Author: Abdul Hakkim

Nasaayi-544

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

544. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ஃபஜ்ர் தொழுகையின் நேரம் பற்றிக் கேட்டார். மறுநாள் காலையில் நாங்கள் எழுந்தபோது, ஃபஜ்ர் நேரம் வந்ததும், இகாமத் கூற நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டு எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள். (நாங்கள் தொழுதோம்.)

பின்னர் அடுத்த நாள் காலையில், வெளிச்சம் நன்றாகப் பரவிய பின்பு இகாமத் கூற நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டு எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள், “தொழுகை நேரத்தைக் கேட்டவர் எங்கே? என்று கேட்டுவிட்டு, “இந்த இரண்டு நேரங்களுக்கு இடைப்பட்டதே (ஃபஜ்ர் தொழுகையின்) நேரம்” என்று கூறினார்கள்.


أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ عَنْ وَقْتِ صَلَاةِ الْغَدَاةِ، فَلَمَّا أَصْبَحْنَا مِنَ الْغَدِ أَمَرَ حِينَ انْشَقَّ الْفَجْرُ أَنْ تُقَامَ الصَّلَاةُ فَصَلَّى بِنَا، فَلَمَّا كَانَ مِنَ الْغَدِ أَسْفَرَ، ثُمَّ أَمَرَ فَأُقِيمَتِ الصَّلَاةُ فَصَلَّى بِنَا، ثُمَّ قَالَ: «أَيْنَ السَّائِلُ عَنْ وَقْتِ الصَّلَاةِ؟ مَا بَيْنَ هَذَيْنِ وَقْتٌ»


Ibn-Majah-3925

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

3925. தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பனூ பலீ குலத்தைச் சேர்ந்த இருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். இருவரும் ஒரே நேரத்தில் இஸ்லாத்தைத் தழுவினர். அவர்களில் ஒருவர் மற்றவரை விட அதிக சிரத்தையுடன் வணக்கங்களில் ஈடுபட்டார். அதிக சிரத்தை எடுத்தவர் போரில் வீர மரணம் அடைந்தார். மற்றவர் ஒரு வருடம் கழித்து மரணமடைந்தார்.

மேலும் தல்ஹா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஒரு கனவு கண்டேன். சொர்க்கத்தின் வாசலில் நான் இருந்தேன். அவ்விருவரும் அங்கு இருந்தனர். சொர்க்கத்திலிருந்து ஒருவர் வெளியே வந்து, இரண்டாவதாக இறந்தவரை உள்ளே செல்ல அனுமதித்தார். பின்னர் வெளியே வந்து, முதலில் ஷஹீதானவரை உள்ளே செல்ல அனுமதித்தார். பிறகு என்னிடம் திரும்பி வந்து, “திரும்புங்கள், உங்களுக்கான நேரம் இன்னும் வரவில்லை” என்றார்.

தல்ஹா (ரலி) காலையில் மக்களுக்கு அதைச் சொன்னார். மக்கள் ஆச்சரியப்பட்டனர். விஷயம் நபி (ஸல்) அவர்களை அடைந்தது. மக்களும் அதை நபி (ஸல்) அவர்களிடம் (ஆச்சரியமாகக்) கூறினர்.

நபி (ஸல்) அவர்கள், “எதைக் கண்டு ஆச்சரியப்படுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! இவர்தான் இருவரில் அதிக சிரத்தையுடன் வணங்கியவர். பின் ஷஹீதானார். ஆனால் மற்றவர் இவருக்கு முன் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார்” என்றனர்.

