Author: Farook

Almujam-Assaghir-912

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

912. நபி (ஸல்) அவர்கள் நோன்புத் துறக்கும் போது, “பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம லக ஸும்து வ அலா ரிஸ்க்கிக அஃப்த்தர்து” (பொருள்: அல்லாஹ்வின் திருப்பெயரால்! அல்லாஹ்வே! உனக்காக நோன்பு வைத்தேன். உனது உணவினால் நோன்புத் துறக்கின்றேன்) எனக் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ إِذَا أَفْطَرَ قَالَ: «بِسْمِ اللَّهِ اللَّهُمَّ , لَكَ صُمْتُ , وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ»


Almujam-Alawsat-7549

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7549. நபி (ஸல்) அவர்கள் நோன்புத் துறக்கும் போது, “பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம லக ஸும்து வ அலா ரிஸ்க்கிக அஃப்த்தர்து” (பொருள்: அல்லாஹ்வின் திருப்பெயரால்! அல்லாஹ்வே! உனக்காக நோன்பு வைத்தேன். உனது உணவினால் நோன்புத் துறக்கின்றேன்) எனக் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَفْطَرَ قَالَ: «بِسْمِ اللَّهِ، اللَّهُمَّ لَكَ صُمْتُ، وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ»


Almujam-Alkabir-12720

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

12720. நபி (ஸல்) அவர்கள் நோன்புத் துறக்கும் போது, “அல்லாஹும்ம லக ஸும்து, வ அலா ரிஸ்க்கிக அஃப்த்தர்து, ஃபதகப்பல் மின்னீ, இன்னக அன்தஸ்ஸமீஉல் அலீம்” (பொருள்: “அல்லாஹ்வே! உனக்காக நோன்பு வைத்தேன்; உனது உணவினால் நோன்புத் துறக்கின்றேன்; என்னிடமிருந்து இதை ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்” எனக் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا أَفْطَرَ قَالَ: «لَكَ صُمْتُ، وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ فَتَقَبَّلْ مِنِّي إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ»


Daraqutni-2280

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2280. நபி (ஸல்) அவர்கள் நோன்புத் துறக்கும் போது, “அல்லாஹும்ம லக ஸும்னா, வ அலா ரிஸ்க்கிக அஃப்த்தர்னா, ஃபதகப்பல் மின்னா, இன்னக அன்தஸ்ஸமீஉல் அலீம்” (பொருள்: “அல்லாஹ்வே! உனக்காக நோன்பு வைத்தோம்; உனது உணவினால் நோன்புத் துறக்கின்றோம்; எங்களிடமிருந்து இதை ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்” எனக் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَفْطَرَ قَالَ: «اللَّهُمَّ لَكَ صُمْنَا وَعَلَى رِزْقِكَ أَفْطَرْنَا فَتَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ»


Musannaf-Ibn-Abi-Shaybah-9744

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

நோன்பாளி நோன்புத் துறக்கும் போது என்ன கூறவேண்டும்?

9744. நபி (ஸல்) அவர்கள் நோன்புத் துறக்கும் போது “அல்லாஹும்ம லக ஸும்து வ அலா ரிஸ்க்கிக அஃப்த்தர்து” (பொருள்: அல்லாஹ்வே! உனக்காக நோன்பு வைத்தேன். உனது உணவினால் நோன்புத் துறக்கின்றேன்) எனக் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

ரபீஉ பின் குஸைம் (ரஹ்) அவர்கள், “அல்ஹம்து லில்லாஹில்லதீ அஆனனீ ஃப ஸும்து, வ ரஸகனீ ஃப அஃப்த்தர்து (பொருள்: நான் நோன்பு வைக்கவும், நோன்புத் துறக்க உணவளித்தும் உதவி செய்த அல்லாஹ்விற்கே புகழனைத்தும்) என்று கூறுவார்கள்.

