Author: Farook

Bukhari-5849

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 36

சிவப்பு நிற மென்பட்டுத் திண்டு (மீஸரா).

5849. பராஉ (ரலி) அறிவித்தார்:

  1. நோயாளியை நலம் விசாரிப்பது,
  2. ‘ஜனாஸா’வைப் பின்தொடர்ந்து செல்வது,
  3. தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ் – எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் – அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக என்று) பதில் கூறுவது உள்ளிட்ட ஏழு விஷயங்களைக் கடைப்பிடிக்கும்படி எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

மேலும்,

  1. சாதாரணப் பட்டு,
  2. அலங்காரப் பட்டு,
  3. ‘கஸ்’ எனும் பட்டு கலந்த (எகிப்தியப்) பஞ்சாடை,
  4. தடித்த பட்டு,
  5. மென்பட்டுத் திண்டுகள் (மீஸரா) உள்ளிட்ட ஏழு பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும் எங்களுக்குத் தடை விதித்தார்கள்.

அத்தியாயம்:

أَمَرَنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسَبْعٍ: عِيَادَةِ المَرِيضِ، وَاتِّبَاعِ الجَنَائِزِ، وَتَشْمِيتِ العَاطِسِ، وَنَهَانَا عَنْ سَبْعٍ: عَنْ لُبْسِ الحَرِيرِ، وَالدِّيبَاجِ، وَالقَسِّيِّ، وَالإِسْتَبْرَقِ، وَالمَيَاثِرِ الحُمْرِ


Bukhari-5848

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 35

சிவப்பு ஆடை.

5848. பராஉ (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்கள் (அதிக உயரமாகவுமில்லாமல் குட்டையாகவும் இல்லாமல்) நடுத்தர உயரமுள்ளவர்களாய் இருந்தார்கள். நான் அவர்களைச் சிவப்பு நிற அங்கி ஒன்றில் பார்த்திருக்கிறேன். அதைவிட அழகான (அங்கி) எதையும் நான் பார்த்ததில்லை.67

Book : 77


«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرْبُوعًا، وَقَدْ رَأَيْتُهُ فِي حُلَّةٍ حَمْرَاءَ، مَا رَأَيْتُ شَيْئًا أَحْسَنَ مِنْهُ»


Bukhari-5847

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 34

குங்குமப்பூச் சாயம் இடப்பட்ட ஆடை.

5847. இப்னு உமர் (ரலி) அறிவித்தார்:

‘இஹ்ராம்’ கட்டியவர் ‘வர்ஸ்’ எனும் வாசனைச் செடியின் சாயம், அல்லது குங்குமப்பூச் சாயம் இடப்பட்ட ஆடையை அணியக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.


«نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَلْبَسَ المُحْرِمُ ثَوْبًا مَصْبُوغًا بِوَرْسٍ أَوْ بِزَعْفَرَانٍ»


Bukhari-5846

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 33

(தங்களது மேனியில்) குங்குமப் பூச் சாயமிட்டுக்கொள்வது தடை செய்யப் பட்டதாகும்.

5846. அனஸ் (ரலி) அறிவித்தார்:

ஆண்கள் (தங்களின் மேனியில்) குங்குமப் பூச் சாயமிட்டுக் கொள்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.65

Book : 77


«نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَتَزَعْفَرَ الرَّجُلُ»


Bukhari-5845

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 32

புத்தாடை அணிந்தவருக்காகச் செய்யப்படும் பிரார்த்தனை.63

5845. உம்மு காலித் பின்த் காலித் (ரலி) கூறினார்:

இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஆடைகள் சில கொண்டு வரப்பட்டன. அவற்றில் கறுப்பு நிறக் கம்பளியாடை ஒன்றும் இருந்தது. அவர்கள், ‘இந்த ஆடையை நாம் யாருக்கு அணிவிப்போம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?’ என்று கேட்க, மக்கள் (பதில் பேசாமல்) மெளனமாக இருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள், ‘உம்மு காலிதை என்னிடம் கொண்டு வாருங்கள்’ என்று உத்தரவிட்டார்கள். உடனே (சிறுமியாக இருந்த) நான் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்பட்டேன். உடனே அவர்கள் அந்த ஆடையைத் தம் கையால் எனக்கு அணிவித்து, ‘(இதை நீ உடுத்தி பழையதாக்கிக்) கிழித்து நைந்து போகச் செய்துவிடு‘ என்று இருமுறை சொன்னார்கள். பிறகு அந்த ஆடையின் வேலைப்பாட்டைக் கவனித்துப் பார்க்கலானார்கள். பிறகு என் பக்கம் தம் கையால் சைகை காட்டி, ‘உம்மு காலிதே! இது ‘சனா’ (அழகாயிருக்கிறது)’ என்று சொல்லலானார்கள்.

أُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِثِيَابٍ فِيهَا خَمِيصَةٌ سَوْدَاءُ، قَالَ: «مَنْ تَرَوْنَ نَكْسُوهَا هَذِهِ الخَمِيصَةَ» فَأُسْكِتَ القَوْمُ، قَالَ: «ائْتُونِي بِأُمِّ خَالِدٍ»

فَأُتِيَ بِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَلْبَسَنِيهَا بِيَدِهِ، وَقَالَ: «أَبْلِي وَأَخْلِقِي» مَرَّتَيْنِ،

فَجَعَلَ يَنْظُرُ إِلَى عَلَمِ الخَمِيصَةِ وَيُشِيرُ بِيَدِهِ إِلَيَّ وَيَقُولُ: «يَا أُمَّ خَالِدٍ هَذَا سَنَا وَيَا أُمَّ خَالِدٍ هَذَا سَنَا» وَالسَّنَا بِلِسَانِ الحَبَشِيَّةِ الحَسَنُ

قَالَ إِسْحَاقُ: حَدَّثَتْنِي امْرَأَةٌ مِنْ أَهْلِي: أَنَّهَا رَأَتْهُ عَلَى أُمِّ خَالِدٍ


Bukhari-5844

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5844. உம்மு ஸலமா (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) இரவு (திடீரென) விழித்தெழுந்து ‘வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. இன்றிரவு இறக்கிவைக்கப்பட்ட சோதனைகள் தாம் என்ன? (இன்றிரவு) இறக்கிவைக்கப்பட்ட கருவூலங்கள்தாம் என்ன!

(என் துணைவியரில்) இந்த அறைகளில் (உறங்கிக் கொண்டு) உள்ளோரை எழுப்பி உணர்வூட்டுகிறவர் யார்? இவ்வுலகில் ஆடை அணிந்திருக்கும் எத்துணையோ பெண்கள், மறுமை நாளில் (துணியே கிடைக்காமல்) நிர்வாணமாய் இருப்பார்கள்’ என்று கூறினார்கள்.62

Book :77


اسْتَيْقَظَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ اللَّيْلِ وَهُوَ يَقُولُ: «لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، مَاذَا أُنْزِلَ اللَّيْلَةَ مِنَ الفِتْنَةِ، مَاذَا أُنْزِلَ مِنَ الخَزَائِنِ، مَنْ  يُوقِظُ صَوَاحِبَ الحُجُرَاتِ، كَمْ مِنْ كَاسِيَةٍ فِي الدُّنْيَا عَارِيَةٍ يَوْمَ القِيَامَةِ»


Bukhari-5843

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 31

நபி (ஸல்) அவர்கள் தமது வசதிக்கேற்ப பயன்படுத்திவந்த ஆடைகளும் விரிப்பு களும்.60

5843. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்:

‘இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கெதிராக (அவர்களைச் சங்கடப்படுத்தும் வகையில்) கூடிப் பேசிச் செயல்பட்ட அந்த இரண்டு துணைவியர் யார்?’ என உமர் (ரலி) அவர்களிடம் கேட்க வேண்டுமென ஒரு வருட காலமாக நான் (நினைத்துக்கொண்டு) இருந்தேன். ஆயினும், உமர் (ரலி) அவர்கள் மேல் (மரியாதை கலந்த) அச்சம் கொள்ளலானேன். இவ்வாறிருக்கையில் (ஹஜ்ஜுக்கு வந்த) உமர் (ரலி) அவர்கள் ஒரு நாள் (‘மர்ருழ் ழஹ்ரான்’ எனும்) ஓரிடத்தில் தங்கினார்கள். அப்போது (தம் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக) அராக் (மிஸ்வாக்) மரத்தடிக்குச் சென்றார்கள். அவர்கள் (தம் தேவையை முடித்துக் கொண்டு) வந்தபோது அவர்களிடம் நான் அது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆயிஷாவும் ஹஃப்ஸாவுமே (அந்த இரண்டு துணைவியார்)’ என்று பதிலளித்துவிட்டு (பின்வருமாறு) கூறினார்கள்.

