Author: Farook

Tirmidhi-1327

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

நீதிபதி எவ்வாறு தீர்ப்பளிக்க வேண்டும்? என்பது குறித்து வந்துள்ளவை.

1327. நபி (ஸல்) அவர்கள், முஆத் (ரலி) அவர்களை யமன் (எனும்) நாட்டுக்கு அனுப்பும் போது, “(பிரச்சனை ஏற்படும்போது) நீ எவ்வாறு தீர்ப்பளிப்பாய்? என்று கேட்டார்கள். அதற்கவர்கள், “நான் அல்லாஹ்வின் வேதத்தில் இருப்பதைக் கொண்டு தீர்ப்பளிப்பேன்” என்று பதிலளித்தார். (அந்தப் பிரச்சனைப் பற்றி) அல்லாஹ்வின் வேதத்தில் இல்லையென்றால் (எவ்வாறு தீர்ப்பளிப்பாய்?) என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், “அல்லாஹ்வின் தூதரின் வழிமுறையில் உள்ளதைக் கொண்டு தீர்ப்பளிப்பேன்” என்று பதிலளித்தார்.

அல்லாஹ்வின் தூதருடைய வழிமுறையிலும் இல்லையென்றால் (எவ்வாறு தீர்ப்பளிப்பாய்?) என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், “என்னுடைய சிந்தனையைக் கொண்டு ஆய்வு செய்வேன்” என்று பதிலளித்தார். (உடனே) நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரின் தூதருக்கு நல்வழி காட்டிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்கள்: முஆத் (ரலி) அவர்களின் தோழர்கள்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ مُعَاذًا إِلَى اليَمَنِ، فَقَالَ: «كَيْفَ تَقْضِي؟»، فَقَالَ: أَقْضِي بِمَا فِي كِتَابِ اللَّهِ، قَالَ: «فَإِنْ لَمْ يَكُنْ فِي كِتَابِ اللَّهِ؟»، قَالَ: فَبِسُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «فَإِنْ لَمْ يَكُنْ فِي سُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟»، قَالَ: أَجْتَهِدُ رَأْيِي، قَالَ: «الحَمْدُ لِلَّهِ الَّذِي وَفَّقَ رَسُولَ رَسُولِ اللَّهِ»


Bazzar-2232

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2232. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்களுக்கு முன்பிருந்த சமுதாயத்திடம் ஏற்பட்ட பொறாமை, குரோதம் எனும் நோய் உங்களுக்கும் ஏற்பட்டு விட்டது. அவை மழித்துவிடக் கூடியது. அவை முடியை மழிக்கும் என்று நான் கூறவில்லை. மாறாக மார்க்கத்தை மழித்து விடும்.

“என் உயிர் யார் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாதவரையில் சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக முடியாது. உங்கள் உள்ளத்தில் நேசத்தை ஏற்படுத்தும் ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? உங்களிடையே சலாத்தைப் பரப்புங்கள். (அதனால் நீங்கள் நேசம் கொள்ளலாம்)…

அறிவிப்பவர் : ஸுபைர் பின் அவ்வாம் (ரலி)


«دَبَّ إِلَيْكُمْ دَاءُ الْأُمَمِ قَبْلَكُمُ الْبَغْضَاءُ وَالْحَسَدُ، وَالْبَغْضَاءُ وَهِيَ الْحَالِقَةُ، لَيْسَ حَالِقَةَ الشَّعْرِ لَكِنْ حَالِقَةَ الدِّينِ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا تَدْخُلُوا الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا، وَلَا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا، أَفَلَا أُنَبِّئُكُمْ – أَظُنُّهُ بِمَا يَثْبُتُ لَكُمْ – أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ»


Abi-Yala-669

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

669. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்களுக்கு முன்பிருந்த சமுதாயத்திடம் ஏற்பட்ட பொறாமை, குரோதம் எனும் நோய் உங்களுக்கும் ஏற்பட்டு விட்டது. அவை மழித்துவிடக் கூடியது. அவை முடியை மழிக்கும் என்று நான் கூறவில்லை. மாறாக மார்க்கத்தை மழித்து விடும்.

“என் உயிர் யார் கையிலுள்ளதோ (அல்லது இந்த முஹம்மதின் (ஸல்) உயிர் யார் கையிலுள்ளதோ) அவன்மீது சத்தியமாக! நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாதவரையில் சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக முடியாது. உங்கள் உள்ளத்தில் நேசத்தை ஏற்படுத்தும் ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? உங்களிடையே சலாத்தைப் பரப்புங்கள். (அதனால் நீங்கள் நேசம் கொள்ளலாம்)

அறிவிப்பவர் : ஸுபைர் பின் அவ்வாம் (ரலி)


