Author: Abdul Hakkim

Musnad-Ahmad-23854

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

23854.

“விபச்சாரக் குற்றம் தொடர்பாக நீங்கள் என்ன (கருத்தைக்) கூறுகிறீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம் கேட்டார்கள். அதற்கு “அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அதைத் தடைசெய்துள்ளனர். அது கியாமத் நாள்வரை தடைசெய்யப்பட்டதாகும்” என்று நபித்தோழர்கள் பதிலளித்தனர்.

நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம் “ஒரு மனிதன் பத்துப் பெண்களுடன் விபச்சாரம். செய்வ(தினால் ஏற்படும் பாவச்சுமையாகிறது, அவன் தனது அண்டை வீட்டானின் மனைவியுடன் விபச்சாரம் செய்வ(தினால் ஏற்படும் பெரும்பாவத்)தை விட அவனுக்கு இலேசானதாகும்” என்று கூறினார்கள்.

பின்னர் “திருட்டுக் குற்றம் தொடர்பாக நீங்கள் என்ன (கருத்தைக்) கூறுகிறீர்கள்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். “அல்லாஹ்வும், அவனது தூதரும் அதைத் தடைசெய்துள்ளனர். எனவே அது (கியாமத் நாள்வரை) தடுக்கப்பட்டதாகும்” என்று நபித்தோழர்கள் கூறினர்.

”ஒரு மனிதன் பத்து வீடுகளில் திருடுவ(தினால் ஏற்படும் பாவச் சுமையாகிறறது, அவன் தனது அண்டை வீட்டானிடம் திருடுவ(தினால் ஏற்படும் பெரும்பாவத்)தை விட அவனுக்கு இலேசானதாகும்” என்று கூறினார்கள்.


قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَصْحَابِهِ: «مَا تَقُولُونَ فِي الزِّنَا؟» قَالُوا: حَرَّمَهُ اللَّهُ وَرَسُولُهُ، فَهُوَ حَرَامٌ إِلَى يَوْمِ الْقِيَامَةِ، قَالَ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَصْحَابِهِ: «لَأَنْ يَزْنِيَ الرَّجُلُ بِعَشْرَةِ نِسْوَةٍ، أَيْسَرُ عَلَيْهِ مِنْ أَنْ يَزْنِيَ بِامْرَأَةِ جَارِهِ» ، قَالَ: فَقَالَ: «مَا تَقُولُونَ فِي السَّرِقَةِ؟» قَالُوا: حَرَّمَهَا اللَّهُ وَرَسُولُهُ فَهِيَ حَرَامٌ، قَالَ: «لَأَنْ يَسْرِقَ الرَّجُلُ مِنْ عَشْرَةِ أَبْيَاتٍ، أَيْسَرُ عَلَيْهِ مِنْ أَنْ يَسْرِقَ مِنْ جَارِهِ»


Ibn-Hibban-5764

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5764.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! ஒரு பெண் (கடமையானதைத் தொழுது மற்ற தொழுகைகளையும்) அதிகமாகத் தொழுகிறாள். எனினும் அவள் தனது நாவினால் (அண்டை வீட்டாருக்கு தொல்லை கொடுக்கிறாள். (அவளது மறுமை நிலை என்ன)” என்று கேட்டார். அதற்கு “அவள் நரகத்தில் இருப்பாள்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அம்மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! ஒரு பெண்ணின் (உபரியான) தொழுகையும், நோன்பும் குறைவாகவே உள்ளது. அவள் பாலாடைக் கட்டிகளைத் தான்) தர்மம் செய்கிறாள். எனினும் அவள் தனது அண்டைவீட்டாருக்குத் தொல்லை கொடுப்பதில்லை. (அவளது மறுமை நிலை என்ன?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அவள் சொர்க்கத்தில் இருப்பாள்” என்று கூறினார்கள்.


أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ فُلَانَةً ذَكَرَ مِنْ كَثْرَةِ صَلَاتِهَا، غَيْرَ أَنَّهَا تُؤْذِي بِلِسَانِهَا قَالَ: «فِي النَّارِ»، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ فُلَانَةً ذَكَرَ مِنْ قِلَّةِ صَلَاتِهَا وَصِيَامِهَا، وَأَنَّهَا تَصَدَّقَتْ بِأَثْوَارِ أَقِطٍ، غَيْرَ أَنَّهَا لَا تُؤْذِي جِيرَانَهَا، قَالَ: «هِيَ فِي الْجَنَّةِ»


Musnad-Ahmad-17634

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

17634.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நேரான பாதைக்கு ஒரு உதாரணம் கூறப்படுகின்றது. நேரான பாதைக்கு இரண்டு சுவர்கள் உள்ளன. அவ்விரண்டிலும் திறக்கப்பட்ட கதவுகள் உள்ளன. அந்தக் கதவுகளின் மீது மூடப்பட்ட திரை ஒன்று போடப்பட்டுள்ளது. பாதையின் வாயிலில் நின்று கொண்டு ஒரு அழைப்பாளர் அழைக்கின்றார்.

மக்களே! நேராக பாதையில் நுழையுங்கள்! (வலதோ, இடதோ தடுமாறி விட வேண்டாம் என்று கூறுவார்.

பாதையின் மேற்பகுதியிலிருந்து  அழைப்பாளர் அழைப்பார். இந்த வாசல்களின் கதவுகளில் ஏதேனும் ஒன்றைத் திறந்து விட்டால், உணக்கு கேடுதான்! அதிலே மூழ்கடிக்கப்பட்டு விடுவாய் என்று அழைப்பார்.

பிறகு ஒவ்வொன்றுக்கும் விளக்கம்கொடுத்தார்கள்.

நேரான பாதை என்பது. அது தான் இஸ்லாம்! இரண்டு சுவர்கள் என்பது, அவைதான்

அல்லாஹ்வின் வரம்புகள்!

திறக்கப்பட்ட கதவுகள் என்பது, அவைதான் அல்லாஹ் தடுத்தவைகள்!

பாதையின் வாசலில் நின்று கொண்டு அழைத்தது, அதுதான் அல்லாஹ்வின் வேதம்!

பாதைக்கு மேலே இருந்து அழைத்தது.

அதுநாள் ஒவ்வொரு முஸ்லிமுடைய உள்ளத்தின் கட்டளை என்று விளக்கமளித்தார்கள்.


” ضَرَبَ اللَّهُ مَثَلًا صِرَاطًا مُسْتَقِيمًا، وَعَلَى جَنْبَتَيْ الصِّرَاطِ سُورَانِ، فِيهِمَا أَبْوَابٌ مُفَتَّحَةٌ، وَعَلَى الْأَبْوَابِ سُتُورٌ مُرْخَاةٌ، وَعَلَى بَابِ الصِّرَاطِ دَاعٍ يَقُولُ: أَيُّهَا النَّاسُ، ادْخُلُوا الصِّرَاطَ جَمِيعًا، وَلَا تَتَعَرَّجُوا، وَدَاعٍ يَدْعُو مِنْ فَوْقِ الصِّرَاطِ، فَإِذَا أَرَادَ يَفْتَحُ شَيْئًا مِنْ تِلْكَ الْأَبْوَابِ، قَالَ: وَيْحَكَ لَا تَفْتَحْهُ، فَإِنَّكَ إِنْ تَفْتَحْهُ تَلِجْهُ، وَالصِّرَاطُ الْإِسْلَامُ، وَالسُّورَانِ: حُدُودُ اللَّهِ، وَالْأَبْوَابُ الْمُفَتَّحَةُ: مَحَارِمُ اللَّهِ، وَذَلِكَ الدَّاعِي عَلَى رَأْسِ الصِّرَاطِ: كِتَابُ اللَّهِ، وَالدَّاعِي مِنِ فَوْقَ الصِّرَاطِ: وَاعِظُ اللَّهِ فِي قَلْبِ كُلِّ مُسْلِمٍ “


Abu-Dawood-5111

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5111.

