Author: Farook

Tirmidhi-1173

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

1173. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெண் என்பவள் (மறைக்கப்பட வேண்டிய) மானம். அவள் வெளியே செல்லும் போது ஷைத்தான் அவளை அலங்கரித்துக் காட்டுகின்றான்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)


«المَرْأَةُ عَوْرَةٌ، فَإِذَا خَرَجَتْ اسْتَشْرَفَهَا الشَّيْطَانُ»


Tirmidhi-1163

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1163. …பெண்களிடம் நன்மைகளைப் போதியுங்கள். அவர்கள் உங்களிடம் அடைக்கலமாக (இருக்கிறார்கள்). இ(ல்லறத்)தைத் தவிர வேறு எதையும் நீங்கள் உரிமையாகப் பெறவில்லை. அவர்கள் தெளிவான மானக் கேட்டைச் செய்தாலே தவிர! அவர்கள் அவ்வாறு செய்தால் படுக்கையிலிருந்து ஒதுக்குங்கள்; காயமின்றி அடியுங்கள்; அவர்கள் கட்டுப்பட்டு விட்டால் வேறு எந்த வழியிலும் அவர்களிடம் வரம்பு மீறாதீர்கள்.

நீங்கள் உங்கள் மனைவியருக்குச் செய்ய வேண்டிய கடமை உங்கள் மீது இருக்கின்றது. உங்கள் மனைவியர் உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமையும் உண்டு. உங்கள் மனைவியர் உங்களுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகள், நீங்கள் வெறுக்கும் வகையில் அடுத்தவர்களுடன் உங்கள் படுக்கைகளைப் பகிர்ந்து விடக் கூடாது; உங்களுக்குப் பிடிக்காதவர்களை உங்கள் வீடுகளில் அனுமதிக்கக்கூடாது.

அறிந்து கொள்ளுங்கள்! அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய உடைகளிலும், உணவிலும் தாராளமான முறையில் நடந்து கொள்வதே நீங்கள் உங்கள் மனைவியருக்குச் செய்யும் கடமையாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜதுல் வதாவில் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்…

அறிவிப்பவர் : அம்ர் பின் அல்அஹ்வஸ் (ரலி)


أَنَّهُ شَهِدَ حَجَّةَ الوَدَاعِ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَحَمِدَ اللَّهَ، وَأَثْنَى عَلَيْهِ، وَذَكَّرَ، وَوَعَظَ، فَذَكَرَ فِي الحَدِيثِ قِصَّةً، فَقَالَ: «أَلَا وَاسْتَوْصُوا بِالنِّسَاءِ خَيْرًا، فَإِنَّمَا هُنَّ عَوَانٌ عِنْدَكُمْ، لَيْسَ تَمْلِكُونَ مِنْهُنَّ شَيْئًا غَيْرَ ذَلِكَ، إِلَّا أَنْ يَأْتِينَ بِفَاحِشَةٍ مُبَيِّنَةٍ، فَإِنْ فَعَلْنَ فَاهْجُرُوهُنَّ فِي المَضَاجِعِ، وَاضْرِبُوهُنَّ ضَرْبًا غَيْرَ مُبَرِّحٍ، فَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلًا، أَلَا إِنَّ لَكُمْ عَلَى نِسَائِكُمْ حَقًّا، وَلِنِسَائِكُمْ عَلَيْكُمْ حَقًّا، فَأَمَّا حَقُّكُمْ عَلَى نِسَائِكُمْ فَلَا يُوطِئْنَ فُرُشَكُمْ مَنْ تَكْرَهُونَ، وَلَا يَأْذَنَّ فِي بُيُوتِكُمْ لِمَنْ تَكْرَهُونَ، أَلَا وَحَقُّهُنَّ عَلَيْكُمْ أَنْ تُحْسِنُوا إِلَيْهِنَّ فِي كِسْوَتِهِنَّ وَطَعَامِهِنَّ»


Almujam-Alkabir-355

ஹதீஸின் தரம்: Pending

355. …

பறவை சகுனம் பார்ப்பவனும், (தனக்காக) சகுனம் பார்க்க கூறியவனும், சோதிடம் பார்ப்பவனும், (தனக்காக)  சோதிடம் பார்க்க கூறியவனும், சூனியம் செய்பவனும், (பிறருக்கு)  சூனியம் செய்ய கூறியவனும் நம்மைச் சார்ந்தவனல்ல.