دَبَّ إِلَيْكُمْ دَاءُ الْأُمَمِ قَبْلَكُمُ: الْحَسَدُ وَالْبَغْضَاءُ، وَهِيَ الْحَالِقَةُ، لَا أَقُولُ: حَالِقَةُ الشَّعَرِ، وَلَكِنْ حَالِقَةُ الدَّيْنِ، وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَا تَدْخُلُوا الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا، وَلَا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا، أَلَا أُنَبِّئُكُمْ بِمَا يُثْبِتُ ذَلِكَ لَكُمْ؟ أَفْشُوا السَّلَامَ


Musnad-Ahmad-1430

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1430. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்களுக்கு முன்பிருந்த சமுதாயத்திடம் ஏற்பட்ட பொறாமை, குரோதம் எனும் நோய் உங்களுக்கும் ஏற்பட்டு விட்டது. குரோதம் மழித்துவிடக் கூடியது. அவை முடியை மழிக்கும் என்று நான் கூறவில்லை. மாறாக மார்க்கத்தை மழித்து விடும்.

“என் உயிர் யார் கையிலுள்ளதோ (அல்லது இந்த முஹம்மதின் (ஸல்) உயிர் யார் கையிலுள்ளதோ) அவன்மீது சத்தியமாக! நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாதவரையில் சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக முடியாது. உங்கள் உள்ளத்தில் நேசத்தை ஏற்படுத்தும் ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? உங்களிடையே சலாத்தைப் பரப்புங்கள். (அதனால் நீங்கள் நேசம் கொள்ளலாம்)

அறிவிப்பவர் : ஸுபைர் பின் அவ்வாம் (ரலி)


دَبَّ إِلَيْكُمْ دَاءُ الْأُمَمِ قَبْلَكُمْ: الْحَسَدُ، وَالْبَغْضَاءُ، وَالْبَغْضَاءُ: هِيَ الْحَالِقَةُ، لَا أَقُولُ تَحْلِقُ الشَّعْرَ، وَلَكِنْ تَحْلِقُ الدِّينَ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ – أَوْ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ – لَا تَدْخُلُوا الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا، وَلا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا، أَفَلا أُنَبِّئُكُمْ بِمَا يُثَبِّتُ ذَلِكَ لَكُمْ، أَفْشُوا السَّلامَ بَيْنَكُمْ


Tirmidhi-2510

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

2510. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கு முன்பிருந்த சமுதாயத்திடம் ஏற்பட்ட பொறாமை, குரோதம் எனும் நோய் உங்களுக்கும் ஏற்பட்டு விட்டது. அவை தான் மழித்துவிடக் கூடியது. அவை முடியை மழிக்கும் என்று நான் கூறவில்லை. மாறாக மார்க்கத்தை மழித்து விடும்.

“என் உயிர் யார் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாதவரையில் சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக முடியாது. ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம். உங்களிடையே சலாத்தைப் பரப்புங்கள். (அதனால் நீங்கள் நேசம் கொள்ளலாம்)

அறிவிப்பவர்: ஸுபைர் பின் அவ்வாம் (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

சில அறிவிப்பாளர்தொடர்களில் ஸுபைர் (ரலி) அவர்களின் அடிமைக்கும், நபி (ஸல்) அவர்களுக்குமிடையில் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறப்படாமல் வந்துள்ளது.

(பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-190)

 


دَبَّ إِلَيْكُمْ دَاءُ الأُمَمِ قَبْلَكُمْ: الحَسَدُ وَالبَغْضَاءُ، هِيَ الحَالِقَةُ، لَا أَقُولُ تَحْلِقُ الشَّعَرَ وَلَكِنْ تَحْلِقُ الدِّينَ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا تَدْخُلُوا الجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا، وَلَا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا، أَفَلَا أُنَبِّئُكُمْ بِمَا يُثَبِّتُ ذَلِكَ لَكُمْ؟ أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ


Ibn-Majah-90

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

90. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

(பிறருக்கு) நன்மை புரிவதைத் தவிர வேறெதுவும் ஆயுளை அதிகப்படுத்தாது. பிரார்த்தனையைத் தவிர வேறெதுவும் விதியை மாற்றாது. மனிதன் செய்கின்ற பாவத்தின் காரணத்தால் அவனுக்கு பரக்கத் கிடைக்காமல் போகின்றது.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)


«لَا يَزِيدُ فِي الْعُمْرِ إِلَّا الْبِرُّ، وَلَا يَرُدُّ الْقَدَرَ إِلَّا الدُّعَاءُ، وَإِنَّ الرَّجُلَ لَيُحْرَمُ الرِّزْقَ بِخَطِيئَةٍ يَعْمَلُهَا»


Abu-Dawood-2540

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2540. பாங்கின் போதும், சிலர் சிலருடன் மோதும் போர்க் களத்திலும் பிரார்த்தனைகள் மறுக்கப்படுவதில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)


«ثِنْتَانِ لَا تُرَدَّانِ، أَوْ قَلَّمَا تُرَدَّانِ الدُّعَاءُ عِنْدَ النِّدَاءِ، وَعِنْدَ الْبَأْسِ حِينَ يُلْحِمُ بَعْضُهُمْ بَعْضًا»


Ibn-Khuzaymah-1739

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1739. அபூபுர்தா பின் அபீமூசா அல் அஷ்அரீ அவர்கள் கூறுகிறார்கள் :

என்னிடம் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “வெள்ளிக்கிழமையில் உள்ள அந்த (அரிய) நேரம் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உம் தந்தையார் அறிவித்த ஹதீஸை நீர் செவியுற்றீரா?” என்று கேட்டார்கள். நான் கூறினேன்: ஆம் ; என் தந்தை பின்வருமாறு அறிவித்ததை நான் செவியுற்றேன்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அது, இமாம் மிம்பர் மீது அமர்வதற்கும் தொழுகை முடிவதற்கும் இடையே உள்ள ஒரு நேரமாகும்.


