பாடம் : 22 மனைவி மக்களையும் சொத்து பத்துக் களையும் விட்டுவிட்டுக் காணாமற்போனவர் பற்றிய சட்டம்.49 போரின் போது (நம்) அணியிலிருந்து ஒருவர் காணாமற்போய்விட்டால் அவரை அவருடைய மனைவி ஒரு வருட காலம் எதிர்பார்ப்பாள் என சயீத் பின் முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஓர் அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கினார்கள். (பிறகு விலையை ஒப்படைப்பதற்காக) அவளுடைய எசமானை ஒரு வருட காலம் தேடினார்கள். அவரைத் தேடியும் கிடைக்க வில்லை. அவர் காணாமல்போய்விட்டார். ஆகவே, இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (ஏழைகளுக்கு) ஒன்றிரண்டு வெள்ளி நாணயத்தைக் கொடுத்துக் கொண்டே இறைவா! இதை இன்ன மனிதருக்காக வழங்குகிறேன். அவர் வந்துவிட்டால் (தர்மம் வழங்கியதற்காக) எனக்கு (நன்மை) உண்டு; (அவருடைய கடனைச் செலுத்தவேண்டிய பொறுப்பும்) என் மீது உண்டு என்று கூறிவிட்டு,கண்டெடுக்கப்பட்ட பொருள் விஷயத்தில் இவ்வாறே செயல்படுங்கள் என்று சொன்னார்கள். இதைப் போன்றே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறினார்கள்: இருக்கும் இடம் அறியப்படுகின்ற கைதி விஷயத்தில் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், அவனுடைய மனைவி மறுமணம் செய்து கொள்ள மாட்டாள். அவனுடைய சொத்துகள் பங்கு வைக்கவும்படாது. அவனைக் குறித்த தகவல் கிடைக்காவிட்டால், காணாமல் போனவன் விஷயத்தில் أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنْ ضَالَّةِ الغَنَمِ، فَقَالَ: «خُذْهَا، فَإِنَّمَا هِيَ لَكَ أَوْ لِأَخِيكَ أَوْ لِلذِّئْبِ» وَسُئِلَ عَنْ ضَالَّةِ الإِبِلِ، فَغَضِبَ وَاحْمَرَّتْ وَجْنَتَاهُ، وَقَالَ: «مَا لَكَ وَلَهَا، مَعَهَا الحِذَاءُ وَالسِّقَاءُ، تَشْرَبُ المَاءَ، وَتَأْكُلُ الشَّجَرَ، حَتَّى يَلْقَاهَا رَبُّهَا» وَسُئِلَ عَنِ اللُّقَطَةِ، فَقَالَ: «اعْرِفْ وِكَاءَهَا وَعِفَاصَهَا، وَعَرِّفْهَا سَنَةً، فَإِنْ جَاءَ مَنْ يَعْرِفُهَا، وَإِلَّا فَاخْلِطْهَا بِمَالِكَ» قَالَ سُفْيَانُ: فَلَقِيتُ رَبِيعَةَ بْنَ أَبِي عَبْدِ الرَّحْمَنِ – قَالَ سُفْيَانُ: وَلَمْ أَحْفَظْ عَنْهُ شَيْئًا غَيْرَ هَذَا – فَقُلْتُ: أَرَأَيْتَ حَدِيثَ يَزِيدَ مَوْلَى المُنْبَعِثِ فِي أَمْرِ الضَّالَّةِ، هُوَ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ؟ قَالَ: نَعَمْ، قَالَ يَحْيَى: وَيَقُولُ رَبِيعَةُ، عَنْ يَزِيدَ مَوْلَى المُنْبَعِثِ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ قَالَ سُفْيَانُ: فَلَقِيتُ رَبِيعَةَ فَقُلْتُ لَهُ
Author: Farook
Bukhari-5291
5291. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்
நான்கு மாதம் முடிந்துவிட்டால், கணவன் மணவிலக்குச் செய்யும் வரை (முடிவு) நிறுத்திவைக்கப்படும். கணவனாக மணவிலக்குச் செய்யும் வரை (ஈலாவின்) மணவிலக்கு நிகழாது.
இதே கருத்து நபித்தோழர்களில் உஸ்மான், அலீ, அபுத்தர்தர், ஆயிஷா(ரலி) மேலும் பன்னிரன்ட பேரிடமிருந்து அறிவிக்கப்ட்டுள்ளது.
