Author: Farook

Musnad-Ahmad-17942

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

17942. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்களில் எவரும் வேண்டுமென்றோ அல்லது விளையாட்டாகவோ தனது நண்பரின் பொருளை எடுத்துக்கொள்ள வேண்டாம். தனது நண்பரின் கைத்தடியை கண்டாலும் அதை நண்பரிடத்தில் ஒப்படைத்துவிடட்டும்.

அறிவிப்பவர் : யசீத் பின் சயீத் (ரலி)


«لَا يَأْخُذَنَّ أَحَدُكُمْ مَتَاعَ [ص:462] صَاحِبِهِ لَعِبًا جَادًّا، وَإِذَا أَخَذَ أَحَدُكُمْ عَصَا أَخِيهِ فَلْيَرْدُدْهَا عَلَيْهِ»


Musnad-Ahmad-17941

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

17941. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்களில் எவரும் வேண்டுமென்றோ அல்லது விளையாட்டாகவோ தனது நண்பரின் பொருளை எடுத்துக்கொள்ள வேண்டாம். தனது நண்பரின் கைத்தடியை கண்டாலும் அதை நண்பரிடத்தில் ஒப்படைத்துவிடட்டும்.

அறிவிப்பவர் : யசீத் பின் சயீத் (ரலி)


«لَا يَأْخُذَنَّ أَحَدُكُمْ مَتَاعَ صَاحِبِهِ لَعِبًا جَادًّا، وَإِذَا أَخَذَ أَحَدُكُمْ عَصَا أَخِيهِ، فَلْيَرْدُدْهَا عَلَيْهِ»


Musnad-Ahmad-17940

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

17940. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்களில் எவரும் வேண்டுமென்றோ அல்லது விளையாட்டாகவோ தனது நண்பரின் பொருளை எடுத்துக்கொள்ள வேண்டாம். தனது நண்பரின் கைத்தடியை கண்டாலும் அதை நண்பரிடத்தில் ஒப்படைத்துவிடட்டும்.

அறிவிப்பவர் : யசீத் பின் சயீத் (ரலி)


«لَا يَأْخُذَنَّ أَحَدُكُمْ مَتَاعَ صَاحِبِهِ جَادًّا وَلَا لَاعِبًا، وَإِذَا وَجَدَ أَحَدُكُمْ عَصَا صَاحِبِهِ فَلْيَرْدُدْهَا عَلَيْهِ»


Tirmidhi-2315

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2315. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

எவன் (பிற) கூட்டத்தினரை சிரிக்க வைப்பதற்காக பொய்யான செய்தியைக் கூறுகிறானோ அவனுக்கு கேடு தான். அவனுக்கு கேடு தான். அவனுக்கு கேடு தான்.

அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா (ரலி)


«وَيْلٌ لِلَّذِي يُحَدِّثُ بِالحَدِيثِ لِيُضْحِكَ بِهِ القَوْمَ فَيَكْذِبُ، وَيْلٌ لَهُ وَيْلٌ لَهُ»


Ibn-Majah-4193

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4193. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அதிகமாக சிரிக்காதீர்கள் ஏனென்றால் அதிகமாக சிரிப்பது உள்ளத்தை மரணிக்கச் செய்துவிடும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«لَا تُكْثِرُوا الضَّحِكَ، فَإِنَّ كَثْرَةَ الضَّحِكِ تُمِيتُ الْقَلْبَ»


