Author: Farook

Bukhari-6082

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 67 (ஒப்பந்த அடிப்படையில் இருவருக்கிடையே) சகோதரத்துவத்தையும் (குலங்களிடையே) நட்புறவையும் ஏற்படுத்துவது. அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் சல்மான் அல் ஃபார்சீ (ரலி) அவர்களுக்கும் அபுத்தர்தா (ரலி) அவர் களுக்கும் இடையே சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள்.96 அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நாங்கள் மதீனா வந்தபோது எனக்கும் சஅத் பின் ரபீஉ (ரலி) அவர்களுக்கும் இடையே நபி (ஸல்) அவர்கள் சகோதரத்து வத்தை ஏற்படுத்தினார்கள்.97

6082. அனஸ்(ரலி) அறிவித்தார்.

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள் (மதீனாவாசிகளான) எங்களிடம் (ஹிஜ்ரத் செய்து) வந்தபோது அவர்களுக்கும் ஸஅத் இப்னு ரபீஉ(ரலி) அவர்களுக்குமிடையே நபி(ஸல்) அவர்கள் சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள். பிறகு (அப்துர் ரஹ்மான்(ரலி) அவர்கள் மணமுடித்துக் கொண்டபோது அவரிடம்) ‘ஓர் ஆட்டையாவது (அறுத்து) வலீமா(மணவிருந்து) கொடுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

Book : 78


لَمَّا قَدِمَ عَلَيْنَا عَبْدُ الرَّحْمَنِ، فَآخَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَهُ وَبَيْنَ سَعْدِ بْنِ الرَّبِيعِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ»


Bukhari-6081

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 66 (தம்மைச் சந்திக்கவரும்) தூதுக் குழுவினர் களுக்காக ஒருவர் தம்மை (ஆடையணிகலன் களால்) அலங்கரித்துக்கொள்வது.

6081. யஹ்யா இப்னு அபீ இஸ்ஹாக் அல் ஹள்ரமீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

சாலிம் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்கள் என்னிடம், ‘அல்இஸ்தப்ரக்’ என்றால் என்ன?’ என்று கேட்டார்கள். நான், ‘கெட்டியான முரட்டுப் பட்டு’ என்று பதிலளித்தேன். அப்போது அவர்கள், (என் தந்தை) அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறக்கேட்டுள்ளேன் என்றார்கள்; (என் தந்தை) உமர்(ரலி) அவர்கள் ஒருவரின் மீது கெட்டியான பட்டு அங்கி ஒன்றைக் கண்டார்கள். அதை (அவரிடமிருந்து வாங்கி) நபி(ஸல்) அவர்களிடம் கொண்டுவந்து ‘இறைத்தூதர் அவர்களே! இதைத் தாங்கள் விலைக்கு வாங்கி மக்களின் தூதுக் குழு தங்களிடம் வரும்பொழுது இதைத் தாங்கள் அணிந்து கொள்ளுங்கள்’ என்றார்கள்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘(மறுமைப்) பேறற்ற (ஆட)வர்களே (இது போன்ற) பட்டை (இம்மையில்) அணிந்துகொள்வார்கள்’ என்றார்கள்.

இது நடந்து சில நாள்கள்

قَالَ لِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ: – مَا الإِسْتَبْرَقُ؟ قُلْتُ: مَا غَلُظَ مِنَ الدِّيبَاجِ، وَخَشُنَ مِنْهُ – قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ، يَقُولُ: رَأَى عُمَرُ عَلَى رَجُلٍ حُلَّةً مِنْ إِسْتَبْرَقٍ، فَأَتَى بِهَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، اشْتَرِ هَذِهِ، فَالْبَسْهَا لِوَفْدِ النَّاسِ إِذَا قَدِمُوا عَلَيْكَ. فَقَالَ: «إِنَّمَا يَلْبَسُ الحَرِيرَ مَنْ لاَ خَلاَقَ لَهُ» فَمَضَى مِنْ ذَلِكَ مَا مَضَى، ثُمَّ إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ إِلَيْهِ بِحُلَّةٍ، فَأَتَى بِهَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: بَعَثْتَ إِلَيَّ بِهَذِهِ، وَقَدْ قُلْتَ فِي مِثْلِهَا مَا قُلْتَ؟ قَالَ: «إِنَّمَا بَعَثْتُ إِلَيْكَ لِتُصِيبَ بِهَا مَالًا» فَكَانَ ابْنُ عُمَرَ، يَكْرَهُ العَلَمَ فِي الثَّوْبِ لِهَذَا الحَدِيثِ


