Author: Farook

Ibn-Hibban-2814

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

நோன்புப் பெருநாளில், (பெருநாள் தொழுகைக்கு செல்லும் முன்) இரட்டைப்படை எண்ணிக்கையிலன்றி, ஒற்றைப்படை எண்ணிக்கையில் சில பேரீத்தம்பழங்களை உண்பது விரும்பத்தக்கது.

2814. உபைதுல்லாஹ் பின் அபூபக்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நோன்புப் பெருநாளில் மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு பேரீச்சம்பழங்களை உண்ணாமல் (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள் என்று (என்னுடைய பாட்டனார்) அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.


«مَا خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَوْمَ فِطْرٍ حَتَّى يَأْكُلَ تَمَرَاتٍ ثَلَاثًا، أَوْ خَمْسًا، أَوْ سَبْعًا»


Ibn-Hibban-2813

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2813.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «يُفْطِرُ عَلَى تَمَرَاتٍ، ثُمَّ يَغْدُو»


Ibn-Khuzaymah-2066

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2066.


«مَنْ وَجَدَ تَمْرًا فَلْيُفْطِرْ عَلَيْهِ , وَمَنْ لَا فَلْيُفْطِرْ عَلَى مَاءٍ , فَإِنَّهُ طُهُورٌ»

قَالَ أَبُو بَكْرٍ: هَذَا لَمْ يَرْوِهِ عَنْ سَعِيدِ بْنِ عَامِرٍ , عَنْ شُعْبَةَ إِلَّا هَذَا


Ibn-Khuzaymah-1429

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

நோன்புப் பெருநாளில், (பெருநாள் தொழுகைக்கு செல்லும் முன்) ஒற்றைப்படை எண்ணிக்கையில் சில பேரீத்தம்பழங்களை உண்பது விரும்பத்தக்கது.

1429. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நோன்புப் பெருநாளில் சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள். மேலும் அவைகளை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள்.

அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் பின் அபூபக்ர் (ரஹ்)


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَا يَخْرُجُ يَوْمُ الْفِطْرَ حَتَّى يَأْكُلُ تَمَرَاتٍ، وَيَأْكُلُهُنَّ وِتْرًا»


Ibn-Khuzaymah-1428

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1428.

சில பேரித்தம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி (ஸல்) அவர்கள் புறப்படமாட்டார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُفْطِرُ يَوْمَ الْفِطْرِ عَلَى تَمَرَاتٍ، ثُمَّ يَغْدُو»


Musnad-Ahmad-13426

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

13426. உபைதுல்லாஹ் பின் அபூபக்ர் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நோன்புப் பெருநாளில் சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள் என்று (என்னுடைய பாட்டனார்) அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

மேலும் அனஸ் (ரலி) அவர்கள், நோன்புப் பெருநாள் தொழுகைக்கு செல்லும் முன் மூன்று பேரீத்தம்பழங்களை உண்பார்கள். இன்னும் அதிகமாக உண்ணும் நாட்டமிருந்தால் ஏழு பேரீத்தம்பழங்களை உண்பார்கள். இன்னும் அதிகமாக உண்ணும் நாட்டமிருந்தால் ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள்.


«مَا خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي يَوْمِ فِطْرٍ قَطُّ، حَتَّى يَأْكُلَ تَمَرَاتٍ»

قَالَ: «وَكَانَ أَنَسٌ يَأْكُلُ قَبْلَ أَنْ يَخْرُجَ ثَلَاثًا، فَإِذَا أَرَادَ أَنْ يَزْدَادَ أَكَلَ خَمْسًا، فَإِذَا أَرَادَ أَنْ يَزْدَادَ أَكَلَ وِتْرًا»


Musnad-Ahmad-12676

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

12676.

சில பேரித்தம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி (ஸல்) அவர்கள் புறப்படமாட்டார்கள்…

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُفْطِرُ عَلَى رُطَبَاتٍ قَبْلَ أَنْ يُصَلِّيَ، فَإِنْ لَمْ يَكُنْ رُطَبَاتٌ، فَتَمَرَاتٌ، فَإِنْ لَمْ يَكُنْ تَمَرَاتٌ حَسَا حَسَوَاتٍ مِنْ مَاءٍ»


Ibn-Majah-1754

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

நோன்புப் பெருநாளில், பெருநாள் தொழுகைக்கு செல்லும் முன் உண்பது.

1754. நபி (ஸல்) அவர்கள், நோன்புப் பெருநாளில் சில பேரித்தம் பழங்களை உண்ணாமல் (பெருநாள் தொழுகைக்கு) புறப்படமாட்டார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَا يَخْرُجُ يَوْمَ الْفِطْرِ حَتَّى يَطْعَمَ تَمَرَاتٍ»


Tirmidhi-543

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

543. சில பேரித்தம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி (ஸல்) அவர்கள் புறப்படமாட்டார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُفْطِرُ عَلَى تَمَرَاتٍ يَوْمَ الفِطْرِ قَبْلَ أَنْ يَخْرُجَ إِلَى المُصَلَّى»


Next Page » « Previous Page