தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பனூ பலீ குலத்தைச் சேர்ந்த இருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். இருவரும் ஒரே நேரத்தில் இஸ்லாத்தைத் தழுவினர். அவர்களில் ஒருவர் மற்றவரை விட அதிக சிரத்தையுடன் வணக்கங்களில் ஈடுபட்டார். அதிக சிரத்தை எடுத்தவர் போரில் வீர மரணம் அடைந்தார். மற்றவர் ஒரு வருடம் கழித்து மரணமடைந்தார்.
மேலும் தல்ஹா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஒரு கனவு கண்டேன். சொர்க்கத்தின் வாசலில் நான் இருந்தேன். அவ்விருவரும் அங்கு இருந்தனர். சொர்க்கத்திலிருந்து ஒருவர் வெளியே வந்து, இரண்டாவதாக இறந்தவரை உள்ளே செல்ல அனுமதித்தார். பின்னர் வெளியே வந்து, முதலில் ஷஹீதானவரை உள்ளே செல்ல அனுமதித்தார். பிறகு என்னிடம் திரும்பி வந்து, “திரும்புங்கள், உங்களுக்கான நேரம் இன்னும் வரவில்லை” என்றார்.
தல்ஹா (ரலி) காலையில் மக்களுக்கு அதைச் சொன்னார். மக்கள் ஆச்சரியப்பட்டனர். விஷயம் நபி (ஸல்) அவர்களை அடைந்தது. மக்களும் அதை நபி (ஸல்) அவர்களிடம் (ஆச்சரியமாகக்) கூறினர்.
நபி (ஸல்) அவர்கள், “எதைக் கண்டு ஆச்சரியப்படுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! இவர்தான் இருவரில் அதிக சிரத்தையுடன் வணங்கியவர். பின் ஷஹீதானார். ஆனால் மற்றவர் இவருக்கு முன் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார்” என்றனர்.
நபி (ஸல்) அவர்கள், “இவர் அவருக்குப் பிறகு ஒரு வருடம் வாழவில்லையா?” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம்” என்றனர். நபி (ஸல்) அவர்கள், “ரமளானை அடைந்து நோன்பு நோற்கவில்லையா? அந்த வருடத்தில் இத்தனை ஸஜ்தாக்கள் தொழவில்லையா?” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம்” என்றனர். நபி (ஸல்) அவர்கள், “(அதனால் தான்) அவர்களுக்குள் வானத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தை விட அதிக தூரம் வித்தியாசம் உள்ளது” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸலமா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்)
(இப்னுமாஜா: 3925)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ قَالَ: أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ الْهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ،
أَنَّ رَجُلَيْنِ مِنْ بَلِيٍّ قَدِمَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ إِسْلَامُهُمَا جَمِيعًا، فَكَانَ أَحَدُهُمَا أَشَدَّ اجْتِهَادًا مِنَ الْآخَرِ، فَغَزَا الْمُجْتَهِدُ مِنْهُمَا فَاسْتُشْهِدَ، ثُمَّ مَكَثَ الْآخَرُ بَعْدَهُ سَنَةً، ثُمَّ تُوُفِّيَ، قَالَ طَلْحَةُ: فَرَأَيْتُ فِي الْمَنَامِ: بَيْنَا أَنَا عِنْدَ بَابِ الْجَنَّةِ، إِذَا أَنَا بِهِمَا، فَخَرَجَ خَارِجٌ مِنَ الْجَنَّةِ، فَأَذِنَ لِلَّذِي تُوُفِّيَ الْآخِرَ مِنْهُمَا، ثُمَّ خَرَجَ، فَأَذِنَ لِلَّذِي اسْتُشْهِدَ، ثُمَّ رَجَعَ إِلَيَّ، فَقَالَ: ارْجِعْ، فَإِنَّكَ لَمْ يَأْنِ لَكَ بَعْدُ، فَأَصْبَحَ طَلْحَةُ يُحَدِّثُ بِهِ النَّاسَ، فَعَجِبُوا لِذَلِكَ، فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَحَدَّثُوهُ الْحَدِيثَ، فَقَالَ: «مِنْ أَيِّ ذَلِكَ تَعْجَبُونَ؟» فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ هَذَا كَانَ أَشَدَّ الرَّجُلَيْنِ اجْتِهَادًا، ثُمَّ اسْتُشْهِدَ، وَدَخَلَ هَذَا الْآخِرُ الْجَنَّةَ قَبْلَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَيْسَ قَدْ مَكَثَ هَذَا بَعْدَهُ سَنَةً؟» قَالُوا: بَلَى، قَالَ: «وَأَدْرَكَ رَمَضَانَ فَصَامَ، وَصَلَّى كَذَا وَكَذَا مِنْ سَجْدَةٍ فِي السَّنَةِ؟» قَالُوا: بَلَى، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَمَا بَيْنَهُمَا أَبْعَدُ مِمَّا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-3925.
