ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
பாடம்: 28
‘கஸ்’ வகைப் பட்டு அணிவது.
அபூபுர்தா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் அலீ (ரலி) அவர்களிடம், ‘ ‘கஸ்’ வகைத் துணி என்றால் என்ன?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அது ஷாம் (சிரியா) நாட்டிலிருந்தோ எகிப்திலிருந்தோ எங்களுக்கு வந்துகொண்டிருந்த ஒரு வகைத் துணியாகும். அதில் விலா எலும்புகளைப் போன்று வரி வரியாகக் கோடுகள் இருக்கும்; அதில் பட்டும் கலந்திருக்கும். நாரத்தையைப் போன்ற (தடித்த வளைந்த) கோடுகள் அதில் இருக்கும்.
‘மீஸரா’ என்பது, பெண்கள் தம் கணவர்களுக்காக மென்பட்டுத் திண்டுகளைப் போன்று தயாரித்து வந்த விரிப்புகளாகும்’ என்று பதிலளித்தார்கள்.
ஜரீர் பின் அப்துல்ஹமீத் (ரஹ்) அவர்கள் யஸீத் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹதீஸில் (பின்வருமாறு) காணப்படுகிறது:
‘கஸ்’ வகைத் துணி என்பது விலா எலும்புகளைப் போன்று வரி வரியாகக் கோடுகள் போடப்பட்ட எகிப்திலிருந்து கொண்டு வரப்படுகின்ற ஒரு வகைத் துணியாகும்.
«نَهَانَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ المَيَاثِرِ الحُمْرِ وَالقَسِّيِّ»
சமீப விமர்சனங்கள்