Author: Abdul Hakkim

Daraqutni-1819

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1819. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஒரு ஜனாஸாத் தொழுதார்கள். அப்போது அவர்கள் ஃபாத்திஹா அத்தியாயத்தை (சப்தமாக) ஓதினார்கள். நான் அவர்களிடம் இது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘இது நபிவழியில் உள்ளது என்றோ அல்லது இது முழுமையான நபிவழி என்றோ கூறினார்கள்.

அறிவிப்பவர்: தல்ஹா பின் அப்துல்லாஹ் (ரஹ்)


صَلَّى ابْنُ عَبَّاسٍ عَلَى جِنَازَةٍ فَقَرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ , فَقُلْتُ لَهُ , فَقَالَ: إِنَّهُ مِنَ السُّنَّةِ , أَوْ مِنْ تَمَامِ السُّنَّةِ


Kubra-Bayhaqi-6956

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6956. தல்ஹா பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குப் பின்னால் நின்று ஜனாஸா தொழுகை தொழுதேன். அப்போது அவர்கள் ‘ஃபாத்திஹா’ அத்தியாயத்தை (சப்தமாக) ஓதியதை செவியேற்றேன். அவர்கள் (தொழுகையை முடித்து) திரும்பிச் சென்றபோது அவர்களின் கையைப் பிடித்து இது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்” இது ஒரு கடமை; நபிவழி என்று கூறினார்கள்.

 


صَلَّيْتُ خَلْفَ ابْنِ عَبَّاسٍ عَلَى جِنَازَةٍ فَسَمِعْتُهُ يَقْرَأُ بِفَاتِحَةِ الْكِتَابِ فَلَمَّا انْصَرَفَ سَأَلْتُهُ فَقَالَ: ” سُنَةٌ وَحَقٌّ “.

وَرُبَّمَا قَالَ: ” سُنَّةٌ ” , وَلَمْ يَذْكُرْ ” حَقٌّ “


Kubra-Nasaayi-2126

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2126. தல்ஹா பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குப் பின்னால் நின்று ஜனாஸா தொழுகை தொழுதேன். அப்போது அவர்கள் ‘ஃபாத்திஹா’ அத்தியாயத்தை (சப்தமாக) ஓதியதை செவியேற்றேன். அவர்கள் (தொழுகையை முடித்து) திரும்பிச் சென்றபோது அவர்களின் கையைப் பிடித்து இது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்” இது ஒரு கடமை; நபிவழி என்று கூறினார்கள்.


صَلَّيْتُ مَعَ ابْنِ عَبَّاسٍ عَلَى جِنَازَةٍ فَسَمِعْتُهُ يَقْرَأُ، بِفَاتِحَةِ الْكِتَابِ فَلَمَّا انْصَرَفَ أَخَذْتُ بِيَدِهِ فَسَأَلْتُهُ فَقُلْتُ: تَقْرَأُ فَقَالَ: «نَعَمْ إِنَّهُ حَقٌّ وَسُنَّةٌ»


Kubra-Nasaayi-2125

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2125.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் பின்னால் ஒரு ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டேன். அவர்கள் அல்ஹம்து அத்தியாயத்தையும், இன்னொரு அத்தியாயத்தையும் எங்களுக்குக் கேட்கும் அளவுக்கு சப்தமாக ஓதினார்கள். தொழுது முடித்ததும் அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு இது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள் ‘இது நபிவழியும், உண்மையும் ஆகும்’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : தல்ஹா பின் அப்துல்லாஹ் (ரஹ்)


صَلَّيْتُ خَلْفَ ابْنِ عَبَّاسٍ عَلَى جِنَازَةٍ فَقَرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ وَسُورَةٍ وَجَهَرَ حَتَّى أَسْمَعَنَا فَلَمَّا فَرَغَ أَخَذْتُ بِيَدِهِ فَسَأَلْتُهُ فَقَالَ: «سُنَّةٌ وَحَقٌّ»


Kubra-Bayhaqi-6954

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6954.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் பின்னால் ஒரு ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டேன். அவர்கள் அல்ஹம்து அத்தியாயத்தை (சப்தமாக) ஓதினார்கள். அவர்கள் ஸலாம் கூறி (தொழுது) முடித்ததும் அவர்களிடம் இது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள் ‘இது நபிவழியும், உண்மையும் ஆகும்’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: தல்ஹா பின் அப்துல்லாஹ் (ரஹ்)


صَلَّيْتُ خَلْفَ ابْنِ عَبَّاسٍ عَلَى جِنَازَةٍ فَقَرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ فَلَمَّا سَلَّمَ سَأَلْتُهُ عَنْ ذَلِكَ فَقَالَ: ” سُنَّةٌ وَحَقٌّ

رَوَاهُ إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ وَقَالَ فِي الْحَدِيثِ: فَقَرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ وَسُورَةٍ.