அறியாமைக் காலத்தில் நாங்கள் பெண்களை ஒரு பொருட்டாகவே

لَبِثْتُ سَنَةً وَأَنَا أُرِيدُ أَنْ أَسْأَلَ عُمَرَ، عَنِ المَرْأَتَيْنِ اللَّتَيْنِ تَظَاهَرَتَا عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَعَلْتُ أَهَابُهُ، فَنَزَلَ يَوْمًا مَنْزِلًا فَدَخَلَ الأَرَاكَ، فَلَمَّا خَرَجَ سَأَلْتُهُ فَقَالَ: عَائِشَةُ وَحَفْصَةُ، ثُمَّ قَالَ: كُنَّا فِي الجَاهِلِيَّةِ لاَ نَعُدُّ النِّسَاءَ شَيْئًا، فَلَمَّا جَاءَ الإِسْلاَمُ وَذَكَرَهُنَّ اللَّهُ، رَأَيْنَا لَهُنَّ بِذَلِكَ عَلَيْنَا حَقًّا، مِنْ غَيْرِ أَنْ نُدْخِلَهُنَّ فِي شَيْءٍ مِنْ أُمُورِنَا، وَكَانَ بَيْنِي وَبَيْنَ امْرَأَتِي كَلاَمٌ، فَأَغْلَظَتْ لِي، فَقُلْتُ لَهَا: وَإِنَّكِ لَهُنَاكِ؟ قَالَتْ: تَقُولُ هَذَا لِي وَابْنَتُكَ تُؤْذِي النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَيْتُ حَفْصَةَ فَقُلْتُ لَهَا: إِنِّي أُحَذِّرُكِ أَنْ تَعْصِي اللَّهَ وَرَسُولَهُ،

وَتَقَدَّمْتُ إِلَيْهَا فِي أَذَاهُ، فَأَتَيْتُ أُمَّ سَلَمَةَ فَقُلْتُ لَهَا، فَقَالَتْ: أَعْجَبُ مِنْكَ يَا عُمَرُ، قَدْ دَخَلْتَ فِي أُمُورِنَا، فَلَمْ يَبْقَ إِلَّا أَنْ تَدْخُلَ بَيْنَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَزْوَاجِهِ؟ فَرَدَّدَتْ،

وَكَانَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ إِذَا غَابَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشَهِدْتُهُ أَتَيْتُهُ بِمَا يَكُونُ، وَإِذَا غِبْتُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشَهِدَ أَتَانِي بِمَا يَكُونُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ مَنْ حَوْلَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدِ اسْتَقَامَ لَهُ، فَلَمْ يَبْقَ إِلَّا مَلِكُ غَسَّانَ بِالشَّأْمِ، كُنَّا نَخَافُ أَنْ يَأْتِيَنَا، فَمَا شَعَرْتُ إِلَّا بِالأَنْصَارِيِّ وَهُوَ يَقُولُ: إِنَّهُ قَدْ حَدَثَ أَمْرٌ، قُلْتُ لَهُ: وَمَا هُوَ، أَجَاءَ الغَسَّانِيُّ؟ قَالَ: أَعْظَمُ مِنْ ذَاكَ، طَلَّقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نِسَاءَهُ،

فَجِئْتُ فَإِذَا البُكَاءُ مِنْ حُجَرِهِنَّ كُلِّهَا، وَإِذَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ صَعِدَ فِي مَشْرُبَةٍ لَهُ، وَعَلَى بَابِ المَشْرُبَةِ وَصِيفٌ، فَأَتَيْتُهُ فَقُلْتُ: اسْتَأْذِنْ لِي، فَأَذِنَ لِي، فَدَخَلْتُ، «فَإِذَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى حَصِيرٍ قَدْ أَثَّرَ فِي جَنْبِهِ، وَتَحْتَ رَأْسِهِ مِرْفَقَةٌ مِنْ أَدَمٍ حَشْوُهَا لِيفٌ، وَإِذَا أُهُبٌ مُعَلَّقَةٌ وَقَرَظٌ» فَذَكَرْتُ الَّذِي قُلْتُ لِحَفْصَةَ وَأُمِّ سَلَمَةَ، وَالَّذِي رَدَّتْ عَلَيَّ أُمُّ سَلَمَةَ، «فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَبِثَ تِسْعًا وَعِشْرِينَ لَيْلَةً ثُمَّ نَزَلَ»


Bukhari-5842

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5842. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்:

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் புதல்வியார் உம்மு குல்ஸூம் (ரலி) அவர்கள், 59 கோடுகள் போட்ட பட்டு சால்வையொன்றை அணிந்திருந்ததை கண்டேன்.

