Author: Abdul Hakkim

Shuabul-Iman-3692

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3692.

…அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், அல்லாஹ்வின் (கஅபா) ஆலயத்திற்கு கொண்டு சேர்க்கும் (பொருளாதார) வசதி, (பயணம் செய்வதற்கான) வாகன வசதி ஆகியவற்றை பெற்றிருந்தும் அவர் ஹஜ் செய்யாவிட்டால் அவர் யூதராகவோ அல்லது கிருத்துவராகவோ மரணித்துவிடுவது பரவாயில்லை.

ஏனெனில் அல்லாஹ் தனது வேதத்தில் கூறுகிறான்:

அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்றுவர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. (அல்குர்ஆன்: 3:97)

அறிவிப்பவர்: அலீ பின் அபூதாலிப் (ரலி)


مَنْ مَلَكَ زَادًا وَرَاحِلَةً يَبْلُغُ بِهِ إِلَى بَيْتِ اللهِ فَلَمْ يَحُجَّ فَلَا عَلَيْهِ أَنْ يَمُوتَ يَهُودِيًّا أَوْ نَصْرَانِيًّا، وَذَلِكَ أَنَّ اللهَ قَالَ: {وَلِلَّهِ عَلَى النَّاسِ حَجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا} [آل عمران: 97]


Bazzar-861

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

861. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“யார் (ஹஜ்) பயணத்திற்கான உணவு மற்றும் வாகன வசதி இருந்தும் அல்லாஹ்வின் இல்லத்திற்கு ஹஜ் செய்யவில்லையோ, அவர் யூதனாகவோ அல்லது கிறிஸ்தவனாகவோ இறந்தாலும் கவலையில்லை.”

அறிவிப்பவர்: அலீ பின் அபூதாலிப் (ரலி)


مَنْ مَلَكَ زَادًا وَرَاحِلَةً تُبَلِّغُهُ فَلَمْ يَحُجَّ بَيْتَ اللَّهِ فَلَا يَضُرَّهُ يَهُودِيًّا مَاتَ أَوْ نَصْرَانِيًّا


Darimi-1826

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

(தனக்கு கடமையானப் பின்பும்) ஹஜ்ஜை நிறைவேற்றாமல் மரணித்தவர்.

1826. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அவசியத் தேவையோ அல்லது அநியாயக்கார அரசனோ அல்லது தடுக்கும் நோயோ ஏற்படாமல் இருந்து (ஹஜ் செய்வதை தடுக்காமலிருந்தும்) ஒருவர் ஹஜ் செய்யாவிட்டால் அவர் விரும்பினால் யூதராக அல்லது கிருத்துவராக இறந்துவிடட்டும்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)


«مَنْ لَمْ يَمْنَعْهُ عَنِ الْحَجِّ حَاجَةٌ ظَاهِرَةٌ، أَوْ سُلْطَانٌ جَائِرٌ، أَوْ مَرَضٌ حَابِسٌ فَمَاتَ وَلَمْ يَحُجَّ، فَلْيَمُتْ إِنْ شَاءَ يَهُودِيًّا، وَإِنْ شَاءَ نَصْرَانِيًّا»


Musannaf-Ibn-Abi-Shaybah-14455

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

14455. “ஒருவர் (ஹஜ் செய்வதற்கு) வசதியைப் பெற்றிருந்தும், ஹஜ் செய்யாவிட்டால் அவர், யூதராகவோ அல்லது கிருத்துவராகவோ தான் விரும்பிய நிலையில் இறந்துவிடட்டும்” என்று உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அதீ பின் அமீரா (ரலி)

 


«مَنْ مَاتَ وَهُوَ مُوسِرٌ لَمْ يَحُجَّ، فَلْيَمُتْ عَلَى أَيِّ حَالٍ شَاءَ يَهُودِيًّا أَوْ نَصْرَانِيًّا»


Tirmidhi-812

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

ஹஜ் கடமையானப் பின்பும் அதை விடுவது குறித்து வந்துள்ள கண்டனம்.

812. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், அல்லாஹ்வின் (கஅபா) ஆலயத்திற்கு கொண்டு சேர்க்கும் (பொருளாதார) வசதி, (பயணம் செய்வதற்கான) வாகன வசதி ஆகியவற்றை பெற்றிருந்தும் அவர் ஹஜ் செய்யாவிட்டால் அவர் யூதராகவோ அல்லது கிருத்துவராகவோ மரணித்துவிடுவது பரவாயில்லை.

ஏனெனில் அல்லாஹ் தனது வேதத்தில் கூறுகிறான்:

அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்றுவர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. (அல்குர்ஆன்: 3:97)

அறிவிப்பவர்: அலீ பின் அபூதாலிப் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தி “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். மேலும் இந்த செய்தியை இந்த வகை அறிவிப்பாளர் தொடரிலேயே நாம் அறிகின்றோம்.

இதன் அறிவிப்பாளர்தொடரில் விமர்சனம் உள்ளது. (காரணம்) இதில் இடம்பெறும் ஹிலால் பின் அப்துல்லாஹ் என்பவர் அறியப்படாதவர் ஆவார். ஹாரிஸ் பின் அப்துல்லாஹ் அல்அஃவர் என்பவர் (ஹதீஸ்கலை அறிஞர்களால்) பலவீனமானவர் என்று கூறப்பட்டுள்ளார்.