 


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَامَ ثُمَّ أَفْطَرَ، قَالَ: «اللَّهُمَّ لَكَ صُمْتُ، وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ»

قَالَ: وَكَانَ الرَّبِيعُ بْنُ خُثَيْمٍ يَقُولُ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَعَانَنِي فَصُمْتُ وَرَزَقَنِي فَأَفْطَرْتُ»


Kubra-Bayhaqi-8134

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8134. முஆத் பின் ஸுஹ்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நோன்புத் துறக்கும் போது, “அல்லாஹும்ம லக ஸும்து வ அலா ரிஸ்க்கிக அஃப்த்தர்து” (பொருள்: அல்லாஹ்வே! உனக்காக நோன்பு வைத்தேன். உனது உணவினால் நோன்புத் துறக்கின்றேன்) எனக் கூறுவார்கள் என்ற செய்தி எனக்கு கிடைத்தது.

அறிவிப்பவர்: ஹுஸைன் பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்)


أَنَّهُ بَلَغَهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَفْطَرَ قَالَ: ” اللهُمَّ لَكَ صُمْتُ، وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ


Abu-Dawood-2358

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2358. முஆத் பின் ஸுஹ்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நோன்புத் துறக்கும் போது, “அல்லாஹும்ம லக ஸும்து வ அலா ரிஸ்க்கிக அஃப்த்தர்து” (பொருள்: அல்லாஹ்வே! உனக்காக நோன்பு வைத்தேன். உனது உணவினால் நோன்புத் துறக்கின்றேன்) எனக் கூறுவார்கள் என்ற செய்தி எனக்கு கிடைத்தது.

அறிவிப்பவர்: ஹுஸைன் பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَفْطَرَ قَالَ: «اللَّهُمَّ لَكَ صُمْتُ، وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ»


Kubra-Nasaayi-3318

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3318. யாரேனும் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பாளியின் கூலியில் எதுவும் குறையாமல் நோன்பு திறக்கச் செய்தவருக்கும் அது போன்ற கூலி உண்டு என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அதாஉ பின் அபூ ரபாஹ் (ரஹ்)


«مَنْ فَطَّرَ صَائِمًا كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ مِنْ غَيْرِ أَنْ يُنْتَقَصَ مِنْ أَجْرِ الصَّائِمِ شَيْءٌ»


Musannaf-Abdur-Razzaq-7908

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7908. ஒரு பெண் அபூஹுரைரா (ரலி) அவர்களை நோன்புத் துறக்க அழைத்திருக்க, அவர்களும் அங்கு சென்று நோன்பு திறந்தார்.

பின்பு நோன்பாளி, ஒரு வீட்டாரிடம் நோன்பு துறந்தால் அவருக்கு கிடைக்கும் கூலியைப் போன்றே அந்த வீட்டாருக்கும் கூலி கிடைக்கும் என்ற செய்தியை உனக்கு அறிவிக்கிறேன் என்று (அந்த பெண்ணிடம்)  கூறினார்கள்.

அதற்கு அந்த பெண், நீங்கள் என் வீட்டில் நோன்பு துறக்கும் சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்திருந்தேன் என்று கூறினார். நான் நோன்பு துறக்கும் வீட்டாருக்கும் எனக்கு கிடைக்கும் கூலி போன்றது கிடைக்க விரும்புகிறேன் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: யஹ்யா பின் அபூ கஸீர் (ரஹ்)

 


دَعَتْهُ امْرَأَةٌ لِيُفْطِرَ عِنْدَهَا فَفَعَلَ، وَقَالَ: «إِنِّي أُخْبِرُكِ أَنَّهُ لَيْسَ مِنْ رَجُلٍ يُفْطِرُ عِنْدَ أَهْلِ بَيْتٍ إِلَّا كَانَ لَهُمْ مِثْلُ أَجْرِهِ»، فَقَالَتْ: وَدِدْتُ أَنَّكَ تَتَحَيَّنُ، أَوْ نَحْوَ ذَلِكَ لِتُفْطِرَ عِنْدِي قَالَ: «إِنِّي أُرِيدُ أَنْ أَجْعَلَهُ لِأَهْلِ بَيْتِي»


Musannaf-Abdur-Razzaq-7906

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7906. யாரேனும் ஒரு நோன்பாளிக்கு உணவும், தண்ணீரும் கொடுத்து அவரை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பாளியின் கூலி போன்றே நோன்பு திறக்கச் செய்தவருக்கும் கூலி கிடைக்கும் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: ஸாலிஹ் (ரஹ்)


«مَنْ فَطَّرَ صَائِمًا أَطْعَمَهُ وَسَقَاهُ، كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ»


Next Page » « Previous Page