Author: Farook

Almujam-Alawsat-5818

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5818. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறந்தவரின் சார்பாக ஹஜ் செய்பவருக்கு அவருக்கு கிடைக்கும் கூலியை போன்ற கூலி கிடைக்கும்.

நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்பவருக்கு அவருக்கு கிடைக்கும் கூலியை போன்ற கூலி கிடைக்கும்.

நன்மையான காரியத்தை அறிவித்தவருக்கு அதைச் செய்தவரின் கூலியை போன்ற கூலி கிடைக்கும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَنْ حَجَّ عَنْ مَيِّتٍ فَلِلَّذِي حَجَّ عَنْهُ مِثْلُ أَجْرِهِ، وَمَنْ فَطَّرَ صَائِمًا فَلَهُ مِثْلُ أَجْرِهِ، وَمَنْ دَلَّ عَلَى خَيْرٍ فَلَهُ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ»


Ibn-Khuzaymah-2064

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2064. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரேனும் இறைவழியில் போரிடும் ஒருவருக்கு அல்லது ஹஜ் (புனித பயணம்)  செல்பவருக்கு பயண வசதி செய்து கொடுத்தாலோ, அல்லது அவர்களின் வீட்டாரின் நலனை பாதுகாத்தாலோ, ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்தாலோ அவர்களுக்கு கிடைக்கும் கூலியிலிருந்து எதுவும் குறையாமல் அவருக்கும் அது போன்ற கூலி கிடைக்கும்.

அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி)


«مَنْ جَهَّزَ غَازِيًا أَوْ جَهَّزَ حَاجًّا , أَوْ خَلَفَهُ فِي أَهْلِهِ أَوْ فَطَّرَ صَائِمًا كَانَ لَهُ مِثْلُ أُجُورِهِمْ مِنْ غَيْرِ أَنْ يَنْتَقِصَ مِنْ أُجُورِهِمْ شَيْءٌ»


Musannaf-Ibn-Abi-Shaybah-19555

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

19555. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரேனும் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்தாலோ, இறைவழியில் போரிடும் ஒருவருக்கு அல்லது ஹஜ் (புனித பயணம்)  செல்பவருக்கு பயண வசதி செய்து கொடுத்தாலோ, அல்லது அவர்களின் வீட்டாரின் நலனை பாதுகாத்தாலோ, அவர்களுக்கு கிடைக்கும் கூலியிலிருந்து எதுவும் குறையாமல் அவருக்கும் அது போன்ற கூலி கிடைக்கும்.

அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி)


مَنْ فَطَّرَ صَائِمًا أَوْ جَهَّزَ غَازِيًا أَوْ حَاجًّا أَوْ خَلَفَهُ فِي أَهْلِهِ كَانَ لَهُ مِثْلُ أُجُورِهِمْ مِنْ غَيْرِ أَنْ يُنْتَقَصَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا


Musannaf-Abdur-Razzaq-7905

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7905. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரேனும் ஒரு நோன்பாளிக்கு உணவும், தண்ணீரும் கொடுத்து அவரை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பாளியின் கூலியில் எதுவும் குறையாமல் நோன்பு திறக்கச் செய்தவருக்கும் அது போன்ற கூலி கிடைக்கும்.

அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி)


«مَنْ فَطَّرَ صَائِمًا، أَطْعَمَهُ وَسَقَاهُ كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَجْرِهِ شَيْءٌ»


Almujam-Alawsat-1048

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1048. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரேனும் ஒரு நோன்பாளிக்கு உணவும், தண்ணீரும் கொடுத்து அவரை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பாளியின் கூலியில் எதுவும் குறையாமல் நோன்பு திறக்கச் செய்தவருக்கும் அது போன்ற கூலி கிடைக்கும்.

அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி)


«مَنْ فَطَّرَ صَائِمًا كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَجْرِهِ شَيْئًا»


Almujam-Alawsat-8438

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8438. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரேனும் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பாளியின் கூலியில் எதுவும் குறையாமல் நோன்பு திறக்கச் செய்தவருக்கும் அது போன்ற கூலி கிடைக்கும்..

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«مَنْ فَطَّرَ صَائِمًا كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَجْرِهِ شَيْئًا»


Almujam-Alawsat-7136

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7136. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரேனும் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பாளியின் கூலியில் எதுவும் குறையாமல் நோன்பு திறக்கச் செய்தவருக்கும் அது போன்ற கூலி கிடைக்கும்…

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«مَنْ فَطَّرَ صَائِمًا كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَجْرِهِ شَيْئًا، وَمَا عَمِلَ مَنْ أَعْمَالِ الْبِرِّ إِلَّا كَانَ أَجْرُهُ كَصَاحِبِ الطَّعَامِ، مَا كَانَ مِنْ قُوَّةِ الطَّعَامِ فِيهِ»


Almujam-Alkabir-11449

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

11449. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரேனும் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பு திறக்கச் செய்தவருக்கும் நோன்பாளியின் கூலி போன்றது கிடைக்கும்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

 


مَنْ فَطَّرَ صَائِمًا فَلَهُ مِثْلُ أَجْرِهِ


Musnad-Ahmad-17044

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

17044. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் வீடுகளை மண்ணறைகளாக ஆக்கிவிடாதீர்கள். (மாறாக)  அதில் (உபரியான) தொழுகைகளை தொழுதுக் கொள்ளுங்கள்.

யாரேனும் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பாளியின் கூலியில் எதுவும் குறையாமல் நோன்பு திறக்கச் செய்தவருக்கும் அது போன்ற கூலி எழுதப்படும்.

யாரேனும் இறைவழியில் போரிடும் ஒருவருக்குப் பயண வசதி செய்து கொடுத்தாலும், அல்லது (அறப்போர் வீரர் புறப்பட்டுச் சென்ற பின்) அவரின் வீட்டாரின் நலத்தைப் பாதுகாத்தாலும் போராளியின் கூலியில் எதுவும் குறையாமல் அவருக்கும் அவரின் கூலி போன்று எழுதப்படும்.

அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி)


«لَا تَتَّخِذُوا بُيُوتَكُمْ قُبُورًا صَلُّوا فِيهَا»

«وَمَنْ فَطَّرَ صَائِمًا، كُتِبَ لَهُ مِثْلُ أَجْرِ الصَّائِمِ لَا يَنْقُصُ مِنْ أَجْرِ الصَّائِمِ شَيْءٌ»

«وَمَنْ جَهَّزَ غَازِيًا فِي سَبِيلِ اللَّهِ أَوْ خَلَفَهُ فِي أَهْلِهِ، كُتِبَ لَهُ مِثْلُ أَجْرِ الْغَازِي فِي أَنَّهُ لَا يَنْقُصُ مِنْ أَجْرِ الْغَازِي شَيْءٌ»


Darimi-1744

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1744. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரேனும் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பாளியின் கூலியில் எதுவும் குறையாமல் நோன்பு திறக்கச் செய்தவருக்கும் அது போன்ற கூலி எழுதப்படும்.

அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி)


«مَنْ فَطَّرَ صَائِمًا كُتِبَ لَهُ مِثْلُ أَجْرِهِ، إِلَّا أَنَّهُ لَا يَنْقُصُ مِنْ أَجْرِ الصَّائِمِ»


Next Page » « Previous Page