Bukhari-6080

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 65 சந்திப்பு92 ஒருவர் ஒரு கூட்டத்தாரைச் சந்தித்து அவர்களிடம் (சிறிதேனும்) உணவு உண்பது; நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்கள் அபுத்தர்தா (ரலி) அவர்களைச் சந்தித்து அவரிடம் உணவருந்தினார்கள்.93

6080. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒரு குடும்பத்தாரைச் சந்தித்துவிட்டு அவர்களிடம் உணவருந்தினார்கள். பிறகு அவர்கள் புறப்பட விரும்பியபோது வீட்டில் உள்ள ஓர் இடத்தை ஒதுக்கித் தரும்படி பணித்தார்கள். எனவே, நபியவர்களுக்காகப் பாய் விரிக்கப்பட்டுத் தண்ணீர் தெளிக்கப்பட்டது. அதன் மீது நபியவர்கள் தொழுதார்கள். அக்குடும்பத்தினருக்காகப் பிரார்த்தனையும் புரிந்தார்கள்.

Book : 78


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَارَ أَهْلَ بَيْتٍ مِنَ الأَنْصَارِ، فَطَعِمَ عِنْدَهُمْ طَعَامًا، فَلَمَّا أَرَادَ أَنْ يَخْرُجَ، أَمَرَ بِمَكَانٍ مِنَ البَيْتِ فَنُضِحَ لَهُ عَلَى بِسَاطٍ، فَصَلَّى عَلَيْهِ وَدَعَا لَهُمْ»


Bukhari-6079

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 64 ஒருவர் தம் தோழரை ஒவ்வொரு நாளும் (ஒரு தடவை) சந்திப்பாரா? அல்லது காலை மாலை (இரு முறை) சந்திப்பாரா?

6079. நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அறிவித்தார்

என் பெற்றோர் (அபூ பக்ர் – உம்மு ரூமான்) எனக்கு விவரம் தெரிந்தது முதல் (இஸ்லாமிய) மார்க்கத்தைக் கடைப்பிடிப்பவர்களாகவே இருந்தார்கள். பகலின் இரண்டு ஓரங்களான காலையிலும் மாலையிலும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம் வருகை தராமல் (மக்காவில்) எந்த நாளும் எங்களுக்குக் கழிந்ததில்லை. நாங்கள் ஒரு நாள் உச்சிப்பொழுதின்போது அபூ பக்ர்(ரலி) அவர்களின் வீட்டில் அமர்ந்துகொண்டிருந்தோம். அப்போது ஒருவர் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நம்மிடம் வருகை தராத நேரத்தில் (வழக்கத்திற்கு மாறாக) இதோ வந்து கொண்டிருக்கிறார்கள்’ என்று கூறினார். (அதற்கு) அபூ பக்ர்(ரலி) ஏதோ (முக்கிய) விவகாரம் தான் நபியவர்களை இந்த நேரத்தில் (இங்கு) வரச்செய்திருக்கிறது’ என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள், ‘(ஹிஜ்ரத்) புறப்பட்டுச் செல்ல எனக்கு (இறைவனிடமிருந்து) அனுமதி வழங்கப்பட்டுவிட்டது’

لَمْ أَعْقِلْ أَبَوَيَّ إِلَّا وَهُمَا يَدِينَانِ الدِّينَ، وَلَمْ يَمُرَّ عَلَيْهِمَا يَوْمٌ إِلَّا يَأْتِينَا فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَرَفَيِ النَّهَارِ، بُكْرَةً وَعَشِيَّةً، فَبَيْنَمَا نَحْنُ جُلُوسٌ فِي بَيْتِ أَبِي بَكْرٍ فِي نَحْرِ الظَّهِيرَةِ، قَالَ قَائِلٌ: هَذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِي سَاعَةٍ لَمْ يَكُنْ يَأْتِينَا فِيهَا، قَالَ أَبُو بَكْرٍ: مَا جَاءَ بِهِ فِي هَذِهِ السَّاعَةِ إِلَّا أَمْرٌ، قَالَ: «إِنِّي قَدْ أُذِنَ لِي بِالخُرُوجِ»


