Author: Farook

Ibn-Majah-1160

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

1160. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

லுஹர் தொழுகைக்கு முன்பும், பின்பும் நான்கு ரக்அத்களை (வழமையாக) தொழுது வருபவரை, அல்லாஹ் நரகத்திற்கு தடைசெய்து விடுகிறான்.

அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலி)


«مَنْ صَلَّى قَبْلَ الظُّهْرِ أَرْبَعًا، وَبَعْدَهَا أَرْبَعًا، حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ»


Abu-Dawood-1269

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்:

லுஹர் தொழுகைக்கு முன்பும், பின்பும் நான்கு ரக்அத்கள் தொழுதல்.

1269. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் லுஹர் தொழுகைக்கு முன்பும், பின்பும் நான்கு ரக்அத்களை வழமையாக தொழுதுவருவாரோ அவர் நரகத்திற்கு தடைசெய்யப்பட்டு விடுவார்.

அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலி)

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

(நுஃமான் பின் முன்திர் அவர்களைப் போன்றே) அலாஉ பின் ஹாரிஸ், ஸுலைமான் பின் மூஸா ஆகியோரும் மக்ஹூல் வழியாக இதே அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.


«مَنْ حَافَظَ عَلَى أَرْبَعِ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ، وَأَرْبَعٍ بَعْدَهَا، حَرُمَ عَلَى النَّارِ»


Abi-Yala-6612

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6612. நபி (ஸல்) அவர்கள் (கீழே விழும் நிலையிலுள்ள) ஒரு சாய்ந்த சுவரைக் கடந்து சென்றபோது விரைந்து சென்றார்கள். மேலும், “திடீரென இறப்பதை நான் வெறுக்கிறேன் என்று (அதற்கான காரணத்தை) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِحَائِطٍ مَائِلٍ فَأَسْرَعَ وَقَالَ: «إِنِّي أَكْرَهُ مَوْتَ الْفَوَاتِ»


Musnad-Ahmad-8666

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8666. நபி (ஸல்) அவர்கள் (கீழே விழும் நிலையிலுள்ள) ஒரு சாய்ந்த சுவரைக் கடந்து சென்றபோது விரைந்துச் சென்றார்கள். இது பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டபோது, “திடீரென இறப்பதை நான் வெறுக்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் (பதில்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَرَّ بِجِدَارٍ أَوْ حَائِطٍ مَائِلٍ، فَأَسْرَعَ الْمَشْيَ، فَقِيلَ لَهُ: فَقَالَ: «إِنِّي أَكْرَهُ مَوْتَ الْفَوَاتِ»


Almujam-Alkabir-10417

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10417. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் இறப்பின் நெருக்கத்தில் இருப்போருக்கு “லா இலாஹ இல்லல்லாஹ்” (“அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை” எனும் கலிமா)வை நினைவுபடுத்துங்கள்.

இறைநம்பிக்கையாளரின் உயிர் வியர்வை வர (இலேசான சிரமத்துடன்) வெளியேறும். இறைமறுப்பாளரின் உயிர், கழுதையின் உயிர் வெளியேறுவதைப் போன்று தாடை வழியாக வெளியேறும்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)


«لَقِّنُوا مَوْتَاكُمْ لَا إِلَهَ إِلَّا اللهُ؛ فَإِنَّ نَفْسَ الْمُؤْمِنِ تَخْرُجُ رَشْحًا، وَنَفَسَ الْكَافِرِ تَخْرُجُ مِنْ شِدْقِهِ، كَمَا تَخْرُجُ نَفْسُ الْحِمَارِ»


Almujam-Alkabir-10049

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

10049. இறைநம்பிக்கையாளரின் உயிர் வியர்வை வர (இலேசான சிரமத்துடன்) வெளியேறும். கழுதை இறப்பது போன்று இறப்பதை நான் விரும்பமாட்டேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்களிடம், “கழுதை இறப்பது போன்று என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது…

அதற்கு நபி (ஸல்) அவர்கள், இறைமறுப்பாளரின் உயிர், கழுதையின் உயிர் வெளியேறுவதைப் போன்று தாடை வழியாக வெளியேறும் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)