Ibn-Majah-Alamiah-3915.
Ibn-Majah-JawamiulKalim-3923.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . இப்னு மாஜா இமாம்
2 . முஹம்மத் பின் ரும்ஹ்
3 . லைஸ் பின் ஸஃத்
4 . யஸீத் பின் ஹாத்-இப்னுல் ஹாத்
5 . முஹம்மது பின் இப்ராஹீம் அத்தைமீ
6 . அபூஸலமா பின் அப்துர்ரஹ்மான்
7 . தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி)
ஆய்வின் சுருக்கம்:
இந்தக் கருத்தில் தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் வழியாக வரும் செய்திகளில், யஸீத் பின் ஹாத் —> முஹம்மது பின் இப்ராஹீம் அத்தைமீ —> அபூஸலமா —> தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரே மிகச் சரியானது-உண்மையானது என்றும், அபூஸலமா அவர்களுக்கும் தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி) அவர்களுக்கும் இடையில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்கள் இடம்பெறும் அறிவிப்பாளர்தொடர் தவறு என்றும் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இமாம் கூறியுள்ளார்.
(நூல்: அல்இலலுல் வாரிதா-518)
علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (4/ 214)
518- وَسُئِلَ عَنْ حَدِيثِ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ طَلْحَةَ أَنَّ رَجُلَيْنِ مِنْ بَلِيٍّ قَدِمَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ إِسْلَامُهُمَا جَمِيعًا، وَكَانَ أَحَدُهُمَا أَشَدَّ اجْتِهَادًا مِنْ صَاحِبِهِ … الْحَدِيثَ.
فَقَالَ: هُوَ حَدِيثٌ يَرْوِيهِ مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ، عَنْ أَبِي سَلَمَةَ، حَدَّثَ بِهِ عَنْهُ يَزِيدُ بْنُ الْهَادِ، وَمُحَمَّدُ بْنُ إِسْحَاقَ؛
فَأَمَّا يَزِيدُ بْنُ الْهَادِ فَأَسْنَدَهُ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ.
وَأَرْسَلَهُ مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ.
وَرَوَاهُ مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ عَلْقَمَةَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ طَلْحَةَ.
وَاخْتُلِفَ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو؛
فَرَوَاهُ إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، وَيَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ طَلْحَةَ.
وَرَوَاهُ حَمَّادُ بْنُ سَلَمَةَ، وَسَعِيدُ بْنُ عَامِرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، مُرْسَلًا.
وَرَوَاهُ مُحَمَّدُ بْنُ بِشْرٍ الْعَبْدِيُّ، وَالْفَضْلُ بْنُ مُوسَى السِّينَانِيُّ، وَمُحَمَّدُ بْنُ يَعْلَى، وَجُنَادَةُ بْنُ سَلْمٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عن أَبِي هُرَيْرَةَ، أَنَّ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ رَأَى فِي الْمَنَامِ.
وَأَصَحُّهَا كُلُّهَا قَوْلُ يَزِيدَ بْنِ الْهَادِ، وَذِكْرُ أَبِي هُرَيْرَةَ فِيهِ وَهْمٌ، والله أعلم.
…
(நூல்: அல்இலலுல் வாரிதா-518)
2 . இந்தக் கருத்தில் தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அபூஸலமா —> தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி)
முஹம்மத் பின் அம்ர்
பார்க்க: அஹாதீஸு இஸ்மாயீல் பின் ஜஃபர்-215, முஸ்னத் அபீ யஃலா-648, ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-2307, முஸ்னத் ஷாஷீ-27, அக்பாரு அஸ்பஹான்-, அஸ்ஸுஹ்துல் கபீர்-பைஹகீ-,
முஹம்மத் பின் இஸ்ஹாக்
பார்க்க: அஹ்மத்-1389,
அப்துல்லாஹ் பின் ஷத்தாத்…
பார்க்க: அஹ்மத்-1401, முஸ்னத் பஸ்ஸார்-954, குப்ரா நஸாயீ-10606, ..முஸ்னத் ஷாஷீ-26,
இப்னுல் ஹாத்
பார்க்க: அஹ்மத்-1403, இப்னு மாஜா-3925, ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-2309, இப்னு ஹிப்பான்-2982, குப்ரா பைஹகீ-6530,
முஹம்மத் பின் இப்ராஹீம் தைமீ —> தல்ஹா
பார்க்க: முஸ்னத் ஷாஷீ-2307
- அபூஸலமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) —> தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி)
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-929,
- முஹம்மது பின் இப்ராஹீம் —> ஈஸா பின் தல்ஹா —> தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி)
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-951,
மேலும் பார்க்க: அபூதாவூத்-2524.
சமீப விமர்சனங்கள்