مَنْ مَلَكَ زَادًا وَرَاحِلَةً تُبَلِّغُهُ إِلَى بَيْتِ اللَّهِ وَلَمْ يَحُجَّ فَلَا عَلَيْهِ أَنْ يَمُوتَ يَهُودِيًّا، أَوْ نَصْرَانِيًّا، وَذَلِكَ أَنَّ اللَّهَ يَقُولُ فِي كِتَابِهِ: {وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ البَيْتِ مَنْ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا} [آل عمران: 97]


Daraqutni-2183

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2183. நபித்தோழரான அப்துர்ரஹ்மான் பின் ஆயிஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஃபஜ்ர் நேரம் இரு வகையாகும். அடிவானில் நீளவாக்கில் செங்குத்தாய் வெண்மை தெரியும் நேரம். இது (உன்னை) ஸஹர் உணவு உண்பதிலிருந்து தடுத்துவிடவேண்டாம். மேலும் இந்த நேரத்தில் (நீ ஃபஜ்ர்) தொழுவது கூடாது.

அடிவானில் அகலவாக்கில் வெண்மை பரவிவிட்டால் (நீ ஸஹர்) உணவு உண்பது தடையாகும். இதில் நீ அதிகாலை (ஃபஜ்ர்) தொழுகையை தொழுதுக் கொள்!.

அறிவிப்பவர்: ரபீஆ பின் யஸீத் (ரஹ்)

தாரகுத்னீ இமாம் கூறுகிறார்:

இது சரியான அறிவிப்பாளர்தொடராகும்.


«الْفَجْرُ فَجْرَانِ فَأَمَّا الْمُسْتَطِيلُ فِي السَّمَاءِ فَلَا يَمْنَعَنَّ السَّحُورَ وَلَا تَحِلُّ فِيهِ الصَّلَاةُ , وَإِذَا اعْتَرَضَ فَقَدْ حَرُمَ الطَّعَامُ فَصَلِّ صَلَاةَ الْغَدَاةِ»


Abu-Dawood-2348

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2348.

“உண்ணுங்கள், பருகுங்கள். (வானத்தில்) செங்குத்தாகத் தோன்றும் ஒளி உங்களைத் தடுத்து விடவேண்டாம். (வானத்தில்) செந்நிறம் குறுக்காகத் தெரியும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள். (செந்நிறம் தெரிந்துவிட்டால் ஸஹரை நிறுத்திவிடுங்கள்)


«كُلُوا وَاشْرَبُوا، وَلَا يَهِيدَنَّكُمُ السَّاطِعُ الْمُصْعِدُ، فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَعْتَرِضَ لَكُمُ الْأَحْمَرُ»،


Abu-Dawood-2347

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2347.

“உங்களில் எவரையும் பிலால் (ரலி) அவர்களின் பாங்கு, ஸஹர் உண்பதை விட்டுத் தடுத்து விடவேண்டாம். ஏனெனில் அவர் உங்களில் நின்று கொண்டிருப்பவரை (தொழுகையில் ஈடுபட்டிருப்பவரை) (தொழுது முடித்து ஓய்வெடுக்க)த் திரும்புவதற்காகவும், தூங்கிக் கொண்டிருப்பவரை எழுப்புவதற்காகவும் பாங்கு சொல்கிறார்.


لَا يَمْنَعَنَّ أَحَدَكُمْ أَذَانُ بِلَالٍ مِنْ سُحُورِهِ، فَإِنَّهُ يُؤَذِّنُ – أَوْ قَالَ: يُنَادِي – لِيَرْجِعَ قَائِمُكُمْ، وَيَنْتَبِهَ نَائِمُكُمْ، وَلَيْسَ الْفَجْرُ أَنْ يَقُولَ هَكَذَا “

قَالَ مُسَدَّدٌ وَجَمَعَ يَحْيَى كَفَّيْهِ حَتَّى يَقُولَ هَكَذَا، وَمَدَّ يَحْيَى بِأُصْبُعَيْهِ السَّبَّابَتَيْنِ


Abu-Dawood-2346

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ஸஹர் உணவின் நேரம்.

2346. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பிலால் அவர்களின் அதான்-தொழுகை அழைப்பு உங்களை ஸஹர் உண்பதை விட்டுத் தடுத்து விடவேண்டாம். இவ்வாறே அடிவானத்தில் இப்படி (மெல்லிய கோடாக) தெரியும் வெண்மையும் உங்களை (ஸஹர் உணவு உண்பதை விட்டும்) தடுத்து விடவேண்டாம். வெளிச்சம் பரவி வரும்வரை (அதற்கு சற்றுமுன்வரை) நீங்கள் உண்ணலாம்.

அறிவிப்பவர்: ஸமுரா பின் ஜுன்துப் (ரலி)


«لَا يَمْنَعَنَّ مِنْ سُحُورِكُمْ أَذَانُ بِلَالٍ، وَلَا بَيَاضُ الْأُفْقِ الَّذِي هَكَذَا حَتَّى يَسْتَطِيرَ»


Next Page » « Previous Page