رَأَى رَجُلًا فِي عَضُدِهِ حَلْقَةً مِنَ صُفَرٍ، فَقَالَ لَهُ: مَا هَذِهِ؟ قَالَ: نُعِتَتْ لِي مِنَ الْوَاهِنَةِ قَالَ: أَمَا إِنْ مُتَّ وَهِيَ عَلَيْكَ وُكِلْتَ إِلَيْهَا، قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ مِنَّا مَنْ تَطَيَّرَ وَلَا تُطُيِّرَ لَهُ، وَلَا تَكَهَّنَ وَلَا تُكُهِّنَ لَهُ» أَظُنُّهُ قَالَ: «أَوْ سَحَرَ أَوْ سُحِرَ لَهُ»


Bazzar-3578

ஹதீஸின் தரம்: Pending

3578. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பறவை சகுனம் பார்ப்பவனும், (தனக்காக) சகுனம் பார்க்க கூறியவனும், சோதிடம் பார்ப்பவனும், (தனக்காக)  சோதிடம் பார்க்க கூறியவனும், சூனியம் செய்பவனும், (பிறருக்கு)  சூனியம் செய்ய கூறியவனும் நம்மைச் சார்ந்தவனல்ல.

யார் கயிற்றில் முடிச்சிடுகிறானோ அவனும், குறிகாரனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை எனக் கருதுகிறானோ அவனும் இந்த முஹம்மது (ஸல்) அவர்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்தை) நிராகரித்து விட்டனர்.

அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)


لَيْسَ مِنَّا مَنْ تَطَيَّرَ أَوْ تُطُيِّرَ لَهُ، أَوْ تَكَهَّنَ أَوْ تُكُهِّنَ لَهُ، أَوْ سَحَرَ أَوْ سُحِرَ لَهُ، وَمَنْ عَقَدَ عُقْدَةً – أَوْ قَالَ: مَنْ عَقَدَ عُقْدَةً – وَمَنْ أَتَى كَاهِنًا فَصَدَّقَهُ بِمَا يَقُولُ فَقَدْ كَفَرَ بِمَا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Musannaf-Abdur-Razzaq-20682

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

20682. யார் கயிற்றில் முடிச்சிட்டு, அதில் ஊதுகிறாரோ அவர் சூனியம் செய்துவிட்டார். யார் சூனியம் செய்தாரோ அவர் அல்லாஹ்வை நிராகரித்து விட்டார்.

யார் தாயத் (போன்ற)தை தொங்க விடுகின்றாரோ அவர் அதன்பால் சாட்டப்படுவார். (அவருக்கு அல்லாஹ் பொருப்பாளனாக ஆக மாட்டான்).

அறிவிப்பவர் : ஹஸன் பஸரீ (ரஹ்)


مَنْ عَقَدَ عُقْدَةً فِيهَا رُقْيَةٌ، فَقَدْ سَحَرَ، وَمَنْ سَحَرَ، فَقَدْ كَفَرَ، وَمَنْ عَلَّقَ عُلْقَةً وُكِلَ إِلَيْهَا.


Almujam-Alawsat-1469

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

1469. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் கயிற்றில் முடிச்சிட்டு, அதில் ஊதுகிறாரோ அவர் சூனியம் செய்துவிட்டார். யார் சூனியம் செய்தாரோ அவர் அல்லாஹ்விற்கு இணைவைத்துவிட்டார்.

யார் தாயத் (போன்ற)தை தொங்க விடுகின்றாரோ அவர் அதன்பால் சாட்டப்படுவார். (அவருக்கு அல்லாஹ் பொருப்பாளனாக ஆக மாட்டான்).

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَنْ عَقَدَ عُقْدَةً، ثُمَّ نَفَثَ فِيهَا، فَقَدْ سَحَرَ، وَمَنْ سَحَرَ فَقَدْ أَشْرَكَ، وَمَنْ تَعَلَّقَ شَيْئًا وُكِلَ إِلَيْهِ»


Kubra-Nasaayi-3528

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

3528. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் கயிற்றில் முடிச்சிட்டு, அதில் ஊதுகிறாரோ அவர் சூனியம் செய்துவிட்டார். யார் சூனியம் செய்தாரோ அவர் அல்லாஹ்விற்கு இணைவைத்துவிட்டார்.

