Author: Farook

Bukhari-6092

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6092. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களை நான் ஒருபோதும் ஒரேயடியாகத் தம் உள்நாக்குத் தெரியும் அளவுக்குச் சிரிக்கக் கண்டதில்லை. அவர்கள் (பெரும்பாலும்) புன்னகைப்பவர்களாகவே இருந்தார்கள்.

Book :78


«مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُسْتَجْمِعًا قَطُّ ضَاحِكًا، حَتَّى أَرَى مِنْهُ لَهَوَاتِهِ، إِنَّمَا كَانَ يَتَبَسَّمُ»


Bukhari-6091

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6091. உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.

உம்மு சுலைம்(ரலி) அவர்கள் (நபி(ஸல்) அவர்களிடம்) ‘இறைத்தூதர் அவர்களே! சத்தியத்தைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்குத் தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவளின் மீது குளிப்பு கடமையாகுமா? என்ற கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்; அவள் (மதன) நீரைப் பார்த்தால் (குளிப்பது அவளின் மீது கடமைதான்.)’ என்று பதிலளித்தார்கள். இதைக் கேட்டு நான் சிரித்தவாறு, ‘பெண்ணுக்குக் கூடவா தூக்க ஸ்கலிதம் ஏற்படும்?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘பிறகு எவ்வாறு குழந்தை (தாயின்) சாயலில் பிறக்கிறது?’ என்று கேட்டார்கள்.

Book :78


يَا رَسُولَ اللَّهِ، إِنَّ اللَّهَ لاَ يَسْتَحِي مِنَ الحَقِّ، هَلْ عَلَى المَرْأَةِ غُسْلٌ إِذَا احْتَلَمَتْ؟ قَالَ: «نَعَمْ، إِذَا رَأَتِ المَاءَ» فَضَحِكَتْ أُمُّ سَلَمَةَ، فَقَالَتْ: أَتَحْتَلِمُ المَرْأَةُ؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَبِمَ شَبَهُ الوَلَدِ»


Bukhari-6090

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6090. ‘எல்லா நற்செயலும் தர்மமே’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 38 என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

Book :78


وَلَقَدْ شَكَوْتُ إِلَيْهِ أَنِّي لاَ أَثْبُتُ عَلَى الخَيْلِ، فَضَرَبَ بِيَدِهِ فِي صَدْرِي، وَقَالَ: «اللَّهُمَّ ثَبِّتْهُ، وَاجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا»


Bukhari-6089

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6089. ஜரீர் இப்னு அப்தில்லாஹ் அல்பஜலீ(ரலி) அறிவித்தார்.

நான் இஸ்லாத்தை தழுவியதிலிருந்த நான் நபியவர்களைச் சந்திக்க அனுமதி கேட்ட எந்தச் சமயத்திலும்) நபி(ஸல்) அவர்கள் என்னைத் தடுத்ததில்லை; புன்முறுவலுடன் (சிரித்தவர்களாகவே) அல்லாமல் வேறுவிதமாக அவர்கள் என் முகத்தைப் பார்த்ததில்லை.

இதைக் கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) அறிவித்தார்.

Book :78


مَا حَجَبَنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنْذُ أَسْلَمْتُ، وَلاَ رَآنِي إِلَّا تَبَسَّمَ فِي وَجْهِي


Bukhari-6088

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6088. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நடந்து கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் தடித்த கரை கொண்ட நஜ்ரான் நாட்டு சால்வை ஒன்றைப் போர்த்தியிருந்தார்கள். அப்போது கிராமவாசி ஒருவர் அவர்களை நெருங்கி அந்தச் சால்வையால் (அவர்களை) வேகமாக இழுத்தார். அந்தக் கிராமவாசி வேகமாக இழுத்ததால் சால்வையின் ஓரப்பகுதி நபி(ஸல்) அவர்களின் தோள்பட்டையில் அடையாளம் பதித்துவிட்டிருந்ததை கண்டேன். பிறகு அவர், ‘முஹம்மதே! உங்களிடமுள்ள அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து எனக்குக் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள்’ என்றார்.

உடனே நபி(ஸல்) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்துவிட்டுப் பிறகு அவருக்குக் கொடுக்கும்படி ஆணையிட்டார்கள்.

