Author: Farook

Musnad-Ahmad-22016

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

22016.

…”(வணக்க வழிபாடுகள்) அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பதை உனக்கு நான் அறிவிக்கட்டுமா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான் அவர்களிடத்தில், ”அல்லாஹ்வின் நபியே! ஆம் (எனக்கு சொல்லுங்கள்)” என்று கூறினேன். அவர்கள் தன்னுடைய நாவைப் பிடித்து, ”இதை நீ பாதுகாத்துக் கொள்” என்று கூறினார்கள். ”அல்லாஹ்வின் தூதரே! நாம் பேசுகின்றவைகளுக்காகவா நாம் தண்டிக்கப்படுவோம்?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆச்சரியத்துடன் ”மக்களை முகம் குப்புற நரகில் தள்ளுவது அவர்களுடைய நாவுகள் அறுவடை செய்தவைகளாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி­)


كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَأَصْبَحْتُ يَوْمًا قَرِيبًا مِنْهُ وَنَحْنُ نَسِيرُ، فَقُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ، أَخْبِرْنِي بِعَمَلٍ يُدْخِلُنِي الْجَنَّةَ، وَيُبَاعِدُنِي مِنَ النَّارِ. قَالَ: «لَقَدْ سَأَلْتَ عَنْ عَظِيمٍ، وَإِنَّهُ لَيَسِيرٌ عَلَى مَنْ يَسَّرَهُ اللَّهُ عَلَيْهِ، تَعْبُدُ اللَّهَ وَلَا تُشْرِكُ بِهِ شَيْئًا، وَتُقِيمُ الصَّلَاةَ، وَتُؤْتِي الزَّكَاةَ، وَتَصُومُ رَمَضَانَ، وَتَحُجُّ الْبَيْتَ»

ثُمَّ قَالَ: ” أَلَا أَدُلُّكَ عَلَى أَبْوَابِ الْخَيْرِ؟: الصَّوْمُ جُنَّةٌ، وَالصَّدَقَةُ تُطْفِئُ الْخَطِيئَةَ، وَصَلَاةُ الرَّجُلِ فِي جَوْفِ اللَّيْلِ ” ثُمَّ قَرَأَ: {تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ} [السجدة: 16] ، حَتَّى بَلَغَ [ص:345]، {يَعْمَلُونَ} [السجدة: 17]

ثُمَّ قَالَ: «أَلَا أُخْبِرُكَ بِرَأْسِ الْأَمْرِ وَعَمُودِهِ وَذُرْوَةِ سَنَامِهِ؟» فَقُلْتُ: بَلَى يَا رَسُولَ اللَّهِ. قَالَ: «رَأْسُ الْأَمْرِ الْإِسْلَامُ وَعَمُودُهُ الصَّلَاةُ، وَذِرْوَةُ سَنَامِهِ الْجِهَادُ» ثُمَّ قَالَ: «أَلَا أُخْبِرُكَ بِمِلَاكِ ذَلِكَ كُلِّهِ؟» فَقُلْتُ لَهُ: بَلَى يَا نَبِيَّ اللَّهِ. فَأَخَذَ بِلِسَانِهِ، فَقَالَ: «كُفَّ عَلَيْكَ هَذَا» فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، وَإِنَّا لَمُؤَاخَذُونَ بِمَا نَتَكَلَّمُ بِهِ؟ فَقَالَ: ” ثَكِلَتْكَ أُمُّكَ يَا مُعَاذُ، وَهَلْ يَكُبُّ النَّاسَ فِي النَّارِ عَلَى وُجُوهِهِمْ، أَوْ قَالَ: عَلَى مَنَاخِرِهِمْ، إِلَّا حَصَائِدُ أَلْسِنَتِهِمْ؟ “


Tirmidhi-2027

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

2027.  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெட்கமும், குறைவான பேச்சும் ஈமானுடைய அம்சமாகும். கெட்ட வார்த்தையும், அதிகமான பேச்சும் நயவஞ்சகத்தின் அம்சமாகும்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி­)


«الحَيَاءُ وَالعِيُّ شُعْبَتَانِ مِنَ الإِيمَانِ، وَالبَذَاءُ وَالبَيَانُ شُعْبَتَانِ مِنَ النِّفَاقِ»


Musnad-Ahmad-18647

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

18647. ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! என்னை சொர்க்கத்தில் நுழையச் செய்யும் ஒரு அமலை எனக்கு அறிவியுங்கள்! என்று கேட்டார். அதற்கவர்கள், நீர் மிகச் சிறிய வார்த்தையைக் கூறினாலும் நிச்சயமாக மிகப் பெரிய செய்தியைக் கேட்டுவிட்டீர்!