قَالَ لِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: أَسَمِعْتَ أَبَاكَ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شَأْنِ سَاعَةِ الْجُمُعَةِ؟ قَالَ: قُلْتُ: نَعَمْ , سَمِعْتُهُ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «هِيَ مَا بَيْنَ أَنْ يَجْلِسَ الْإِمَامُ عَلَى الْمِنْبَرِ إِلَى أَنْ تُقْضَى الصَّلَاةُ»

نا أَحْمَدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ , نا عَمِّي , حَدَّثَنِي مَيْمُونُ بْنُ يَحْيَى وَهُوَ ابْنُ أَخِي مَخْرَمَةَ , عَنْ مَخْرَمَةَ , عَنْ أَبِيهِ بِهَذَا الْإِسْنَادِ مِثْلِهِ سَوَاءً

 


Abu-Dawood-2675

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2675. நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அவர்கள் ஒரு தேவைக்காக வெளியே சென்றார்கள். அப்போது நாங்கள் சிறு குருவியையும் அதன் இரு குஞ்சுகளையும் கண்டோம். நாங்கள் இரு குஞ்சுகளையும் எடுத்துக் கொண்டோம். தாய்ப் பறவை சிறகடித்துக் கொண்டு வந்தது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்து விட்டனர். இந்தத் தாய்ப் பறவையைப் பதறச் செய்தவர் யார் என்று கேட்டு விட்டு அதன் குஞ்சுகளை அதனிடம் விட்டு விடுங்கள் எனக் கூறினார்கள். மேலும் ஒரு எறும்புப் புற்றை நாங்கள் எரித்திருப்பதையும் அவர்கள் கண்டனர். யார் இதை எரித்தவர் என்று கேட்ட போது நாங்கள் தான் என்று கூறினோம். நெருப்பின் சொந்தக்காரன் (அல்லாஹ்) தவிர வேறு யாரும் நெருப்பின் மூலம் தண்டிக்கக் கூடாது எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி)


كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَانْطَلَقَ لِحَاجَتِهِ فَرَأَيْنَا حُمَرَةً مَعَهَا فَرْخَانِ فَأَخَذْنَا فَرْخَيْهَا، فَجَاءَتِ الْحُمَرَةُ فَجَعَلَتْ تَفْرِشُ، فَجَاءَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «مَنْ فَجَعَ هَذِهِ بِوَلَدِهَا؟ رُدُّوا وَلَدَهَا إِلَيْهَا». وَرَأَى قَرْيَةَ نَمْلٍ قَدْ حَرَّقْنَاهَا فَقَالَ: «مَنْ حَرَّقَ هَذِهِ؟» قُلْنَا: نَحْنُ. قَالَ: «إِنَّهُ لَا يَنْبَغِي أَنْ يُعَذِّبَ بِالنَّارِ إِلَّا رَبُّ النَّارِ»


Shuabul-Iman-2267

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2267.

…ஒவ்வொரு இரவும் அல்வாகிஆ அத்தியாயத்தை யார் ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு போதும் வறுமை ஏற்படாது…

அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)


أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ رَضِيَ اللهُ عَنْهُ، عَادَ ابْنَ مَسْعُودٍ فِي مَرَضِهِ، فَقَالَ: مَا تَشْتَكِي؟ قَالَ: ذُنُوبِي، قَالَ: فَمَا تَشْتَهِي؟ قَالَ: رَحْمَةَ رَبِّي، قَالَ: أَلَا نَدْعُو لَكَ الطَّبِيبَ؟ قَالَ: الطَّبِيبُ أَمْرَضَنِي، قَالَ: أَلَا آمُرُ لَكَ بِعَطَائِكَ؟ قَالَ: ما مَنَعْتَنِيهِ قَبْلَ الْيَوْمِ فَلَا حَاجَةَ لِي فِيهِ، قَالَ: تَدَعْهُ لَأَهْلِكَ وَعِيَالِكَ، قَالَ: إِنِّي قَدْ عَلَّمْتُهُمْ شَيْئًا إِذَا قَالُوهُ لَمْ يَفْتَقِرُوا، سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” مَنْ قَرَأَ الْوَاقِعَةَ كُلَّ لَيْلَةٍ لَمْ يَفْتَقِرْ


Next Page » « Previous Page