Author: Farook

Abu-Dawood-640

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

640. உம்மு ஸல்மா (ரலி­) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் கீழங்கி இல்லாத போது நீளமான சட்டையுடனும் ஒரு முக்காடு உடனும் தொழலாமா என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீளமான சட்டை (பெண்ணுடைய) பாதங்களை மறைக்கக் கூடிய அளவிற்கு இருந்தால் தொழுது கொள்ளலாம் என்று பதிலளித்தார்கள்.


أَنَّهَا سَأَلَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَتُصَلِّي الْمَرْأَةُ فِي دِرْعٍ وَخِمَارٍ لَيْسَ عَلَيْهَا إِزَارٌ؟، قَالَ: «إِذَا كَانَ الدِّرْعُ سَابِغًا يُغَطِّي ظُهُورَ قَدَمَيْهَا»


Hakim-808

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

808. நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருக்கும் போது (சிலநேரம்) எங்களிடம் குர்ஆனை ஓதுபவர்களாக இருந்தனர். அவர்கள் ஸஜ்தா வசனத்தைக் கடக்கும் போது, ஸஜ்தா செய்வார்கள். அவர்களுடன் நாங்களும் செய்வோம்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


كُنَّا نَجْلِسُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَيَقْرَأُ الْقُرْآنَ فَرُبَّمَا مَرَّ بِسَجْدَةٍ فَيَسْجُدُ وَنَسْجُدُ مَعَهُ»


Abu-Dawood-1413

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

1413. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் குர்ஆனை ஓதுபவர்களாக இருந்தனர்.

அவர்கள் ஸஜ்தா வசனத்தைக் கடக்கும் போது, “தக்பீர் சொல்லி ஸஜ்தா செய்வார்கள்”. அவர்களுடன் நாங்களும் செய்வோம்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

ஸுப்யான் ஸவ்ரீ அவர்கள் இந்த ஹதீஸின் காரணமாக மகிழ்ச்சியடைந்தார்கள் என அப்துர்ரஸ்ஸாக் அவர்கள் கூறியதாக அஹ்மத் பின் ஃபுராத் கூறினார்.

ஸுப்யான் ஸவ்ரீ அவர்களின் மகிழ்ச்சிக்கு காரணம், அவர்கள் ஸஜ்தா வசனத்தை ஓதினால் (அல்லாஹு அக்பர் என்று) தக்பீர் கூறி ஸஜ்தா செய்வார் என்பதினாலாகும் என்று அபூதாவூத் இமாம் கூறுகிறார்.


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ عَلَيْنَا الْقُرْآنَ، فَإِذَا مَرَّ بِالسَّجْدَةِ كَبَّرَ، وَسَجَدَ وَسَجَدْنَا مَعَهُ»


Tirmidhi-2353

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2353. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

”பணக்காரர்களுக்கு (உலகத்தின்) ஐநூறு வருடங்களுக்கு முன்பாக ஏழைகள் சொர்க்கத்தில் நுழைவார்கள். (ஐநூறு வருடங்கள் என்பது அல்லாஹ்விடத்தில் ஒரு நாளின் பாதி நாளாகும்)

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«يَدْخُلُ الْفُقَرَاءُ الْجَنَّةَ قَبْلَ الْأَغْنِيَاءِ بِخَمْسِمِائَةِ عَامٍ نِصْفِ يَوْمٍ»


Nasaayi-3698

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3698. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன் அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கிற நாயைப் போன்றவன் ஆவான். (இது போன்ற) இழிகுணம் நமக்கு முறையல்ல.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


«لَيْسَ لَنَا مَثَلُ السَّوْءِ، الْعَائِدُ فِي هِبَتِهِ كَالْعَائِدِ فِي قَيْئِهِ»


Tirmidhi-1298

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1298. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன் அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கிற நாயைப் போன்றவன் ஆவான். (இது போன்ற) இழிகுணம் நமக்கு முறையல்ல.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இதே கருத்தில் இப்னு உமர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்துள்ள செய்தி:

அன்பளிப்பை கொடுத்து அதனை திரும்பப்பெறுவது ஒரு தந்தை தன்மகனுக்கு கொடுக்கின்ற விஷயத்தில் தவிர எந்த ஒரு முஸ்லி­முக்கு அது ஹலால் (அனுமதி) இல்லை.