Bukhari-6078

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 63 (இறை நெறிக்கு) மாறு செய்பவருடன் பேசாமல் இருக்கலாம்.88 நான் (மற்றும் இரு நண்பர்கள் தக்கக் காரணமின்றி தபூக் போரில்) நபி (ஸல்) அவர் களுடன் கலந்துகொள்ளாமல் பின்வாங்கிய போது, ‘எங்களுடன் பேச வேண்டாமென்று நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்குத் தடை விதித்தார்கள்’ என கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள். (இவ்வாறு) ஐம்பது நாட்கள் (பேசாமலிருந்தார்கள்) என்றும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.89

6078. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

(என்னிடம்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘உன்னுடைய கோபத்தையும் உன்னுடைய திருப்தியையும் நான் நன்றாக அறிவேன்’ என்று கூறினார்கள். அதற்கு நான், ‘அதை எவ்வாறு தாங்கள் அறிந்துகொள்வீர்கள்? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்டேன். அதற்கவர்கள், ‘நீ திருப்தியுடன் இருக்கும்போது (பேசினால்), ‘ஆம்; முஹம்மதுடைய அதிபதி மீது சத்தியமாக’ என்று கூறுவாய். நீ கோபமாய் இருக்கும்போது (பேசினால்), ‘இல்லை; இப்ராஹீம்(அலை) அவர்களின் அதிபதி மீது சத்தியமாக’ என்று கூறுவாய்’ என்று கூறினார்கள். நான், ‘ஆம் (உண்மைதான்). நான் தங்களின் பெயரைத் தான் கோபித்துக் கொள்வேன்

«إِنِّي لَأَعْرِفُ غَضَبَكِ وَرِضَاكِ» قَالَتْ: قُلْتُ: وَكَيْفَ تَعْرِفُ ذَاكَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: ” إِنَّكِ إِذَا كُنْتِ رَاضِيَةً قُلْتِ: بَلَى وَرَبِّ مُحَمَّدٍ، وَإِذَا كُنْتِ سَاخِطَةً قُلْتِ: لاَ وَرَبِّ إِبْرَاهِيمَ ” قَالَتْ: قُلْتُ: أَجَلْ، لَسْتُ أُهَاجِرُ إِلَّا اسْمَكَ


Bukhari-6077

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6077. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வர். (இவ்வாறு செய்யலாகாது.)

ஸலாமை முதலில் தொடங்குகிறவர்தாம் இவர்கள் இருவரில் சிறந்தவராவார்.

அறிவிப்பவர்: அபூஅய்யூப் அல்அன்ஸாரீ (ரலி)

அத்தியாயம்: 78


لاَ يَحِلُّ لِرَجُلٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَثِ لَيَالٍ، يَلْتَقِيَانِ: فَيُعْرِضُ هَذَا وَيُعْرِضُ هَذَا، وَخَيْرُهُمَا الَّذِي يَبْدَأُ بِالسَّلاَمِ


Bukhari-6076

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6076. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று.

என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

Book :78


«لاَ تَبَاغَضُوا، وَلاَ تَحَاسَدُوا، وَلاَ تَدَابَرُوا، وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا، وَلاَ يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَثِ لَيَالٍ»


Bukhari-6073 & 6074

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 62 (மனஸ்தாபம் கொண்டு) பேசாமல் இருப்பதும், ‘தம் சகோதரரிடம் மூன்று நாட்களுக்கு மேல் ஒருவர் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று’ என அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதும்.

6073. & 6074. & 6075. நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அவர்களின் தாய்வழிச் சகோதரர் ஹாரிஸ் அவர்களின் புதல்வரான அவ்ஃப் இப்னு மாலிக் இப்னி துஃபைல்(ரஹ்) கூறினார்

ஆயிஷா(ரலி) (தம் வீடு ஒன்றை) ‘விற்றது தொடர்பாக’ அல்லது ‘நன்கொடையாக வழங்கியது தொடர்பாக’ (அவர்களின் சகோதரி அஸ்மாவின் புதல்வர்) அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) (அதிருப்தியடைந்து) ‘அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷா (தம் முடிவைக்) கைவிடவேண்டும். அல்லது தான் அவரைத் தடுத்து நிறுத்துவேன்’ என்று கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு ஆயிஷா(ரலி) (தம் வீடு ஒன்றை) ‘விற்றது தொடர்பாக’ அல்லது ‘நன்கொடையாக வழங்கியது தொடர்பாக’ (அவர்களின் சகோதரி அஸ்மாவின் புதல்வர்) அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) (அதிருப்தியடைந்து) ‘அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷா (தம் முடிவைக்)

