Author: Farook

Bukhari-5778

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 56

விஷம், ஆபத்தான பொருள், அசுத்தமான பொருள் ஆகியவற்றால் சிகிச்சை அளிப்பதும், விஷம் அருந்துவதும்.

5778. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பார்.

விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறவர் தம் விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார்.

ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறவரின் கூராயுதத்தை அவர் தம் கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தம் வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 76


مَنْ تَرَدَّى مِنْ جَبَلٍ فَقَتَلَ نَفْسَهُ، فَهُوَ فِي نَارِ جَهَنَّمَ يَتَرَدَّى فِيهِ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا، وَمَنْ تَحَسَّى سُمًّا فَقَتَلَ نَفْسَهُ، فَسُمُّهُ فِي يَدِهِ يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ، فَحَدِيدَتُهُ فِي يَدِهِ يَجَأُ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا»


Bukhari-5777

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்: 55

நபி (ஸல்) அவர்களுக்கு நஞ்சூட்டப்பட்டது பற்றிய குறிப்பு.

இது பற்றி ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் குறித்து அறிவித்துள்ளார்கள்.

5777. அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

(ஹிஜ்ரீ -7ஆம் ஆண்டில்) கைபர் வெற்றி கொள்ளப்பட்டபோது இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு விஷயம் தடவப்பட்ட ஆடு ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது. (விஷயம் தெரிந்தவுடன்) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘இங்குள்ள யூதர்களை ஒன்று திரட்டி என்னிடம் கொண்டு வாருங்கள்’ என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் ஒன்று திரட்டப்பட்டு நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார்கள்.

அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘நான் உங்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்கப்போகிறேன். நீங்கள் என்னிடம் அதைப் பற்றி உண்மை சொல்வீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அந்த யூதர்கள் ‘சரி (உண்மையைச் சொல்கிறோம்), அபுல்காசிம் (முஹம்மது(ஸல்) அவர்களே!’ என்று பதிலளித்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘உங்கள்

لَمَّا فُتِحَتْ خَيْبَرُ، أُهْدِيَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَاةٌ فِيهَا سَمٌّ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اجْمَعُوا لِي مَنْ كَانَ هَا هُنَا مِنَ اليَهُودِ» فَجُمِعُوا لَهُ، فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي سَائِلُكُمْ عَنْ شَيْءٍ، فَهَلْ أَنْتُمْ صَادِقِيَّ عَنْهُ». فَقَالُوا: نَعَمْ يَا أَبَا القَاسِمِ، فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَبُوكُمْ» قَالُوا: أَبُونَا فُلاَنٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَذَبْتُمْ، بَلْ أَبُوكُمْ فُلاَنٌ» فَقَالُوا: صَدَقْتَ وَبَرِرْتَ، فَقَالَ: «هَلْ أَنْتُمْ صَادِقِيَّ عَنْ شَيْءٍ إِنْ سَأَلْتُكُمْ عَنْهُ» فَقَالُوا: نَعَمْ يَا أَبَا القَاسِمِ، وَإِنْ كَذَبْنَاكَ عَرَفْتَ كَذِبَنَا كَمَا عَرَفْتَهُ فِي أَبِينَا، قَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَهْلُ النَّارِ» فَقَالُوا: نَكُونُ فِيهَا يَسِيرًا، ثُمَّ تَخْلُفُونَنَا فِيهَا، فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اخْسَئُوا فِيهَا، وَاللَّهِ لاَ نَخْلُفُكُمْ فِيهَا أَبَدًا». ثُمَّ قَالَ لَهُمْ: «فَهَلْ أَنْتُمْ صَادِقِيَّ عَنْ شَيْءٍ إِنْ سَأَلْتُكُمْ عَنْهُ» قَالُوا: نَعَمْ، فَقَالَ: «هَلْ جَعَلْتُمْ فِي هَذِهِ الشَّاةِ سَمًّا؟» فَقَالُوا: نَعَمْ، فَقَالَ: «مَا حَمَلَكُمْ عَلَى ذَلِكَ» فَقَالُوا: أَرَدْنَا: إِنْ كُنْتَ كَذَّابًا نَسْتَرِيحُ مِنْكَ، وَإِنْ كُنْتَ نَبِيًّا لَمْ يَضُرَّكَ


Bukhari-5776

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5776. அனஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள், ‘தொற்று நோய் கிடையாது; பறவை சகுனம் கிடையாது. ஆனால், நற்குறி எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது’ என்று கூறினார்கள். மக்கள், ‘நற்குறி என்றால் என்ன?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(மங்கலகரமான) நல்ல சொல்’ என்று பதிலளித்தார்கள். 102

Book :76


«لاَ عَدْوَى وَلاَ طِيَرَةَ، وَيُعْجِبُنِي الفَأْلُ» قَالُوا: وَمَا الفَأْلُ؟ قَالَ: «كَلِمَةٌ طَيِّبَةٌ»


Bukhari-5775

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5775. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

(ஒருமுறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘தொற்று நாய் கிடையாது’ என்று கூறினார்கள். உடனே கிராமவாசி ஒருவர் எழுந்து, ‘(பாலை) மணலில் மான்களைப் போன்று ஆரோக்கியமாக இருந்து கொண்டிருக்கும் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து (கலந்து) அவற்றுக்கும் சிரங்கு பிடிக்கச் செய்து விடுகிறதே, இது பற்றி தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியானால் முதல் ஒட்டகத்திற்குத் தொற்றச் செய்தது யார்?’ என்று கேட்டார்கள். 101