Book :78


«كُنْتُ أَمْشِي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ بُرْدٌ نَجْرَانِيٌّ غَلِيظُ الحَاشِيَةِ»، فَأَدْرَكَهُ أَعْرَابِيٌّ فَجَبَذَ بِرِدَائِهِ جَبْذَةً شَدِيدَةً، قَالَ أَنَسٌ: «فَنَظَرْتُ إِلَى صَفْحَةِ عَاتِقِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَدْ أَثَّرَتْ بِهَا حَاشِيَةُ الرِّدَاءِ مِنْ شِدَّةِ جَبْذَتِهِ»، ثُمَّ قَالَ: يَا مُحَمَّدُ مُرْ لِي مِنْ مَالِ اللَّهِ الَّذِي عِنْدَكَ، «فَالْتَفَتَ إِلَيْهِ فَضَحِكَ ثُمَّ أَمَرَ لَهُ بِعَطَاءٍ»


Bukhari-6087

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6087. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘நான் அழிந்துவிட்டேன்; நான் ரமளான் மாதத்தில் (நோன்பு நோற்றுக் கொண்டு) என் மனைவியுடன் புணர்ந்துவிட்டேன்’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘இதற்குப் பரிகாரமாக) ஓர் அடிமையை விடுதலை செய்வீராக’ என்றார்கள். அவர், ‘என்னிடம் அடிமை இல்லை’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘அவ்வாறாயின் தொடர்ந்து இரண்டு மாதம் நோன்பு நோற்பீராக’ என்றார்கள். அவர், ‘எனக்கு சக்தியில்லை’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘அவ்வாறாயின் அறுபது ஏழைகளக்கு உணவளிப்பீராக’ என்று கூறினார்கள். அவர், ‘என்னிடம் ஏதுமில்லை’ என்றார் அப்போது நபி(ஸல்) அவர்களிடம் ‘அரக்’ கொண்டு வரப்பட்டது. அதில் பேரீச்சம்பழம் இருந்தது.

அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்ராஹீம் இப்னு ஸஅத்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘அரக்’ என்பது (15ஸாஉ பிடிக்கும்) ஒரு முகத்தலளவை ஆகும்.

அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘கேள்வி கேட்டவர் எங்கே?’ என்று கேட்க, அவர் வந்தார். அவரிடம்) ‘இதைப் பெற்று தர்மம் செய்வீராக!’ என்றார்கள். அந்த

أَتَى رَجُلٌ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: هَلَكْتُ، وَقَعْتُ عَلَى أَهْلِي فِي رَمَضَانَ، قَالَ: «أَعْتِقْ رَقَبَةً» قَالَ: لَيْسَ لِي، قَالَ: «فَصُمْ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ» قَالَ: لاَ أَسْتَطِيعُ، قَالَ: «فَأَطْعِمْ سِتِّينَ مِسْكِينًا» قَالَ: لاَ أَجِدُ، فَأُتِيَ بِعَرَقٍ فِيهِ تَمْرٌ – قَالَ إِبْرَاهِيمُ: العَرَقُ المِكْتَلُ – فَقَالَ: «أَيْنَ السَّائِلُ، تَصَدَّقْ بِهَا» قَالَ: عَلَى أَفْقَرَ مِنِّي، وَاللَّهِ مَا بَيْنَ لاَبَتَيْهَا أَهْلُ بَيْتٍ أَفْقَرُ مِنَّا، فَضَحِكَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ، قَالَ: «فَأَنْتُمْ إِذًا»


Bukhari-6086

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6086. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாயிஃபில் (அதனை முற்றுகையிட்ட படி) இருந்துகொண்டிருந்தபோது, ‘இறைவன் நாடினால் நாம் நாளை (மதீனாவுக்குத்) திரும்பிச் செல்வோம்’ என்றார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களில் சிலர், ‘தாயிஃபை வெற்றி கொள்ளும் வரை நாங்கள் (திரும்பச் செல்ல மாட்டோம்) இங்கேயே இருப்போம்’ என்று கூறினார்கள். (அவர்களின் தயக்கத்தைக் கண்ட) நபி(ஸல்) அவர்கள், ‘முற்பகலிலேயே போர் புரியுங்கள்’ என்றார்கள். அவ்வாறே எதிரிகளுடன் அவர்கள் கடுமையாகப் போர் புரிந்ததில் அவர்களுக்கு அதிகமான காயங்கள் ஏற்பட்டன.

அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இறைவன் நாடினால் நாளை நாம் (மதீனாவுக்குத்) திரும்பிச் செல்வோம்’ என்றார்கள். நபித்தோழர்கள் இப்போது (ஏதும் பதிலளிக்காமல் அதை ஆதரிக்கும் வகையில்) அமைதியாக இருந்தார்கள். இதைக் கண்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சிரித்தார்கள்.

Book :78


لَمَّا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالطَّائِفِ، قَالَ: «إِنَّا قَافِلُونَ غَدًا إِنْ شَاءَ اللَّهُ» فَقَالَ نَاسٌ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لاَ نَبْرَحُ أَوْ نَفْتَحَهَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَاغْدُوا عَلَى القِتَالِ» قَالَ: فَغَدَوْا فَقَاتَلُوهُمْ قِتَالًا شَدِيدًا، وَكَثُرَ فِيهِمُ الجِرَاحَاتُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّا قَافِلُونَ غَدًا إِنْ شَاءَ اللَّهُ» قَالَ: فَسَكَتُوا، فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ الحُمَيْدِيُّ: حَدَّثَنَا سُفْيَانُ: بِالخَبَرِ كُلِّهِ


Bukhari-6085

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6085. ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.

(ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வீட்டுக்குள் வர) அவர்களிடம் உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்கள் அனுமதி கேட்டார்கள். அப்போது நபியவர்களிடம் (அவர்களின் துணைவியரான) குறைஷிப் பெண்கள் (குடும்பச் செலவுத் தொகையை) அதிகமாக்கித் தரும்படி குரலை உயர்த்திக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். உமர்(ரலி) அவர்கள் அனுமதி கேட்டபோது அப்பெண்கள் அவசர அவசரமாகத் தங்கள் பர்தாக்களை அணிந்(தபடி எழுந்)து கொண்டனர். நபி(ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்த உடன் உமர்(ரலி) அவர்கள் உள்ளே வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது உமர்(ரலி) அவர்கள் ‘இறைத்தூதர் அவர்களே! தங்களை அல்லாஹ் (வாழ்நாள் முழுதும்) சிரித்தபடி (மகிழ்ச்சியாக) இருக்கச் செய்வானாக! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்’ என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘என்னிடமிருந்த இந்தப் பெண்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். (என்னிடம் சகஜமாக அமர்ந்திருந்த இவர்கள்) உங்கள் குரலைக் கேட்டவுடன் அவசர அவசரமாகப் பர்தா அணிந்துகொண்(டு உள்ளே சென்று விட்)டார்களே!’

اسْتَأْذَنَ عُمَرُ بْنُ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعِنْدَهُ نِسْوَةٌ مِنْ قُرَيْشٍ يَسْأَلْنَهُ وَيَسْتَكْثِرْنَهُ، عَالِيَةً أَصْوَاتُهُنَّ عَلَى صَوْتِهِ، فَلَمَّا اسْتَأْذَنَ عُمَرُ تَبَادَرْنَ الحِجَابَ، فَأَذِنَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَخَلَ وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَضْحَكُ، فَقَالَ: أَضْحَكَ اللَّهُ سِنَّكَ يَا رَسُولَ اللَّهِ، بِأَبِي أَنْتَ وَأُمِّي؟ فَقَالَ: «عَجِبْتُ مِنْ هَؤُلاَءِ اللَّاتِي كُنَّ عِنْدِي، لَمَّا سَمِعْنَ صَوْتَكَ تَبَادَرْنَ الحِجَابَ» فَقَالَ: أَنْتَ أَحَقُّ أَنْ يَهَبْنَ يَا رَسُولَ اللَّهِ، ثُمَّ أَقْبَلَ عَلَيْهِنَّ، فَقَالَ: يَا عَدُوَّاتِ أَنْفُسِهِنَّ، أَتَهَبْنَنِي وَلَمْ تَهَبْنَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقُلْنَ: إِنَّكَ أَفَظُّ وَأَغْلَظُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِيهٍ يَا ابْنَ الخَطَّابِ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، مَا لَقِيَكَ الشَّيْطَانُ سَالِكًا فَجًّا إِلَّا سَلَكَ فَجًّا غَيْرَ فَجِّكَ»