நபி (ஸல்) அவர்களிடம் சிலர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் வெளியே சொல்வதற்கு அஞ்சக் பாரதூரமான சில விஷயங்கள் எங்களில் உள்ளங்களில் தோன்றுகின்றன” என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதை நீங்கள் பெற்றுக் கொள்கின்றீர்களா?” அதற்கு, ஆம் என்று கேட்டார்கள். என்று நபித்தோழர்கள் பதிலளித்தார்கள். “இதுதான் சரியான ஈமான்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.


جَاءَهُ نَاسٌ مِنْ أَصْحَابِهِ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ، نَجِدُ فِي أَنْفُسِنَا الشَّيْءَ نُعْظِمُ أَنْ نَتَكَلَّمَ بِهِ، أَوِ الْكَلَامَ بِهِ، مَا نُحِبُّ أَنَّ لَنَا وَأَنَّا تَكَلَّمْنَا بِهِ، قَالَ: «أَوَقَدْ وَجَدْتُمُوهُ؟» قَالُوا: نَعَمْ، قَالَ: «ذَاكَ صَرِيحُ الْإِيمَانِ»


Musnad-Ahmad-2762

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2762.

நபி (ஸல்) அவர்களை எங்கே கண்டாலும் கொலை செய்து விட வேண்டும் என்று குறைஷிகள் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்பட்டது. அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து லாத், உஸ்ஸா ஆகிய சிலைகளுக்கு முன்னால் போய் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்கள்.


إِنَّ الْمَلَأَ مِنْ قُرَيْشٍ اجْتَمَعُوا فِي الْحِجْرِ، فَتَعَاقَدُوا بِاللَّاتِ وَالْعُزَّى، وَمَنَاةَ الثَّالِثَةِ الْأُخْرَى، وَنَائِلَةَ وَإِسَافٍ: لَوْ قَدْ رَأَيْنَا مُحَمَّدًا، لَقَدْ قُمْنَا إِلَيْهِ قِيَامَ رَجُلٍ وَاحِدٍ، فَلَمْ نُفَارِقْهُ حَتَّى نَقْتُلَهُ، فَأَقْبَلَتِ ابْنَتُهُ فَاطِمَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا تَبْكِي، حَتَّى دَخَلَتْ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: هَؤُلَاءِ الْمَلَأُ مِنْ قُرَيْشٍ، قَدْ تَعَاقَدُوا عَلَيْكَ، لَوْ قَدْ رَأَوْكَ، لَقَدْ قَامُوا إِلَيْكَ فَقَتَلُوكَ، فَلَيْسَ مِنْهُمْ رَجُلٌ إِلَّا قَدْ عَرَفَ نَصِيبَهُ مِنْ دَمِكَ. فَقَالَ: «يَا بُنَيَّةُ، أَرِينِي وَضُوءًا» فَتَوَضَّأَ، ثُمَّ دَخَلَ عَلَيْهِمِ الْمَسْجِدَ، فَلَمَّا رَأَوْهُ، قَالُوا: هَا هُوَ ذَا، وَخَفَضُوا أَبْصَارَهُمْ، وَسَقَطَتْ أَذْقَانُهُمْ فِي صُدُورِهِمْ، وَعَقِرُوا فِي مَجَالِسِهِمْ، فَلَمْ يَرْفَعُوا إِلَيْهِ بَصَرًا، وَلَمْ يَقُمِ إلَيْهِ مِنْهُمْ رَجُلٌ، فَأَقْبَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى قَامَ عَلَى رُءُوسِهِمْ، فَأَخَذَ قَبْضَةً مِنَ التُّرَابِ، فَقَالَ: «شَاهَتِ الْوُجُوهُ» ثُمَّ حَصَبَهُمْ بِهَا، فَمَا أَصَابَ رَجُلًا مِنْهُمْ مِنْ ذَلِكَ الْحَصَى حَصَاةٌ إِلَّا قُتِلَ يَوْمَ بَدْرٍ كَافِرًا


Musnad-Ahmad-21926

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

21926.

