Author: Farook

Tirmidhi-1027

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1027. தல்ஹா பின் அப்துல்லாஹ் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஒரு ஜனாஸா தொழுகை நடத்தும்போது ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயத்தை (சத்தமாக) ஓதினார்கள். அவர்களிடம் நான் இது பற்றிக் கேட்டபோது, இது நபிவழியில் உள்ளதாகும்’ என்றோ அல்லது ‘நபிவழியை நிறைவாக்குவதாகும்’ என்றோ கூறினார்கள்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது ‘ஹஸன் ஸஹீஹ்’ தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.

நபித்தோழர்கள் உள்ளிட்ட அறிஞர்களில் சிலர் இந்த ஹதீஸின் அடிப்படையிலேயே செயல்பட வேண்டும் என்கிறார்கள். ஜனாஸா தொழுகையின் ஆரம்ப தக்பீரில் ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயத்தை ஓத வேண்டும் என்ற கருத்தை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இதுதான் ஷாஃபிஈ (ரஹ்), அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்), இஸ்ஹாக் பின் ராஹவைஹி (ரஹ்) ஆகியோரின் கூற்றாகும்.

அறிஞர்களில் வேறுசிலர், “ஜனாஸா தொழுகையில் இறைவனைப் புகழ்தல், நபி (ஸல்) அவர்களுக்காக ‘ஸலவாத்’ ஓதுதல், இறந்தவருக்காகப் பிரார்த்தனை செய்தல் ஆகியவைதான் உள்ளன; அதில் ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயம் ஓதலாகாது” என்கின்றனர். இதுவே ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) உள்ளிட்ட கூஃபாவாசிகளின் கூற்றாகும்.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான தல்ஹா பின் அப்தில்லாஹ் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள், அப்துர்ரஹ்மான்

أَنَّ ابْنَ عَبَّاسٍ، صَلَّى عَلَى جَنَازَةٍ، فَقَرَأَ بِفَاتِحَةِ الكِتَابِ، فَقُلْتُ لَهُ، فَقَالَ: «إِنَّهُ مِنَ السُّنَّةِ، أَوْ مِنْ تَمَامِ السُّنَّةِ»


Tirmidhi-1026

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம் :

ஜனாஸாத் தொழுகையில் அல்ஹம்து அத்தியாயத்தை ஓதுதல்.

1026. நபி (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாத் தொழுகையில் அல்ஹம்து அத்தியாயத்தை ஓதினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் உம்மு ஷரீக் (ரலி) அவர்களின் வழியாகவும் வந்துள்ளன.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வழியாக வந்துள்ள இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் அவ்வளவு வலுவானது அல்ல. (காரணம் இதில் இடம்பெறும்) இப்ராஹீம் பின் உஸ்மான்-அபூஷைபா அல்வாஸிதீ என்பவர் முன்கருல் ஹதீஸ்-ஹதீஸ்துறையில் நிராகரிக்கப்பட்டவர் ஆவார்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து அவர்களின் சொல்லாக (கீழ்க்கண்டவாறு) அறிவிக்கப்படுவதே சரியானதாகும்:

ஜனாஸா தொழுகையில் ஃபாத்திஹா அத்தியாயம் ஓதுவது சுன்னத் (நபி-ஸல்) அவர்களின் வழிமுறை) ஆகும்.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ عَلَى الجَنَازَةِ بِفَاتِحَةِ الكِتَابِ


Abu-Dawood-3198

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3198. நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பின்னால் நின்று ஜனாஸாத் தொழுதேன். அப்போது அவர்கள் ஃபாத்திஹா அத்தியாயத்தை (சப்தமாக) ஓதினார்கள். பிறகு ‘இது நபிவழி என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : தல்ஹா பின் அப்துல்லாஹ் (ரஹ்)


صَلَّيْتُ مَعَ ابْنِ عَبَّاسٍ عَلَى جَنَازَةٍ، فَقَرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ، فَقَالَ: «إِنَّهَا مِنَ السُّنَّةِ»


Almujam-Alkabir-11051

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

11051. …உஹதுப் போரில் ஹம்ஸா (ரலி) கொல்லப்பட்டதும் அவரது உடல் வைக்கப்பட்டது. அவருக்கு ஒன்பது தக்பீர் கூறி நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள்…

