Author: Farook

Kubra-Bayhaqi-6991

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6991.


سَمِعْتُ سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ، يَقُولُ لِسَعِيدٍ: ” مِنْ سُنَّةِ الصَّلَاةِ عَلَى الْمَيِّتِ أَنْ يُكَبِّرَ ثُمَّ يُصَلِّيَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ يَجْتَهِدَ لِلْمَيِّتِ فِي الدُّعَاءِ، ثُمَّ يُسَلِّمَ فِي نَفْسِهِ


Nasaayi-1989

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

1989.

முதல் தக்பீருக்குப் பின் அல்ஹம்து அத்தியாயத்தை மனதுக்குள் ஓதுவதும், பின்னர் மூன்று தடவை தக்பீர் கூறுவதும், கடைசியில் ஸலாம் கொடுப்பதும் நபிவழியாகும்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)


«السُّنَّةُ فِي الصَّلَاةِ عَلَى الْجَنَازَةِ أَنْ يَقْرَأَ فِي التَّكْبِيرَةِ الْأُولَى بِأُمِّ الْقُرْآنِ مُخَافَتَةً، ثُمَّ يُكَبِّرَ ثَلَاثًا، وَالتَّسْلِيمُ عِنْدَ الْآخِرَةِ»


Abi-Yala-2661

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2661. நான், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் பின்னால் ஒரு ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டேன். அவர்கள் அல்ஹம்து அத்தியாயத்தையும், இன்னொரு அத்தியாயத்தையும் எங்களுக்குக் கேட்கும் அளவுக்கு சப்தமாக ஓதினார்கள். தொழுது முடித்ததும் அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு இது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள் ‘இது நபிவழியும், உண்மையும் ஆகும்’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : தல்ஹா பின் அப்துல்லாஹ் (ரஹ்)


صَلَّيْتُ خَلْفَ ابْنِ عَبَّاسٍ عَلَى جِنَازَةٍ فَقَرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ وَسُورَةٍ وَجَهَرَ حَتَّى أَسْمَعَنَا، فَلَمَّا انْصَرَفَ أَخَذْتُ بِيَدِهِ فَسَأَلْتُهُ، عَنْ ذَلِكَ فَقَالَ: «سُنَّةٌ وَحَقٌّ»


Musannaf-Ibn-Abi-Shaybah-11402

ஹதீஸின் தரம்: More Info

11402. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஜனாஸாத் தொழுகையில் அல்ஹம்து அத்தியாயத்தை ஓதினார்கள்.

அறிவிப்பவர் : ஸைத் பின் தல்ஹா (ரஹ்)


أَنَّهُ «قَرَأَ عَلَيْهَا بِفَاتِحَةِ الْكِتَابِ»


Musannaf-Abdur-Razzaq-6427

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6427. நான், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் பின்னால் ஒரு ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டேன். அவர்கள் அல்ஹம்து அத்தியாயத்தை சப்தமாக ஓதினார்கள்.

நான் அவர்களிடம் இது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘இது முழுமையான நபிவழி என்றோ அல்லது நபிவழியில் உள்ளது என்றோ கூறினார்கள்.

அறிவிப்பவர் : தல்ஹா பின் அப்துல்லாஹ் (ரஹ்)


صَلَّيْتُ مَعَ ابْنِ عَبَّاسٍ عَلَى جِنَازَةٍ فَقَرَأَ فَاتِحَةَ الْكِتَابِ، فَقُلْتُ لَهُ فَقَالَ: «إِنَّهُ مِنْ تَمَامِ السُّنَّةِ أَوْ إِنَّهُ مِنَ السُّنَّةِ»


Tayalisi-2864

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2864. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் பின்னால் ஒரு ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டேன். அப்போது நான் இளைஞனாக இருந்தேன். அவர்கள் அல்ஹம்து அத்தியாயத்தை (எங்களுக்குக் கேட்கும் அளவுக்கு சப்தமாக) ஓதினார்கள்.