وَذِكْرُ السُّورَةِ فِيهِ غَيْرُ مَحْفُوظٍ


Ibn-Hibban-3071

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3071.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் பின்னால் ஒரு ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டேன். அவர்கள் அல்ஹம்து அத்தியாயத்தையும், இன்னொரு அத்தியாயத்தையும் எங்களுக்குக் கேட்கும் அளவுக்கு சப்தமாக ஓதினார்கள். தொழுது முடித்ததும் அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு இது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள் ‘இது நபிவழியும், உண்மையும் ஆகும்’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : தல்ஹா பின் அப்துல்லாஹ் (ரஹ்)


صَلَّيْتُ خَلْفَ ابْنِ عَبَّاسٍ عَلَى جَنَازَةٍ فَقَرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ، وَجَهَرَ حَتَّى أَسْمَعَنَا، فَلَمَّا انْصَرَفَتْ أَخَذْتُ بِيَدِهِ فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ، فَقَالَ: «سُنَّةٌ وَحَقٌّ»


Ibn-Hibban-3072

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3072.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் நடத்திய ஒரு ஜனாஸா தொழுகையில் நான் கலந்து கொண்டேன். அவர்கள் அல்ஹம்து அத்தியாயத்தை அதில் (சப்தமாக) ஓதினார்கள். தொழுது முடித்ததும் அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு இது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள், “எனது சகோதரரின் மகனே! இது நபிவழியும், உண்மையும் ஆகும்’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: தல்ஹா பின் அப்துல்லாஹ் (ரஹ்)


شَهِدْتُ ابْنَ عَبَّاسٍ، صَلَّى عَلَى جَنَازَةٍ فَقَرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ، فَلَمَّا انْصَرَفَ قُلْتُ لَهُ: أَتَقْرَأُ بِفَاتِحَةِ الْكِتَابِ؟ قَالَ: «نَعَمْ، يَا ابْنَ أَخِي سُنَّةٌ وَحَقٌّ»


Nasaayi-1736

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1736.

நபி (ஸல்) அவர்கள் வித்ர் தொழுகைக்கு ஸலாம் கொடுக்கும் போது

ஸுப்ஹானல் மலி(க்)குல் குத்தூஸ்

(பரிசுத்தமான அரசன் (அல்லாஹ்) தூய்மையானவன்) என்று மூன்று முறை கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அப்ஸா (ரலி)


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوتِرُ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ، وَقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، فَإِذَا فَرَغَ مِنَ الصَّلَاةِ قَالَ: «سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ» ثَلَاثَ مَرَّاتٍ


Nasaayi-5001

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

இஸ்லாம் (எனும் மாளிகை எத்தனை தூண்கள்) மீது எழுப்பப்பட்டுள்ளது?

5001. இக்ரிமா பின் காலித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(காரிஜிய்யா கூட்டத்தைச் சேர்ந்த) ஒருவர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், “நீங்கள் அறப்போரில் கலந்துகொள்வதில்லையே (ஏன்)?” என்று கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறக்கேட்டுள்ளேன்: நிச்சயமாக இஸ்லாம் ஐந்து (தூண்கள்)மீது நிறுவப்பட்டுள்ளது.

(அவை:) அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதிமொழி அளிப்பது; தொழுகையைக் கடைப்பிடிப்பது; ஸகாத் வழங்குவது; இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வது; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது.

(போரில் கலந்துகொள்வது இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றல்ல. அதிலும் இப்போது நடைபெறும் போர்கள் வெறும் அரசியல் காரணங்களுக்காகவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன)” என்று கூறினார்கள்.


أَنَّ رَجُلًا قَالَ لَهُ: أَلَا تَغْزُو؟ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” بُنِيَ الْإِسْلَامُ عَلَى خَمْسٍ: شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَإِقَامِ الصَّلَاةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالْحَجِّ، وَصِيَامِ رَمَضَانَ


Tirmidhi-2609

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 3

இஸ்லாம் (எனும் மாளிகை) ஐந்து (தூண்கள்) மீது எழுப்பப்பட்டுள்ளது என்பதைக் குறித்து வந்துள்ளவை.

2609. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“இஸ்லாம் (எனும் மாளிகை) ஐந்து (தூண்களால்) எழுப்பப்பட்டுள்ளது. அவை:

1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதிமொழி கூறுவது.
2. தொழுகையைக் கடைப்பிடிப்பது.
3. ஸகாத் வழங்குவது.
4. ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது.
5. ஹஜ் செய்வது.”

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான நபிமொழி, ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது ‘ஹஸன் ஸஹீஹ்’ எனும் தரத்தில் அமைந்த நபிமொழி ஆகும்.

இதே நபிமொழி, இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே வேறு அறிவிப்பாளர்தொடர்களிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(இந்த நபிமொழியின் அறிவிப்பாளர் தொடரில் மூன்றாவது அறிவிப்பாளராக இடம்பெற்றுள்ள) ஸுஅய்ர் பின் அல்கிம்ஸ் அத்தமீமீ என்பார் ஹதீஸ்கலை அறிஞர்களிடம் நம்பத்தகுந்த அறிவிப்பாளர் ஆவார்.

இந்த நபிமொழி இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

«بُنِيَ الإِسْلَامُ عَلَى خَمْسٍ، شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامِ الصَّلَاةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَصَوْمِ رَمَضَانَ، وَحَجِّ البَيْتِ»


Next Page » « Previous Page