…அலீ (ரலி) அவர்கள் ஒருவரை விருந்துக்கு அழைத்து அவருக்காக உணவைத் தயார்செய்துவைத்திருந்தார்கள். (அப்போது) ஃபாத்திமா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் நாம் விருந்துக்கு அழைத்தால் (நன்றாக இருக்கும்) என்று கூறினார்கள். அவ்வாறே அவர்களை விருந்துக்கு அழைத்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்து கதவின் ஓரத்திலே தமது கையை வைத்த போது வீட்டின் ஓரத்திலே ( உருவத்தாலான) திரைச்சீலையை கண்டார்கள். உடனே திரும்பிசென்றுவிட்டார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரை சந்தித்து, தாங்கள் ஏன் திரும்பிச் செல்கின்றீர்கள்? என்று கேட்குமாறு கூறினார்கள், அவ்வாறு கேட்டதற்கு, ”அலங்கரிக்கப்பட்ட வீட்டிலே நுழைவற்கான எந்த தேவையும் எனக்கு இல்லை ” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஸஃபீனா-அபூஅப்துர்ரஹ்மான் (ரலி)


أَنَّ رَجُلًا أَضَافَهُ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ فَصَنَعَ لَهُ طَعَامًا، فَقَالَتْ فَاطِمَةُ: لَوْ دَعَوْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ نَحْوَ حَدِيثِ أَبِي كَامِلٍ، فَدَعَوْهُ فَجَاءَ، فَوَضَعَ يَدَهُ عَلَى عِضَادَتَيِ الْبَابِ، فَرَأَى قِرَامًا فِي نَاحِيَةِ الْبَيْتِ، فَرَجَعَ، فَقَالَتْ فَاطِمَةُ لِعَلِيٍّ: الْحَقْهُ فَقُلْ لَهُ: مَا رَجَعَكَ يَا رَسُولَ اللَّهِ؟ فَقَالَ: «إِنَّهُ لَيْسَ لِي أَنْ أَدْخُلَ بَيْتًا مُزَوَّقًا»


Musnad-Ahmad-1736

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1736.

யாரிடம் என் பெயர் கூறப்பட்டும், அவர் என் மீது ஸலவாத் கூறவில்லையோ, அவர் கஞ்சன் ஆவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அலீ (ரலி)


«الْبَخِيلُ مَنْ ذُكِرْتُ عِنْدَهُ، ثُمَّ لَمْ يُصَلِّ عَلَيَّ»
قال أبو سعيد: فلم يصل علي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كثيرا


Musnad-Ahmad-4609

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4609.

கைலான் என்பவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அருக்கு பத்து மனைவிகள் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் நீ அவர்களில் நான்கு நபர்களை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொள் என்றார்கள்.


أَنَّ غَيْلَانَ بْنَ سَلَمَةَ الثَّقَفِيَّ: أَسْلَمَ وَتَحْتَهُ عَشْرُ نِسْوَةٍ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اخْتَرْ مِنْهُنَّ أَرْبَعًا»


Nasaayi-4067

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

4067.

மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளில், நபி (ஸல்) அவர்கள் நான்கு ஆண்களையும், இரண்டு பெண்களையும் தவிர்த்து மற்ற அனைவருக்கும் அபயம் அளித்தார்கள். அவர்களைப் பற்றி, “அவர்கள் கஅபாவின் திரைகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தாலும் சரி, அவர்களைக் கொன்றுவிடுங்கள்” என்று கூறினார்கள். (அந்த நால்வர்) இக்ரிமா இப்னு அபீ ஜஹ்ல், அப்துல்லாஹ் இப்னு கதல், மகீஸ் இப்னு ஸுபாபா, அப்துல்லாஹ் இப்னு சஅத் இப்னு அபீ ஸர்ஹ் ஆகியோர் ஆவர்.

அப்துல்லாஹ் இப்னு கதல்: அவர் கஅபாவின் திரைகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டார். சயீத் இப்னு ஹுரைஸ் (ரலி) அவர்களும், அம்மார் இப்னு யாஸிர் (ரலி) அவர்களும் அவரை நோக்கி விரைந்தனர். இருவரில் இளையவரான சயீத் (ரலி) அவர்கள், அம்மார் (ரலி) அவர்களை முந்திக்கொண்டு அவரைக் கொன்றார்கள்.