நபி

أَنَّ رَجُلَيْنِ مِنْ بَلِيٍّ قَدِمَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ إِسْلَامُهُمَا جَمِيعًا، فَكَانَ أَحَدُهُمَا أَشَدَّ اجْتِهَادًا مِنَ الْآخَرِ، فَغَزَا الْمُجْتَهِدُ مِنْهُمَا فَاسْتُشْهِدَ، ثُمَّ مَكَثَ الْآخَرُ بَعْدَهُ سَنَةً، ثُمَّ تُوُفِّيَ، قَالَ طَلْحَةُ: فَرَأَيْتُ فِي الْمَنَامِ: بَيْنَا أَنَا عِنْدَ بَابِ الْجَنَّةِ، إِذَا أَنَا بِهِمَا، فَخَرَجَ خَارِجٌ مِنَ الْجَنَّةِ، فَأَذِنَ لِلَّذِي تُوُفِّيَ الْآخِرَ مِنْهُمَا، ثُمَّ خَرَجَ، فَأَذِنَ لِلَّذِي اسْتُشْهِدَ، ثُمَّ رَجَعَ إِلَيَّ، فَقَالَ: ارْجِعْ، فَإِنَّكَ لَمْ يَأْنِ لَكَ بَعْدُ، فَأَصْبَحَ طَلْحَةُ يُحَدِّثُ بِهِ النَّاسَ، فَعَجِبُوا لِذَلِكَ، فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَحَدَّثُوهُ الْحَدِيثَ، فَقَالَ: «مِنْ أَيِّ ذَلِكَ تَعْجَبُونَ؟» فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ ‍ هَذَا كَانَ أَشَدَّ الرَّجُلَيْنِ اجْتِهَادًا، ثُمَّ اسْتُشْهِدَ، وَدَخَلَ هَذَا الْآخِرُ الْجَنَّةَ قَبْلَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَيْسَ قَدْ مَكَثَ هَذَا بَعْدَهُ سَنَةً؟» قَالُوا: بَلَى، قَالَ: «وَأَدْرَكَ رَمَضَانَ فَصَامَ، وَصَلَّى كَذَا وَكَذَا مِنْ سَجْدَةٍ فِي السَّنَةِ؟» قَالُوا: بَلَى، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَمَا بَيْنَهُمَا أَبْعَدُ مِمَّا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ»


Akhbar-Asbahan-1411

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1411. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெண்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் கணவனின் அன்பைத் தேடிக்கொள்ளுங்கள்.

ஒரு பெண் தன் கணவனுக்கு உள்ள உரிமையை உண்மையாக அறிந்திருந்தால் அவன் காலை உணவையோ, இரவு உணவையோ உண்டு முடிக்கும் வரை நின்றுக் கொண்டே இருப்பாள்.

அறிவிப்பவர்: அலீ பின் அபூதாலிப் (ரலி)


«يَا مَعْشَرَ النِّسَاءِ اتَّقِينَ اللَّهَ عَزَّ وَجَلَّ وَالْتَمَسُوا مَرْضَاةَ أَزْوَاجِكُنَّ , فَإِنَّ الْمَرْأَةَ لَو تَعْلَمُ مَا حَقُّ زَوْجِهَا لَمْ تَزَلْ قَائِمَةً مَا حَضَرَ غَدَاءَهُ وَعَشَاءَهُ»


Almujam-Alkabir-333

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களிடமிருந்து ஸல்மான் அல்அஃகர் அவர்கள் அறிவிக்கும் செய்திகள்:

333. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண் தன் கணவனின் உரிமையை சரியாக அறிந்திருந்தால், அவன் காலை உணவையோ, இரவு உணவையோ உண்டு முடிக்கும் வரை உட்கார மாட்டாள். (நின்றுக் கொண்டே இருப்பாள்).

அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)


«لَوْ تَعْلَمُ الْمَرْأَةُ حَقَّ الزَّوْجِ مَا قَعَدَتْ مَا حَضَرَ غَدَاؤُهُ وَعَشَاؤُهُ حَتَّى يَفْرُغَ مِنْهُ»


Bazzar-712

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

712. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெண்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் கணவனின் அன்பைத் தேடிக்கொள்ளுங்கள்.

ஒரு பெண் தன் கணவனுக்கு உள்ள உரிமையை உண்மையாக அறிந்திருந்தால் அவன் காலை உணவையோ, இரவு உணவையோ உண்டு முடிக்கும் வரை நின்றுக் கொண்டே இருப்பாள்.

அறிவிப்பவர்: அலீ பின் அபூதாலிப் (ரலி)

பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தி அலீ (ரலி) அவர்கள் வழியாக, இந்த வகை அறிவிப்பாளர் தொடரில் மட்டுமே வந்துள்ளதாக நாம் அறிகிறோம்.