Book :68
إِذَا مَضَتْ أَرْبَعَةُ أَشْهُرٍ: يُوقَفُ حَتَّى يُطَلِّقَ، وَلاَ يَقَعُ عَلَيْهِ الطَّلاَقُ حَتَّى يُطَلِّقَ ” وَيُذْكَرُ ذَلِكَ عَنْ: عُثْمَانَ، وَعَلِيٍّ، وَأَبِي الدَّرْدَاءِ، وَعَائِشَةَ، وَاثْنَيْ عَشَرَ رَجُلًا، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
Bukhari-5290
5290. நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்
அல்லாஹ குறிப்பிட்டுள்ள ‘ஈலா’ எனும் சத்திய விஷயத்தில் இப்னு உமர்(ரலி), ‘அந்த (நான்கு மாத கால) தவணை முடிந்துவிட்ட பின்னால் அல்லாஹ் உத்திரவிட்டிருப்பதைப் போன்று ஒருவர் நல்ல முறையில் (தம் மனைவியைத்) தம்மிடம் வைத்துக் கொள்ள வேண்டும்; அல்லது அவளை மணவிலக்குச் செய்ய உறுதியான முடிவு செய்திடவேண்டும். இதைத் தவிர வேறெதற்கும் அனுமதியில்லை’ என்று கூறுவார்கள்.
Book :68
أَنَّ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، كَانَ يَقُولُ فِي الإِيلاَءِ الَّذِي سَمَّى اللَّهُ: «لاَ يَحِلُّ لِأَحَدٍ بَعْدَ الأَجَلِ إِلَّا أَنْ يُمْسِكَ بِالْمَعْرُوفِ، أَوْ يَعْزِمَ بِالطَّلاَقِ كَمَا أَمَرَ اللَّهُ عَزَّ وَجَلَّ»
وقَالَ لِي إِسْمَاعِيلُ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، ” إِذَا مَضَتْ أَرْبَعَةُ أَشْهُرٍ: يُوقَفُ حَتَّى يُطَلِّقَ، وَلاَ يَقَعُ عَلَيْهِ الطَّلاَقُ حَتَّى يُطَلِّقَ ” وَيُذْكَرُ ذَلِكَ عَنْ: عُثْمَانَ، وَعَلِيٍّ، وَأَبِي الدَّرْدَاءِ، وَعَائِشَةَ، وَاثْنَيْ عَشَرَ رَجُلًا، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
Bukhari-5289
பாடம் : 21 தங்களுடைய மனைவியரை நெருங்குவ தில்லை எனச் சத்தியம் (ஈலா) செய்கிறவர் களுக்காக (அவர்களின் மனைவியர்) நான்கு மாதங்கள் எதிர்பார்க்கும் உரிமையுண்டு. (இக்காலத்திற்குள் அவர்கள் சத்தியத்திலிருந்து) மீண்டுவிட்டால், நிச்சயமாக அல்லாஹ் (அவர்களை) மிக்க மன்னிக்கின்ற வனும் மிக்க அருள்கின்றவனும் ஆவான். (ஆனால்) அவர்கள் மணவிலக்கையே உறுதிசெய்வார்களாயின்,நிச்சயமாக அல்லாஹ் மிக்க செவியுறுவோனும் நன்கு அறிவோனும் ஆவான் எனும் (2:226, 227 ஆகிய) இறைவசனங்கள்.46 (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ஃபஇன் ஃபாஊ’ எனும் சொற்றொடருக்கு அவர்கள் மீண்டு கொண்டார்களானால்’ என்று பொருள்.
5289. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் துணைவியரை (ஒரு மாதகாலம்) நெருங்க மாட்டேன் எனச் சத்தியம் செய்தார்கள் (இந்தக் காலக்கட்டத்தில்) அவர்களின் காலில்களுக்கு ஏற்பட்டிருந்தது. எனவே, அவர்கள் தங்களின் மாடியறையில் இருபத்தொன்பது நாள்கள் தங்கியிருந்துவிட்டு பிறகு இறங்கி வந்தார்கள். அப்போது மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! ஒரு மாத காலம் (தங்கள் துணைவியரை) நெருங்கமாட்டேன் எனச் சத்தியம் آلَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ نِسَائِهِ، وَكَانَتْ انْفَكَّتْ رِجْلُهُ، فَأَقَامَ فِي مَشْرُبَةٍ لَهُ تِسْعًا وَعِشْرِينَ ثُمَّ نَزَلَ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، آلَيْتَ شَهْرًا؟ فَقَالَ: «الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ»
Bukhari-5288
பாடம்: 20
பகை நாட்டு இணைவைப்பாளரின், அல்லது இஸ்லாமிய நாட்டு முஸ்லிமல்லாத குடிமகனின் கிறித்தவ மனைவி, அல்லது இணைவைப் பாளியான மனைவி முஸ்லிமாகி விட்டால் (என்ன சட்டம்?)44
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: தன் கணவனுக்குச் சிறிது நேரத்திற்கு முன்பாக ஒரு கிறித்தவப் பெண் முஸ்லிமாகிவிட்டால்கூட உடனே அவள் தன் கணவனுக்கு விலக்கப்பட்டவளாக ஆகிவிடுவாள்.