«إِنَّ نَفْسَ الْمُؤْمِنِ يَخْرُجُ رَشْحًا، وَلَا أُحِبُّ مَوْتًا كَمَوْتِ الْحِمَارِ» ، قِيلَ: وَمَا مَوْتُ الْحِمَارِ؟ قَالَ: «رُوحُ الْكَافِرِ يَخْرُجُ مِنْ أَشْدَاقِهِ»


Almujam-Alkabir-10015

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

10015. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையாளரின் உயிர், வியர்வை வர (இலேசான சிரமத்துடன்) வெளியேறும். இறைமறுப்பாளரின் உயிர், கழுதையின் உயிர் வெளியேறுவதைப் போன்று (இலேசாக) வெளியேறும்.

இறைநம்பிக்கையாளர் செய்த சில தவறுகளை மன்னிப்பதற்காக மரணத்தருவாயில் உயிர் பிரிவது அவருக்கு கடினமாக்கப்படும். இறைமறுப்பாளர் செய்த சில நன்மைகளுக்கு (கூலியாக) மரணத்தருவாயில் உயிர் பிரிவது அவருக்கு இலேசாக்கப்படும்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)


«إِنَّ نَفْسَ الْمُؤْمِنِ تَخْرُجُ رَشْحًا، وَإِنَّ نَفْسَ الْكَافِرِ تَسِيلُ كَمَا تَخْرُجُ نَفْسُ الْحِمَارِ، وَإِنَّ الْمُؤْمِنَ لَيَعْمَلُ الْخَطِيئَةَ فَيُشَدَّدُ بِهَا عَلَيْهِ عِنْدَ الْمَوْتِ لِيُكَفَّرَ بِهَا، وَإِنَّ الْكَافِرَ لَيَعْمَلُ الْحَسَنَةَ فَيُسَهَّلُ عَلَيْهِ عِنْدَ الْمَوْتِ لِيُجْزَى بِهَا»


Almujam-Alkabir-8866

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8866. “இறைநம்பிக்கையாளரின் உயிர், நெற்றியில் வியர்வை வர (இலேசான சிரமத்துடன்) வெளியேறும். இறைமறுப்பாளரின் உயிர், கழுதையின் உயிர் வெளியேறுவதைப் போன்று தாடை வழியாக வெளியேறும் என்று அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூவாயில் (ரஹ்)


«إِنَّ الْمُؤْمِنَ يَخْرُجُ نَفْسُهُ رَشْحًا، وَإِنَّ الْكَافِرَ يَخْرُجُ نَفْسُهُ فِي شِدْقِهِ كَمَا يَخْرُجُ نَفَسُ الْحِمَارِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-12012

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

12012. இப்ராஹீம் அன்னகயீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்கமா (ரஹ்) அவர்கள் நகயீ கிளையைச் சேர்ந்த தன் நண்பர் ஒருவரை நலம் விசாரிக்க சென்றார். அவரின் நெற்றியில் (கைவத்து)  தடவிப்பார்க்கும் போது வியர்வை அரும்பியிருப்பதைக் கண்டு சிரித்தார். அருகிலிருந்த ஒருவர், அபூஷிப்ல் (அல்கமா அவர்களே) ஏன் சிரிக்கின்றீர்? எனக் கேட்டார்.

அதற்கு அல்கமா (ரஹ்), “இறைநம்பிக்கையாளரின் உயிர், நெற்றியில் வியர்வை வர (இலேசான சிரமத்துடன்) வெளியேறும். அவர் சில நேரம் செய்த தீமைக்கு (மன்னிப்பாக) மரணத்தருவாயில் உயிர் பிரிவது அவருக்கு கடினமாக்கப்படும்.

இறைமறுப்பாளரின் உயிர், கழுதையின் உயிர் வெளியேறுவதைப் போன்று தாடை வழியாக வெளியேறும். அவர் சில நேரம் செய்த நன்மைக்கு (கூலியாக) மரணத்தருவாயில் உயிர் பிரிவது அவருக்கு இலேசாக்கப்படும் என அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறியதை நினைவுகூர்ந்து சிரித்தேன் என்று கூறினார்.