Bukhari-6084

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 68 புன்னகையும் சிரிப்பும் ஃபாத்திமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இரகசிய மாக (ஒன்றை)ச் சொன்னார்கள். உடனே நான் சிரித்தேன்.100 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நிச்சயமாக அல்லாஹ்வே சிரிக்க வைக்கின்றான்; அழச் செய்கின்றான்.101

6084. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ரிஃபாஆ அல்குறழீ(ரலி) அவர்கள் தம் துணைவியாரை ஒட்டுமொத்த மணவிலக்குச் செய்துவிட்டார்கள். அவருக்குப் பிறகு அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர்(ரலி) அவர்கள் அவரை மணந்தார்கள். அப்போது அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் ரிஃபாஆ அவர்களிடம் (மனைவியாக) இருந்தேன். என்னை அவர் மூன்று தலாக்குகளில் இறுதித் தலாக் சொல்லிவிட்டார். அவருக்குப் பிறகு என்னை அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர் மணந்தார். அல்லாஹ்வின் மீதாணையாக! இரண்டாம் கணவரான) இவருக்கு (இனஉறுப்பு என்று) இருப்பதெல்லாம் இதோ இந்த (முகத்திரையின்) குஞ்சத்தைப் போன்றுதான்’ என்று கூறி தம் முகத்திரையின் குஞ்சத்தைப் பிடித்துக் காட்டினார். (அப்போது) அபூ பக்ர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்தார்கள்.

أَنَّ رِفَاعَةَ القُرَظِيَّ طَلَّقَ امْرَأَتَهُ فَبَتَّ طَلاَقَهَا، فَتَزَوَّجَهَا بَعْدَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ الزَّبِيرِ، فَجَاءَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّهَا كَانَتْ عِنْدَ رِفَاعَةَ فَطَلَّقَهَا آخِرَ ثَلاَثِ تَطْلِيقَاتٍ، فَتَزَوَّجَهَا بَعْدَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ الزَّبِيرِ، وَإِنَّهُ وَاللَّهِ مَا مَعَهُ يَا رَسُولَ اللَّهِ إِلَّا مِثْلُ هَذِهِ الهُدْبَةِ، لِهُدْبَةٍ أَخَذَتْهَا مِنْ جِلْبَابِهَا، قَالَ: وَأَبُو بَكْرٍ جَالِسٌ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَابْنُ سَعِيدِ بْنِ العَاصِ جَالِسٌ بِبَابِ الحُجْرَةِ لِيُؤْذَنَ لَهُ، فَطَفِقَ خَالِدٌ يُنَادِي أَبَا بَكْرٍ: يَا أَبَا بَكْرٍ، أَلاَ تَزْجُرُ هَذِهِ عَمَّا تَجْهَرُ بِهِ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَا يَزِيدُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى التَّبَسُّمِ، ثُمَّ قَالَ: «لَعَلَّكِ تُرِيدِينَ أَنْ تَرْجِعِي إِلَى رِفَاعَةَ، لاَ، حَتَّى تَذُوقِي عُسَيْلَتَهُ، وَيَذُوقَ عُسَيْلَتَكِ»


Bukhari-6083

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6083. ஆஸிம் இப்னு சுலைமான் அல் அஹ்வல்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நான் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் ‘இஸ்லாத்தில் (மனிதர்களாக ஏற்படுத்திக் கொள்கிற ஒப்பந்த) நட்புறவு முறை இல்லை’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனத் தங்களுக்குச் செய்தி கிடைத்தா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நபி(ஸல்) அவர்கள் என்னுடைய வீட்டில் வைத்து குறைஷி (முஹாஜிர்)களுக்கும் (மதீனா) அன்சாரிகளுக்கும் இடையே நட்புறவு முறையே ஏற்படுத்தியிருந்தார்களே!’ என்றார்கள்.

Book :78


قُلْتُ لِأَنَسِ بْنِ مَالِكٍ: أَبَلَغَكَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ حِلْفَ فِي الإِسْلاَمِ» فَقَالَ: «قَدْ حَالَفَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ قُرَيْشٍ وَالأَنْصَارِ فِي دَارِي»


Next Page » « Previous Page