Book :76


«لاَ عَدْوَى» فَقَامَ أَعْرَابِيٌّ فَقَالَ: أَرَأَيْتَ الإِبِلَ، تَكُونُ فِي الرِّمَالِ أَمْثَالَ الظِّبَاءِ، فَيَأْتِيهَا البَعِيرُ الأَجْرَبُ فَتَجْرَبُ؟ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَمَنْ أَعْدَى الأَوَّلَ»


Bukhari-5774

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5774. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

வியாதி பிடித்த ஒட்டகத்தை ஆரோக்கியமான ஒட்டகத்திடம் கொண்டு செல்லாதீர்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 100

Book :76


«لاَ تُورِدُوا المُمْرِضَ عَلَى المُصِحِّ»


Bukhari-5773

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5773. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

தொற்று நோய் கிடையாது

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book :76


«لاَ عَدْوَى»


Bukhari-5772

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 54

தொற்று நோய் கிடையாது.

5772. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொற்று நோய் கிடையாது; பறவை சகுனம் கிடையாது; சகுனம் பார்ப்பது (இருக்க முடியுமென்றால்) மூன்று விஷயங்களில்தாம் குதிரையிலும் மனைவியிலும் வீட்டிலும் தாம்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 76


لاَ عَدْوَى وَلاَ طِيَرَةَ، إِنَّمَا الشُّؤْمُ  فِي ثَلاَثٍ: فِي الفَرَسِ، وَالمَرْأَةِ، وَالدَّارِ


Bukhari-5771

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5771. (மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர்) அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான் இப்னி அவ்ஃப்(ரஹ்) அறிவித்தார்

‘நபி(ஸல்) அவர்கள், ‘வியாதிபிடித்த ஒட்டகம் வைத்திருப்பவர் ஆரோக்கியமான ஒட்டகம் வைத்திருப்பவரிடம் தன் ஒட்டகத்தைக் கொண்டு செல்லவேண்டாம்’ என்று கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவிப்பதை பின்பு செவியுற்றேன். அபூ ஹுரைரா(ரலி) முந்தைய ஹதீஸை (தாம் அறிவிக்கவில்லையென்று) மறுத்தார்கள். நாங்கள், ‘தொற்று நோய் கிடையாது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என நீங்கள் அறிவிக்கவில்லையா?’ என்று கேட்டோம். அவர்கள் (தாம் கூறவில்லையென்று மறுத்துக் கோபத்துடன்) அபிசீனிய மொழியில் ஏதோ பேசினார்கள். இதைத் தவிர (தாம் அறிவித்த) வேறெந்த ஹதீஸையும் அவர்கள் மறந்து நான் பார்த்ததில்லை.

Book :76


«لاَ يُورِدَنَّ مُمْرِضٌ عَلَى مُصِحٍّ» وَأَنْكَرَ أَبُو هُرَيْرَةَ حَدِيثَ الأَوَّلِ، قُلْنَا: أَلَمْ تُحَدِّثْ أَنَّهُ: «لاَ عَدْوَى» فَرَطَنَ بِالحَبَشِيَّةِ، قَالَ أَبُو سَلَمَةَ: فَمَا رَأَيْتُهُ نَسِيَ حَدِيثًا غَيْرَهُ


Bukhari-5770

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 53 ஆந்தை குறித்த (மூட) நம்பிக்கை கூடாது.96

5770. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் ‘தொற்று நோய் கிடையாது; ஸஃபரும் கிடையாது; (இறந்தவரின் எலும்பு ஆந்தையாக மாறிப் பறப்பதாகக் கருதும்) ஆந்தை பற்றிய நம்பிக்கையும் உண்மையல்ல’ என்று கூறினார்கள்.

அப்போது கிராமவாசி ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! (பாலை) மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியமாக) இருந்த ஒட்டகங்களுக்கிடையே சிரங்கு பிடித்த ஒட்டகம் கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கிவிடுகின்றனவே?’ என்று கேட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘முதல் ஒட்டகத்திற்கு (அதை)த் தொற்றச் செய்தது யார்?’ என்று (திருப்பிக்) கேட்டார்கள். 97

Book : 76


«لاَ عَدْوَى وَلاَ صَفَرَ، وَلاَ هَامَةَ» فَقَالَ أَعْرَابِيٌّ: يَا رَسُولَ اللَّهِ، فَمَا بَالُ الإِبِلِ، تَكُونُ فِي الرَّمْلِ كَأَنَّهَا الظِّبَاءُ، فَيُخَالِطُهَا البَعِيرُ الأَجْرَبُ فَيُجْرِبُهَا؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَمَنْ أَعْدَى الأَوَّلَ»


Bukhari-5769

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

5769. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

காலையில் (வெறும் வயிற்றில்) ஏழு ‘அஜ்வா’ (ரகப்) பேரீச்சம் பழங்களை உண்ணுகிறவருக்கு அன்று எந்த விஷமோ, எந்தச் சூனியமோ இடரளிக்காது.

அறிவிப்பவர்: ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி)

அத்தியாயம்: 76


«مَنْ تَصَبَّحَ سَبْعَ تَمَرَاتٍ عَجْوَةً، لَمْ يَضُرَّهُ ذَلِكَ اليَوْمَ سُمٌّ وَلاَ سِحْرٌ»


Next Page » « Previous Page