أَنَّهُ دَخَلَ عَلَى صَدِيقٍ لَهُ مِنَ النَّخَعِ يَعُودُهُ، فَمَسَحَ جَبِينَهُ، فَوَجَدَهُ يَرْشَحُ فَضَحِكَ، فَقَالَ لَهُ بَعْضُ الْقَوْمِ: مَا يَضْحَكُكَ يَا أَبَا شِبْلٍ؟ قَالَ: ضَحِكْتُ مِنْ قَوْلِ عَبْدِ اللَّهِ «إِنَّ نَفْسَ الْمُؤْمِنِ تَخْرُجُ رَشْحًا، وَإِنَّهُ قَدْ يَكُونُ عَمِلَ السَّيِّئَةَ فَيُشَدَّدُ عَلَيْهِ عِنْدَ الْمَوْتِ لِيَكُونَ بِهَا، وَإِنَّ نَفْسَ الْكَافِرِ وَالْفَاجِرِ لِيَخْرُجَ مِنْ شِدْقِهِ كَمَا يَخْرُجُ نَفْسُ الْحِمَارِ، وَإِنَّهُ قَدْ يَكُونُ عَمِلَ الْحَسَنَةَ، فَهُوِّنَ عَلَيْهِ عِنْدَ الْمَوْتِ لِيَكُونَ بِهَا»


Musannaf-Abdur-Razzaq-6772

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6772. இப்ராஹீம் அன்னகயீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்கமா (ரஹ்) அவர்களின் சகோதரர் மரணத்தருவாயில் இருக்கும் போது அவருக்கு நெற்றியில் வியர்வை அரும்பியது. உடனே அல்கமா (ரஹ்) சிரித்தார். அருகிலிருந்த யஸீத் பின் அவ்ஸ் (ரஹ்) அவர்கள், அபூஷிப்ல் (அல்கமா அவர்களே) ஏன் சிரிக்கின்றீர்? எனக் கேட்டார்.

அதற்கு அல்கமா (ரஹ்), “இறைநம்பிக்கையாளரின் உயிர், நெற்றியில் வியர்வை வர (இலேசான சிரமத்துடன்) வெளியேறும். இறைமறுப்பாளரின் உயிர், கழுதையின் உயிர் வெளியேறுவதைப் போன்று தாடை வழியாக வெளியேறும்.

இறைநம்பிக்கையாளருக்கு அவர்செய்த தீமைக்கு (மன்னிப்பாக) மரணத்தருவாயில் உயிர் பிரிவது கடினமாக்கப்படும். இறைமறுப்பாளருக்கு அவர் செய்த நன்மைக்கு (கூலியாக) மரணத்தருவாயில் உயிர் பிரிவது இலேசாக்கப்படும் என அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்.


كَانَ عِنْدَ أَخٍ لَهُ وَهُوَ يَسُوقُ فَجَعَلَ يَرْشَحُ جَبِينُهُ، فَضَحِكَ عَلْقَمَةُ، فَقَالَ لَهُ يَزِيدُ بْنُ أَوْسٍ: مَا يُضْحِكُكَ يَا أَبَا شِبْلٍ؟ قَالَ: إِنِّي سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ يَقُولُ: «إِنَّ نَفْسَ الْمُؤْمِنِ تَخْرُجُ رَشْحًا، وَإِنَّ نَفْسَ الْكَافِرِ تَخْرُجُ مِنْ شِدْقِهِ كَمَا تَخْرُجُ نَفْسُ الْحِمَارِ، إِنَّ الْمُؤْمِنَ لَيُشَدَّدُ عَلَيْهِ عِنْدَ مَوْتِهِ بِالسَّيِّئَةِ قَدْ عَمِلَهَا لِتَكُونَ بِهَا، وَإِنَّ الْكَافِرَ لَيُهَوَّنُ عَلَيْهِ عِنْدَ مَوْتِهِ بِالْحَسَنَةِ قَدْ عَمِلَهَا لِتَكُونَ بِهَا»


Next Page » « Previous Page