Book :77


«أَنَّهُ رَأَى عَلَى أُمِّ كُلْثُومٍ عَلَيْهَا السَّلاَمُ، بِنْتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بُرْدَ حَرِيرٍ سِيَرَاءَ»


Bukhari-5841

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5841. அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்:

(ஒரு முறை) உமர் (ரலி) அவர்கள் கோடு போட்ட பட்டு அங்கி ஒன்று விற்கப்படுவதைக் கண்டார்கள். உடனே, ‘இறைத்தூதர் அவர்களே! இதைத் தாங்கள் வாங்கிக் கொண்டால், தங்களிடம் தூதுக் குழுக்கள் வரும்போதும் வெள்ளிக்கிழமையின் போதும் அணிந்து கொள்ளலாமே’ என்றார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள், (மறுமையில்) எந்தப் பங்கும் இல்லாதவர்கள் தான் இதை (இம்மையில்)அணிவார்கள்.’ என்று சொன்னார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அதன் பிறகு உமர் (ரலி) அவர்களுக்கு, அவர்கள் அணிந்து கொள்வதற்கு ஏற்றாற் போன்று கோடு போட்ட பட்டு அங்கி ஒன்றை அனுப்பி வைத்தார்கள். எனவே உமர் (ரலி) அவர்கள், ‘(இறைத்தூதர் அவர்களே!) இது பற்றித் தாங்கள் சொன்னதை நான் கேட்டிருக்க (இப்போது) இதை எனக்கே அணியக் கொடுத்துள்ளீர்களே!’ என்று வினவ, நபி (ஸல்) அவர்கள், ‘அதை நான் உங்களுக்கு அனுப்பி வைத்தது அதை நீங்கள் விற்றுக் கொள்ளவோ (பெண்களுக்கு) அணியத் தரவோ தான்‘ என்று பதிலளித்தார்கள்.58

Book :77


أَنَّ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ رَأَى حُلَّةً سِيَرَاءَ تُبَاعُ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، لَوِ ابْتَعْتَهَا تَلْبَسُهَا لِلْوَفْدِ إِذَا أَتَوْكَ وَالجُمُعَةِ؟

قَالَ: «إِنَّمَا يَلْبَسُ هَذِهِ مَنْ لاَ خَلاَقَ لَهُ» وَأَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ بَعْدَ ذَلِكَ إِلَى عُمَرَ حُلَّةً سِيَرَاءَ حَرِيرٍ كَسَاهَا إِيَّاهُ،

فَقَالَ عُمَرُ: كَسَوْتَنِيهَا، وَقَدْ سَمِعْتُكَ تَقُولُ فِيهَا مَا قُلْتَ؟ فَقَالَ: «إِنَّمَا بَعَثْتُ إِلَيْكَ لِتَبِيعَهَا، أَوْ تَكْسُوَهَا»


Bukhari-5840

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 30

பெண்களுக்குப் பட்டாடை (அனுமதிக்கப்படும்).56

5840. அலீ இப்னு அபீ தாலிப் (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்கள் கோடுபோட்ட பட்டு அங்கியொன்றை எனக்கு வழங்கினார்கள். நான் அதை அணிந்துகொண்டு வெளியே புறப்பட்டேன். அப்போது அவர்களின் முகத்தில் கோபக் குறியை கண்டேன். எனவே, அதைப் பல துண்டுகளாக்கி எங்கள் (வீட்டுப்) பெண்களிடையே பங்கிட்டு விட்டேன்.57

இந்த ஹதீஸ் இரண்டு வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Book : 77


«كَسَانِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حُلَّةً سِيَرَاءَ، فَخَرَجْتُ فِيهَا، فَرَأَيْتُ الغَضَبَ فِي وَجْهِهِ، فَشَقَّقْتُهَا بَيْنَ نِسَائِي»


Next Page » « Previous Page