ஜீவன்களை உரிமை விடு! அடிமையை உரிமை விடு! என்றார்கள். அதற்கவர், இவ்விரண்டும் ஒன்றில்லையா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இல்லை, ஜீவன்களை உரிமை விடுவதென்பது நீ தனிப்பட்ட ரீதியில் அடிமையை உரிமை விடுவதாகும். ஃபக்குர் ரகபா என்பது அடிமை விடுதலை பெற அதற்குரிய கிரயத்தை நீ கொடுப்பதாகும்.

மேலும் பால் கொடுக்கும் கால்நடைகளை பிறருக்குக் கொடு!

பிரிந்து வாழும் உறவினர்களுடன் இணைந்து வாழவேண்டும்.

இதனைச் செய்ய உமக்கு சக்தியில்லை என்றால் பசித்தவருக்கு உணவளி! தாகித்தவருக்கு தண்ணீர் புகட்டு!

நன்மையை ஏவு! தீமையைத் தடு! இதற்கும் நீர் சக்தி பெறவில்லை என்றால்

நன்மையைத் தவிர வேறு எதனையும் பேசாதவாறு உனது நாவை காத்துக் கொள்! என்றார்கள்.

அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி­)


جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، عَلِّمْنِي عَمَلًا يُدْخِلُنِي الْجَنَّةَ، فَقَالَ: «لَئِنْ كُنْتَ أَقْصَرْتَ الْخُطْبَةَ، لَقَدْ أَعْرَضْتَ الْمَسْأَلَةَ، أَعْتِقِ النَّسَمَةَ، وَفُكَّ الرَّقَبَةَ» . فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَوَلَيْسَتَا بِوَاحِدَةٍ؟ قَالَ: «لَا، إِنَّ عِتْقَ النَّسَمَةِ أَنْ تَفَرَّدَ بِعِتْقِهَا، وَفَكَّ الرَّقَبَةِ أَنْ تُعِينَ فِي عِتْقِهَا، وَالْمِنْحَةُ الْوَكُوفُ، وَالْفَيْءُ عَلَى ذِي الرَّحِمِ الظَّالِمِ، فَإِنْ لَمْ تُطِقْ ذَلِكَ، فَأَطْعِمِ الْجَائِعَ، وَاسْقِ الظَّمْآنَ، وَأْمُرْ بِالْمَعْرُوفِ، وَانْهَ عَنِ الْمُنْكَرِ، فَإِنْ لَمْ تُطِقْ ذَلِكَ، فَكُفَّ لِسَانَكَ إِلَّا مِنَ الْخَيْرِ»


Musnad-Ahmad-19431

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

19431. ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ”உங்களுக்குப் பிறகு (வேறு யாரிடமும் விளக்கம்) நான் கேட்காத அளவிற்கு இஸ்லாத்திலே ஒரு விஷயத்தை எனக்கு சொல்லுங்கள்” என்று கேட்டார்.