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


لَمَّا وَقَفَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى حَمْزَةَ فَنَظَرَ إِلَى مَا بِهِ قَالَ : لَوْلاَ أَنْ تَحْزَنَ النِّسَاءُ مَا غَيَّبْتُهُ ، وَلَتَرَكْتُهُ حَتَّى يَكُونَ فِي بُطُونِ السِّبَاعِ وَحَوَاصِلِ الطُّيُورِ حَتَّى يَبْعَثَهُ اللَّهُ مِمَّا هُنَالِكَ قَالَ : وَأَحْزَنَهُ مَا رَأَى بِهِ ، فَقَالَ : لَئِنْ ظَفَرْتُ بِقُرَيْشٍ لأُمَثِّلَنَّ بِثَلاَثِينَ رَجُلاً مِنْهُمْ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ فِي ذَلِكَ {وَإِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُمْ بِهِ} إِلَى قَوْلِهِ : {يَمْكُرُونَ} ثُمَّ أَمَرَ بِهِ فَهُيِّءَ إِلَى الْقِبْلَةِ ، ثُمَّ كَبَّرَ عَلَيْهِ تِسْعًا ، ثُمَّ جَمَعَ عَلَيْهِ الشُّهَدَاءَ كُلَّمَا أُتِي بِشَهِيدٍ وُضِعَ إِلَى حَمْزَةَ فَصَلَّى عَلَيْهِ ، وَعَلَى الشُّهَدَاءِ مَعَهُ ، حَتَّى صَلَّى عَلَيْهِ وَعَلَى الشُّهَدَاءِ اثْنَتَيْنِ وَسَبْعِينَ صَلاَةً ، ثُمَّ قَامَ عَلَى أَصْحَابِهِ حَتَّى وَارَاهُمْ ، وَلَمَّا نَزَلَ الْقُرْآنُ عَفَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، وَتَجَاوَزَ وَتَرَكَ الْمُثْلَ.


Almujam-Alkabir-11403

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

11403. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஹதுப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு ஜனாஸாத் தொழுகையில் ஒன்பது ஒன்பதாகவும், பிறகு ஏழு ஏழாகவும் தக்பீர் கூறி வந்தனர். பின்னர் மரணிக்கும் வரை நான்கு தக்பீர் கூறி வந்தனர்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «صَلَّى عَلَى قَتْلَى أُحُدٍ، فَكَبَّرَ عَلَيْهِمْ تِسْعًا تِسْعًا، ثُمَّ سَبْعًا سَبْعًا، ثُمَّ أَرْبَعًا أَرْبَعًا حَتَّى لَحِقَ بِاللهِ عَزَّ وَجَلَّ»


Almujam-Alkabir-11362

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

11362. நபி (ஸல்) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களின் ஜனாஸா என்றால் ஏழு முறை தக்பீர் கூறுவார்கள். ஹாஷிம் குலத்தவர் ஜனாஸா என்றால் ஐந்து தடவை தக்பீர் கூறுவார்கள். பின்னர் கடைசிக் காலம் வரை நான்கு தக்பீர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «يُكَبِّرُ عَلَى أَهْلِ بَدْرٍ سَبْعَ تَكْبِيرَاتٍ، وَعَلَى بَنِي هَاشِمٍ خَمْسَ تَكْبِيرَاتٍ، ثُمَّ كَانَ آخِرُ صَلَاتِهِ أَرْبَعُ تَكْبِيرَاتٍ حَتَّى خَرَجَ منَ الدُّنْيَا»


Musannaf-Ibn-Abi-Shaybah-11443

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

11443. உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபித்தோழர்கள் ஜனாஸாத் தொழுகையில் வெவ்வேறு எண்ணிக்கையில் தக்பீர் கூறி வந்தனர். பிறகு, நமக்கு பின் வருபவர்கள் கடைபிடிப்பதற்கு ஏற்றவாறு ஒரு எண்ணிக்கையில் ஒன்றுப்பட வேண்டும் என்பதற்காக நான்கு தக்பீர் கூறினர்.

அறிவிப்பவர் : அம்ர் பின் முர்ரா (ரஹ்)


«كُلٌّ قَدْ فَعَلَ» فَقَالُوا: نَجْتَمِعُ عَلَى أَمْرٍ يَأْخُذُ بِهِ مَنْ بَعْدَنَا فَكَبَّرُوا عَلَى الْجِنَازَةِ أَرْبَعًا


Musannaf-Abdur-Razzaq-6395

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6395. நபி (ஸல்) அவர்கள் காலத்தில், ஜனாஸாத் தொழுகையில் நபித்தோழர்கள் ஏழு, ஐந்து, நான்கு தக்பீர்கள் கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

உமர் (ரலி) அவர்கள் காலத்தில், அவர் நபித்தோழர்களை ஒன்று திரட்டி அவர்களின் கருத்துக்களை கேட்டார்கள். பிறகு அனைவரையும் லுஹர் தொழுகையைப் போன்று நான்கு தக்பீர் என்ற கருத்துக்குக் கொண்டு வந்தார்கள்…

