Author: Abdul Hakkim

Nasaayi-165

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

165.

‘தொழும் போது ஒருவர் தனது மர்மஸ்தானத்தைத் தொடுவது பற்றி என்ன கூறுகின்றீர்கள்?’ என்று நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அதுவும் உனது மற்ற உறுப்புக்களைப் போன்ற உறுப்பு தானே?’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: தல்க் இப்னு அலீ (ரலி)


خَرَجْنَا وَفْدًا حَتَّى قَدِمْنَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَايَعْنَاهُ وَصَلَّيْنَا مَعَهُ، فَلَمَّا قَضَى الصَّلَاةَ جَاءَ رَجُلٌ كَأَنَّهُ بَدَوِيٌّ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَا تَرَى فِي رَجُلٍ مَسَّ ذَكَرَهُ فِي الصَّلَاةِ؟ قَالَ: «وَهَلْ هُوَ إِلَّا مُضْغَةٌ مِنْكَ أَوْ بِضْعَةٌ مِنْكَ»


Musnad-Ahmad-8404

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8404.

உங்களில் ஒருவர் திரை ஏதுமின்றி தமது உறுப்பைக் கையால் தொட்டால் அவர் உளூச் செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَنْ أَفْضَى بِيَدِهِ إِلَى ذَكَرِهِ، لَيْسَ دُونَهُ سِتْرٌ، فَقَدْ وَجَبَ عَلَيْهِ الْوُضُوءُ»


Ibn-Hibban-1118

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

1118.

உங்களில் ஒருவர் திரை ஏதுமின்றி தமது உறுப்பைக் கையால் தொட்டால் அவர் உளூச் செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِذَا أَفْضَى أَحَدُكُمْ بِيَدِهِ إِلَى فَرْجِهِ، وَلَيْسَ بَيْنَهُمَا سِتْرٌ وَلَا حِجَابٌ، فَلْيَتَوَضَّأْ»


Kubra-Bayhaqi-637

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

637.

ஆண்களில் யாரேனும் தமது மர்மஸ்தானத்தைத் தொட்டால் அவர் உளூச் செய்ய வேண்டும்; பெண்களில் யாரேனும் தமது மர்மஸ்தானத்தைத் தொட்டால் அவரும் உளூச் செய்ய வேண்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


أَيُّمَا رَجُلٍ مَسَّ فَرْجَهُ فَلْيَتَوَضَّأْ، وَأَيُّمَا امْرَأَةٍ مَسَّتْ فَرْجَهَا فَلْتَتَوَضَّأْ “

وَرَوَاهُ إِسْحَاقُ الْحَنْظَلِيُّ، عَنْ بَقِيَّةَ، عَنْ الزُّبَيْدِيِّ، وَمُحَمَّدُ بْنُ الْوَلِيدِ الزُّبَيْدِيُّ ثِقَةٌ،

وَهَكَذَا رَوَاهُ عَبْدُ اللهِ بْنُ الْمُؤَمَّلِ، عَنْ عَمْرٍو، وَرُوِيَ مِنْ وَجْهٍ آخَرَ، عَنْ عَمْرٍو


Daraqutni-534

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

534.

ஆண்களில் யாரேனும் தமது மர்மஸ்தானத்தைத் தொட்டால் அவர் உளூச் செய்ய வேண்டும்; பெண்களில் யாரேனும் தமது மர்மஸ்தானத்தைத் தொட்டால் அவரும் உளூச் செய்ய வேண்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«أَيُّمَا رَجُلٍ مَسَّ فَرْجَهُ فَلْيَتَوَضَّأْ , وَأَيُّمَا امْرَأَةٍ مَسَّتْ فَرْجَهَا فَلْتَتَوَضَّأْ»


Musnad-Ahmad-7076

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

7076.

ஆண்களில் யாரேனும் தமது மர்மஸ்தானத்தைத் தொட்டால் அவர் உளூச் செய்ய வேண்டும்; பெண்களில் யாரேனும் தமது மர்மஸ்தானத்தைத் தொட்டால் அவரும் உளூச் செய்ய வேண்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ مَسَّ ذَكَرَهُ، فَلْيَتَوَضَّأْ، وَأَيُّمَا امْرَأَةٍ مَسَّتْ فَرْجَهَا فَلْتَتَوَضَّأْ»


Almujam-Alkabir-252

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

252.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஜனாஸாத் தொழுகையில் அல்ஹம்து அத்தியாயத்தை ஒதும் வழமையுள்ளவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஷரீக் (ரலி)


كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَقْرَأُ عَلَى الْجَنَائِزِ بِفَاتِحَةِ الْكِتَابِ»


Almujam-Alkabir-10809

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10809.

தல்ஹா பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குப் பின்னால் நின்று ஜனாஸா தொழுகை தொழுதேன். அப்போது அவர்கள் ‘ஃபாத்திஹா’ அத்தியாயத்தை (சப்தமாக) ஓதினார்கள். நான் அவர்களிடம் இது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘இது நபிவழியில் உள்ளது என்று கூறினார்கள்.


صَلَّيْتُ مَعَ ابْنِ عَبَّاسٍ عَلَى جَنَازَةٍ، فَقَرَأَ فَاتِحَةَ الْكِتَابِ، فَقُلْتُ لَهُ، فَقَالَ: إِنَّهُ مِنَ السُّنَّةِ


Hakim-1425

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1425. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஒரு ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள். அப்போது அவர்கள் ஃபாத்திஹா அத்தியாயத்தை (சப்தமாக) ஓதினார்கள். நான் அவர்களிடம் இது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘இது நபிவழியில் உள்ளது என்றோ அல்லது இது முழுமையான நபிவழி என்றோ கூறினார்கள்.

அறிவிப்பவர்: தல்ஹா பின் அப்துல்லாஹ் (ரஹ்)


صَلَّى ابْنُ عَبَّاسٍ عَلَى جِنَازَةٍ، فَقَرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ، فَقُلْتُ لَهُ فَقَالَ: إِنَّهُ مِنَ السُّنَّةِ، أَوْ مِنْ تَمَامِ السُّنَّةِ


Hakim-1324

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1324. தல்ஹா பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குப் பின்னால் நின்று ஜனாஸா தொழுகை தொழுதேன். அப்போது அவர்கள் ‘ஃபாத்திஹா’ அத்தியாயத்தை (சப்தமாக) ஓதியதை செவியேற்றேன். அவர்கள் (தொழுகையை முடித்து) திரும்பிச் சென்றபோது அவர்களின் கையைப் பிடித்து இது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்” இது ஒரு கடமை; நபிவழி என்று கூறினார்கள்.


صَلَّيْتُ خَلْفَ ابْنِ عَبَّاسٍ عَلَى جِنَازَةٍ فَسَمِعْتُهُ يَقْرَأُ بِفَاتِحَةِ الْكِتَابِ، فَلَمَّا انْصَرَفَ أَخَذْتُ بِيَدِهِ فَسَأَلْتُهُ فَقُلْتُ: أَتَقْرَأُ؟ فَقَالَ: «نَعَمْ، إِنَّهُ حَقٌّ وَسُنَّةٌ»


Next Page » « Previous Page