Author: Farook

Musannaf-Abdur-Razzaq-2019

ஹதீஸின் தரம்: More Info

2019. அனஸ் (ரலி) கூறினார்கள்:

யார் நாற்பது நாட்கள் தொடர்ந்து முதல் ரக்அத் தவறிவிடாமல்  ஜமாஅத்துடன் தொழுவாரோ அவருக்கு இரண்டு விடுதலை பத்திரங்கள் கிடைக்கின்றன. ஒன்று நரகிலிருந்து விடுதலை, மற்றொன்று  நயவஞ்சகத்தனத்தில் இருந்து விடுதலை.


«مَنْ لَمْ تَفُتْهُ الرَّكْعَةُ الْأُولَى مِنَ الصَّلَاةِ أَرْبَعِينَ يَوْمًا، كُتِبَتْ لَهُ بَرَاءَتَانِ، بَرَاءَةٌ مِنَ النَّارِ، وَبَرَاءَةٌ مِنَ النِّفَاقِ»


Ibn-Majah-798

ஹதீஸின் தரம்: More Info

798. உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

யார் நாற்பது நாட்கள் தொடர்ந்து இஷாத் தொழுகையின் முதல் ரக்அத் தவறிவிடாமல்  ஜமாஅத்துடன் தொழுவாரோ அவருக்கு நரகிலிருந்து விடுதலை என்று அல்லாஹ் எழுதிவிடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்.


«مَنْ صَلَّى فِي مَسْجِدٍ جَمَاعَةً أَرْبَعِينَ لَيْلَةً، لَا تَفُوتُهُ الرَّكْعَةُ الْأُولَى مِنْ صَلَاةِ الْعِشَاءِ، كَتَبَ اللَّهُ لَهُ بِهَا عِتْقًا مِنَ النَّارِ»


Tirmidhi-241

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

241. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் நாற்பது நாட்கள் (தொடர்ந்து) ஜமாஅத்துடன் முதல் தக்பீரில் தொழுவாரோ அவருக்கு இரண்டு விடுதலை பத்திரங்கள் எழுதப்படுகின்றன. ஒன்று நரகிலிருந்து விடுதலை, மற்றொன்று  நயவஞ்சகத்தனத்தில் இருந்து விடுதலை.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


مَنْ صَلَّى لِلَّهِ أَرْبَعِينَ يَوْمًا فِي جَمَاعَةٍ يُدْرِكُ التَّكْبِيرَةَ الأُولَى كُتِبَ لَهُ بَرَاءَتَانِ: بَرَاءَةٌ مِنَ النَّارِ، وَبَرَاءَةٌ مِنَ النِّفَاقِ


Tirmidhi-3916

ஹதீஸின் தரம்: More Info

3916. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என்னுடைய வீட்டிற்கும் என்னுடைய மிம்பருக்கும் இடைப்பட்ட பகுதி சுவர்க்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும். ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட என்னுடைய இந்தப் பள்ளியில் ஒரு தொழுகை தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الجَنَّةِ»

وَبِهَذَا الإِسْنَادِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا خَيْرٌ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ مِنَ المَسَاجِدِ إِلَّا المَسْجِدَ الحَرَامَ»


Tirmidhi-325

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

325. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட என்னுடைய இந்தப் பள்ளியில் ஒரு தொழுகை தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا خَيْرٌ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ، إِلَّا المَسْجِدَ الحَرَامَ»


Abi-Yala-6555

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6555. ( அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட என்னுடைய இந்தப் பள்ளியில் ஒரு தொழுகை தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரி (ரலி) )

 

முன் சென்ற ஹதீஸ் ( எண் 6554) , வேறு அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

 


بِمِثْلِ ذَلِكَ


Abi-Yala-6554

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6554. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட என்னுடைய இந்தப் பள்ளியில் ஒரு தொழுகை தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا خَيْرٌ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ، إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ»


Abi-Yala-1165

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1165. அபூ ஸயீத் அல்குத்ரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், பயணம் செல்லும் ஒரு மனிதரை வழியனுப்பினார்கள். அப்போது எங்கே செல்ல நாடுகிறீர்? என்று கேட்க, அந்த மனிதர் பைத்துல் மக்திஸ் என்று பதிலளித்தார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட என்னுடைய இந்தப் பள்ளியில் ஒரு தொழுகை தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர” என்று கூறினார்கள்.


وَدَّعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا فَقَالَ لَهُ: «أَيْنَ تُرِيدُ؟» قَالَ: أُرِيدُ بَيْتَ الْمَقْدِسِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَلَاةٌ فِي مَسْجِدِي أَفْضَلُ مِنْ مِائَةٍ فِي غَيْرِهِ إِلَّا الْمَسْجِدَ الْحَرَامِ»


Ibn-Hibban-1624

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1624. அபூ ஸயீத் அல்குத்ரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், பயணம் செல்லும் ஒரு மனிதரை வழியனுப்பினார்கள். அப்போது எங்கே செல்ல நாடுகிறீர்? என்று கேட்க, அந்த மனிதர் பைத்துல் மக்திஸ் என்று பதிலளித்தார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட என்னுடைய இந்தப் பள்ளியில் ஒரு தொழுகை தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர” என்று கூறினார்கள்.


وَدَّعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا، فَقَالَ: «أَيْنَ تُرِيدُ؟ » قَالَ: أُرِيدُ بَيْتَ الْمَقْدِسِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَلَاةٌ فِي هَذَا الْمَسْجِدِ أَفْضَلُ مِنْ مِائَةِ صَلَاةٍ فِي غَيْرِهِ، إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ»


Darimi-1623

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1623. நீ ஐந்து ரக்அத் வித்ரு தொழு! முடியாவிட்டால் மூன்று ரக்அத் வித்ரு தொழு! அதற்கும் முடியாவிட்டால் ஒரு ரக்அத் வித்ரு தொழு! அதுவும் முடியாவிட்டால் சைகை செய்து (தொழுது) கொள்’ என்று எனக்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி)


قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوْتِرْ بِخَمْسٍ، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَبِثَلَاثٍ، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَبِوَاحِدَةٍ، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَأَوْمِئ ْ إِيمَاءً»


Next Page » « Previous Page