இப்ராஹீம் அஸ்ஸாயிஃக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம், ‘‘இஸ்லாமிய நாட்டின் ஒப்பந்தப் பிரஜையான முஸ்லிமல்லாத ஒரு பெண் முஸ்லிமாகிவிட்டாள். பிறகு அவள் ‘இத்தா’ காலத்தில் இருந்துகொண்டிருந்தபோது அவளுடைய கணவனும் முஸ்லிமானார். இப்போது அவள் அவருடைய மனைவிதானா? (அவர்கள் இடையிலான மணஉறவு முறிந்துவிட்டதா? அல்லது தொடர்கிறதா?)” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘இல்லை (முறிந்துவிட்டது); இனி அவளாக முன்வந்து (அதே கணவனைப்) புதிதாகத் திருமணம் செய்துகொண்டு ‘மஹ்ர்’ பெற்றுக்கொள்ள விரும்பினால் தவிர. (அப்போதுதான் பழைய கணவனுடன் தொடர்ந்து அவள் வாழ முடியும்)” என்று பதிலளித்தார்கள்.
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (மேற்கண்ட நிலையில்) அவள் ‘இத்தா’வில் இருந்துகொண்டிருக்கும்போது கணவன் முஸ்லிமாகிவிட்டால்
كَانَتِ المُؤْمِنَاتُ إِذَا هَاجَرْنَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْتَحِنُهُنَّ بِقَوْلِ اللَّهِ تَعَالَى: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا، إِذَا جَاءَكُمُ المُؤْمِنَاتُ مُهَاجِرَاتٍ فَامْتَحِنُوهُنَّ} [الممتحنة: 10] إِلَى آخِرِ الآيَةِ. قَالَتْ عَائِشَةُ: فَمَنْ أَقَرَّ بِهَذَا الشَّرْطِ مِنَ المُؤْمِنَاتِ فَقَدْ أَقَرَّ بِالْمِحْنَةِ، فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَقْرَرْنَ بِذَلِكَ مِنْ قَوْلِهِنَّ، قَالَ لَهُنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «انْطَلِقْنَ فَقَدْ بَايَعْتُكُنَّ» لاَ وَاللَّهِ مَا مَسَّتْ يَدُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَ امْرَأَةٍ قَطُّ، غَيْرَ أَنَّهُ بَايَعَهُنَّ بِالكَلاَمِ، وَاللَّهِ مَا أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى النِّسَاءِ إِلَّا بِمَا أَمَرَهُ اللَّهُ، يَقُولُ لَهُنَّ إِذَا أَخَذَ عَلَيْهِنَّ: «قَدْ بَايَعْتُكُنَّ» كَلاَمًا
Bukhari-5287
5287. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
அபூ உமைய்யாவின் மகள் ‘குறைபா’ என்பவர் உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார். அவரை உமர் இப்னு கத்தாப்(ரலி) மணவிலக்குச் செய்துவிட்டார்கள். பின்னர் அவரை முஆவியா இப்னு அபீ சுஃப்யான்(ரலி) மணந்தார்கள்.
