Author: Farook

Hakim-1830

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1830. ஒரு அடியான் அல்லாஹ்விடம் கையேந்திக் கேட்கும் போது வெறுங்கையாக திருப்பியனுப்ப இறைவன் வெட்கப்படுகிறான் என்று ஸல்மான் பார்ஸீ (ரலி) கூறினார்கள் என  அபூ உஸ்மான் நஹ்தீ அவர்களிடமிருந்து ஸுலைமான் தைமீ அறிவிக்கிறார்.

ஹாகிம் (நூலாசிரியர்) கூறுகிறார்:

இந்த ஹதீஸ் இமாம் புகாரி, முஸ்லிம் அவர்களின் நிபந்தனைப்படி உள்ள சரியான அறிவிப்பாளர்தொடர் ஆகும்.

இந்த செய்தியை அபூஉஸ்மான் நஹ்தீ அவர்களிடமிருந்து ஜஃபர் பின் மைமூன் அறிவிக்கும் போது நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார். (பார்க்க: அடுத்த ஹதீஸ் எண்- 1831)

 


«إِنَّ اللَّهَ يَسْتَحِي أَنْ يَبْسُطَ الْعَبْدُ إِلَيْهِ يَدَيْهِ فِيهِمَا خَيْرًا فَيَرُدَّهُمَا خَائِبَتَيْنِ»


Musnad-Ahmad-23714

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

23714. நிச்சயமாக ஒரு அடியான் அல்லாஹ்விடம் தனது இருகரமேந்தி நலவைக் கேட்கும் போது, அவ்விரண்டையும் வெறுங்கையாக திருப்பியனுப்ப அல்லாஹ் வெட்கமடைகிறான் என்று ஸல்மான் ஃபார்ஸீ (ரலி) அவர்கள் கூறினார்.

அறிவிப்பவர்: அபூஉஸ்மான் (ரஹ்)


«إِنَّ اللَّهَ لَيَسْتَحِي أَنْ يَبْسُطَ الْعَبْدُ إِلَيْهِ يَدَيْهِ يَسْأَلُهُ فِيهِمِا خَيْرًا، فَيَرُدَّهُمَا خَائِبَتَيْنِ»


Tirmidhi-3556

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3556. நிச்சயமாக அல்லாஹ் வெட்கப்படுபவன், சங்கையானவன். ஒரு மனிதர்  தனது இருகைகளை அவன் பக்கம் உயர்த்தும் போது அந்த இரு கைகளையும் வெறுங்கையாக திருப்பியனுப்ப அல்லாஹ் வெட்கப்படுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸல்மான் பார்ஸீ (ரலி)


«إِنَّ اللَّهَ حَيِيٌّ كَرِيمٌ يَسْتَحْيِي إِذَا رَفَعَ الرَّجُلُ إِلَيْهِ يَدَيْهِ أَنْ يَرُدَّهُمَا صِفْرًا خَائِبَتَيْنِ»


Ibn-Majah-3865

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3865. உங்களுடைய இறைவன் வெட்கப்படுபவன்; சங்கையானவன். அவனுடைய அடியார் தனது கையை அவன் பக்கம் உயர்த்தும் போது அந்த இரு கைகளையும் பூஜ்யமாக-வெறுமனே அனுப்புவதற்கு வெட்கப்படுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸல்மான் பார்ஸீ (ரலி)


إِنَّ رَبَّكُمْ حَيِيٌّ كَرِيمٌ، يَسْتَحْيِي مِنْ عَبْدِهِ أَنْ يَرْفَعَ إِلَيْهِ يَدَيْهِ، فَيَرُدَّهُمَا صِفْرًا، – أَوْ قَالَ: خَائِبَتَيْنِ


Abu-Dawood-1488

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1488. நிச்சயமாக வளமும் உயர்வும் மிக்க உங்கள் இறைவன் வெட்கப்படுபவன்; சங்கையானவன். ஒரு அடியான் அவனிடம் தனது இருகரமேந்தி கேட்கும் போது, அவ்விரண்டையும் வெறுங்கையாக திருப்பியனுப்ப அவன் வெட்கப்படுகிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸல்மான் ஃபார்ஸீ (ரலி)


«إِنَّ رَبَّكُمْ تَبَارَكَ وَتَعَالَى حَيِيٌّ كَرِيمٌ، يَسْتَحْيِي مِنْ عَبْدِهِ إِذَا رَفَعَ يَدَيْهِ إِلَيْهِ، أَنْ يَرُدَّهُمَا صِفْرًا»


Almujam-Alawsat-4054

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4054. ஒரு பயணத்தில் மூவர் இருந்தால் அவர்களில் ஒருவர் தொழுகை நடத்தட்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.


«إِذَا كَانَ ثَلَاثَةٌ فِي سَفَرٍ فَلْيَؤُمَّهُمْ أَحَدُهُمْ»


Ibn-Khuzaymah-1508

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1508. மூவர் இருந்தால் அவர்களில் ஒருவர் தொழுகை நடத்தட்டும், அவர்களில் குர்ஆனை நன்றாக ஓத தெரிந்தவரே இமாமத் செய்வதற்கு மிக தகுதியானவர் என்று நபி (ஸல்) அவர்கள்  கூறியதாக அபூ ஸயீத்  (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.


إِذَا كَانُوا ثَلَاثَةً، فَلْيَؤُمَّهُمْ أَحَدُهُمْ، وَأَحَقُّهُمْ بِالْإِمَامَةِ أَقْرَؤُهُمْ”.
أَخْبَرَنَا أَبُو طَاهِرٍ، نَا أَبُو بَكْرٍ، نَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، نَا عَبْدُ الْغَفَّارِ بْنُ عُبَيْدِ اللَّهِ، ثَنَا شُعْبَةُ: بِهَذَا الْإِسْنَادِ بِنَحْوِهِ


Darimi-1289

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1289. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூவர் சேர்ந்தால் அவர்களில் ஒருவர் தொழுகை நடத்தட்டும், அவர்களில் குர்ஆனை நன்கு ஓத தெரிந்தவரே இமாமத் செய்வதற்கு மிக தகுதியானவர்.

அறிவிப்பவர் : அபூ ஸயீத்  (ரலி)


«إِذَا اجْتَمَعَ ثَلَاثَةٌ فَلْيَؤُمَّهُمْ أَحَدُهُمْ، وَأَحَقُّهُمْ بِالْإِمَامَةِ أَقْرَؤُهُمْ»


Musnad-Ahmad-11190

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

11190. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்கள் மூன்று பேர் இருந்தால் அவர்களில் ஒருவர் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்; அவர்களில் நன்கு ஓதத் தெரிந்தவரே அவர்களுக்குத் தொழுவிக்க அதிகத் தகுதியுடையவர் ஆவார்.

– இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


إِذَا كَانُوا ثَلَاثَةً فَلْيَؤُمَّهُمْ أَحَدُهُمْ، وَأَحَقُّهُمْ بِالْإِمَامَةِ أَقْرَؤُهُمْ


Nasaayi-782

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

782. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்கள் மூன்று பேர் இருந்தால் அவர்களில் ஒருவர் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்; அவர்களில் நன்கு ஓதத் தெரிந்தவரே அவர்களுக்குத் தொழுவிக்க அதிகத் தகுதியுடையவர் ஆவார்.

– இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


«إِذَا كَانُوا ثَلَاثَةً فَلْيَؤُمَّهُمْ أَحَدُهُمْ وَأَحَقُّهُمْ بِالْإِمَامَةِ أَقْرَؤُهُمْ»


Next Page » « Previous Page