ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
பாடம்:
ஒருவர் இன்னொருவருக்காக எழுந்து நிற்பது.
5229. அபூமிஜ்லஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி), இப்னு ஆமிர் ஆகியோர் இருந்த இடத்திற்கு முஆவியா (ரலி) அவர்கள் வந்தார். அவரைக் கண்ட இப்னு ஆமிர் அவர்கள் எழுந்து நின்றார். அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் அமர்ந்தே இருந்தார். உடனே முஆவியா (ரலி) அவர்கள், இப்னு ஆமிர் அவர்களிடம், அமருங்கள்!. “தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்று கூறினார்கள்.
خَرَجَ مُعَاوِيَةُ عَلَى ابْنِ الزُّبَيْرِ، وَابْنِ عَامِرٍ فَقَامَ ابْنُ عَامِرٍ وَجَلَسَ ابْنُ الزُّبَيْرِ فَقَالَ مُعَاوِيَةُ لِابْنِ عَامِرٍ: اجْلِسْ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ أَحَبَّ أَنْ يَمْثُلَ لَهُ الرِّجَالُ قِيَامًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»
சமீப விமர்சனங்கள்