அபூ சுஃப்யான்(ரலி) அவர்களின் புதல்வியார் உம்முல் ஹகம் அவர்கள், இயாள் இப்னு ஃகன்கி அல்ஃபிஹ்ரீ(ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார். அவரை இயாள் மணவிலக்குச் செய்துவிட்டார்கள். பிறகு அவரை அப்துல்லாஹ் இப்னு உஸ்மான் அஸ்ஸகஃபீ என்பவர் மணந்தார். 43
Book :68
«كَانَتْ قَرِيبَةُ بِنْتُ أَبِي أُمَيَّةَ عِنْدَ عُمَرَ بْنِ الخَطَّابِ، فَطَلَّقَهَا فَتَزَوَّجَهَا مُعَاوِيَةُ بْنُ أَبِي سُفْيَانَ، وَكَانَتْ أُمُّ الحَكَمِ بِنْتُ أَبِي سُفْيَانَ تَحْتَ عِيَاضِ بْنِ غَنْمٍ الفِهْرِيِّ، فَطَلَّقَهَا فَتَزَوَّجَهَا عَبْدُ اللَّهِ بْنُ عُثْمانَ الثَّقَفِيُّ»
Bukhari-5286
பாடம் : 19 இணைவைப்பவர்களாக இருந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பெண்களை மணந்துகொள்வதும், (மணப்பதற்கு முன் மேற்கொள்ளவேண்டிய) அவர்களின் இத்தா’க் காலமும்.42
5286. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்களையும் முஸ்லிம்களையும் பொறுத்தவரையில் இணைவைப்பாளர்கள் இரண்டு வகையினராக பகைவர்களாக இருந்தனர். அவர்கள் நபி(ஸல்) அவர்களுடன் போர் புரிவார்கள். நபியவர்களம் அவர்களுடன் போர் புரிவார்கள். மற்றொரு வகை இணைவைப்பாளர்கள் (சமாதான) ஒப்பந்தம் செய்தவர்களாக இருந்தனர். அவர்கள் நபி(ஸல்) அவர்களுடன் போர் புரியமாட்டார்கள்; நபியவர்களும் அவர்களுடன் போர் புரியமாட்டார்கள். பகைவர்களின் கூட்டத்திலிருந்து ஒரு பெண் (முஸ்லிமாம்) நாடு துறந்து (மதீனாவுகு) வந்தால் அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையடையும் வரை அவளை யாரும் பெண் பேச அனுமதிக்கப்படவில்லை. அவ்வாறு அவள் (மாதவிடாய்க்குப் பின்) தூய்மையடைந்தால் மண முடித்துக் கொள்ள அவளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அத்தகைய பெண் (முஸ்லிம் ஒருவரை) மணந்து கொள்வதற்கு முன் அவளுடைய (முன்னாள்) கணவன் (முஸ்லிமாம்) நாடு துறந்து வந்தால் அவள் அவரிடமே كَانَ المُشْرِكُونَ عَلَى مَنْزِلَتَيْنِ مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالمُؤْمِنِينَ: كَانُوا مُشْرِكِي أَهْلِ حَرْبٍ، يُقَاتِلُهُمْ وَيُقَاتِلُونَهُ، وَمُشْرِكِي أَهْلِ عَهْدٍ، لاَ يُقَاتِلُهُمْ وَلاَ يُقَاتِلُونَهُ، وَكَانَ إِذَا هَاجَرَتِ امْرَأَةٌ مِنْ أَهْلِ الحَرْبِ لَمْ تُخْطَبْ حَتَّى تَحِيضَ وَتَطْهُرَ، فَإِذَا طَهُرَتْ حَلَّ لَهَا النِّكَاحُ، فَإِنْ هَاجَرَ زَوْجُهَا قَبْلَ أَنْ تَنْكِحَ رُدَّتْ إِلَيْهِ، وَإِنْ هَاجَرَ عَبْدٌ مِنْهُمْ أَوْ أَمَةٌ فَهُمَا حُرَّانِ، وَلَهُمَا مَا لِلْمُهَاجِرِينَ – ثُمَّ ذَكَرَ مِنْ أَهْلِ العَهْدِ مِثْلَ حَدِيثِ مُجَاهِدٍ – وَإِنْ هَاجَرَ عَبْدٌ أَوْ أَمَةٌ لِلْمُشْرِكِينَ أَهْلِ العَهْدِ لَمْ يُرَدُّوا، وَرُدَّتْ أَثْمَانُهُمْ
Bukhari-5285
பாடம் : 18 (அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை -அவர்கள் இறைநம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்துகொள்ளாதீர்கள்; இணைவைக்கும் (சுதந்திரமான) ஒரு பெண், உங்களைக் கவரக் கூடியவளாக இருந்தபோதிலும், அவளை விட இறைநம்பிக்கையுள்ள அடிமைப் பெண்ணே நிச்சயமாக மேலானவள் ஆவாள் எனும் (2:221ஆவது) இறைவசனம்.
5285. நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்
( ஒரு முஸ்லிம்) கிறிஸ்துவப் பெண்ணையோ அல்லது யூதப் பெண்ணையோ மணந்துகொள்வது தொடர்பாக இப்னு உமர்(ரலி) அவர்களிடம் வினவப்பட்டால், அவர்கள் ‘இறைநம்பிக்கையாளர்கள் இணைவைக்கும் பெண்களை மணமுடித்துக கொள்வதை அல்லாஹ் அனுமதிக்கவில்லை. அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவரான ஈசா(அலை) அவர்களைத் தன்னுடைய இறைவன் என்று ஒரு பெண் கூறுவதைவிட மிகப் பெரிய இணைவைப்பாக வேறொன்றையும் நான் அறியவில்லை’ என்பார்கள்.
