Author: Farook

Ibn-Khuzaymah-1191

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1191.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

லுஹர் தொழுகைக்கு முன்பும், பின்பும் நான்கு ரக்அத்களை (வழமையாக) தொழுதுவருபவரை, அல்லாஹ்  நரகத்திற்கு தடைசெய்துவிடுகிறான்.

அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலி)

«مَنْ حَافَظَ عَلَى أَرْبَعِ رَكَعَاتٍ قَبْلَ صَلَاةِ الْهَجِيرِ، وَأَرْبَعًا بَعْدَهَا حُرِّمَ عَلَى جَهَنَّمَ»

Ibn-Khuzaymah-1190

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

1190. ஸுலைமான் பின் மூஸா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

முஹம்மது பின் அபூஸுஃப்யான் (ரஹ்) அவர்களுக்கு மரணம் நெருங்கியபோது அவருக்கு அது கடுமையான மனவருத்தத்தை ஏற்படுத்தியது.

அப்போது அவர், “லுஹர் தொழுகைக்கு முன்பும், பின்பும் நான்கு ரக்அத்களை (வழமையாக) தொழுதுவருபவரின் உடலை, அல்லாஹ்  நரகத்திற்கு தடைசெய்து விடுகிறான்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக எனது சகோதரியும்; அபூஸுஃப்யான் அவர்களின் மகளுமான உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என்று கூறினார்.

 لَمَّا نَزَلَ بِهِ الْمَوْتُ أَصَابَتْهُ شِدَّةٌ قَالَ: أَخْبَرْتِنِي أُخْتِي أُمُّ حَبِيبَةَ بِنْتُ أَبِي سُفْيَانَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ حَافَظَ عَلَى أَرْبَعِ رَكَعَاتٍ» – وَقَالَ ابْنُ مَعْمَرٍ – «مَنْ صَلَّى أَرْبَعَ رَكَعَاتٍ، قَبْلَ الظُّهْرِ وَأَرْبَعًا بَعْدَهَا حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ»

Nasaayi-1817

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

1817. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

லுஹர் தொழுகைக்கு முன்பும், பின்பும் நான்கு ரக்அத்களை (வழமையாக) தொழுது வருபவரை, நரகம் தீண்டாது.

அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலி)

அபூஅப்துர்ரஹ்மான்-நஸாயீ இமாம் கூறுகிறார்:

இந்த அறிவிப்பாளர்தொடர் தவறாகும். ஸயீத் பின் அப்துல்அஸீஸ் அவர்களிடமிருந்து மர்வான் அறிவிக்கும் அறிவிப்பாளர் தொடரே உண்மையானதாகும்.

(பார்க்க: நஸாயீ-1814 , 1815)

«مَنْ صَلَّى أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ وَأَرْبَعًا بَعْدَهَا لَمْ تَمَسَّهُ النَّارُ»،

Nasaayi-1816

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

1816. ஸுலைமான் பின் மூஸா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

முஹம்மது பின் அபூஸுஃப்யான் (ரஹ்) அவர்களுக்கு மரணம் நெருங்கியபோது அவருக்கு அது கடுமையான மனவருத்தத்தை ஏற்படுத்தியது.

அப்போது அவர், “லுஹர் தொழுகைக்கு முன்பும், பின்பும் நான்கு ரக்அத்களை (வழமையாக) தொழுதுவருபவரின் உடலை, அல்லாஹ்  நரகத்திற்கு தடைசெய்து விடுகிறான்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக எனது சகோதரியும்; அபூஸுஃப்யான் அவர்களின் மகளுமான உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என்று கூறினார்.

لَمَّا نَزَلَ بِهِ الْمَوْتُ أَخَذَهُ أَمْرٌ شَدِيدٌ، فَقَالَ: حَدَّثَتْنِي أُخْتِي أُمُّ حَبِيبَةَ بِنْتُ أَبِي سُفْيَانَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ حَافَظَ عَلَى أَرْبَعِ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ وَأَرْبَعٍ بَعْدَهَا حَرَّمَهُ اللَّهُ تَعَالَى عَلَى النَّارِ»

Nasaayi-1815

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1815.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

லுஹர் தொழுகைக்கு முன்பும், பின்பும் நான்கு ரக்அத்களை (வழமையாக) தொழுதுவருபவரை, அல்லாஹ்  நரகத்திற்கு தடைசெய்துவிடுகிறான்.

அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலி)

«مَنْ رَكَعَ أَرْبَعَ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ وَأَرْبَعًا بَعْدَهَا حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ»

Nasaayi-1814

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1814.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

லுஹர் தொழுகைக்கு முன்பும், பின்பும் நான்கு ரக்அத்களை (வழமையாக) தொழுதுவருபவரை, அல்லாஹ்  நரகத்திற்கு தடைசெய்துவிடுகிறான்.

அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலி)

«مَنْ صَلَّى أَرْبَعَ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ وَأَرْبَعًا بَعْدَهَا حَرَّمَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَى النَّارِ»

Nasaayi-1813

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

1813. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

லுஹ்ர் தொழுகைக்குப் பின் நான்கு ரக்அத்களை பேணி (தொடர்ந்து) தொழுது வரும் எந்த ஒரு இறைநம்பிக்கையுள்ள அடியாரின் முகத்தையும் உயர்ந்தோனும், மகத்துவமிக்கவனுமான அல்லாஹ் நாடினால், எப்போதும் நரகம் தீண்டாது.

«مَا مِنْ عَبْدٍ مُؤْمِنٍ يُصَلِّي أَرْبَعَ رَكَعَاتٍ بَعْدَ الظُّهْرِ فَتَمَسُّ وَجْهَهُ النَّارُ أَبَدًا إِنْ شَاءَ اللَّهُ عَزَّ وَجَلَّ»

Nasaayi-1812

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

1812. ஹஸ்ஸான் பின் அத்திய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அன்பஸா பின் அபூஸுஃப்யான் (ரஹ்) அவர்களுக்கு மரணம் நெருங்கியபோது மிகவும் பதட்டமாக காணப்பட்டார். இந்த பதட்டம் ஏன்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டபோது,

“லுஹர் தொழுகைக்கு முன்பும், பின்பும் நான்கு ரக்அத்களை (வழமையாக) தொழுதுவருபவரின் உடலை, அல்லாஹ்  நரகத்திற்கு தடைசெய்துவிடுகிறான்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக (எனது சகோதரியும்;) நபி (ஸல்) அவர்களின் மனைவி(யுமான) உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறியதை நான் செவியேற்றதிலிருந்து அவைகளை நான் விடவில்லை. (தற்போது விடவேண்டியது ஏற்பட்டுள்ளதே என்பதால் பதட்டமாக உள்ளேன்) என்று கூறினார்.

لَمَّا نُزِلَ بِعَنْبَسَةَ جَعَلَ يَتَضَوَّرُ، فَقِيلَ لَهُ، فَقَالَ: أَمَا إِنِّي سَمِعْتُ أُمَّ حَبِيبَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تُحَدِّثُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «مَنْ رَكَعَ أَرْبَعَ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ وَأَرْبَعًا بَعْدَهَا حَرَّمَ اللَّهُ عَزَّ وَجَلَّ لَحْمَهُ عَلَى النَّارِ»، فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ

Tirmidhi-428

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

428. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் லுஹ்ர் தொழுகைக்கு முன் நான்கு ரக்அத்களும், லுஹ்ர் தொழுகைக்குப் பின் நான்கு ரக்அத்களும் பேணி (தொடர்ந்து) தொழுது வருகிறாரோ அவரை நரகம் செல்ல விடாமல் அல்லாஹ் தடுப்பான்.

அறிவிப்பவர்: (நபி-ஸல்-அவர்களின் துணைவியார்) உம்மு ஹபீபா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இதன் அறிவிப்பாளர்தொடர், “ஹஸன் ஸஹீஹ் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

(இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் மூன்றாவது அறிவிப்பாளராக இடம்பெற்றுள்ள) காஸிம் பின் அப்துர் ரஹ்மான் (ரஹ்) அவர்களின் குறிப்புப் பெயர் அபூஅப்திர் ரஹ்மான் என்பதாகும். இவர், அப்துர் ரஹ்மான் பின் காலித் பின் யஸீத் பின் முஆவியா அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையாவார்.

காஸிம் (ரஹ்) அவர்கள், ஷாம் (சிரியா) நாட்டைச் சேர்ந்த நம்பத்தகுந்த பலமான அறிவிப்பாளர் ஆவார். அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி) அவர்களின் மாணவரும் ஆவார்.

«مَنْ حَافَظَ عَلَى أَرْبَعِ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ وَأَرْبَعٍ بَعْدَهَا حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ»

Tirmidhi-427

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

427. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

லுஹர் தொழுகைக்கு முன்பும், பின்பும் நான்கு ரக்அத்களை (வழமையாக) தொழுது வருபவரை, அல்லாஹ் நரகத்திற்கு தடைசெய்து விடுகிறான்.

அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலி)

«مَنْ صَلَّى قَبْلَ الظُّهْرِ أَرْبَعًا وَبَعْدَهَا أَرْبَعًا حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ»

Next Page » « Previous Page