Author: Farook

Musnad-Ahmad-20388

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

20388. நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஜனாஸாவை பின்தொடர்ந்து செல்லும் போது ஓட்டமாக ஓடும் அளவுக்கு விரைந்து செல்வோம்’ என்று அபூ பக்ரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் ஜவ்ஷன் (ரஹ்)


«لَقَدْ رَأَيْتُنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَإِنَّا لَنَرْمُلُ بِالْجِنَازَةِ رَمَلًا»


Musnad-Ahmad-20375

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

20375. நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஜனாஸாவை பின்தொடர்ந்து செல்லும் போது ஓட்டமாக ஓடும் அளவுக்கு விரைந்து செல்வோம்’ என்று அபூ பக்ரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் ஜவ்ஷன் (ரஹ்)


«لَقَدْ رَأَيْتُنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَإِنَّا لَنَكَادُ أَنْ نَرْمُلَ بِهَا» ،

قَالَ وَكِيعٌ: ” أَنْ نَرْمُلَ بِالْجِنَازَةِ رَمَلًا


Abu-Dawood-3183

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3183. ஹதிஸ் எண்-3182 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

இதில் அபூபக்ரா (ரலி) அவர்கள், மக்கள் மீது கோவேறுக் கழுதையை ஏவினார்கள். அவர்களை நோக்கிச் சாட்டையால் சொடுக்கினார்கள் என்று இடம் பெற்றுள்ளது.


فِي جَنَازَةِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ، وَقَالَ: فَحَمَلَ عَلَيْهِمْ بَغْلَتَهُ وَأَهْوَى بِالسَّوْطِ


Abu-Dawood-3181

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் :

பிரேதத்தை விரைவாக கொண்டு செல்வது.

3181. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஜனாஸாவை (சுமந்து செல்லும் போது) விரைந்து செல்லுங்கள். அது (மய்யித்) நல்லறங்கள் புரிந்ததாயிருந்தால் அந்த நன்மையின் பால் விரைந்து செல்கிறீர்கள்; அவ்வாறில்லாவிட்டால் ஒரு தீங்கை (விரைவில்) உங்களின் தோள்களிலிருந்து இறக்கி வைக்கிறீர்கள்.’

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


«أَسْرِعُوا بِالْجَنَازَةِ فَإِنْ تَكُ صَالِحَةً فَخَيْرٌ تُقَدِّمُونَهَا إِلَيْهِ، وَإِنْ تَكُ سِوَى ذَلِكَ فَشَرٌّ تَضَعُونَهُ عَنْ رِقَابِكُمْ»


Nasaayi-1913

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1913. நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஜனாஸாவை பின்தொடர்ந்து) செல்லும் போது ஓட்டமாக ஓடும் அளவுக்கு விரைந்து செல்வோம்’ என்று அபூ பக்ரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் ஜவ்ஷன் (ரஹ்)


«لَقَدْ رَأَيْتُنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِنَّا لَنَكَادُ نَرْمُلُ بِهَا رَمَلًا»

وَاللَّفْظُ حَدِيثُ هُشَيْمٍ


Abu-Dawood-3182

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3182. அப்துர்ரஹ்மான் பின் ஜவ்ஷன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் உஸ்மான் பின் அபுல்ஆஸ் (ரஹ்) அவர்களின் ஜனாஸாவில் கலந்து கொண்டோம். நாங்கள் மெதுவாக நடந்து சென்றுக்கொண்டிருந்தோம். அப்போது (இடையில்) அபூபக்ரா (ரலி) அவர்கள் வந்து எங்களுடன் சேர்ந்தார்கள்.

அவர்கள், (மக்களை நோக்கிச்) சாட்டையை உயர்த்தி, “நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஜனாஸாவை பின்தொடந்து செல்லும்) போது ஓட்டமாக ஓடும் அளவுக்கு விரைந்து சென்றதை பார்த்திருக்கின்றோம்” என்று கூறினார்கள்.


أَنَّهُ كَانَ فِي جَنَازَةِ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ وَكُنَّا نَمْشِي مَشْيًا خَفِيفًا، فَلَحِقَنَا أَبُو بَكْرَةَ فَرَفَعَ سَوْطَهُ، فَقَالَ: «لَقَدْ رَأَيْتُنَا وَنَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَرْمُلُ رَمَلًا»


Nasaayi-1912

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1912. நாங்கள் அப்துர்ரஹ்மான் பின் ஸமுரா அவர்களின் ஜனாஸாவில் கலந்து கொண்டோம். (அப்போதைய ஆட்சியாளர்) ஸியாத் கட்டிலின் முன்னால் நடக்கலானார். அப்துர் ரஹ்மானின் குடும்பத்தினர் சிலர் ஜனாஸாவின் கட்டிலை எதிர் நோக்கி பின்புறம் நடந்தவர்களாக ‘வாருங்கள்! அல்லாஹ் உங்களுக்கு பரகத் செய்வான்’ என்று கூறினர்.