«لَيْسَ لَنَا مَثَلُ السُّوءِ العَائِدُ فِي هِبَتِهِ كَالكَلْبِ يَعُودُ فِي قَيْئِهِ»

وَفِي البَابِ عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ «لَا يَحِلُّ لِأَحَدٍ أَنْ يُعْطِيَ عَطِيَّةً فَيَرْجِعَ فِيهَا إِلَّا الوَالِدَ فِيمَا يُعْطِي وَلَدَهُ»


Abu-Dawood-555

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

555. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் இஷா தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவர் இரவின் நடுப் பகுதி வரை நின்று தொழுதவர் போலாவார். யார் சுப்ஹு தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவர் இரவு முழுவதும் நின்று தொழுதவர் போலாவார்.

அறிவிப்பவர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)


«مَنْ صَلَّى الْعِشَاءَ فِي جَمَاعَةٍ كَانَ كَقِيَامِ نِصْفِ لَيْلَةٍ، وَمَنْ صَلَّى الْعِشَاءَ وَالْفَجْرَ فِي جَمَاعَةٍ كَانَ كَقِيَامِ لَيْلَةٍ»


Musnad-Ahmad-5999

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5999. குபாவில் உள்ள பனூ அம்ர் பின் அவ்ஃப் உடைய பள்ளியில் நான் தொழுது விட்டு வரும் போது நடந்து வந்து கொண்டிருந்த அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)யைச் சந்தித்தேன். அவரைக் கண்டதும் நான் என் கோவேறுக் கழுதையிலிருந்து இறங்கி, “என் சிறிய தந்தையே! இதில் ஏறிக் கொள்ளுங்கள்” என்று சொன்னேன்.

அதற்கு அவர், “என்னுடைய சகோதரரின் மகனே! இந்த வாகனத்தில் நான் ஏற வேண்டுமானால் (எனது வாகனத்திலேயே) ஏறி வந்திருப்பேன். எனினும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளியை நோக்கி வந்து அதில் தொழுகின்ற வரை அவர்கள் நடந்து வரத் தான் கண்டிருக்கின்றேன். எனவே அதைப் போல் நானும் பள்ளியை நோக்கி நடந்து வருவதையே விரும்புகின்றேன்” என்று பதில் அளித்தார்கள். வாகனத்தில் ஏறி வர மறுத்து தன் வழியிலேயே சென்று விட்டார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் கைஸ் பின் மக்ரமா


أَقْبَلْتُ مِنْ مَسْجِدِ بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ بِقُبَاءَ عَلَى بَغْلَةٍ لِي قَدْ صَلَّيْتُ فِيهِ، فَلَقِيتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ مَاشِيًا، فَلَمَّا رَأَيْتُهُ نَزَلْتُ عَنْ بَغْلَتِي ثُمَّ قُلْتُ: ارْكَبْ أَيْ عَمِّ؟ قَالَ: أَيِ ابْنَ أَخِي، لَوْ أَرَدْتُ أَنْ أَرْكَبَ الدَّوَابَّ لَوَجَدْتُهَا، وَلَكِنِّي «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْشِي إِلَى هَذَا الْمَسْجِدِ حَتَّى يَأْتِيَ فَيُصَلِّيَ فِيهِ» ، فَأَنَا أُحِبُّ أَنْ أَمْشِيَ إِلَيْهِ كَمَا رَأَيْتُهُ يَمْشِي ” قَالَ: فَأَبَى أَنْ يَرْكَبَ، وَمَضَى عَلَى وَجْهِهِ


Abu-Dawood-547

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 190

ஜமாஅத்தை விடுவதின் கடுமை.

547. “ஒரு நகரத்திலோ கிராமத்திலோ மூன்று பேர் இருந்து அவர்களுக்கு மத்தியில் தொழுகை நிலை நாட்டப் படவில்லையாயின் அத்தகையவர்களிடம் ஷைத்தான் ஆதிக்கம் செலுத்தாமல் விட மாட்டான். எனவே நீங்கள் ஜமாஅத்தை வலுவாகப் பிடித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக ஓநாய் அடித்துத் தின்னுவது தனித்த ஆட்டைத் தான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.

அறிவிப்பவர் : அபூதர்தா (ரலி)

ஜமாஅத்தை கடைபிடித்து கொள்க! என்றால் கூட்டுத் தொழுகையை கடைபிடித்துக் கொள்க! என்று விளக்கம் ஆகும் என ஸாயிப் கூறியதாக ஸாயிதா தெரிவிக்கின்றார்.


«مَا مِنْ ثَلَاثَةٍ فِي قَرْيَةٍ وَلَا بَدْوٍ لَا تُقَامُ فِيهِمُ الصَّلَاةُ إِلَّا قَدِ اسْتَحْوَذَ عَلَيْهِمُ الشَّيْطَانُ، فَعَلَيْكَ بِالْجَمَاعَةِ فَإِنَّمَا يَأْكُلُ الذِّئْبُ الْقَاصِيَةَ»


Next Page » « Previous Page