Author: Farook

Bukhari-5302

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5302. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘மாதம் என்பது இப்படியும், இப்படியும், இப்படியும் இருக்கும்’ என்று (இரண்டு கைகளையும் மும்முறை விரித்துக் காட்டி) முப்பது நாள் எனச் சொல்லிவிட்டு, பிறகு ‘மேலும் இப்படியும், இப்படியும், இப்படியும் இருக்கலாம்’ (என்று இரண்டு கைகளையும் மும்முறை விரித்துக் காட்டி மூன்றாம் முறை பெருவிரலை மடக்கியபடி) – இருபத்தொன்பது நாள்களாகவும் இருக்கலாம் என்று கூறினார்கள். அதாவது (மாதம் என்பது,) சில வேளை முப்பது நாள்களாக இருக்கும்; மற்ற சில வேளை’ இருபத்தொன்பது நாள்களாக இருக்கும் என்று கூறினார்கள்.71

Book :68


«الشَّهْرُ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا» – يَعْنِي: ثَلاَثِينَ – ثُمَّ قَالَ: «وَهَكَذَا وَهَكَذَا وَهَكَذَا» – يَعْنِي تِسْعًا وَعِشْرِينَ – يَقُولُ: مَرَّةً ثَلاَثِينَ، وَمَرَّةً تِسْعًا وَعِشْرِينَ


Bukhari-5301

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5301. ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘நானும் மறுமையும் ‘இதிலிருந்து இதைப் போல்’ அல்லது ‘இந்த இரண்டையும் போல்’ (நெருக்கமாக) அனுப்பப்பட்டுள்ளோம்’ என்று கூறியபடி தம் சுட்டுவிரலையும் நடுவிரலையும் இணைத்துக் காட்டினார்கள். 70

Book :68


بُعِثْتُ أَنَا وَالسَّاعَةَ كَهَذِهِ مِنْ هَذِهِ، أَوْ: كَهَاتَيْنِ ” وَقَرَنَ بَيْنَ السَّبَّابَةِ وَالوُسْطَى


Bukhari-5300

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 1 குடும்பத்தாருக்குச் செலவிடுவதன் சிறப்பு. அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) இவர்கள் உங்களிடம், நாங்கள் எதை (தர்மமாக)ச் செலவிடவேண்டும்? என்று கேட்கிறார்கள். (தேவைக்குப் போக) மீதமுள்ளதை என்று நீங்கள் சொல்லுங்கள். நீங்கள் இம்மை மறுமை குறித்துச் சிந்தித்து உணர வேண்டும் என்பதற்காக அல்லாஹ் தன் வசனங்களை இவ்வாறு விளக்கிக் காட்டு கின்றான். (2:219) ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) அஃப்வ்’ எனும் சொல், (குடும்பச் செலவுகள் போக) மீதத்தைக் குறிக்கும். 2

5300. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

‘அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்ததை உங்களுக்குத் தெரிவிக்கட்டுமா?’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கேட்டார்கள். மக்கள், ‘ஆம்! (தெரிவியுங்கள்) இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினர்.

‘(அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது,) பனூ நஜ்ஜார் குடும்பமாகும். பிறகு அவர்களைத் தொடர்ந்து பனூ அப்தில் அஷ்ஹல் குடும்பமாகும். பின்னர் அவர்களைத் தொடர்ந்து பனூ ஹாரிஸ் இப்னு கஸ்ரஜ் குடும்பமாகும்.

«أَلاَ أُخْبِرُكُمْ بِخَيْرِ دُورِ الأَنْصَارِ؟» قَالُوا: بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «بَنُو النَّجَّارِ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ بَنُو عَبْدِ الأَشْهَلِ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ بَنُو الحَارِثِ بْنِ الخَزْرَجِ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ بَنُو سَاعِدَةَ» ثُمَّ قَالَ بِيَدِهِ فَقَبَضَ أَصَابِعَهُ، ثُمَّ بَسَطَهُنَّ كَالرَّامِي بِيَدِهِ، ثُمَّ قَالَ: «وَفِي كُلِّ دُورِ الأَنْصَارِ خَيْرٌ»


Bukhari-5299

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5299. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

(செலவே செய்யாத) கஞ்சன், செலவு செய்கிற (தாராள மனம் படைத்த)வன் ஆகிய இருவரின் நிலையானது, இரண்டு மனிதர்களின் நிலை போன்றதாகும். அவ்விருவரும் தம் மார்பிலிருந்து கழுத்தெலும்பு வரை இரும்பாலான நீளங்கி அணிந்துள்ளனர். செலவு செய்கிறவர் எதைச் செலவு செய்தாலும் அவரின் அங்கி உடல் மீது நீண்டு கொண்டே சென்று விரல் நுனியையும் மறைத்து, (அதற்கப்பால்) அவரின் பாதச் சுவடுகளைக் கூட(த் தொட்டு) அழித்து விடுகிறது.

கஞ்சன் (எதையாவது) செலவு செய்ய விரும்பினால் (அவனுடைய இரும்பு அங்கியின்) ஒவ்வொரு வளையமும் அதன்னுடையன் இடத்தை இறுக்கிப் பிடித்துக் கொள்கிறது. அவன் அதை(த் தளர்த்தி) விரிவாக்க முயல்கிறான். ஆனால், அது விரிவடைவதில்லை.

(இதைக் கூறியபோது) நபி(ஸல்) அவர்கள் (குரல் வளையைக் கழுத்துச் சட்டை இறுக்கிப் பிடிப்பதை உணர்த்தும் முகமாக) தம் விரலல் தம் குரல்வளையைக் காட்டி சைகை செய்தார்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

مَثَلُ البَخِيلِ وَالمُنْفِقِ، كَمَثَلِ رَجُلَيْنِ عَلَيْهِمَا جُبَّتَانِ مِنْ حَدِيدٍ، مِنْ لَدُنْ ثَدْيَيْهِمَا إِلَى تَرَاقِيهِمَا، فَأَمَّا المُنْفِقُ: فَلاَ يُنْفِقُ شَيْئًا إِلَّا مَادَّتْ عَلَى جِلْدِهِ، حَتَّى تُجِنَّ بَنَانَهُ وَتَعْفُوَ أَثَرَهُ، وَأَمَّا البَخِيلُ: فَلاَ يُرِيدُ يُنْفِقُ إِلَّا لَزِمَتْ كُلُّ حَلْقَةٍ مَوْضِعَهَا، فَهُوَ يُوسِعُهَا فَلاَ تَتَّسِعُ ” وَيُشِيرُ بِإِصْبَعِهِ إِلَى حَلْقِهِ