மகீஸ் இப்னு ஸுபாபா: அவர் சந்தையில் மக்களால் கண்டுபிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

இக்ரிமா: அவர் கடலில் பயணித்தார். அப்போது அவர்களை ஒரு புயல் தாக்கியது. கப்பலில் இருந்தவர்கள், “அல்லாஹ்வுக்கு மட்டும் கட்டுப்படுங்கள்! உங்கள் தெய்வங்கள் இங்கு உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்காது” என்று கூறினர். அப்போது இக்ரிமா, “அல்லாஹ்வின் மீது ஆணையாக! கடலிலிருந்து என்னை ஈடேற்ற ஏகத்துவம் (தவ்ஹீத்) மட்டுமே

لَمَّا كَانَ يَوْمُ فَتْحِ مَكَّةَ أَمَّنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّاسَ، إِلَّا أَرْبَعَةَ نَفَرٍ وَامْرَأَتَيْنِ وَقَالَ: «اقْتُلُوهُمْ، وَإِنْ وَجَدْتُمُوهُمْ مُتَعَلِّقِينَ بِأَسْتَارِ الْكَعْبَةِ، عِكْرِمَةُ بْنُ أَبِي جَهْلٍ وَعَبْدُ اللَّهِ بْنُ خَطَلٍ وَمَقِيسُ بْنُ صُبَابَةَ وَعَبْدُ اللَّهِ بْنُ سَعْدِ بْنِ أَبِي السَّرْحِ»، فَأَمَّا عَبْدُ اللَّهِ بْنُ خَطَلٍ فَأُدْرِكَ وَهُوَ مُتَعَلِّقٌ بِأَسْتَارِ الْكَعْبَةِ فَاسْتَبَقَ إِلَيْهِ سَعِيدُ بْنُ حُرَيْثٍ وَعَمَّارُ بْنُ يَاسِرٍ فَسَبَقَ سَعِيدٌ عَمَّارًا، وَكَانَ أَشَبَّ الرَّجُلَيْنِ فَقَتَلَهُ، وَأَمَّا مَقِيسُ بْنُ صُبَابَةَ فَأَدْرَكَهُ النَّاسُ فِي السُّوقِ فَقَتَلُوهُ، وَأَمَّا عِكْرِمَةُ فَرَكِبَ الْبَحْرَ، فَأَصَابَتْهُمْ عَاصِفٌ، فَقَالَ أَصْحَابُ السَّفِينَةِ: أَخْلِصُوا، فَإِنَّ آلِهَتَكُمْ لَا تُغْنِي عَنْكُمْ شَيْئًا هَاهُنَا. فَقَالَ عِكْرِمَةُ: وَاللَّهِ لَئِنْ لَمْ يُنَجِّنِي مِنَ الْبَحْرِ إِلَّا الْإِخْلَاصُ، لَا يُنَجِّينِي فِي الْبَرِّ غَيْرُهُ، اللَّهُمَّ إِنَّ لَكَ عَلَيَّ عَهْدًا، إِنْ أَنْتَ عَافَيْتَنِي مِمَّا أَنَا فِيهِ أَنْ آتِيَ مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى أَضَعَ يَدِي فِي يَدِهِ، فَلَأَجِدَنَّهُ عَفُوًّا كَرِيمًا، فَجَاءَ فَأَسْلَمَ، وَأَمَّا عَبْدُ اللَّهِ بْنُ سَعْدِ بْنِ أَبِي السَّرْحِ، فَإِنَّهُ اخْتَبَأَ عِنْدَ عُثْمَانَ بْنِ عَفَّانَ، فَلَمَّا دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّاسَ إِلَى الْبَيْعَةِ، جَاءَ بِهِ حَتَّى أَوْقَفَهُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، بَايِعْ عَبْدَ اللَّهِ، قَالَ: فَرَفَعَ رَأْسَهُ، فَنَظَرَ إِلَيْهِ، ثَلَاثًا كُلَّ ذَلِكَ يَأْبَى، فَبَايَعَهُ بَعْدَ ثَلَاثٍ، ثُمَّ أَقْبَلَ عَلَى أَصْحَابِهِ فَقَالَ: «أَمَا كَانَ فِيكُمْ رَجُلٌ رَشِيدٌ يَقُومُ إِلَى هَذَا حَيْثُ رَآنِي كَفَفْتُ يَدِي عَنْ بَيْعَتِهِ فَيَقْتُلُهُ» فَقَالُوا: وَمَا يُدْرِينَا يَا رَسُولَ اللَّهِ مَا فِي نَفْسِكَ، هَلَّا أَوْمَأْتَ إِلَيْنَا بِعَيْنِكَ؟ قَالَ: «إِنَّهُ لَا يَنْبَغِي لِنَبِيٍّ أَنْ يَكُونَ لَهُ خَائِنَةُ أَعْيُنٍ»