«يَا مَعْشَرَ النِّسَاءِ اتَّقِينَ اللَّهَ وَالْتَمِسُوا مَرْضَاتِ أَزْوَاجِكُنَّ، فَإِنَّ الْمَرْأَةَ لَوْ تَعْلَمُ مَا حَقُّ زَوْجِهَا، لَمْ تَزَلْ قَائِمَةً مَا حَضَرَ غَدَاؤُهُ وَعَشَاؤُهُ»


Bazzar-2665

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2665. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண் தன் கணவனின் உரிமையை சரியாக அறிந்திருந்தால், அவன் காலை உணவையோ, இரவு உணவையோ உண்டு முடிக்கும் வரை உட்கார மாட்டாள். (நின்றுக் கொண்டே இருப்பாள்).

அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)

 


«لَوْ تَعْلَمُ الْمَرْأَةُ حَقَّ الزَّوْجِ مَا قَعَدَتْ مَا حَضَرَ غَدَاءَهُ، وَعَشَاءَهُ حَتَّى يَفْرُغَ مِنْهُ»


Nasaayi-1985

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1985. உபைத் பின் காலித் அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு நபர்களுக்கு மத்தியில் சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள். அவர்களில் ஒருவர் (போர்க்களத்தில்) வீர மரணம் அடைந்தார். மற்றொருவர் சில நாட்கள் கழித்து (இயற்கையாக) மரணமடைந்தார். நாங்கள் (இரண்டாவதாக) இறந்தவரை அடக்கம் செய்த பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், “நீங்கள் என்ன சொன்னீர்கள்?” என்று கேட்டார்கள்.

நாங்கள், “அவருக்காக துஆ செய்தோம். ‘இறைவா! அவரை மன்னித்து அவரது தோழருடன் சேர்ப்பாயாக!’ என்று கூறினோம்” என்றோம்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரது தொழுகைக்கும் இவரது தொழுகைக்கும், அவரது செயலுக்கும் இவரது செயலுக்கும் இடையே எவ்வளவு பெரிய வித்தியாசம் இருக்கிறது தெரியுமா? நிச்சயமாக, அவர்களுக்கு மத்தியில் வானத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் போன்ற வேறுபாடு இருக்கிறது” என்று கூறினார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் மைமூன் அல்அவ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இதை எனக்கு அறிவித்த நபித்தோழர் (மற்றொரு நபித்தோழரிடமிருந்து) நபியின் சொல்லாக அறிவிப்பளர்தொடரைக் கூறியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ آخَى بَيْنَ رَجُلَيْنِ، فَقُتِلَ أَحَدُهُمَا وَمَاتَ الْآخَرُ بَعْدَهُ، فَصَلَّيْنَا عَلَيْهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا قُلْتُمْ؟» قَالُوا: دَعَوْنَا لَهُ اللَّهُمَّ اغْفِرْ لَهُ، اللَّهُمَّ ارْحَمْهُ، اللَّهُمَّ أَلْحِقْهُ بِصَاحِبِهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَأَيْنَ صَلَاتُهُ بَعْدَ صَلَاتِهِ؟ وَأَيْنَ عَمَلُهُ بَعْدَ عَمَلِهِ؟ فَلَمَا بَيْنَهُمَا كَمَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ»
قَالَ عَمْرُو بْنُ مَيْمُونٍ: أَعْجَبَنِي لِأَنَّهُ أَسْنَدَ لِي


Abu-Dawood-2524

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2524. உபைத் பின் காலித் அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு நபர்களுக்கு மத்தியில் சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள். அவர்களில் ஒருவர் (போர்க்களத்தில்) வீர மரணம் அடைந்தார். மற்றொருவர் ஒரு வாரமோ அல்லது சில நாட்களோ கழித்து (இயற்கையாக) மரணமடைந்தார். நாங்கள் (இரண்டாவதாக) இறந்தவரை அடக்கம் செய்த பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், “நீங்கள் என்ன சொன்னீர்கள்?” என்று கேட்டார்கள்.

