Author: Farook

Musannaf-Abdur-Razzaq-8125

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8125. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பிரார்த்தனையில் மிகச் சிறந்தது, அரஃபா நாளின் போது செய்யும் பிரார்த்தனையாகும்.

நானும், எனக்கு முன் இருந்த நபிமார்களும் கூறியவற்றில் சிறந்தது, ”லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷாரிகலஹு” என்பதாகும்.

அறிவிப்பவர்: தல்ஹா பின் உபைதுல்லா பின் கரீஸ் (ரஹ்)


أَفْضَلُ الدُّعَاءِ دُعَاءُ يَوْمِ عَرَفَةَ، وَأَفْضَلُ مَا قُلْتُهُ أَنَا، وَالنَّبِيُّونَ مِنْ قَبْلِي: قَوْلُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ


Muwatta-Malik-1270

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1270. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பிரார்த்தனையில் மிகச் சிறந்தது, அரஃபா நாளின் போது செய்யும் பிரார்த்தனையாகும்.

நானும், எனக்கு முன் இருந்த நபிமார்களும் கூறியவற்றில் சிறந்தது, ”லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷாரிகலஹு” என்பதாகும்.

அறிவிப்பவர்: தல்ஹா பின் உபைதுல்லா பின் கரீஸ் (ரஹ்)


أَفْضَلُ الدُّعَاءِ دُعَاءُ يَوْمِ عَرَفَةَ، وَأَفْضَلُ مَا قُلْتُ أَنَا وَالنَّبِيُّونَ مِنْ قَبْلِي: لاَ إِلَهَ إِلاَّ اللهُ، وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ.


Musnad-Ahmad-6961

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6961. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரஃபாவில் செய்த பிரார்த்தனைகளில் “லாஇலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து, பி யதிஹில் கைர், வஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர்” என்பதே மிக அதிகமாக இருந்தது.

(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. நன்மைகள் அனைத்தும் அவன் கைவசத்தில் உள்ளது. அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன்)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


كَانَ أَكْثَرُ دُعَاءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَرَفَةَ: «لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، بِيَدِهِ الْخَيْرُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ»


Tirmidhi-3585

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3585. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பிரார்த்தனைகளிலேயே மிகவும் சிறந்தது அரஃபா நாளில் செய்யும் பிரார்த்தனை ஆகும்.

நானும், எனக்கு முன் இருந்த நபிமார்களும் கூறியவற்றில் சிறந்தது “லாஇலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர்” என்ற திக்ராகும்.

(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன்)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது அரிதான செய்தியாகும். இதில் வரும் ஹம்மாத் பின் அபூஹுமைத் என்பவரின் (பிரபல்யமான) பெயர், முஹம்மது பின் அபூஹுமைத் என்பதாகும். இவரின் புனைப்பெயர் அபூஇப்ராஹீம் அல்அன்ஸாரீ, அல்மதனீ என்பதாகும். இவர் ஹதீஸ்கலை அறிஞர்களின் பார்வையில் பலமானவர் அல்ல.


خَيْرُ الدُّعَاءِ دُعَاءُ يَوْمِ عَرَفَةَ، وَخَيْرُ مَا قُلْتُ أَنَا وَالنَّبِيُّونَ مِنْ قَبْلِي: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ


Musnad-Ahmad-23042

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

23042. புரைதா பின் அல்ஹுஸைப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் அன்று உண்ணாமல் (தொழுகைக்குச்) செல்லமாட்டார்கள்.

நஹ்ருடைய (துல்ஹஜ் 10 ம்) நாள் (குர்பானிப் பிராணியை) அறுக்கும் வரை உணவு உண்ணமாட்டார்கள்.


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا كَانَ يَوْمُ الْفِطْرِ لَمْ يَخْرُجْ حَتَّى يَأْكُلَ، وَإِذَا كَانَ يَوْمُ النَّحْرِ لَمْ يَأْكُلْ حَتَّى يَذْبَحَ»


Musnad-Ahmad-22984

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

22984.


«لَا يَغْدُو يَوْمَ الْفِطْرِ حَتَّى يَأْكُلَ، وَلَا يَأْكُلُ يَوْمَ الْأَضْحَى حَتَّى يَرْجِعَ فَيَأْكُلَ مِنْ أُضْحِيَّتِهِ»


Musnad-Ahmad-22983

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

22983. புரைதா பின் அல்ஹுஸைப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் அன்று உண்ணாமல் (தொழுகைக்குச்) செல்லமாட்டார்கள்.

நஹ்ருடைய (துல்ஹஜ் 10 ம்) நாள் (பெருநாள் தொழுதுவிட்டு) திரும்பும்வரை உணவு உண்ணமாட்டார்கள்.


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَوْمَ الْفِطْرِ لَا يَخْرُجُ حَتَّى يَطْعَمَ، وَيَوْمَ النَّحْرِ لَا يَطْعَمُ حَتَّى يَرْجِعَ»


Tirmidhi-542

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

நோன்புப் பெருநாளன்று தொழுகைக்குப் புறப்படுவதற்குமுன் உணவு உண்பது தொடர்பாக வந்துள்ளவை.

542. புரைதா பின் அல்ஹுஸைப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் அன்று உண்ணாமல் (தொழுகைக்குச்) செல்லமாட்டார்கள்.

ஹஜ்ஜுப் பெருநாள் அன்று தொழாமல் உணவு உண்ணமாட்டார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான ஹதீஸ், அலீ (ரலி), அனஸ் (ரலி) ஆகியோர் வாயிலாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புரைதா பின் ஹுஸைப் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட
ஹதீஸ், ‘கரீப்’ எனும் வகையைச் சேர்ந்ததாகும்.

இந்த ஹதீஸின் (மூன்றாவது அறிவிப்பாளரான) ஸவாப் பின் உத்பா (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸைத் தவிர வேறு ஹதீஸ் எதையும் அறிவித்திருப்பதாக நான் அறியவில்லை என புகாரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நோன்புப் பெருநாளன்று எதையேனும் உட்கொண்ட பிறகே தொழுகைக்குச் செல்ல வேண்டும் என்று அறிஞர்களில் ஒரு குழுவினர் விரும்புகின்றனர். அதே நேரத்தில் (நோன்புப் பெருநாளன்று) பேரீச்சம் பழத்தை உண்பதும், ஹஜ்ஜுப் பெருநாளன்று தொழுதுவிட்டு திரும்பி வரும்வரை எதையும் உண்ணாமலிருப்பதும் விரும்பத்தக்கவை ஆகும் என்றும் கருதுகின்றனர்.


«كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَخْرُجُ يَوْمَ الفِطْرِ حَتَّى يَطْعَمَ،

وَلَا يَطْعَمُ يَوْمَ الأَضْحَى حَتَّى يُصَلِّيَ»


Hakim-1090

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1090. உபைதுல்லாஹ் பின் அபூபக்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நோன்புப் பெருநாளில் மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு அல்லது இதைவிட குறைவான அல்லது அதிகமான பேரீச்சம்பழங்களை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்ணாமல் (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள் என்று (என்னுடைய பாட்டனார்) அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.


«مَا خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ فِطْرٍ حَتَّى يَأْكُلَ تَمَرَاتٍ ثَلَاثًا، أَوْ خَمْسًا، أَوْ سَبْعًا، أَوْ أَقَلَّ مِنْ ذَلِكَ، أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ وِتْرًا»


Hakim-1089

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1089.


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُفْطِرُ يَوْمَ الْفِطْرِ عَلَى تَمَرَاتٍ قَبْلَ أَنْ يَغْدُوَ»


Next Page » « Previous Page