தொழுது முடித்ததும் அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு இது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள் ‘இது உண்மையும், நபிவழியும் ஆகும்’ என்றோ அல்லது இது நபிவழியும், உண்மையும் ஆகும்’ என்றோ விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : தல்ஹா பின் அப்துல்லாஹ் (ரஹ்)


صَلَّيْتُ خَلْفَ ابْنِ عَبَّاسٍ عَلَى جِنَازَةٍ وَأَنَا يَوْمَئِذٍ، شَابٌّ، فَسَمِعْتُهُ يَقْرَأُ، عَلَيْهَا فَاتِحَةَ الْكِتَابِ، فَلَمَّا صَلَّيْتُ جِئْتُ فَأَخَذْتُ بِيَدِهِ فَقُلْتُ: يَا أَبَا الْعَبَّاسِ، مَا هَذَا؟، قَالَ: «هَذَا حَقٌّ وَسُنَّةٌ» أَوْ قَالَ : «سُنَّةٌ وَحَقٌّ»


Ibn-Majah-1496

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

1496. நாங்கள் ஜனாஸாத் தொழுகையில் அல்ஹம்து அத்தியாயத்தை ஒத வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் : உம்மு ஷரீக் (ரலி)


«أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَقْرَأَ عَلَى الْجِنَازَةِ بِفَاتِحَةِ الْكِتَابِ»


Ibn-Majah-1495

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம் :

ஜனாஸாத் தொழுகையில் (அல்ஹம்து அத்தியாயத்தை) ஓதுதல்.

1495. நபி (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாத் தொழுகையில் அல்ஹம்து அத்தியாயத்தை ஓதினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «قَرَأَ عَلَى الْجِنَازَةِ بِفَاتِحَةِ الْكِتَابِ»


Nasaayi-1988

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1988. நான், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் பின்னால் ஒரு ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டேன். அவர்கள் அல்ஹம்து அத்தியாயத்தை சப்தமாக ஓதியதை செவியேற்றேன். தொழுது முடித்ததும் அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு (அல்ஹம்து அத்தியாயத்தை) ஓதினீர்களே! என்று கூறினேன். அதற்கவர்கள் ‘ஆம். இது உண்மையும், நபிவழியும் ஆகும்’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : தல்ஹா பின் அப்துல்லாஹ் (ரஹ்)


صَلَّيْتُ خَلْفَ ابْنِ عَبَّاسٍ عَلَى جَنَازَةٍ فَسَمِعْتُهُ يَقْرَأُ بِفَاتِحَةِ الْكِتَابِ، فَلَمَّا انْصَرَفَ أَخَذْتُ بِيَدِهِ، فَسَأَلْتُهُ فَقُلْتُ: تَقْرَأُ، قَالَ: «نَعَمْ، إِنَّهُ حَقٌّ وَسُنَّةٌ»


Nasaayi-1987

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1987. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் பின்னால் ஒரு ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டேன். அவர்கள் அல்ஹம்து அத்தியாயத்தையும், இன்னொரு அத்தியாயத்தையும் எங்களுக்குக் கேட்கும் அளவுக்கு சப்தமாக ஓதினார்கள். தொழுது முடித்ததும் அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு இது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள் ‘இது நபிவழியும், உண்மையும் ஆகும்’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: தல்ஹா பின் அப்துல்லாஹ் (ரஹ்)


صَلَّيْتُ خَلْفَ ابْنِ عَبَّاسٍ عَلَى جَنَازَةٍ، فَقَرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ، وَسُورَةٍ وَجَهَرَ حَتَّى أَسْمَعَنَا، فَلَمَّا فَرَغَ أَخَذْتُ بِيَدِهِ، فَسَأَلْتُهُ فَقَالَ: «سُنَّةٌ وَحَقٌّ»


Next Page » « Previous Page