”அல்லாஹ்வை நம்புகிறேன் என்று கூறி (அதில்) நிலைத்து நில்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ”அல்லாஹ்வின் தூதரே! நான் எதைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தமது கையால் நாவை சுட்டிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர்: சுஃப்யான் பின் அப்துல்லாஹ் (ர­லி)


أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ، وَقَدْ، قَالَ هُشَيْمٌ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، مُرْنِي فِي الْإِسْلَامِ بِأَمْرٍ لَا أَسْأَلُ عَنْهُ أَحَدًا بَعْدَكَ. قَالَ: «قُلْ آمَنْتُ بِاللَّهِ، ثُمَّ اسْتَقِمْ» . قَالَ: قُلْتُ: فَمَا أَتَّقِي، فَأَوْمَأَ إِلَى لِسَانِهِ


Musnad-Ahmad-7932

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7932. நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ”அல்லாஹ்வின் தூதரே! உங்களை நான் கண்டால் எனது உள்ளம் மகிழ்ச்சியடைகிறது. எனது கண் குளிர்ச்சியடைகிறது. எனக்கு அனைத்து பொருட்களைப் பற்றியும் சொல்லுங்கள்” என்றேன். அதற்கு அவர்கள் ”அனைத்தும் நீரி­லிருந்து படைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள்.

”எந்த காரியத்தை நான் செய்தால் சொர்க்கத்திற்குச் செல்வேனோ அப்படிப்பட்ட ஒரு காரியத்தை எனக்கு கற்றுக் கொடுங்கள்” என்று கூறினேன். ”சலாத்தைப் பரப்பு. உணவளி . உறவுகளை இணைத்து வாழ். மக்கள் உறங்கும் போது இரவில் நின்று வணங்கு. சாந்தியுடன் சொர்க்கத்தில் நுழைவாய்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி­)


قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي إِذَا رَأَيْتُكَ طَابَتْ نَفْسِي وَقَرَّتْ عَيْنِي، فَأَنْبِئْنِي عَنْ كُلِّ شَيْءٍ. فَقَالَ: «كُلُّ شَيْءٍ خُلِقَ مِنْ مَاءٍ» قَالَ: قُلْتُ: أَنْبِئْنِي عَنْ أَمْرٍ إِذَا أَخَذْتُ بِهِ دَخَلْتُ الْجَنَّةَ. قَالَ: «أَفْشِ السَّلَامَ، وَأَطْعِمِ الطَّعَامَ، وَصِلِ الْأَرْحَامَ، وَقُمْ بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ، ثُمَّ ادْخُلِ الْجَنَّةَ بِسَلَامٍ»


Hakim-7257

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7257. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெற்றோருக்கு நன்மை செய்பவருக்கு நல்வாழ்த்துகள்! அவருடைய வாழ்நாளை அல்லாஹ் அதிகப்படுத்துவானாக!

அறிவிப்பவர் : முஆத் பின் அனஸ் (ரலி)


«مَنْ بَرَّ وَالِدَيْهِ طُوبَى لَهُ زَادَ اللَّهُ فِي عُمْرِهِ»


Abi-Yala-1494

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1494. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெற்றோருக்கு நன்மை செய்பவருக்கு நல்வாழ்த்துகள்! அவருடைய வாழ்நாளை அல்லாஹ் அதிகப்படுத்துவானாக!

அறிவிப்பவர்: முஆத் பின் அனஸ் (ரலி)


«مَنْ بَرَّ وَالِدَيْهِ، طُوبَى لَهُ، زَادَ اللَّهُ فِي عُمُرِهِ»


Almujam-Alkabir-447

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

447. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெற்றோருக்கு நன்மை செய்பவருக்கு நல்வாழ்த்துகள்! அவருடைய வாழ்நாளை அல்லாஹ் அதிகப்படுத்துவானாக!

அறிவிப்பவர் : முஆத் பின் அனஸ் (ரலி)


«مَنْ بَرَّ وَالِدَيْهِ طُوبَى لَهُ، زَادَ اللهُ فِي عُمُرِهِ»


Almujam-Alkabir-6128

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6128. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

பிரார்த்தனையைத் தவிர வேறெதுவும் விதியை மாற்றாது. (பிறருக்கு) நன்மை புரிவதைத் தவிர வேறெதுவும் ஆயுளை அதிகப்படுத்தாது.

அறிவிப்பவர்:  ஸல்மான் (ரலி)


«لَا يَرُدُّ الْقَضَاءَ إِلَّا الدُّعَاءُ، وَلَا يَزِيدُ فِي الْعُمُرِ إِلَّا الْبِرُّ»


Next Page » « Previous Page