Book : 68
إِنَّ اللَّهَ حَرَّمَ المُشْرِكَاتِ عَلَى المُؤْمِنِينَ، وَلاَ أَعْلَمُ مِنَ الإِشْرَاكِ شَيْئًا أَكْبَرَ مِنْ أَنْ تَقُولَ المَرْأَةُ: رَبُّهَا عِيسَى، وَهُوَ عَبْدٌ مِنْ عِبَادِ اللَّهِ
Bukhari-5284
பாடம் : 17
5284. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
நான் (அடிமைப் பெண்ணான) பரீராவை விலைக்கு வாங்க விரும்பினேன். பரீராவின் எசமான்கள் ‘வலா’ எனும் வாரிசுரிமை தங்களுக்கே இருக்கவேண்டும் என நிபந்தனையிட்டு, ‘இல்லையேல் விற்கமுடியாது என) மறுத்தனர். எனவே, இதைப் பற்றி நான் நபி(ஸல்) அவர்களிடம் கூறினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் (உன் விருப்பப்படியே) பரீராவை நீ வாங்கி விடுதலை செய்தவருக்கே உரியதாகும் என்று கூறினார்கள்.
(ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம், இறைச்சி கொண்டுவரப்பட்டது. அப்போது ‘இ(ந்த இறைச்சியான)து, பரீராவுக்கு தர்மமாக வழங்கப்பட்டதாகும்’ என்று சொல்லப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இது பரீராவுக்குத்தான் தர்மம்; நமக்கு (இது)அன்பளிப்பாகும்’ என்று கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பில் ‘பரீரா தம் கணவர் விஷயத்தில் விருப்ப உரிமை அளிக்கப்பட்டார்’ எனக் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.
Book : 68
أَنَّ عَائِشَةَ، أَرَادَتْ أَنْ تَشْتَرِيَ بَرِيرَةَ فَأَبَى مَوَالِيهَا إِلَّا أَنْ يَشْتَرِطُوا الوَلاَءَ، فَذَكَرَتْ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «اشْتَرِيهَا وَأَعْتِقِيهَا، فَإِنَّمَا الوَلاَءُ لِمَنْ أَعْتَقَ» وَأُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلَحْمٍ، فَقِيلَ: إِنَّ هَذَا مَا تُصُدِّقَ بِهِ عَلَى بَرِيرَةَ، فَقَالَ: «هُوَ لَهَا صَدَقَةٌ وَلَنَا هَدِيَّةٌ» حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، وَزَادَ: فَخُيِّرَتْ مِنْ زَوْجِهَا
Bukhari-5283
பாடம் : 16 பரீராவின் கணவருக்காக நபி (ஸல்) அவர்கள் பரிந்துரை செய்தது.
5283. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு முஃகீஸ் என்று (பெயர்) சொல்லப்படும். அவர் (பரீரா தம்மைப் பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தம் தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது அப்போது நபி(ஸல்) அவர்கள் அப்பாஸ்(ரலி) அவர்களிடம் ‘அப்பாஸ் அவர்களே! முஃகீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும், பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா?’ என்று கேட்டார்கள். (முஃகீஸிடமிருந்து பரீரா பிரிந்துவிட்ட போது) நபி(ஸல்) அவர்கள் ‘முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக்கூடாதா?’ என்று (பரீராவிடம்) கேட்டார்கள். அதற்கு பரீரா ‘இறைத்தூதர் அவர்களே! எனக்குத் தாங்கள் கட்டளையிடுகிறீர்களா? என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் ‘இல்லை’ நான் பரிந்துரைக்கவே செய்கிறேன்’ என்றார்கள. அப்போது பரீரா, ‘(அப்படியானால்) அவர் எனக்குத் أَنَّ زَوْجَ بَرِيرَةَ كَانَ عَبْدًا يُقَالُ لَهُ مُغِيثٌ، كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ يَطُوفُ خَلْفَهَا يَبْكِي وَدُمُوعُهُ تَسِيلُ عَلَى لِحْيَتِهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعبَّاسٍ: «يَا عَبَّاسُ، أَلاَ تَعْجَبُ مِنْ حُبِّ مُغِيثٍ بَرِيرَةَ، وَمِنْ بُغْضِ بَرِيرَةَ مُغِيثًا» فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ رَاجَعْتِهِ» قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ تَأْمُرُنِي؟ قَالَ: «إِنَّمَا أَنَا أَشْفَعُ» قَالَتْ: لاَ حَاجَةَ لِي فِيهِ
சமீப விமர்சனங்கள்