْ أَلْفِ صَلَاةٍ فِي غَيْرِهِ مِنَ الْمَسَاجِدِ، إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ»


Muslim-2692

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 94

மக்கா மற்றும் மதீனாப் பள்ளிவாசல்களில் தொழுவதன் சிறப்பு.

2692. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் தொழுவதானது, மற்றப் பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளைவிடச் சிறந்ததாகும்; (மக்காவிலுள்ள) “மஸ்ஜிதுல் ஹராம்” பள்ளிவாசலைத் தவிர.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 15


«صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا أَفْضَلُ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ، إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ»


Muslim-2691

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2691. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“உஹுத்” மலை நம்மை நேசிக்கிறது. நாமும் அதை நேசிக்கிறோம்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

– அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஹுத் மலையைக் கூர்ந்து நோக்கி, “உஹுத் மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கிறோம்” என்றார்கள்.

Book : 15


«إِنَّ أُحُدًا جَبَلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ»

– وحَدَّثَنِيهِ عُبَيْدُ اللهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، حَدَّثَنِي حَرَمِيُّ بْنُ عُمَارَةَ، حَدَّثَنَا قُرَّةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: نَظَرَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى أُحُدٍ، فَقَالَ: «إِنَّ أُحُدًا جَبَلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ»


Muslim-2690

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 93

“உஹுத்”” மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கிறோம்.

2690. அபூஹுமைத் அப்துர் ரஹ்மான் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் “தபூக்” போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். பிறகு நாங்கள் (போரை முடித்துக்கொண்டு மதீனாவிற்கும் சிரியாவிற்கும் இடையே உள்ள) “வாதில் குரா” எனும் இடத்திற்கு வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் விரைந்து மதீனா செல்லப் போகிறேன். எனவே, உங்களில் விரும்பியவர் என்னுடன் விரைந்து வரலாம். விரும்பியவர் (இங்கேயே) தங்கியிருக்கலாம்” என்று சொன்னார்கள். நாங்கள் புறப்பட்டு மதீனாவை நெருங்கியபோது, “இது “தாபா” (தூய நகரம்) ஆகும்; இது உஹுத் மலை; இது நம்மை நேசிக்கிறது. நாமும் அதை நேசிக்கிறோம்” என்று சொன்னார்கள்.

Book : 15


خَرَجْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةِ تَبُوكَ، وَسَاقَ الْحَدِيثَ وَفِيهِ، ثُمَّ أَقْبَلْنَا حَتَّى قَدِمْنَا وَادِي الْقُرَى، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي مُسْرِعٌ، فَمَنْ شَاءَ مِنْكُمْ فَلْيُسْرِعْ مَعِي، وَمَنْ شَاءَ فَلْيَمْكُثْ»، فَخَرَجْنَا حَتَّى أَشْرَفْنَا عَلَى الْمَدِينَةِ، فَقَالَ: «هَذِهِ طَابَةُ، وَهَذَا أُحُدٌ، وَهُوَ جَبَلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ»


Muslim-2689

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2689. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது இல்லத்திற்கும் எனது சொற்பொழிவு மேடை(மிம்பரு)க்கும் இடைப்பட்ட பகுதியானது, சொர்க்கத்துப் பூஞசோலைகளில் ஒரு பூஞ்சோலையாகும். எனது சொற்பொழிவு மேடையானது, எனது (அல்கவ்ஸ்ர்) தடாகத்தின் மீது அமைந்துள்ளது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

Book : 15


«مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ، وَمِنْبَرِي عَلَى حَوْضِي»


Muslim-2688

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2688. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது சொற்பொழிவு மேடை(மிம்பரு)க்கும் எனது இல்லத்திற்கும் இடைப்பட்ட பகுதியானது, சொர்க்கத்துப் பூஞ்சோலைகளில் ஒரு பூஞ்சோலையாகும்.