(அப்போதும் அவர்கள் மெதுவாக ஊர்ந்து சென்றனர்). மிர்பத் எனும் இடத்தை நாங்கள் அடைந்த போது அபூ பக்ரா (ரலி) அவர்கள் கோவேறுக் கழுதையில் வந்து எங்களுடன் சேர்ந்தார். மக்களின் நடவடிக்கையைக் கண்டு அவர்கள் மீது கோவேறுக் கழுதையை ஏவினார்கள். அவர்களை நோக்கிச் சாட்டையால் சொடுக்கினார்கள்.

‘அபுல் காஸிம் (ஸல்) அவர்களின் முகத்தைக் கண்ணியப்படுத்திய இறைவன் மேல் ஆணையாக! நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஓட்டமாக ஓடும் அளவுக்கு விரைந்து சென்றதை பார்த்திருக்கின்றோம்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் ஜவ்ஷன் (ரஹ்)


شَهِدْتُ جَنَازَةَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ وَخَرَجَ زِيَادٌ يَمْشِي بَيْنَ يَدَيِ السَّرِيرِ، فَجَعَلَ رِجَالٌ مِنْ أَهْلِ عَبْدِ الرَّحْمَنِ وَمَوَالِيهِمْ يَسْتَقْبِلُونَ السَّرِيرَ وَيَمْشُونَ عَلَى أَعْقَابِهِمْ، وَيَقُولُونَ: رُوَيْدًا رُوَيْدًا بَارَكَ اللَّهُ فِيكُمْ، فَكَانُوا يَدِبُّونَ دَبِيبًا حَتَّى إِذَا كُنَّا بِبَعْضِ طَرِيقِ الْمِرْبَدِ لَحِقَنَا أَبُو بَكْرَةَ عَلَى بَغْلَةٍ، فَلَمَّا رَأَى الَّذِي يَصْنَعُونَ حَمَلَ عَلَيْهِمْ بِبَغْلَتِهِ، وَأَهْوَى إِلَيْهِمْ بِالسَّوْطِ، وَقَالَ: خَلُّوا، فَوَالَّذِي أَكْرَمَ وَجْهَ أَبِي الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَدْ «رَأَيْتُنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِنَّا لَنَكَادُ نَرْمُلُ بِهَا رَمَلًا»، فَانْبَسَطَ الْقَوْمُ


Kubra-Bayhaqi-6855

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6855. ஒரு ஜனாஸாவை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்த போது சிலர் வாகனத்தில் வருவதை ஸவ்பான் (ரலி) அவர்கள் கண்டார்கள். அப்போது அவர்கள், அல்லாஹ்வின் வானவர்கள் நடந்து வரும் போது நீங்கள் வாகனத்தின் மேல் வருகிறீர்களே! இதற்கு வெட்கப்படமாட்டீர்களா? என்று அவர்களைப் பார்த்துக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ராஷித் பின் ஸஃத் (ரஹ்)


أَنَّهُ خَرَجَ فِي جِنَازَةٍ فَرَأَى نَاسًا خُرُوجًا عَلَى دَوَابِّهِمْ رُكْبَانًا فَقَالَ لَهُمْ ثَوْبَانُ: ” أَلَا تَسْتَحْيُونَ؟ مَلَائِكَةُ اللهِ عَلَى أَقْدَامِهِمْ وَأَنْتُمْ رُكْبَانٌ


Kubra-Bayhaqi-6856

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6855. ஒரு ஜனாஸாவை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்த போது சிலர் வாகனத்தில் வருவதை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் வானவர்கள் நடந்து வரும் போது நீங்கள் வாகனத்தின் மேல் வருகிறீர்களே! இதற்கு வெட்கப்படமாட்டீர்களா? என்று அவர்களைப் பார்த்துக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)


قَالَ خَرَجَ رَسُولُ اللهِ صَلَّى الله عَلَيهِ وَسَلَّمَ فِي جِنَازَةٍ فَرَأَى نَاسًا رُكْبَانًا، فَقَالَ: ” أَلَا تَسْتَحْيُونَ؟ إِنَّ مَلَائِكَةَ اللهِ عَلَى أَقْدَامِهِمْ وَأَنْتُمْ عَلَى ظُهُورِ الدَّوَابِّ


Hakim-1315

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1315. ஒரு ஜனாஸாவை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்த போது சிலர் வாகனத்தில் வருவதை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் வானவர்கள் நடந்து வரும் போது நீங்கள் வாகனத்தின் மேல் வருகிறீர்களே! இதற்கு வெட்கப்படமாட்டீர்களா? என்று அவர்களைப் பார்த்துக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)


«خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جِنَازَةٍ فَرَأَى نَاسًا رُكْبَانًا» ، فَقَالَ: «أَلَا تَسْتَحْيُونَ إِنَّ مَلَائِكَةَ اللَّهِ عَلَى أَقْدَامِهِمْ، وَأَنْتُمْ عَلَى ظُهُورِ الدَّوَابِّ»


Next Page » « Previous Page