Author: Farook
மர்ஃபூவு
குத்ஸீ
மவ்கூஃப்
Hakim-1965
1965. அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஒரு மனிதர் இரு விரல்களால் (இஷாரா) சைக்கினை செய்துகொண்டிருந்தார். அதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் அவரிடம் அல்லாஹ் ஒருவன், ஒருவன் (அல்லது ஒரு விரல், ஒரு விரல்) என்று கூறினார்கள்.
ஹாகிம் (நூலாசிரியர்) கூறுகிறார்:
இந்த ஹதீஸ் ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.(பார்க்க அடுத்த ஹதீஸ் எண்-1966)
أَنَّ رَجُلًا كَانَ يَدْعُو بِأُصْبُعَيْهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحَدٌ، أَحَدٌ»
Hakim-1966
1996. ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் இரு விரல்களால் (இஷாரா-சைக்கினை செய்து) துஆ செய்துகொண்டிருக்கும் போது என்னை கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் ஒருவன், ஒருவன் (அல்லது ஒரு விரல், ஒரு விரல்) என்று கூறி தனது ஆள்காட்டி விரலால் (இஷாரா) சைக்கினை செய்தார்கள்.
ஹாகிம் (நூலாசிரியர்) கூறுகிறார்:
மேற்கண்ட (1965, 1966) இரு ஹதீஸ்களின் அறிவிப்பாளர்தொடர் சரியானதாகும்.
இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் அபூ ஸாலிஹ், ஸஃத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களை சந்தித்து ஹதீஸை கேட்டிருந்தால் இது புகாரி, முஸ்லிம் நிபந்தனைப்படி உள்ள செய்தியாகும்.
(அபூ ஸாலிஹ், ஸஃத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களை சந்தித்து ஹதீஸை கேட்டுள்ளார் என்றே ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர்.)
مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِي وَأَنَا أَدْعُو بِأُصْبُعَيَّ فَقَالَ: «أَحَدٌ، أَحَدٌ» وَأَشَارَ بِالسَّبَّابَةِ
Nasaayi-1273
1273. ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் பல விரல்களால் (இஷாரா-சைக்கினை செய்து) துஆ செய்துகொண்டிருக்கும் போது என்னை கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள் ஒரு விரலால், ஒரு விரலால் (இஷாரா-சைக்கினை செய்வீரா) என்று கூறி தனது ஆள்காட்டி விரலால் (இஷாரா) சைக்கினை செய்தார்கள்.
مَرَّ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنَا أَدْعُو بِأَصَابِعِي، فَقَالَ: «أَحِّدْ، أَحِّدْ»، وَأَشَارَ بِالسَّبَّابَةِ
Abu-Dawood-1499
1499. ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் பல விரல்களால் (இஷாரா-சைக்கினை செய்து) துஆ செய்துகொண்டிருக்கும் போது என்னை கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள் ஒரு விரலால், ஒரு விரலால் (இஷாரா-சைக்கினை செய்வீரா) என்று கூறி தனது ஆள்காட்டி விரலால் (இஷாரா) சைக்கினை செய்தார்கள்.
مَرَّ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أَدْعُو بِأُصْبُعَيَّ، فَقَالَ: «أَحِّدْ أَحِّدْ»، وَأَشَارَ بِالسَّبَّابَةِ
Tirmidhi-3557
3557. ஒரு மனிதர் இரு விரல்களால் (இஷாரா-சைக்கினை செய்து) துஆ செய்வதை கண்ட நபி (ஸல்) அவர்கள் ஒரு விரல் ஒரு விரல் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்த செய்தி ஹஸன் ஃகரீப் என்ற தரத்தில் உள்ளதாகும். (தொழுகையின் அத்தஹிய்யாத்) துஆவில் “அஷ்ஹது” என்று கூறும்போது ஒரு விரலால் மட்டுமே இஷாரா செய்ய வேண்டும் என்பது தான் இந்த ஹதீஸின் கருத்தாகும்.
أَنَّ رَجُلًا كَانَ يَدْعُو بِإِصْبَعَيْهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحِّدْ أَحِّدْ»
Almujam-Alkabir-13057
13057. முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் இரு விரல்களால் (இஷாரா-சைக்கினை செய்து) துஆ செய்வதை கண்ட இப்னு உமர் (ரலி) அவர்கள் அவரின் ஒரு விரலை மடக்கி விட்டு அல்லாஹ் ஒருவனே என்று கூறினார்கள்.
أَنَّ ابْنَ عُمَرَ رَأَى رَجُلًا يَدْعُو بِإِصْبَعَيْهِ فَقَبَضَ بِإِحْدَى إِصْبَعَيْهِ، وَقَالَ: «إِنَّمَا اللهُ إِلَهٌ وَاحِدٌ»
சமீப விமர்சனங்கள்