Musnad-Ahmad-14787

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

14787.

உஹுதுப் போரின்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், “ஊரிலேயே தங்கியிருந்து (எதிரிகளின் படையை எதிர்) கொள்ளலாமா? அல்லது (பகைவர்களின் படையை எதிர்கொள்ள ஊருக்கு) வெளியே புறப்பட்டுப் போகலாமா?” என்று ஆலோசனை கேட்க அவர்கள், “(ஊருக்கு) வெளியே புறப்பட்டுப் போகலாம்” என்று நபி (ஸல்) அவர்களிடம் கருத்துத் தெரிவித்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் தமது கவச ஆடையை அணிந்துகொண்டு (ஊருக்கு வெளியே செல்ல) உறுதிகொண்டு புறப்பட்ட போது, தோழர்கள் “ஊரிலேயே தங்கி விடுங்கள்” என்று (மாற்று யோசனை) சொன்னார்கள். ஆனால், உறுதி கொண்டு விட்ட பின்னால் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் செவிசாய்க்கவில்லை. மாறாக, நபி (ஸல்) அவர்கள், “(போருக்குப் புறப்படத் தயாராகி) தமது கவச ஆடையை அணிந்து கொண்ட எந்த ஒரு இறைத்தூதருக்கும் அல்லாஹ் தீர்மானிக்கும் வரை அதைக் கீழே வைப்பது முறையாகாது” என்று சொன் னார்கள்.


«رَأَيْتُ كَأَنِّي فِي دِرْعٍ حَصِينَةٍ، وَرَأَيْتُ بَقَرًا مُنَحَّرَةً، فَأَوَّلْتُ أَنَّ الدِّرْعَ الْحَصِينَةَ الْمَدِينَةُ، وَأَنَّ الْبَقَرَ نَفَرٌ، وَاللَّهِ خَيْرٌ» ، قَالَ: فَقَالَ لِأَصْحَابِهِ: «لَوْ أَنَّا أَقَمْنَا بِالْمَدِينَةِ فَإِنْ دَخَلُوا عَلَيْنَا فِيهَا قَاتَلْنَاهُمْ» ، فَقَالَوا: يَا رَسُولَ اللَّهِ، وَاللَّهِ مَا دُخِلَ عَلَيْنَا فِيهَا فِي الْجَاهِلِيَّةِ، فَكَيْفَ يُدْخَلُ عَلَيْنَا فِيهَا فِي الْإِسْلَامِ؟ – قَالَ عَفَّانُ فِي حَدِيثِهِ: فَقَالَ: «شَأْنَكُمْ إِذًا» – قَالَ: فَلَبِسَ لَأْمَتَهُ، قَالَ: فَقَالَتِ الْأَنْصَارُ: رَدَدْنَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأْيَهُ، فَجَاءُوا، فَقَالَوا: يَا نَبِيَّ اللَّهِ، شَأْنَكَ إِذًا، فَقَالَ: «إِنَّهُ لَيْسَ لِنَبِيٍّ إِذَا لَبِسَ لَأْمَتَهُ أَنْ يَضَعَهَا حَتَّى يُقَاتِلَ»


Next Page » « Previous Page