Author: Farook

Musannaf-Ibn-Abi-Shaybah-11384

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

11384.  நான் மரணித்துவிட்டால் என்னை (அடக்கம் செய்ய) விரைவாக கொண்டு சென்றுவிடுங்கள் என அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்)


إذَا أَنَا مِتُّ فَأَسْرِعُوا بِي الْمَشْيَ


Musannaf-Ibn-Abi-Shaybah-11210

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

11210. நான் இறந்தவிட்டால் என் இறப்புச் செய்தியை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம். ஏனெனில் அறியாமைக்காலத்தில் இருந்த நடைமுறைகளில்  இந்த மரண அறிவிப்புச் செய்வதும் சேருமோ என்று நான் பயப்படுகிறேன் என அல்கமா பின் கைஸ்  (ரஹ்) அவர்கள் வஸிய்யத் செய்தார்கள்.

அறிவிப்பவர் : இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்)


أَنَّهُ «أَوْصَى أَنْ لَا تُؤْذِنُوا أَحَدًا، فَإِنِّي أَخَافُ أَنْ يَكُونَ النَّعْيُ مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ»


Musannaf-Abdur-Razzaq-6053

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6053. அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள், மரணதருவாயில் இருக்கும் போது என் இறப்புச் செய்தியை, அறியாமைக் காலத்தில் செய்ததைப் போன்று யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ இஸ்ஹாக் (ரஹ்)

 


حِينَ حَضَرَتْهُ الوَفَاةُ قَالَ: «لَاتُؤْذِنُوا بِي أَحَدًا كَفِعْلِ الْجَاهِلِيَّةِ»


Musannaf-Abdur-Razzaq-6046

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6046.


«لَقِّنُونِي لَا إِلَهَ إِلَّا اللَّهُ عِنْدَ مَوْتِي، وَأَسْرِعُوا بِي إِلَى حُفْرَتِي، وَلَا تَنْعُونِي، فَإِنِّي أَخَافُ أَنْ أَكُونَ كَنَعْيِ الْجَاهِلِيَّةِ، فَإِذَا خَرَجَ الرِّجَالُ بِجِنَازَتِي فَأَغْلِقُوا الْبَابَ فَإِنَّهُ لَا أَرَبَ لِي بِالنِّسَاءَ»


Musannaf-Abdur-Razzaq-6056

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6056. ஒரு மனிதர் இறந்துவிட்டால் அவரின் இறப்புச் செய்தியை அவரின் நண்பருக்கு அறிவிப்பதில் தவறில்லை. இறப்புச் செய்தியை அறிவிக்கக்கூடாது என்று வந்த தடை, அறியாமைக்காலத்தில் உள்ள துக்கம் அனுஷ்டிக்கும் வழிமுறைகளை கண்டித்து தான் என்று இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) கூறினார்.

அறிவிப்பவர் : ஹம்மாத் பின் அபூ ஸுலைமான் (ரஹ்)


«لَا بَأْسَ إِذَا مَاتَ الرَّجُلُ أَنْ يُؤْذَنَ صَدِيقُهُ، إِنَّمَا كَانُوا يَكْرَهُونَ أَنْ يُطَافَ بِهِ فِي الْمَجَالِسِ، أَنْعِي فُلَانًا كَفِعْلِ الْجَاهِلِيَّةِ»


Musnad-Ahmad-23368

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

23368. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அறியாமைக் கால வழக்கங்களில் நான்கு பண்புகள் இன்னும் மிச்சமிருக்கின்றன…

அறிவிப்பவர் : அபூ மாலிக் அல்அஷ்அரீ (ரலி)


أَرْبَعٌ بَقِيَّةٌ مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ وَذَكَرَ الْحَدِيثَ


Almujam-Alkabir-14747

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

14747. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் வெள்ளிக்கிழமை பகலிலோ அல்லது இரவிலோ மரணிக்கிறாரோ அவர் கப்ரின் சோதனையிலிருந்து காப்பாற்றப்படுவார்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


مَنْ مَاتَ يَوْمَ الْجُمُعَةِ وَلَيْلَةَ الْجُمُعَةِ وُقِيَ فِتْنَةَ الْقَبْرِ


Almujam-Alkabir-14251

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

14251. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிம் வெள்ளிக்கிழமை பகலிலோ அல்லது இரவிலோ மரணித்தால் அவரை, கப்ரின் சோதனையிலிருந்து அல்லாஹ் காப்பாற்றுவான்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«مَا مِنْ مُسْلِمٍ يَمُوتُ في يَوْمِ الجُمُعَةِ، أو لَيْلَةِ جُمُعَةٍ، إِلاَّ وَقَاهُ اللهُ فِتْنَةَ القَبْرِ»


Musannaf-Abdur-Razzaq-5596

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5596. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் வெள்ளிக்கிழமை பகலிலோ அல்லது இரவிலோ மரணிக்கிறாரோ அவர் கப்ரின் சோதனையிலிருந்து நீங்கிவிடுவார்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«بَرِئَ مِنْ فِتْنَةِ الْقَبْرِ»


Next Page » « Previous Page