நாங்கள், “அவருக்காக துஆ செய்தோம். ‘இறைவா! அவரை மன்னித்து அவரது தோழருடன் சேர்ப்பாயாக!’ என்று கூறினோம்” என்றோம்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரது தொழுகைக்கும் இவரது தொழுகைக்கும், அவரது நோன்புக்கும் இவரது நோன்புக்கும், அவரது செயலுக்கும் இவரது செயலுக்கும் இடையே எவ்வளவு பெரிய வித்தியாசம் இருக்கிறது தெரியுமா? நிச்சயமாக, அவர்களுக்கு மத்தியில் வானத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் போன்ற வேறுபாடு இருக்கிறது” என்று கூறினார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் பின் கஸீர் கூறுகிறார்:

ஷுஅபா அவர்கள், தனக்கு இந்தச் செய்தியை அறிவித்த அம்ர் பின் முர்ரா அவர்கள், “நோன்பு” என்ற வார்த்தையை கூறினார்களா? இல்லையா? என்பதை சந்தேகமாக அறிவித்தார்.)


آخَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ رَجُلَيْنِ، فَقُتِلَ أَحَدُهُمَا، وَمَاتَ الْآخَرُ بَعْدَهُ بِجُمُعَةٍ، أَوْ نَحْوِهَا، فَصَلَّيْنَا عَلَيْهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا قُلْتُمْ؟» فَقُلْنَا: دَعَوْنَا لَهُ، وَقُلْنَا: اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَأَلْحِقْهُ بِصَاحِبِهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَأَيْنَ صَلَاتُهُ بَعْدَ صَلَاتِهِ، وَصَوْمُهُ بَعْدَ صَوْمِهِ؟ – شَكَّ شُعْبَةُ – فِي صَوْمِهِ، وَعَمَلُهُ بَعْدَ عَمَلِهِ، إِنَّ بَيْنَهُمَا كَمَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-14450

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

14450. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாருக்கு, அவரை தடுத்து நிறுத்தும் அளவிற்கு கடுமையான நோய் அல்லது வெளிப்படையான (அவசியத்) தேவை அல்லது கொடுங்கோல் ஆட்சியாளர் ஆகியவை இல்லாதிருந்தும், இஸ்லாமிய கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றாமல் இருந்தால், அவர் யூதராகவோ அல்லது கிறிஸ்தவராகவோ தான் விரும்பிய நிலையில் இறக்கட்டும்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் (ரஹ்)


«مَنْ مَاتَ وَلَمْ يَحُجَّ حَجَّةَ الْإِسْلَامِ لَمْ يَمْنَعْهُ مَرَضٌ حَابِسٌ، أَوْ حَاجَةٌ ظَاهِرَةٌ، أَوْ سُلْطَانٌ جَائِرٌ، فَلْيَمُتْ عَلَى أَيِّ حَالٍ شَاءَ يَهُودِيًّا أَوْ نَصْرَانِيًّا»


Kubra-Bayhaqi-8661

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8661. ஒருவருக்கு ஹஜ் செய்ய வசதி வாய்ப்பும் இருந்து அவர் ஹஜ் செய்யாவிட்டால் அவர் யூதராகவோ அல்லது கிறிஸ்தவராகவோ இறக்கட்டும் என்று உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் மூன்று முறை கூறினார்கள்.

மேலும், நான் “ஸரூரா”வாக (அதாவது முன்பு ஹஜ் செய்யாதவராக இருந்து) ஒரு முறை ஹஜ் செய்வது, ஆறு அல்லது ஏழு போர்களில் கலந்து கொள்வதை விட எனக்கு விருப்பமானது என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் ஃகன்ம் (ரலி)


لِيَمُتْ يَهُوَدِيًّا أَوْ نَصْرَانِيًّا يَقُولُهَا ثَلَاثَ مَرَّاتٍ رَجُلٌ مَاتَ وَلَمْ يَحُجَّ وَجَدَ لِذَلِكَ سَعَةً وَخُلِّيَتْ سَبِيلُهُ فَحَجَّةٌ أَحُجُّهَا وَأَنَا صَرُورَةٌ أَحَبُّ إِلَيَّ مِنْ سِتِّ غَزَوَاتٍ أَوْ سَبْعٍ


Next Page » « Previous Page