தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Shuabul-Iman-2267

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

…ஒவ்வொரு இரவும் அல்வாகிஆ அத்தியாயத்தை யார் ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு போதும் வறுமை ஏற்படாது…

அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)

(shuabul-iman-2267: 2267)

أَخْبَرَنَا أَبُو الْحُسَيْنِ بْنُ الْفَضْلِ الْقَطَّانُ، أَخْبَرَنا عَبْدُ اللهِ بْنُ جَعْفَرٍ، حدثنا يَعْقُوبُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا الْحَجَّاجُ، عَنِ السَّرِيِّ بْنِ يَحْيَى الشَّيْبَانِيِّ أَبِي الْهَيْثَمِ، عَنْ شُجَاعٍ، عَنْ أَبِي فَاطِمَةَ،

أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ رَضِيَ اللهُ عَنْهُ، عَادَ ابْنَ مَسْعُودٍ فِي مَرَضِهِ، فَقَالَ: مَا تَشْتَكِي؟ قَالَ: ذُنُوبِي، قَالَ: فَمَا تَشْتَهِي؟ قَالَ: رَحْمَةَ رَبِّي، قَالَ: أَلَا نَدْعُو لَكَ الطَّبِيبَ؟ قَالَ: الطَّبِيبُ أَمْرَضَنِي، قَالَ: أَلَا آمُرُ لَكَ بِعَطَائِكَ؟ قَالَ: ما مَنَعْتَنِيهِ قَبْلَ الْيَوْمِ فَلَا حَاجَةَ لِي فِيهِ، قَالَ: تَدَعْهُ لَأَهْلِكَ وَعِيَالِكَ، قَالَ: إِنِّي قَدْ عَلَّمْتُهُمْ شَيْئًا إِذَا قَالُوهُ لَمْ يَفْتَقِرُوا، سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” مَنْ قَرَأَ الْوَاقِعَةَ كُلَّ لَيْلَةٍ لَمْ يَفْتَقِرْ

تَفَرَّدَ بِهِ شُجَاعٌ بن عطية هَذَا “، وَرَوَاهُ ابْنُ وَهْبٍ عَنِ السَّرِيِّ بْنِ يَحْيَى، أَنَّ شُجَاعًا، حَدَّثَهُ عَنْ أَبِي ظَبْيَةَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ


Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-2267.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-2281.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ராவீ-2227-அபூளப்யா என்பவரும், அவரிடமிருந்து அறிவிக்கும் ராவீ-19043-ஷுஜாஉ (அபூஷுஜா-ஸயீத் பின் யஸீத்) என்பவரும் நம்பகத் தன்மை உறுதி செய்யப்படாத முகவரி அற்றவர்கள் என்று அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.

(நூல்: லிஸானுல் மீஸான்-8902, மீஸானுல் இஃதிதால்-9631)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: ஷுஅபுல் ஈமான்-2267 , 2268 , 2269 , 2270 ,

  • அஹ்மது பின் ஹம்பல் அவர்கள் இந்த ஹதீஸ் மறுக்கப்பட வேண்டியது; இதில் இடம்பெறும் அறிவிப்பாளர் அபூஷுஜாஉ என்பவரின் நம்கத்தன்மை தெரியவில்லை எனக் கூறியுள்ளார்கள். இதை இப்னுல் ஜவ்ஸீ பிறப்பு ஹிஜ்ரி 508/510
    இறப்பு ஹிஜ்ரி 597
    அவர்கள் தனது நூலில் எடுத்தெழுதியுள்ளார்கள்.

நூல் : அல்இலலுல் முதனாஹியா பாகம் : 1 பக்கம் : 112

  • எனவே ஒவ்வொரு இரவிலும் அல்வாகிஆ அத்தியாயத்தை ஓதினால் வறுமை நீங்கும் என்று நம்புவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
  • தினமும் இரவில் ஓதுவதற்கு பல துஆக்கள் உள்ளன.
கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.