யார் தாயத் (போன்ற)தை தொங்க விடுகின்றாரோ அவர் அதன்பால் சாட்டப்படுவார். (அவருக்கு அல்லாஹ் பொருப்பாளனாக ஆக மாட்டான்).

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَنْ عَقَدَ عُقْدَةً ثُمَّ نَفَثَ فِيهَا فَقَدْ سَحَرَ، وَمَنْ سَحَرَ فَقَدْ أَشْرَكَ، وَمَنْ تَعَلَّقَ شَيْئًا وُكِلَ إِلَيْهِ»


Nasaayi-4079

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்:

சூனியக்காரர்களைப் பற்றிய (நபி-ஸல்-அவர்களின்) முடிவு.

4079. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் கயிற்றில் முடிச்சிட்டு, அதில் ஊதுகிறாரோ அவர் சூனியம் செய்துவிட்டார். யார் சூனியம் செய்தாரோ அவர் அல்லாஹ்விற்கு இணை வைத்துவிட்டார்.

யார் (தாயத் போன்ற எதையேனும்) மாட்டிக் கொள்கிறாரோ அவர் அதன்பால் சாட்டப்படுவார். (அவருக்கு அல்லாஹ் பொருப்பாளனாக ஆக மாட்டான்).

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَنْ عَقَدَ عُقْدَةً، ثُمَّ نَفَثَ فِيهَا فَقَدْ سَحَرَ، وَمَنْ سَحَرَ فَقَدْ أَشْرَكَ، وَمَنْ تَعَلَّقَ شَيْئًا وُكِلَ إِلَيْهِ»


Hakim-7513

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7513. உக்பா பின்ஆமிர் (ரலி) கூறியதாவது:

நாங்கள் பத்து பேர் கொண்ட ஒரு குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்  சென்ற போது ஒன்பது நபர்களிடம் வாக்குறுதிப் பிரமாணம் வாங்கி கொண்டு ஒருவரிடம் வாங்கவில்லை. அதற்கு சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே, இவரை மட்டும் ஏன் விட்டுவிட்டீர்கள் என கேட்க, அவர் தோளில் தாயத் அணிந்து உள்ளார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அந்த மனிதர் தாயத்தை அறுத்தெரிந்தார். அதன் பிறகு நபி (ஸல்) அவர்கள் அவரிடம் வாக்குறுதிப் பிரமாணம் வாங்கினார்கள். அதன் பிறகு நபி (ஸல்) கூறினார்கள்: யார் (தாயத்தைத்) தொங்க விடுகிறாரோ அவர் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டார்.


أَنَّهُ جَاءَ فِي رَكْبِ عَشَرَةٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَايَعَ تِسْعَةً وَأَمْسَكَ عَنْ بَيْعَةِ رَجُلٍ مِنْهُمْ، فَقَالُوا: مَا شَأْنُ هَذَا الرَّجُلِ لَا تُبَايِعُهُ؟ فَقَالَ: «إِنَّ فِي عَضُدِهِ تَمِيمَةً» فَقَطَعَ الرَّجُلُ التَّمِيمَةَ، فَبَايَعَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ: «مَنْ عَلَّقَ فَقَدْ أَشْرَكَ»


Almujam-Alkabir-885

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

885. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பத்து பேர் (கொண்ட ஒரு குழுவினர் ) வந்தபோது ஒன்பது நபர்களிடம் வாக்குறுதிப் பிரமாணம் வாங்கி கொண்டு ஒருவரிடம் வாங்கவில்லை. அதற்கு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே, இவரை மட்டும் ஏன் விட்டுவிட்டீர்கள் என கேட்க, அவர் தாயத் அணிந்து உள்ளார் என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் தனது கையால் அதை அறுத்தெரிந்து விட்டு அவரிடம் வாக்குறுதிப் பிரமாணம் வாங்கினார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)


أَنَّ عَشَرَةً أَتَوُا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُبَايِعُونَ فَبَايَعَ تِسْعَةً وَأَمْسَكَ عَنْ وَاحِدٍ قَالُوا: يَا رَسُولَ اللهِ، بَايَعْتَ تِسْعَةً وَأَمْسَكْتَ عَنْ هَذَا؟ قَالَ: «إِنَّ هَذَا عَلَيْهِ تَمِيمَةٌ» فَأَدْخَلَ يَدَهُ فَقَطَعَهَا فَبَايَعَهُ


Next Page » « Previous Page