أَنَّ عَائِشَةَ، حُدِّثَتْ: أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ قَالَ: فِي بَيْعٍ أَوْ عَطَاءٍ أَعْطَتْهُ عَائِشَةُ: وَاللَّهِ لَتَنْتَهِيَنَّ عَائِشَةُ أَوْ لَأَحْجُرَنَّ عَلَيْهَا، فَقَالَتْ: أَهُوَ قَالَ هَذَا؟ قَالُوا: نَعَمْ، قَالَتْ: هُوَ لِلَّهِ عَلَيَّ نَذْرٌ، أَنْ لاَ أُكَلِّمَ ابْنَ الزُّبَيْرِ أَبَدًا. فَاسْتَشْفَعَ ابْنُ الزُّبَيْرِ إِلَيْهَا، حِينَ طَالَتِ الهِجْرَةُ، فَقَالَتْ: لاَ وَاللَّهِ لاَ أُشَفِّعُ فِيهِ أَبَدًا، وَلاَ أَتَحَنَّثُ إِلَى نَذْرِي. فَلَمَّا طَالَ ذَلِكَ عَلَى ابْنِ الزُّبَيْرِ، كَلَّمَ المِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ الأَسْوَدِ بْنِ عَبْدِ يَغُوثَ، وَهُمَا مِنْ بَنِي زُهْرَةَ، وَقَالَ لَهُمَا: أَنْشُدُكُمَا بِاللَّهِ لَمَّا أَدْخَلْتُمَانِي عَلَى عَائِشَةَ، فَإِنَّهَا لاَ يَحِلُّ لَهَا أَنْ تَنْذِرَ قَطِيعَتِي. فَأَقْبَلَ بِهِ المِسْوَرُ وَعَبْدُ الرَّحْمَنِ مُشْتَمِلَيْنِ بِأَرْدِيَتِهِمَا، حَتَّى اسْتَأْذَنَا عَلَى عَائِشَةَ، فَقَالاَ: السَّلاَمُ عَلَيْكِ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ  أَنَدْخُلُ؟ قَالَتْ عَائِشَةُ: ادْخُلُوا، قَالُوا: كُلُّنَا؟ قَالَتْ: نَعَمِ، ادْخُلُوا كُلُّكُمْ، وَلاَ تَعْلَمُ أَنَّ مَعَهُمَا ابْنَ الزُّبَيْرِ، فَلَمَّا دَخَلُوا دَخَلَ ابْنُ الزُّبَيْرِ الحِجَابَ، فَاعْتَنَقَ عَائِشَةَ وَطَفِقَ يُنَاشِدُهَا وَيَبْكِي، وَطَفِقَ المِسْوَرُ وَعَبْدُ الرَّحْمَنِ يُنَاشِدَانِهَا إِلَّا مَا كَلَّمَتْهُ، وَقَبِلَتْ مِنْهُ، وَيَقُولاَنِ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَمَّا قَدْ عَلِمْتِ مِنَ الهِجْرَةِ، فَإِنَّهُ: «لاَ يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَثِ لَيَالٍ» فَلَمَّا أَكْثَرُوا عَلَى عَائِشَةَ مِنَ التَّذْكِرَةِ وَالتَّحْرِيجِ، طَفِقَتْ تُذَكِّرُهُمَا نَذْرَهَا وَتَبْكِي وَتَقُولُ: إِنِّي نَذَرْتُ، وَالنَّذْرُ شَدِيدٌ، فَلَمْ يَزَالاَ بِهَا حَتَّى كَلَّمَتْ ابْنَ الزُّبَيْرِ، وَأَعْتَقَتْ فِي نَذْرِهَا ذَلِكَ أَرْبَعِينَ رَقَبَةً، وَكَانَتْ تَذْكُرُ نَذْرَهَا بَعْدَ ذَلِكَ، فَتَبْكِي حَتَّى تَبُلَّ دُمُوعُهَا خِمَارَهَا


Bukhari-6072

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6072. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

மதீனாவாசிகளின் (சாதாரண) அடிமைப் பெண்களில் ஒருத்தி கூட இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கையைப் பற்றிய வண்ணம் (தன் வாழ்க்கைத் தேவை நிமித்தமாக) தான் நாடிய இடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்ல முடியும். (அந்த அளவிற்கு மிக எளிமையானவர்களாகவும் நபி(ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள்.)

Book :78


«إِنْ كَانَتِ الأَمَةُ مِنْ إِمَاءِ أَهْلِ المَدِينَةِ، لَتَأْخُذُ بِيَدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَنْطَلِقُ بِهِ حَيْثُ شَاءَتْ»


Next Page » « Previous Page