Musnad-Ahmad-12957

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

12957. நபி (ஸல்) அவர்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்களை சந்திப்பவர்களாக இருந்தார்கள். உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்கு அபூதல்ஹா (ரலி) அவர்களின் மூலமாக ஒரு மகன் இருந்தார். அவர் அபூ உமைர் என்று அழைக்கப்பட்டார். நபி (ஸல்) அவர்கள் அவரிடத்தில் தமாஷ் செய்வார்கள். (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் அபூ உமைரிடம் வந்த போது அபூ உமைர் கவலையுடன் இருப்பதைப் பார்த்து அபூ உமைரை கவலையுடன் பார்க்கிறேனே என்ன ஆயிற்று? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் அவர் விளையாடிக்கொண்டிருந்த அவரது குருவி இறந்துவிட்டது என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் (அபூ உமைரிடம்) அபூ உமைரே உனது சின்னக்குருவி என்ன ஆயிற்று? என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْخُلُ عَلَى أُمِّ سُلَيْمٍ وَلَهَا ابْنٌ مِنْ أَبِي طَلْحَةَ يُكْنَى أَبَا عُمَيْرٍ، وَكَانَ يُمَازِحُهُ، فَدَخَلَ عَلَيْهِ فَرَآهُ حَزِينًا، فَقَالَ: «مَالِي أَرَى أَبَا عُمَيْرٍ حَزِينًا؟» فَقَالُوا: مَاتَ نُغَرُهُ الَّذِي كَانَ يَلْعَبُ بِهِ، قَالَ: فَجَعَلَ يَقُولُ: «أَبَا عُمَيْرٍ، مَا فَعَلَ النُّغَيْرُ»


Musnad-Ahmad-14071

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

14071.

நபி (ஸல்) அவர்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்களை சந்திப்பவர்களாக இருந்தார்கள். உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்கு அபூதல்ஹா (ரலி) அவர்களின் மூலமாக ஒரு மகன் இருந்தார். அவர் அபூ உமைர் என்று அழைக்கப்பட்டார். நபி (ஸல்) அவர்கள் அவரிடத்தில் தமாஷ் செய்வார்கள். (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் அபூ உமைரிடம் வந்த போது அபூ உமைர் கவலையுடன் இருப்பதைப் பார்த்து அபூ உமைரை கவலையுடன் பார்க்கிறேனே என்ன ஆயிற்று? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் அவர் விளையாடிக்கொண்டிருந்த அவரது குருவி இறந்துவிட்டது என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் (அபூ உமைரிடம்) அபூ உமைரே உனது சின்னக்குருவி என்ன ஆயிற்று? என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْخُلُ عَلَيْنَا، وَكَانَ لِي أَخٌ صَغِيرٌ، وَكَانَ لَهُ نَغْرٌ يَلْعَبُ بِهِ، فَمَاتَ، فَدَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ فَرَآهُ حَزِينًا، فَقَالَ: «مَا شَأْنُ أَبِي عُمَيْرٍ حَزِينًا؟» ، فَقَالُوا: مَاتَ نُغَرُهُ الَّذِي كَانَ يَلْعَبُ بِهِ يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ: «يَا أَبَا عُمَيْرٍ، مَا فَعَلَ النُّغَيْرُ؟ أَبَا عُمَيْرٍ، مَا فَعَلَ النُّغَيْرُ؟»


Musnad-Ahmad-7020

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

7020. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், அல்லாஹ்வின் தூதரே! உங்களிடமிருந்து பலசெய்திகளை நான் கேட்கிறேன். அவைகளை நான் எழுதிக்கொள்ளவா? என்று கேட்டேன். அதற்கவர்கள், “ஆம்” என்று கூறி அதற்கு அனுமதியளித்தார்கள். கோபமாக கூறியதையும், சந்தோசமாக கூறியதையும் கூட எழுதிக்கொள்ளவா? என்று கேட்டேன். அதற்கவர்கள், “இந்த இரண்டிலும் உண்மையைத் தவிர வேறெதையும் நான் கூறமாட்டேன்!” என்று கூறினார்கள்.


قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أَسْمَعُ مِنْكَ أَشْيَاءَ، أَفَأَكْتُبُهَا؟ قَالَ: «نَعَمْ» ، قُلْتُ: فِي الْغَضَبِ وَالرِّضَا؟ قَالَ: «نَعَمْ، فَإِنِّي لَا أَقُولُ فِيهِمَا إِلَّا حَقًّا»


Next Page » « Previous Page