இதை அப்துல்லாஹ் பின் ஸைத் அல் அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 15


«مَا بَيْنَ مِنْبَرِي وَبَيْتِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ»


Muslim-2687

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 92

(நபியவர்களின்) கப்றுக்கும் மிம்பருக்கும் இடைப்பட்ட பகுதி, சொர்க்கப் பூஞ்சோலைகளில் ஒரு பூஞ்சோலையாகும்.

2687. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது இல்லத்திற்கும் எனது சொற்பொழிவு மேடை(மிம்பரு)க்கும் இடைப்பட்ட பகுதியானது, சொர்க்கத்துப் பூஞ்சோலைகளில் ஒரு பூஞ்சோலையாகும்.

இதை அப்துல்லாஹ் பின் ஸைத் அல் அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 15


«مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ»


Muslim-2686

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2686. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மதீனா சிறந்த நிலையில் இருக்கும்போதே அதைவிட்டு மக்கள் சென்றுவிடுவர். வன விலங்குகளும் பறவைகளும் அதைச் சூழ்ந்து கொண்டிருக்கும். பின்னர் “முஸைனா” குலத்தைச் சேர்ந்த இரு இடையர்கள் தம் ஆடுகளைச் சப்தமிட்டு ஓட்டிக்கொண்டு மதீனாவை நோக்கி வருவர். அங்கு வனவிலங்குகளையே காண்பர். (அல்லது வெறுமையானதாகக் காண்பர்.) அவர்கள் “அல்வதா”மலைக்குன்றை அடைந்ததும் மூர்ச்சையுற்று முகங்குப்புற விழுந்துவிடுவர்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 15


«يَتْرُكُونَ الْمَدِينَةَ عَلَى خَيْرِ مَا كَانَتْ، لَا يَغْشَاهَا إِلَّا الْعَوَافِي – يُرِيدُ عَوَافِيَ السِّبَاعِ وَالطَّيْرِ – ثُمَّ يَخْرُجُ رَاعِيَانِ مِنْ مُزَيْنَةَ يُرِيدَانِ الْمَدِينَةَ، يَنْعِقَانِ بِغَنَمِهِمَا، فَيَجِدَانِهَا وَحْشًا، حَتَّى إِذَا بَلَغَا ثَنِيَّةَ الْوَدَاعِ خَرَّا عَلَى وُجُوهِهِمَا»


Muslim-2685

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 91

மதீனாவாசிகள் மதீனாவை விட்டுச் செல்லும்போது.

2685. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவைப் பற்றி (பின்வருமாறு) கூறினார்கள்:

மதீனாவாசிகள், மதீனா சிறந்த நிலையில் இருக்கும்போதே, அதை வனவிலங்குகள் மற்றும் பறவைகளின் சரணாலயமாக விட்டுச் செல்வர்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் (ஆகிய நான்) கூறுகிறேன்:

(இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த ஸுஹைர் பின் ஹர்ப் (ரஹ்) அவர்களின் ஆசிரியரான) இந்த அபூஸஃப்வான் என்பாரின் பெயர் அப்துல்லாஹ் பின் அப்தில் மலிக் என்பதாகும். அநாதையாயிருந்த அவர், இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்களின் பொறுப்பில் பத்து ஆண்டுகள் வளர்ந்தார்.

Book : 15


قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لِلْمَدِينَةِ لَيَتْرُكَنَّهَا أَهْلُهَا عَلَى خَيْرِ مَا كَانَتْ مُذَلَّلَةً لِلْعَوَافِي» يَعْنِي السِّبَاعَ وَالطَّيْرَ، قَالَ مُسْلِمٌ: «أَبُو صَفْوَانَ هَذَا هُوَ عَبْدُ اللهِ بْنُ عَبْدِ الْمَلِكِ، يَتِيمُ ابْنِ جُرَيْجٍ، عَشْرَ سِنِينَ كَانَ فِي حَجْرِهِ»


Next Page » « Previous Page