அறிவிப்பவர் : அபூவாயில் (ரஹ்)


كَانُوا يُكَبِّرُونَ فِي زَمَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبْعًا وَخَمْسًا وَأَرْبَعًا حَتَّى كَانَ زَمَنُ عُمَرَ فَجَمَعَهُمْ فَسَأَلَهُمْ فَأَخْبَرَهُمْ كُلُّ رَجُلٍ مِنْهُمْ بِمَا رَأَى، فَجَمَعَهُمْ عَلَى أَرْبَعِ تَكْبِيرَاتٍ كَأَطْوَلِ الصَّلَاةِ، يَعْنِي الظُّهْرَ


Kubra-Bayhaqi-6947

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6947. நபி (ஸல்) அவர்கள் காலத்தில், ஜனாஸாத் தொழுகையில் நபித்தோழர்கள் ஏழு, ஐந்து, ஆறு-அல்லது நான்கு தக்பீர்கள் கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

உமர் (ரலி) அவர்கள் காலத்தில், அவர் நபித்தோழர்களை ஒன்று திரட்டி அவர்களின் கருத்துக்களை கேட்டார்கள். பிறகு அனைவரையும் லுஹர் தொழுகையைப் போன்று நான்கு தக்பீர் என்ற கருத்துக்குக் கொண்டு வந்தார்கள்…

அறிவிப்பவர் : அபூவாயில் (ரஹ்)


كَانُوا يُكَبِّرُونَ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبْعًا وَخَمْسًا وَسِتًّا ” , أَوْ قَالَ: ” أَرْبَعًا “، فَجَمَعَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ أَصْحَابَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرَ كُلُّ رَجُلٍ بِمَا رَأَى، فَجَمَعَهُمْ عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ عَلَى أَرْبَعِ تَكْبِيرَاتٍ كَأَطْوَلِ الصَّلَاةِ


Musnad-Ahmad-20400

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

20400. நாங்கள் அப்துர்ரஹ்மான் பின் ஸமுரா அவர்களின் ஜனாஸாவில் கலந்து கொண்டோம். அப்துர் ரஹ்மானின் குடும்பத்தினர் சிலர் ஜனாஸாவின் கட்டிலை எதிர் நோக்கி பின்புறம் நடந்தவர்களாக ‘வாருங்கள்! அல்லாஹ் உங்களுக்கு பரகத் செய்வான்’ என்று கூறினர்.

(அப்போதும் அவர்கள் மெதுவாக ஊர்ந்து சென்றனர்). மிர்பத் எனும் இடத்தை நாங்கள் அடைந்த போது அபூ பக்ரா (ரலி) அவர்கள் கோவேறுக் கழுதையில் வந்து எங்களுடன் சேர்ந்தார். மக்களின் நடவடிக்கையைக் கண்டு அவர்கள் மீது கோவேறுக் கழுதையை ஏவினார்கள். அவர்களை நோக்கிச் சாட்டையால் சொடுக்கினார்கள்.

‘அபுல் காஸிம் (ஸல்) அவர்களின் முகத்தைக் கண்ணியப்படுத்திய இறைவன் மேல் ஆணையாக! நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஓட்டமாக ஓடும் அளவுக்கு விரைந்து சென்றதை பார்த்திருக்கின்றோம்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் ஜவ்ஷன் (ரஹ்)


خَرَجْتُ فِي جَنَازَةِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ، قَالَ: فَجَعَلَ رِجَالٌ مِنْ أَهْلِهِ يَسْتَقْبِلُونَ الْجِنَازَةَ فَيَمْشُونَ عَلَى أَعْقَابِهِمْ، وَيَقُولُونَ: رُوَيْدًا بَارَكَ اللَّهُ فِيكُمْ، قَالَ: فَلَحِقَنَا أَبُو بَكَرَةَ مِنْ طَرِيقِ المِرْبَدِ، فَلَمَّا رَأَى أُولَئِكَ، وَمَا يَصْنَعُونَ حَمَلَ عَلَيْهِمْ بِبَغْلَتِهِ، وَأَهْوَى لَهُمْ بِالسَّوْطِ، وَقَالَ: «خَلُّوا، فَوَالَّذِي كَرَّمَ وَجْهَ أَبِي الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَقَدْ رَأَيْتُنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِنَّا لَنَكَادُ أَنْ نَرْمُلَ بِهَا» ،

وَقَالَ يَحْيَى مَرَّةً: لَقَدْ رَأَيْتُنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Next Page » « Previous Page