Author: Farook

Musannaf-Abdur-Razzaq-5595

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம் :

வெள்ளிக்கிழமை மரணித்தவர் பற்றி.

5595. இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

யார் வெள்ளிக்கிழமை இரவிலோ அல்லது பகலிலோ  மரணிக்கிறாரோ அவர், கப்ரின் சோதனையிலிருந்து நீங்கி விடுவார் என்றோ,

அல்லது  கப்ரின் சோதனையிலிருந்து காப்பாற்றப்பட்டு அவர் ஷஹீத் என்று எழுதப்படுவார் என்றோ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


«مَنْ مَاتَ لَيْلَةَ الْجُمُعَةِ – أَوْ يَوْمَ الْجُمُعَةِ – بَرِئَ مِنْ فِتْنَةِ الْقَبْرِ»

أَوْ قَالَ: «وُقِيَ فِتْنَةَ الْقَبْرِ، وَكُتِبَ شَهِيَدًا»


Kubra-Bayhaqi-7179

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7179. பிலால் பின் யஹ்யா கூறியதாவது:

ஹுதைபா (ரலி) அவர்கள் தனது குடும்பத்தில் யாரேனும் மரணித்தால் அவரின் மரணச் செய்தியை அறிவிக்க வேண்டாம் எனக் கூறுவார்கள்.

ஏனெனில் மரண அறிவிப்புச் செய்வதில் இது சேருமோ என்று நான் பயப்படுகிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மரண செய்தியை அறிவிப்புச் செய்வதற்கு தடை விதித்ததை நான் செவியேற்றுள்ளேன் என்றும் கூறினார்கள்.


كَانَ حُذَيْفَةُ إِذَا كَانَتْ فِي أَهْلِهِ جِنَازَةٌ لَمْ يُؤْذِنْ بِهَا أَحَدًا وَيَقُولُ: ” إِنِّي أَخَافُ أَنْ يَكُونَ نَعْيًا إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى عَنِ النَّعْيِ


Musannaf-Ibn-Abi-Shaybah-11205

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

11205. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரண செய்தியை அறிவிப்புச் செய்வதற்கு தடை விதித்தார்கள்.

அறிவிப்பவர் : ஹுதைஃபா (ரலி)


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ النَّعْيِ»


Ibn-Majah-1476

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1476. பிலால் பின் யஹ்யா கூறியதாவது:

ஹுதைஃபா (ரலி) அவர்கள் யாரேனும் மரணித்தால் அவரின் மரணச் செய்தியை அறிவிக்க வேண்டாம் எனக் கூறுவார்கள்.

ஏனெனில் மரண அறிவிப்புச் செய்வதில் இது சேருமோ என்று நான் பயப்படுகிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மரண செய்தியை அறிவிப்புச் செய்வதற்கு தடை விதித்ததை என்னுடைய இந்த இரு காதுகளால் நான் செவியேற்றுள்ளேன் என்றும் கூறினார்கள்.


كَانَ حُذَيْفَةُ إِذَا مَاتَ لَهُ الْمَيِّتُ، قَالَ: لَا تُؤْذِنُوا بِهِ أَحَدًا، إِنِّي أَخَافُ أَنْ يَكُونَ نَعْيًا، إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأُذُنَيَّ هَاتَيْنِ، «يَنْهَى عَنِ النَّعْيِ»


Musnad-Ahmad-23455

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

23455. பிலால் பின் யஹ்யா கூறியதாவது:

ஹுதைஃபா (ரலி) அவர்கள் யாரேனும் மரணித்தால் அவரின் மரணச் செய்தியை அறிவிக்க வேண்டாம் எனக் கூறுவார்கள்.

ஏனெனில் மரண அறிவிப்புச் செய்வதில் இது சேருமோ என்று நான் பயப்படுகிறேன். மரண அறிவிப்புச் செய்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை செய்ததை நான் செவியேற்றுள்ளேன் என்றும் கூறினார்கள்.


أَنَّهُ كَانَ إِذَا مَاتَ لَهُ مَيِّتٌ قَالَ: لَا تُؤْذِنُوا بِهِ أَحَدًا، إِنِّي أَخَافُ أَنْ يَكُونَ نَعْيًا، «إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى عَنِ النَّعْيِ»


Musnad-Ahmad-23270

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

23270. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரண அறிவிப்புச் செய்வதற்கு தடை விதித்தார்கள்.

அறிவிப்பவர் : ஹுதைஃபா (ரலி)


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ النَّعْيِ»


Tirmidhi-986

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

986. நான் மரணித்து விட்டால் என்னைப் பற்றி அறிவிப்புச் செய்யாதீர்கள்! ஏனெனில் மரண அறிவிப்புச் செய்வதில் இது சேருமோ என்று நான் பயப்படுகிறேன். மரண அறிவிப்புச் செய்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை செய்ததை நான் செவியேற்றுள்ளேன் என்று ஹுதைஃபா (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர் : பிலால் பின் யஹ்யா


«إِذَا مِتُّ فَلَا تُؤْذِنُوا بِي، إِنِّي أَخَافُ أَنْ يَكُونَ نَعْيًا، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى عَنِ النَّعْيِ»


Almujam-Alkabir-9978

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

9978. அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள், மரண அறிவிப்புச் செய்வது அறியாமைக் கால வழக்கமாகும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அல்கமா பின் கைஸ் (ரஹ்)


«النَّعْيُ مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ»


Almujam-Alawsat-3061

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3061. மரணச் செய்தியை அறிவிப்பது கத்தி கூச்சிலிடுவதில் சேரும். கத்தி கூச்சிலிடுவது அறியாமைக் கால வழக்கமாகும் என்று அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அல்கமா பின் கைஸ் (ரஹ்)


«الْإِذْنُ مِنَ النَّعْيِ، وَالنَّعْيُ مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-11206

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

11206. அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள், மரண அறிவிப்புச் செய்வது அறியாமைக் கால வழக்கமாகும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அல்கமா பின் கைஸ் (ரஹ்)


«النَّعْيُ مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ»


Next Page » « Previous Page