Author: Abdul Hakkim

Tirmidhi-3001

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3001.

நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! வேதமுடையோர் நம்பிக்கை கொண்டிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாக இருந்திருக்கும். அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர். அவர்களில் அதிகமானோர் குற்றம் புரிபவர்கள்.
அல் குர்ஆன் (3 : 110)

நபி (ஸல்) அவர்கள் (மொத்த சமுதாயத்தில் இறுதியாக) நீங்கள் எழுபதாவது சமுதாயமாக இருக்கின்றீர்கள். அந்த எழுபதில் நீங்கள் சிறந்த சமுதாயமாக இருக்கின்றீர்கள் என்று கூறினார்கள்.


فِي قَوْلِهِ تَعَالَى: {كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ} [آل عمران: 110] قَالَ: «أَنْتُمْ تُتِمُّونَ سَبْعِينَ أُمَّةً أَنْتُمْ خَيْرُهَا وَأَكْرَمُهَا عَلَى اللَّهِ»


Ibn-Hibban-3119

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3119.

எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம். (20 : 124) என்ற வசனத்தில் (சொல்லப்பட்ட தண்டனை) மண்ணறை வேதனையைப் பற்றியதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


فِي قَوْلِهِ جَلَّ وَعَلَا: {فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا} [طه: 124] قَالَ: «عَذَابُ الْقَبْرِ»


Ibn-Majah-348

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

348. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மண்ணறை வேதனைகளில் அதிகமானவை சிறுநீரால் ஏற்படுகிறது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«أَكْثَرُ عَذَابِ الْقَبْرِ مِنَ الْبَوْلِ»


Tirmidhi-1079

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1079. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு இறை நம்பிக்கையாளரின் உயிர் அவர் வாங்கிய கடனால் (சொர்க்கம் செல்ல முடியாதவாறு) தடுக்கப்படுகிறது. அந்தக் கடன் நிறைவேற்றப்படும் வரை (அவருக்கு நிம்மதி கிடைக்காது).

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன்” தரத்தில் அமைந்த ஹதீஸ். மேலும் இதுவே இதற்கு முன்னுள்ள ஹதீஸ் எண்-1078 இல் இடம்பெற்ற செய்தியை விட மிகச் சரியானது.


«نَفْسُ المُؤْمِنِ مُعَلَّقَةٌ بِدَيْنِهِ حَتَّى يُقْضَى عَنْهُ»


Tirmidhi-1078

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1078.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இறை நம்பிக்கையாளரின் ஆத்மா அவர் வாங்கிய கடன் காரணத்தினால் அவர் சார்பில் அது நிறைவேற்றப்படுகின்ற வரை (அந்தரத்தில்) தொங்கவிடப்படுகிறது.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)


«نَفْسُ المُؤْمِنِ مُعَلَّقَةٌ بِدَيْنِهِ حَتَّى يُقْضَى عَنْهُ»


Musnad-Ahmad-12530

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

12530.

நபி (ஸல்) அவர்கள் தன் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக வெளியில் சென்றார்கள். பிலால் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு மண்ணறையைக் கடந்து சென்றார்கள். அப்போது பிலாலே! நான் கேட்டுக் கொண்டிருப்பதை நீ கேட்கிறாயா? என்று கேட்டார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள் எனக்கு எதுவும் கேட்கவில்லையே என்று கூறினார்கள். இந்தக் கப்ரில் உள்ளவர் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த நபரைப் பற்றி விசாரிக்கப்பட்டது. அவர் ஒரு யூதனாக இருந்தார்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


بَيْنَمَا نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَخْلٍ لَنَا نَخْلٌ لِأَبِي طَلْحَةَ يَتَبَرَّزُ لِحَاجَتِهِ، قَالَ: وَبِلَالٌ يَمْشِي وَرَاءَهُ، يُكَرِّمُ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَمْشِيَ إِلَى جَنْبِهِ، فَمَرَّ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَبْرٍ، فَقَامَ حَتَّى تَمَّ إِلَيْهِ بِلَالٌ، فَقَالَ: «وَيْحَكَ يَا بِلَالُ هَلْ تَسْمَعُ مَا أَسْمَعُ؟» قَالَ: مَا أَسْمَعُ شَيْئًا. قَالَ: «صَاحِبُ الْقَبْرِ يُعَذَّبُ» . قَالَ: فَسُئِلَ عَنْهُ، فَوُجِدَ يَهُودِيًّا


Musnad-Ahmad-23109

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

23109.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பூமியின் கிழக்குப் பகுதிகளையும் மேற்குப் பகுதிகளையும் நீங்கள் வெற்றி கொள்வீர்கள். இறைவனை அஞ்சி அமானிதத்தை நிறைவேற்றியவரைத் தவிர அவைகளை நிர்வகிப்பவர்கள் நரகத்தில் இருப்பார்கள்.


صَلَّى هَذَا الْحَيُّ مِنْ مُحَارِبٍ الصُّبْحَ، فَلَمَّا صَلَّوْا قَالَ شَابٌّ مِنْهُمْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّهُ سَيُفْتَحُ لَكُمْ مَشَارِقُ الْأَرْضِ وَمَغَارِبُهَا، وَإِنَّ عُمَّالَهَا فِي النَّارِ إِلَّا مَنْ اتَّقَى اللَّهَ، وَأَدَّى الْأَمَانَةَ»


Ibn-Majah-4290

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4290.

”நாங்கள் இறுதி சமுதாயம். ஆனால் முதன் முத­ல் விசாரிக்கப்படுபவர்கள். ‘எழுதப்படிக்கத் தெரியாத சமுதாயமும் அவர்களின் நபியும் எங்கே?’ என்று கேட்கப்படும். நாங்கள் கடைசியானவர்கள்; ஆனால் (தகுதியில்) முந்தியவர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி­)


” نَحْنُ آخِرُ الْأُمَمِ، وَأَوَّلُ مَنْ يُحَاسَبُ، يُقَالُ: أَيْنَ الْأُمَّةُ الْأُمِّيَّةُ، وَنَبِيُّهَا؟ فَنَحْنُ الْآخِرُونَ الْأَوَّلُونَ “


Nasaayi-2073

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2073.

இறை நம்பிக்கையாளரின் ஆத்மா சொர்க்கத்து மரத்தில் வாழும் பறவையாக (மாற்றப்படும்.) மறுமை நாளில் அவரது உடம்புடன் அல்லாஹ் அவரை எழுப்புகின்ற வரை (சொர்க்கத்துப் பறவையாகவே) இருப்பார்.

அறிவிப்பவர்: கஃப் பின் மா­லிக்(ரலி)


«إِنَّمَا نَسَمَةُ الْمُؤْمِنِ طَائِرٌ فِي شَجَرِ الْجَنَّةِ حَتَّى يَبْعَثَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَى جَسَدِهِ يَوْمَ الْقِيَامَةِ»


Musnad-Ahmad-24283

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

24283.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மண்ணறை நெருக்கும் பண்புடையது. அதனுடைய நெருக்கிலிருந்து யாரேனும் ஒருவர் தப்பிப்பதாக இருந்தால் சஃத் பின் முஆத் அதி­ருந்து தப்பித்திருப்பார். (ஆனால் அவரையும் மண்ணறை நெருக்கியது.)

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«إِنَّ لِلْقَبْرِ ضَغْطَةً، وَلَوْ كَانَ أَحَدٌ نَاجِيًا مِنْهَا نَجَا مِنْهَا سَعْدُ بْنُ مُعَاذٍ»


Next Page » « Previous Page